Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கூடு தேடும் பறவைகள்
கூடு தேடும் பறவைகள்
கூடு தேடும் பறவைகள்
Ebook81 pages27 minutes

கூடு தேடும் பறவைகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை நேரம் அடுப்படியில் பரபரப்பாக இருந்தாள் காந்திமதி. சமையல் ரெடியாகிவிட்டது. இன்னும் இட்லி, தக்காளி சட்னி செய்ய வேண்டும். வேலைக்கு போகும் கணவர், மகனுக்கு ஒன்பது மணிக்குள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.
இன்னும் ரிடையர்ட் ஆக ஆறு மாதமே இருக்கும் சாரங்கனுக்கு அரசு உத்தியோகம்.
தயாளன் சாப்ட்வேர் இஞ்சினியராக, பெரிய நிறுவனம் ஒன்றில், கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
மகள் சுகுணாவுக்கும் இஞ்சினியர் மாப்பிள்ளை அமைய, சீர், நகையென்று தாராளமாக செய்து இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் முடித்தாள்.
மகளுக்கு கொடுத்த வரதட்சணையை, தயாளன் மூலம் திரும்பவும் வசூலித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள் காந்திமதி. பெரிய இடத்திலிருந்தெல்லாம் வரன்கள் வந்து கொண்டிருக்க தயாளன் கல்யாண பேச்சை எடுத்தாலே பிடிக்கொடுக்காமல் இருந்தான்.
“என்னம்மா சாப்பிடலாமா”
“ஆச்சுப்பா... அப்பாவையும் கூப்பிடு”
இருவரும் சாப்பிட அமர, பரிமாறியபடி மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.
“தயாளா... என்னப்பா... அந்த சேலம் பெண்... படிச்சவளா... உனக்கேத்தவளா இருக்கா... என்னப்பா சொல்ற... எனக்கும், அப்பாவுக்கும் பிடிச்சிருக்கு பார்க்கலாமா...?”
“இல்லம்மா... வேண்டாம்“இப்படி... எது சொன்னாலும் தட்டி கழிச்சுட்டுபோனா என்ன அர்த்தம்? அப்பாவும் இன்னும் ஆறுமாசத்தில் ரிடையர்ட் ஆகப் போறாரு. உன் கல்யாணத்தை நல்லவிதமாக முடிச்சா எங்க கடமை முடியும்.’’
‘‘அப்ப, என் மனசுக்கு பிடிச்சவளை... கல்யாணம் பண்ணி கொடுங்க...”
சாப்பிட்டு கொண்டிருந்த சாரங்கன் நிமிர்ந்து தயாளனை பார்க்க, “என்னப்பா சொல்றே”
“ஆமாம்மா... நான் என்னோடு வேலை பார்க்கிற பெண்ணை விரும்பறேன். அப்பா இல்லாதவ... அம்மா மட்டும்தான். பெரிசா சொல்லிக்கிற மாதிரி எந்த வசதியும் இல்லை”
திகைத்து போய் மகனை பார்க்கிறாள்.
“இது நமக்கு ஒத்து வருமா? உன் அழகுக்கும், தகுதிக்கும் எத்தனையோ கோடிஸ்வரங்க வீட்டிலிருந்து பெண் வரும். நீ என்ன... இப்படி... எந்த தகுதியும் இல்லாதவளை கட்டிக்கிறேன்னு சொல்றே”
“அப்ப பணம்தான் நீ எதிர்பார்க்கிற தகுதியா?”
“அப்படி இல்லை. பணமும் ஒரு தகுதி. நல்ல இடம். பெயர் சொல்ற மாதிரி நல்ல சம்பந்தமாக உனக்கு அமையணும்னு நாங்க விரும்பறோம்.’’ சாரங்கன் சொல்ல,
“நான் அப்படி நினைக்கலை மனசுக்கு பிடிச்சவளோடு வாழணும்ங்கிறதுதான் என் ஆசை. நீங்களும், அம்மாவும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு லேட்டாச்சு... நான் கிளம்பறேன்.”
மதிய சாப்பாடு... லஞ்ச்பாக்கில் - வைத்ததை கூட - எடுத்துக் கொள்ளாமல் பைக்கை ஸ்டார்ட் பண்ணி வேகமாக கிளம்புகிறான்.
“என்னங்க இது... இப்படியொரு குண்டை தூக்கி போட்டுட்டுபோறான். இதுக்குத்தான் இத்தனை நாள் தள்ளி போட்டுட்டு இருந்தானா.?”
“இங்கே பாரு வளர்த்து ஆளாக்கிட்டோம். நம்ப வேலை முடிஞ்சுது. அவங்க வாழ்க்கையை அவங்க தீர்மானம் பண்றாங்கன்னு... போக வேண்டியதுதான்”
“என்னங்க இப்படி சொல்றீங்க”பின்னே என்ன பண்ண சொல்ற. எனக்கும்தான் எரிச்சலாக வருது. நமக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிப் பாரு அவன்கிட்டேயிருந்து என்ன பதில் வருதுன்னு. ஏற்கனவே கோர்ட், கேஸ்னு அலைஞ்சுட்டு இருக்கேன். அதுவே மாசக்கணக்கில் இழுத்துட்டு இருக்கு. இதில் இவன் பிரச்சனை வேறு...”

