Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திருமகள் தேடி வந்தாள்
திருமகள் தேடி வந்தாள்
திருமகள் தேடி வந்தாள்
Ebook92 pages33 minutes

திருமகள் தேடி வந்தாள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“அம்மா, வேலையை முடிச்சுட்டேன். கிளம்பட்டுமா”
“இரு விசாலம் இதோ வரேன்”
உள்ளே சென்ற பார்வதி, கையில் ஸ்விட் பார்சலுடன் வந்தாள்.
“இந்தா உன் மகள் கல்பனா கிட்டே... இல்லே இல்லை டாக்டர் கல்பனா கிட்டே கொண்டுபோய் கொடு அவ நினைச்சது போல நல்லபடியா படிப்பை முடிச்சுட்டா.
இப்ப வேலையும் கிடைச்சு சென்னைக்கு போகப் போறீங்க. நீ இனிமே டாக்டரோட அம்மா, உன் மகளுடன் நிம்மதியா இரு விசாலம்”
“உங்களை மாதிரி கருணை உள்ளம். கொண்டவங்க செய்த உதவியினால் என் மகள் கனவு கண்டது போல டாக்டர் ஆயிட்டா. நினைச்சு பார்க்கும் போது நெஞ்சம் குளிர்ந்து போகுது...
பெத்த மகளையும், கட்டினவரையும் விட்டுட்டு ஒடி போனான் என் புருஷன். நாலு வயசு மகளை எப்படியும் கரை சேர்க்கணும்னு வைராக்கியமாக வாழ்ந்தேன்.
என் மகள் பெத்த மனதில் பாலை வார்த்துட்டா”
மனம் நெகிழ பேசுகிறாள் விசாலம்.
அங்கு வந்த பார்வதியின் கணவர் சவேசன்,
“விசாலம், நீயும் கல்பனாவும் சென்னையில் தங்க வீடு ரெடியா இருக்கு. நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கே. குறைஞ்ச வாடகையில் நல்ல வீடு கிடைச்சுருக்கு”
“என்னய்யா சொல்றீங்க”“கல்பனா, போன மாசம் என்னை பார்த்து சொல்லிச்சு சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது. உங்க சிபாரிசுலே, வேலைக்கு ஏற்பாடு பண்ணின மாதிரி, நாங்க தங்கறதுக்கும் வீடு உங்க முயற்சியில் பார்த்து கொடுத்தா நல்லா இருக்கும்னு சொல்லிச்சு.”
என் நண்பரோட மகன் லயன் வீடு கட்டி வாடகைக்கு விட்ருக்கான். தி.நகரில் நல்ல இடம் வரிசையா நாலுவீடு இருக்கு. அதிலே ஒண்ணு காலியாக இருக்குன்னு சொன்னான். உங்களை பத்தி சொல்லி, அந்த வீட்டை உங்களுக்கு வாடகைக்கு தர சொல்லிட்டேன்.”
“ரொம்ப சந்தோஷம் ஐயா. ஏழைங்களுக்கு உதவற உங்களை மாதிரி நல்லவங்களுக்கு நாங்க என்ன கைமாறு செய்யமுடியும். நன்றி தான் சொல்ல முடியும்.”
“இருபது வருஷமா எங்க குடும்பத்துக்கு எவ்வளவு உழைச்சிருக்கே. ஏதோ எங்களால முடிஞ்ச உபகாரம் அவ்வளவு தான்.”
“சரிங்க ஐயா. நான் கிளம்பறேன். கல்பனா உங்களை பார்க்க வருவா பட்டணத்தில் வேலை பாக்க போறா. நீங்க பெரியவங்க, நல்ல புத்திமதி சொல்லி அனுப்புங்க”
“கல்பனா ரொம்ப நல்ல பொண்ணு, அவளுக்கு அடுத்தவங்க சொல்லி தர ஒண்ணுமில்லை. எல்லாரையும் புரிஞ்சு நல்லபடியா நடந்துப்பா”
நீ சந்தோஷமா, நிம்மதியா உன் மகளோடு போய் சென்னையில் இரு விசாலம்”
தன் காலில் விழும் மகளை தூக்கி நிறுத்துகிறாள் விசாலம்.
“என்னம்மா, எதுக்கு காலில் விழறே.”
“என்னை ஆசிர்வாதம் பண்ணும்மா. என்னை பெத்தெடுத்து தனிமனுஷியா வளர்த்து, இதோ சமுதாயத்தில் ஒரு டாக்டராக என்னை தலைநிமிர செய்தவ நீ தான்மா.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
திருமகள் தேடி வந்தாள்

