Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தென்றல் வந்து என்னை தொடும்
தென்றல் வந்து என்னை தொடும்
தென்றல் வந்து என்னை தொடும்
Ebook109 pages35 minutes

தென்றல் வந்து என்னை தொடும்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குளித்துவிட்டு தலையை காய வைத்தபடி வெளியே வந்த வித்யா, படிகளில் இறங்கி வரும் இளைஞனை பார்த்தாள்.
சுருண்ட முடி, அடர்த்தியான மீசை, மாநிறம். பார்ப்பதற்கு கண்ணியமான குணத்துடன் இருந்தான். வாசலில் நிறுத்தியிருந்த மாருதி காரில் ஏறி புறப்பட்டு செல்லும் அவனை பார்த்தபடி நின்றாள் வித்யா.
“சவுந்தர்யாம்மா, உள்ளேதான் இருக்கீங்களா”
‘‘வாங்க, உட்காருங்க”
“இருக்கட்டும். சீனி இருந்தா ஒரு டம்ளர் கொடுங்க. என் புள்ளை செல்வத்துக்கிட்டே நேத்து சொல்லி அனுப்பினேன். மறந்துட்டான். இன்னைக்கு வரும்போது வாங்கிட்டு வந்துடுவான். தந்திடறேன்.’’
“இருக்கட்டுமா. இருங்க கொண்டு வரேன்”
உள்ளே செல்ல,
“பேச்சு சப்தம் கேட்குதே. காலேஜ் ஹாஸ்டலில் இருந்த உங்க மகள் படிப்பு முடிச்சு வந்துட்டா போலிருக்”
“ஆமாம். காலையில்தான் வந்தா... வித்யா..... வித்யா இங்கே வாம்மா. வீட்டுக்காரம்மா வந்திருக்காங்க.”
உள் அறையிலிருந்து வெளிப்பட்ட வித்யாவை மேலும், கீழும் பார்த்தாள்.
ஆளை அசத்தும் அழகு. செளந்தர்யாவுக்கு நேர்மாறாக சிவந்த நிறம். நீண்ட விழிகளும், எடுப்பான நாசியுமாக பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள்.
“வாங்கம்மா.”
தன்னை நோக்கி வரும் வித்யாவை, ஒருவித பொறாமையுடன் பார்த்தாள். “வாம்மா, நல்ல லட்சணமா சினிமா நடிகை மாதிரி இருக்கே. படிப்பை முடிச்சிட்டியோ”என்ன இவள் வயசுக்கு தகுந்த மாதிரி பேசாமல், முதன் முதல் அறிமுகமாகுபவரிடம், எப்படி பேசுவது என்ற நாகரிகம் கூட தெரியாமல், முதல் பார்வையிலேயே அவளை பிடிக்காமல் போக,
“ம்... முடிச்சிட்டேன்மா “
அதற்குள் செளந்தர்யா, சீனி டம்ளருடன் வர, “என்ன சவுந்தரியாம்மா. உங்க மகள் அளந்துதான் பேசுவா போலிருக்கு... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றா.”
“அது ஒண்ணுமில்லை. உங்ககிட்டே இன்னும் பழகலை. அதான் தயங்கறா”
“இதிலென்ன தயக்கம். வயசுப்பையனா எதிரில் உட்கார்ந்திருக்கான் தயங்கறதுக்கு. இந்த காலத்தில் பொம்பளை புள்ளைங்க, இப்படித்தான்... பாதி நடிப்பு, ஆம்பளைங்களை பார்த்தால் கலகலன்னு பேசறாங்க. இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற பாவனை.”
சொன்னவள், வித்யாவின் முகம் சிவப்பதைப் பார்த்து,
“நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே. உன்னை சொல்லலை. சாதாரணமாக, எல்லா பெண்களையும் பற்றி பொதுவான அபிப்ராயம் சொன்னேன். வரட்டுமா.
இன்னைக்கு காலையிலேயே, என் மூத்த தாரத்து மகன் விக்ரம் வந்து என் பாதி உசிரை எடுத்துட்டு போயிட்டான். அவனோட கத்தி தொண்டையே வறண்டு போச்சு. போய் சூடா காபி கலந்து குடிக்கணும்”
“என்னம்மா இது, இந்தம்மா மோசமானவாங்களாக இருப்பாங்க போலிருக்கே. குத்தலான பேச்சு, பொறாமை வீசும் பார்வை. ஆளே சரியில்லமா”
“நமக்கென்ன வந்தது. அவங்க எப்படியோ இருந்துட்டு போகட்டும். வாடகைக்கு இருக்கிறோம். ஒண்ணாந்தேதி பணத்தை கொடுத்துட்டு நம்ப வேலையை பார்ப்போம்”
“இப்படி உங்களுக்குள்ளே பண்டமாற்று அடிக்கடி நடக்கும் போலிருக்கே.”
“நான் எதைக் கேட்டும் அவங்க வாசல்படி ஏறமாட்டேன். அந்த பங்கஜம் வாரம் ஒரு தடவையாவது எதையாவது கேட்டு வந்துடுவாங்க. அரிசி, சீனி, பருப்புன்னு என்ன செய்யறது. கொடுக்க வேண்டியதா இருக்கு.”“திரும்ப வருமா”
“எப்பவாவது மனசு வந்தா கொண்டு வந்து கொடுப்பாங்க. வாடகையோடு இதையும் சேர்த்துக்க வேண்டியதுதான்”
“சரிம்மா, நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வரேன்.”
“ஆமாம் வித்யா. நானே சொல்லணும்னு இருந்தேன். உன் பேரில் போட்ட பணம் அஞ்சு லட்சம், வட்டியெல்லாம் என்ன வருதுன்னு பாரு. அஞ்சு வருஷத்துக்கு போட்டது முடிஞ்சிருக்கும். எல்லாம் கணக்கு பண்ணிட்டு வா... அதை எடுத்து உனக்கு கொஞ்சம் நகை வாங்கலாம்னு பார்க்கிறேன். இன்னும் இரண்டு வருஷத்தில் உன் கல்யாணத்தை முடிக்கணும். உனக்கானவன் எங்கே பிறந்திருக்கானோ. வலைவீசி தேடணும்.”
“ஆரம்பிச்சுட்டியா. நான் கிளம்பறேன்”
“இரு வித்யா. நீ குளிக்கும்போது ஊட்டி ரோஸ் வந்தது. வாங்கி வச்சேன். உனக்கு பிடிக்குமே. எடுத்திட்டு வரேன் வச்சுட்டு போ”
ரத்த சிவப்பில், மலர்ந்தும், மலராமல் கூம்பு வடிவில், பெரிதாக இதழ்களை விரித்திருக்கும், அந்த இரண்டு ரோஜாக்களையும், ஹேர்பின்னையும் எடுத்து வருகிறாள் சௌந்தர்யா.
“காதோரத்தில் வச்சுக்க வித்யா”
“இல்லேம்ம... முடியை தளரவிட்டு கிளிப் பண்ணியிருக்கேன். நடுவில் வச்சாதான் அழகு.” இரண்டையும் சேர்த்து வைத்து ஹேர்பின்னை செருகுகிறாள்.
“அம்மா, நல்லாயிருக்கா”
“நீ கட்டி இருக்கற ரோஸ் கலர் புடவைக்கும், சிவந்த நிற ரோஜாவுக்கும் ரொம்பவே அழகாயிருக்கு. போயிட்டு சீக்கிரம் வந்துடு வித்யா. உனக்கு பிடிச்ச வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு வறுவலும் செய்து வைக்கிறேன்.”