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
கூடு தேடும் பறவைகள்

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to கூடு தேடும் பறவைகள்

Related ebooks

Reviews for கூடு தேடும் பறவைகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கூடு தேடும் பறவைகள் - பரிமளா ராஜேந்திரன்

    1

    பனிரெண்டாவது மாடியின் சிட்அவுட்டில் கையை முன்புறமாக கட்டியபடி நின்றிருந்தான் மாதவன்.

    அந்த நடு இரவிலும் வண்ண விளக்குகளின் ஒளிச்சுடர்கள் வானின் விண்மீன்களை போல மின்ன, அந்த இடமே சுவர்க்க பூமியாக காட்சியளித்தது.

    ஈரப்பதத்துடன் பனிக்காற்று வீச, இரவு உடையில் மேல்கோட்டு அணியாமல், நின்றிருந்தான்.

    எழில்மிகு நியூயார்க் நகரம். இந்தியாவை விட்டு வந்து அமெரிக்காவில் செட்டிலாகி பத்து வருடங்கள் முடிந்து விட்டது. மனைவி திவ்யாவும், அவனுமாக சம்பாதித்த டாலர்... பாங்க் பாலன்ஸ் எக்கச்சக்கமாக ஏறிவிட்டது.

    சொந்தமாக அபார்ட்மெண்ட்... இரண்டு கார்கள்... வசதியான வாழ்க்கை.

    இருந்தாலும் மனதிற்குள் சில நாட்களாக ஏற்பட்டுள்ள உறுத்தல், பயம்... நான் எடுத்திருக்கும் முடிவு சரிதானா? இதுதான் சரி. அவன் மனம் தீர்மானமாய் சொல்லியது.

    மகள் மிருதுளாவுக்காக எடுத்திருக்கும் முடிவு. மீரு தான் என் உயிர். என் உலகம். என் மகள் அன்பானவளாக பண்பானவளாக வளர வேண்டும். உறவுகளின் அரவணைப்பில் வாழ்க்கையின் சுவர்க்கங்களை அவள் அனுபவிக்க வேண்டும். அவள் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் எந்த சலனமுமில்லாமல் செல்ல வேண்டும்.

    பின்புறமாக தோள்களைதொடும் கைகள், ஸ்பரிசத்திலிருந்தே திவ்யா எழுந்து வந்திருக்கிறாள் என்பதை அறிந்துக்கொள்கிறான்.

    பேண்ட், டீ ஷர்ட் அணிந்து, மேலே ஸ்வெட்டர் போட்டு, கழுத்துவரை வெட்டப்பட்ட கூந்தல் - காற்றில் பறக்க - முன் நெற்றியில் விழும் முடிக்கற்றையை ஒதுக்கி விடாமல், அமெரிக்க நாகரிகத்துக்கு ஈடு கொடுக்கும் – படியான அழகுடன் நிற்கும் திவ்யாவை பார்க்கிறான். தூங்கலையா மாது

    ம்...