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to திருமகள் தேடி வந்தாள்

Related ebooks

Reviews for திருமகள் தேடி வந்தாள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திருமகள் தேடி வந்தாள் - பரிமளா ராஜேந்திரன்

    1

    அந்த மருத்துவ கல்லூரி வளாகம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. வானவில்லாக பலவித வண்ணங்களில் சுடிதாரும், சேலைகளுமாக பெண்கள் பவனி வந்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நிகராக ஆண்களும் ஜீன்ஸ் பேண்ட், டிஷர்ப், என்று ஆணழனாக தங்களை அலங்கரித்து கொண்டு வலம் வந்தார்கள்.

    ஹவுஸ் சர்ஜன் முடித்து கடைசிநாள், டாக்டராக வெளியே வரும் அந்த இள நெஞ்சங்கள் பூரிப்பில் முகம் பிரகாசிக்க தங்களுக்குள் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தனர்.

    பிரிவு உபசார விழா நடைபெற்றுக் கொண்ருக்க கண்ணை பறிக்கும். உயர்ரக உடை அணிந்த அந்த கூட்டத்தில், எளிமையான கைத்தறி சேலையில் வந்திருக்கும் கல்பான வித்தியாசமாக தெரிந்தாள்.

    தான் ஒரு டாக்டராகிவிட்டோம் என்ற பெருமை மனதில் ஏற்பட்டாலும், தன்னுடைய இந்த லட்சிய கனவு நினைவாக,

    தன் கனவுகளுக்கு உயிர் கொடுத்த பெரிய மனிதரை, ஆயிரம் முறை மனதில் நினைத்து நன்றி சொல்லிக் கொண்ருந்தாள்.

    எல்லாரும் படிப்பு முடிச்சு அவங்கவங்க ஊருக்கு போக போறோம். இனிமேல் தான் ப்ரெபெஷனல் எப்படி பண்ண போறோம்னு பனான் பண்ணனும். ஆனா நம்ப கல்பனா அதிர்ஷ்டசாலி, அவளுக்க பெரிய தனியார் ஹாஸ்பிடலில் வேலை ஹெ. அடுத்த மாசமே ஜாயின் பண்ண போறா.

    ஆமாம். கல்பனாவே தான் ஒரு டாக்டராவோம்னு நினைச்சிருக்க மாட்டா. எட்டா கனியாக இருந்தது. இன்னைக்கு அவ கையிலே இருக்கு.

    சொன்னவள் குரலில் பொறாமை தெரிந்தது. படிப்புக்காக யாரோ அல்லவா லட்சக் கணக்கில் அவளுக்கு செலவு செய்திருக்கிறார்கள்.

    ஆமாம் படிப்பும் ஒருத்தர் தயவாலே சுலபமாக முடிந்சுடுச்சு. வேலையும் அதை போலவே ஒருத்தர் சிபாரிசுலே கிடைச்சுடுச்சு நம்ப பேட்ஜிலே அதிர்ஷ்டம் செய்தவ கல்பனா தான்.

    "எதுக்கு, எல்லாரும் கல்பனாவை பத்தியே பேசறீங்க. அவ நல்ல மனசுக்கு கடவுள் அவளை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்காரு. அவளை பார்த்து ஏன் பொறமைபடறீங்க. நாமெல்லாம் வசதியான குடும்பத்தை சேர்ந்தவங்க. நமக்கு செலவு பண்ண அம்மா, அப்பா இருக்காங்க.

    ஆனா கல்பனா அப்படி இல்லை, அப்பா சின்ன வயசிலேயே எங்கோ போயிட்டாரு. அம்மா பாவம் படிக்காதவங்க... வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தறாங்க. ஏதோ புண்ணியவான், அவ ஏழ்மை நிலை தெரிஞ்சு படிக்க உதவியிருக்காரு.