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
தென்றல் வந்து என்னை தொடும்

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to தென்றல் வந்து என்னை தொடும்

Related ebooks

Reviews for தென்றல் வந்து என்னை தொடும்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தென்றல் வந்து என்னை தொடும் - பரிமளா ராஜேந்திரன்

    1

    பின்புறம் மாமரம். பெரிய கிளைகளை கடை பரப்பி அந்த இடத்தையே ஆக்கிரமித்திருந்தது. ஓரத்தில் ஒரு கொய்யா மரம். கிணற்று மேடையைச் சுற்றி சிமெண்ட் பூசப்பட்டு, துணி துவைக்கும் கல்லை ஒட்டி மாமரத்தடியில் நான்கு பேர் உட்காரும் அளவு பெரிதாக சிமெண்ட் பெஞ்சு கட்டப்பட்டிருந்தது. அந்த இடமே நிழலாக, குளுமையாக இருந்தது. மாலை நேரத்தில் இந்த பெஞ் சில் வந்து உட்கார்ந்துகொண்டால் தென்றல் காற்றும், இதமான சூழ்நிலையும் நிச்சயம் அனுபவிக்கத் தக்கதாக இருக்கும் என்று வித்யாவுக்கு தோன்றியது.

    மாமரத்தை திரும்பிப்பார்த்தாள். பிஞ்சும், காயுமாக பூத்துக்குலுங்கியது.

    ‘‘என்ன வித்யா, வந்தவ வீட்டைக்கூட அவ்வளவா சுத்திப் பார்க்கலை. தோட்டத்துக்கு வந்துட்டே.’’

    கேட்டபடி சௌந்தர்யா தன் கனத்த சரீரத்தை அசைத்து மெல்ல நடந்து வந்தாள்.

    ‘‘அம்மா, இந்த இடமே ரம்மியமா ரொம்ப அழகா இருக்கு. வீடு கட்டின புதுசிலேயே மரத்தை வச்சுட்டாங்க போலிருக்கு. எவ்வளவு பெரிய மாமரம். பூவும், காயுமாக இலை தெரிய காய்ச்சு குலுங்குது.’’

    "‘பார்க்க மட்டும்தான் முடியும். வீட்டுக்காரம்மா மாடியில்தான் இருக்காங்க. வீடு வாடகைக்கு வரும்போதே, காய்கள் எதையும் பறிக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டுதான் வாடகைக்கு விட்டாங்க.’’

    ‘‘சரி பறிக்க வேண்டாம். கீழே விழற காயை எடுத்துப்போம்" சொல்லி சிரித்தவள், இந்த வீடு எனக்கு பிடிச்சிருக்கு.

    வாம்மா உள்ளே போகலாம்

    வீட்டினுள் நுழைந்தாள்.

    வாசலில் சின்ன வராந்தா... அதை ஒட்டி பெரிய ஹால். பாத்ரூம் அட்டாச்சுடன் இரண்டு பெட்ரூம், சின்னதாக ஒரு சமையலறை. அதையொட்டினாற்போல சாப்பிடும் அறை.

    "இப்பதாம்மா மனசுக்கு பிடிச்ச மாதிரி வீடு அமைஞ்சிருக்கு.’’

    ‘‘ஆமாம் வித்யா. நானும் தேடி, தேடி அலுத்துப்போயிட்டேன்...

    நீ காலேஜ் முடித்து வர்றதுக்குள்ளே அந்த ஒண்டு குடித்தன வீட்டை காலி பண்ணனும்னு நினைச்சேன். ஆறு மாசமாக தேடி பத்து நாள் முன்னாலதான் வரமுடிஞ்சுது."

    ‘‘எனக்கும் ஹாஸ்டலில் இருந்து வந்ததற்கு பெரிய ரிலீப்பா இருக்கு". சொன்னவள் ஹாலில் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்.

    மாடியில் யாரும்மா, ஓனர்தான் இருக்காங்களா.

    ஆமாம். அந்தம்மா வீட்டுக்காரர் இல்லை போலிருக்கு. நான் எப்படி தனி ஆளாக இருக்கேனோ அதே மாதிரி அவங்க இருக்காங்க. படிச்சு முடிச்சுட்டு ஒரு மகன் இருக்கான் போலிருக்கு. வேலை தேடிட்டிருக்கான்னு நினைக்கிறேன். அடிக்கடி பைக்கை எடுத்துட்டு வெளியே போவான்.’’

    நமக்கும் அதே நிலைமைதான். அவங்க பையன் வேலை தேடறான். இங்கே உன் மகள் வேலை தேட போறா

    இருக்கட்டும் வித்யா. என்ன அவசரம்? கொஞ்ச நாள் நிம்மதியா வீட்டில் இரு. ஏதோ, தோப்பு, துறவுன்னு கிராமத்தில் உங்காப்பாக்கு சொத்து பத்து இருந்ததாலே, விற்று காசாக்கி பேங்கில் போட்டு இன்னைக்கு வரைக்கும் கெளரவமாக இருக்கோம். என் கடைசி காலம் வரைக்கும் நிம்மதியா வாழற அளவுக்கு பணம் இருக்கு. ஏதோ புருஷனை இழந்தாலும் இந்த அளவுக்கு வாழறதுக்கு கொடுப்பினை இருக்கே. அதுக்கே கடவுளுக்கு நன்றி சொல்லணும்.