    மைண்ட் டிஸ்டர்ப்ட்டா இருக்கா

    ஆமாம்

    அதான் நான் ஓகே சொல்லிட்டேனே... அப்புறம் என்ன? இந்தியாவில் செட்டில் ஆகலாம்ணு நீங்க முடிவு பண்ணினா, போகலாம்

    உனக்கொன்னும் வருத்தம் இல்லையே

    வருத்தம்னு சொல்ல முடியாது. இரண்டு பேருக்கும் நல்ல வேலை... நல்ல சம்பாத்தியம். இன்னும் அஞ்சு வருஷம்... இந்திய ரூபாயில் கணக்கு பண்ணினா கோடி கணக்கில் இருக்கும். நம்ப மிரூவுக்கு நல்ல எதிர்காலத்தை காட்ட முடியும். அப்புறம்... இந்தியா போனா... நிம்மதியா இருக்கலாம். இங்கே என்ன குறை. லைப்பை... அதற்குரிய வசதிகளோடு சந்தோஷமா அனுபவிச்சுட்டு இருக்கோம். இவ்வளவு பாஸிட்டிவ் இருக்கும்போது... இந்தியாவில் செட்டில் ஆகிறது. அதுவும் இந்த சமயத்தில் சரிதானான்னு என் மனசு யோசிக்குது

    நமக்கு பணம் சம்பாதிப்பதை விட நம்ப மகளோட வாழ்க்கை தான் முக்கியம். இன்னும் எவ்வளவு நாள் உறவுகளை விட்டு விலகி ஒரு தீவு மாதிரி வாழறது. போலாம் திவ்யா. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தம்பி, தங்கைன்னு நாமும் அவங்களோடு சங்கமம் ஆகலாம். இந்த கலாசாரம், வாழ்க்கை முறை என் மகளை வளர வளர தவறான பாதையில் தள்ளிடுமோன்னு பயமா இருக்கு

    அது தேவையில்லாத பயம்னு உங்களுக்கு புரியலை. நம்மை மீறி எதுவும் நடக்காது. அதுவுமில்லாம இப்ப ஏழு வயசுதான்ஆகுது.

    இருக்கட்டும் இதுதான் நல்லது கெட்டது புரியும் வயசு. இனியும் அவளை தனிமைபடுத்தாம உறவுகளோடு வாழறது தான் நல்லதுன்னு எனக்கு படுது

    சரி, அப்ப உங்க இஷ்டம். என்ன முடிவு பண்ணியிருக்கீங்க.

    மூணுமாசம் லாங் லீவில் இந்தியா, போவோம். நம்ம மிருதுளாவுக்கு ஒரு சேஞ்ஜ் கிடைக்கும். நமக்கும் எல்லோருடனும் பழகும்போது எங்கே தங்கலாம்னு ஒரு முடிவு கிடைக்கும். சென்னையில் இருப்போம்னு முடிவு பண்ணினா அங்கே வேலை தேடிப்போம். இல்லைன்னா... ஹைதராபாத்... பெங்களூர் ஓரளவு வேலையை தேடிக்கிட்டு... இங்கே வந்து எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கிளம்பலாம்...

    2

    காலை நேரம் அடுப்படியில் பரபரப்பாக இருந்தாள் காந்திமதி. சமையல் ரெடியாகிவிட்டது. இன்னும் இட்லி, தக்காளி சட்னி செய்ய வேண்டும். வேலைக்கு போகும் கணவர், மகனுக்கு ஒன்பது மணிக்குள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

    இன்னும் ரிடையர்ட் ஆக ஆறு மாதமே இருக்கும் சாரங்கனுக்கு அரசு உத்தியோகம்.

    தயாளன் சாப்ட்வேர் இஞ்சினியராக, பெரிய நிறுவனம் ஒன்றில், கைநிறைய சம்பளத்துடன் வேலை

    Enjoying the preview?
    Page 1 of 1