    கல்பனா மூலமாக அவ குடும்பம் நல்ல நிலைக்கு வரட்டும். அவங்க கஷ்டங்கள் இனிமேலாவது தீரட்டும்... - நல்ல மனதோடு ஒருத்தி சொல்ல, எல்லாவற்றையும் முகத்தில் புன்முறுவலோடு கேட்டபடி நின்றிருந்தாள் கல்பனா. சரி நீங்க பேசிட்ருங்க நான் ப்ரின்ஸ்பாலை போய் பார்த்துட்டு வரேன்.

    கல்பனா சொல்ல, எதுக்கு கல்பனா. இப்ப அவரை பார்க்க போற

    சில விஷயங்களை அவர்கிட்டே கேட்டு தெளிவு பண்ண வேண்டியிருக்கு.

    அவர்கிட்டே ஒரு கூட்டமே நிக்குது. நீ இப்ப போனா, அவரை பார்க்க குறைஞ்சது இரண்டு மணி நேரம் ஆகும். ஜாலியாக அரட்டை அடிக்கிறதை விட்டுட்டு அவர்கிட்டே போய் காத்துகிடக்க போறியா

    நீங்க என்ஜாய் பண்ணுங்க. நான் வரேன்

    கல்பனா பிரின்ஸ்பால் அறை நோக்கி நடக்க இவளை புரிஞ்சுக்கவே முடியலை

    அதுதான் ஏழைகு சும்பு. படிச்சுட்டா இல்லையா... அதுவுமில்லாம வேலை கிடைச்சாச்சு அந்த திமிரு சரி அவளை பத்தி என்ன பேச்சு... வாங்க சாப்பிட போகலாம்"

    மேடம் நீங்களும் சாரை பார்க்கணுமா

    ஆமாம்

    நிறையபேர் காத்திட்ருக்காங்க. லேட்டாகும். நாளைக்கு வாங்களேன்.

    அட்டெண்ட்டர் சொல்ல,

    எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. இருந்து பார்த்துட்டு போறேன்.

    அங்கிருக்கும் பாலிமர் சேரில் அமர்ந்துக் கொள்கிறாள்.

    சொல்லுமா. என்ன விஷயம்.

    "சார், நான் நல்ல படியா படிப்பை முடிச்சு, ஒரு டாக்டராக வெளியேற போறேன். என் ஏழ்மை நிலையை புரிந்து, எனக்காக, என் படிப்பு செலவு பண்ணின பெரியவரை நேரில் பார்த்து, காலில் விழுந்து என் நன்றியை சொல்லணும்,

    நீங்க தயவுசெய்து அவர் அட்ரஸ் கொடுக்கணும்."

    "ஸாரிம்மா. நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அந்த பெரிய மனிதர் தன்னை வெளிப்படுத்திக்க விரும்பலை. படிக்கிற பொண்ணு, பணமில்லாமல் படிப்பை தொடரமுடியாத நிலையை பார்த்து உனக்கு உதவி செய்தாரு.

    நீயும் பழுதில்லாம் நல்ல படியா படிப்பை முடிச்சுட்டே நீ நன்றி சொல்ல நினைச்சா, அந்த ஆண்டவனை பார்த்து நன்றி சொல்லு"

    எவ்வளவோ கெஞ்சி கேட்டும், அவரை பற்றி தெரிந்து கொள்ள முடியாத வருத்தத்தோடு அறையை விட்டு வெளியே வந்தாள் கல்பனா.

    2

    "அம்மா, வேலையை முடிச்சுட்டேன். கிளம்பட்டுமா"

    இரு விசாலம் இதோ வரேன்

    உள்ளே சென்ற பார்வதி, கையில் ஸ்விட் பார்சலுடன் வந்தாள்.

    "இந்தா உன் மகள் கல்பனா கிட்டே... இல்லே இல்லை டாக்டர் கல்பனா கிட்டே கொண்டுபோய் கொடு அவ நினைச்சது போல நல்லபடியா படிப்பை முடிச்சுட்டா.

    இப்ப வேலையும் கிடைச்சு சென்னைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1