    மாடியில் டமாலென்று நாற்காலி கீழே விழும் சப்தம் கேட்க.

    அதைத் தொடர்ந்து,

    "நீ என்ன நினைச்சுட்டிருக்கே. உன்கிட்டே பிச்சை கேட்கிறேன்னு நினைச்சியா.

    சோறு போட்டு வளர்த்திருக்கேன். அந்த விசுவாசம் வேண்டாம். உங்கப்பனை கல்யாணம் பண்ணி என்ன சுகத்தை கண்டேன். மூணு வருஷத்திலே என் பூவையும் பொட்டையும் பறிச்சுட்டு போய் சேர்ந்திட்டாரு.

    நீ, உன் தங்கச்சி, அந்த மனுஷனை நம்பி பெத்தேனே ஒருத்தனை, அவன், உங்க மூணு பேரையும் தனி மனுஷியா ஆளாக்க எவ்வளவு சிரமப்பட்டிருக்கேன். அதையெல்லாம் நினைச்சு பார்க்க வேண்டாமா. என்னமோ பிச்சை போடற மாதிரி நினைச்சுக்கிட்டு பேசற"

    கனத்த குரலில், கத்தி பேசும் அந்த பெண்மணியின் வார்த்தைகள் ஒன்றுவிடாமல் கீழே எதிரொலிக்க,

    "என்னம்மா இது... பேசறதுதான் வீட்டுக்காரம்மாவா... யார்கிட்டே பேசறாங்க’’

    "ஆமாம். அந்த பங்கஜம்தான் பேசறா. கொஞ்சம் சிடுசிடுத்த குணம்தான். மூத்த தாரத்து பையன் வந்திருக்கான் போலிருக்கு. ரொம்ப அமைதியான பையன். அவங்க குடும்ப விஷயம் நமக்கென்ன தெரியும். சரி நீ குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்.’’

    2

    குளித்துவிட்டு தலையை காய வைத்தபடி வெளியே வந்த வித்யா, படிகளில் இறங்கி வரும் இளைஞனை பார்த்தாள்.

    சுருண்ட முடி, அடர்த்தியான மீசை, மாநிறம். பார்ப்பதற்கு கண்ணியமான குணத்துடன் இருந்தான். வாசலில் நிறுத்தியிருந்த மாருதி காரில் ஏறி புறப்பட்டு செல்லும் அவனை பார்த்தபடி நின்றாள் வித்யா.

    சவுந்தர்யாம்மா, உள்ளேதான் இருக்கீங்களா

    ‘‘வாங்க, உட்காருங்க"

    "இருக்கட்டும். சீனி இருந்தா ஒரு டம்ளர் கொடுங்க. என் புள்ளை செல்வத்துக்கிட்டே நேத்து சொல்லி அனுப்பினேன். மறந்துட்டான். இன்னைக்கு வரும்போது வாங்கிட்டு வந்துடுவான். தந்திடறேன்.’’

    இருக்கட்டுமா. இருங்க கொண்டு வரேன்

    உள்ளே செல்ல,

    பேச்சு சப்தம் கேட்குதே. காலேஜ் ஹாஸ்டலில் இருந்த உங்க மகள் படிப்பு முடிச்சு வந்துட்டா போலிருக்

    ஆமாம். காலையில்தான் வந்தா... வித்யா..... வித்யா இங்கே வாம்மா. வீட்டுக்காரம்மா வந்திருக்காங்க.

    உள் அறையிலிருந்து வெளிப்பட்ட வித்யாவை மேலும், கீழும் பார்த்தாள்.

    ஆளை அசத்தும் அழகு. செளந்தர்யாவுக்கு நேர்மாறாக சிவந்த நிறம். நீண்ட விழிகளும், எடுப்பான நாசியுமாக

    Enjoying the preview?
    Page 1 of 1