Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavukkum Niramundu
Nilavukkum Niramundu
Nilavukkum Niramundu
Ebook116 pages42 minutes

Nilavukkum Niramundu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466831
Nilavukkum Niramundu

Read more from R.Sumathi

Related to Nilavukkum Niramundu

Related ebooks

Reviews for Nilavukkum Niramundu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavukkum Niramundu - R.Sumathi

    1

    இருபுறமும் பச்சைப்பசேலென்ற வயல்கள். நடுவில் ஓடிய மண் பாதை, பயணிக்கும் அனைவரையும் கவர்ந்து மனதில் உற்சாகத்தை உண்டுபண்ணியது.

    காரை சாலையில் செலுத்தியபடியே வயல்களின் பசுமையை ரசித்தான் நவநீதன்.

    கதிர் முற்றி தலை சாய்ந்திருந்தது. அந்த காட்சி அனைவர் மனதிலும் பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்தும். அதிலும் நம் தமிழாசிரியரை கண்டிப்பாக நினைவில் கொண்டு வரும்.

    மெத்தப் படித்த அறிவுடையவர்கள், செல்வம் நிரம்பப் பெற்றவர்கள் கதிர் முற்றி தலைசாய்த்திருக்கும் நெற்பயிரைப் போல் பணிவு கொள்ள வேண்டும் என நம் தமிழாசிரியர் நடத்தியது ஞாபகம் வரும்.

    ஆனால் –

    இன்றைய காலகட்டத்தில் தலைகவிழ்ந்திருக்கும் நெற்கதிர்களைப் பார்க்கும் போது முழுநேரமும் மொபைலில் மூழ்கி தலைகுனிந்து கிடக்கும் இளைஞர்களின் ஞாபகம்தான் வருகிறது.

    நவநீதனுக்கும் தமிழாசிரியரின் ஞாபகம் வந்தது.

    எப்பொழுதும் கம்பெனி, கணினி என மூழ்கிக்கிடக்கும் மனம் வழக்கத்திற்கு மாறாக இலக்கிய சிந்தனைகளில் மூழ்கியது.

    ‘விளைக வயலே... வருக இரவலர்’ என்ற ஐங்குறு நூறு பாட்டு வரிகள் விளைந்து கிடந்த வயல்கள் இரவலர்களுக்கு அள்ளித்தர விளைந்து கிடப்பதைப் போல், ‘வந்து எங்களை அள்ளிக் கொண்டு போங்கள்’ என சொல்வதைப் போல் தோன்றியது. இயந்திரத்தனமான எண்ணங்களின் ஊடேகிடந்த மூளை இந்த இலக்கிய சிந்தனைகளால் சிறகு முளைத்ததைப் போல் பறந்தது.

    வரப்போரம் நீலநிற காட்டுமலர்கள் படர்ந்து கிடந்ததைப் பார்த்தபோது மனம் மறுபடியும் முணுமுணுத்தது.

    ‘பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்’

    ‘அடடா... என்ன இது? இன்றைக்கு ஒரே இலக்கிய சிந்தனையாக இருக்கிறது?’

    ‘இது எதனால்? வயல்களைப் பார்த்ததாலா? இல்லை... அவளுடைய புகைப்படத்தைப் பார்த்ததிலிருந்தே இப்படித்தான் மனம் குளிர்ச்சியாக ஏதேதோ நினைக்கிறதோ?’

    கவிதைகளை ஞாபகப்படுத்துகிறது. கற்பனைகளை உற்பத்தி செய்கிறது!

    இப்பொழுது கூட விளைந்து தலைசாய்ந்த நெற்பயிர்களைப் பார்க்கும் போது உண்டாகும் இலக்கிய சிந்தனைகளெல்லாம் கோகிலாவை நேரில் பார்க்கப் போவதால் ஏற்படுகிறதோ என்று தோன்றியது.

    கோகிலா!

    புகைப்படத்தில்தான் பார்த்தான்.

    வகையாக எதிலோ சிக்கிக்கொண்டதைப் போல் உணர்ந்தான்.

    மணமக்களை அறிமுகம் செய்விக்கும் வழியாக வந்த வரன் நேரில் பார்க்க அம்மாவுடன் அக்காவுடன் சென்று கொண்டிருக்கிறான்.

    கிராமமே இத்தனை அழகாக இருப்பதால்தான் அவளும் அத்தனை அழகாகயிருக்கிறாளோ? அழகிகளெல்லாம் கிராமத்தில்தான் இருப்பார்களோ?

    ஏதேதோ நினைத்தான்.

    இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளை நேரில் பார்க்கப் போகிறான்.

    ஆனாலும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    செல்ஃபோனில் இருக்கும் அவளுடைய புகைப்படத்தை ஒரு முறை பார்த்துவிட மனம் விழைந்தது.

    மொபலை இடது கையால் எடுத்தபடியே வலது கையால் வாகனத்தை செலுத்தினான்.

    அவளுடைய புகைப்படத்தை வரவழைத்துப் பார்த்தான்.

    தீபம் கொண்ட அந்த கண்கள் அவனுடன் பேசுவதைப் போலிருந்தன.

    டேய்... கார் ஓட்டும் போது மொபைலை யூஸ் பண்ணாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது? பின் சீட்டிலிருந்து அம்மா கோபப்பட்டாள்.

    இதென்ன சென்னையா? ஆக்ஸிடன்டாக. கிராமம்மா சிரித்தபடியே திரும்பாமல் குரல் கொடுத்தான் நவநீதன்.

    டேய்... சிட்டியில் டிராஃபிக் ரூல்ஸ் அது இதுன்னு எத்தனையோ இருக்குடா ஆக்ஸிடன்ட் நடக்காமயிருக்க. கிராமம்தான்டா ஆபத்து! அம்மா கிருஷ்ணவேணி சிடுசிடுத்தாள்.

    என்னம்மா நீ...? எதிரே பக்கவாட்டில் பாரேன். வயலும் வாய்க்காலுமா... நாரையும் கொக்குமா? எத்தனை அமைதியாவும் அழகாவும் கிராமம் சிரிக்குது. இங்க போய்... ஆக்ஸிடன்ட்ங்கற வார்த்தையை கூட உபயோகிக்கக் கூடாதும்மா.

    டேய்... அழகு இருக்கற இடத்துலதான்டா ஆபத்தும் இருக்கும். நீ அழகுன்னு லயிச்சுப் போய் இறங்கற வயல்லயிருந்து திடீர்னு ஒரு எருமைமாடு வந்து காருக்கு குறுக்கே பாய்ந்தா என்னாகும்னு நினைச்சுப் பாரு! அக்கா சாந்தி சொல்ல அம்மா அவளை முறைத்தாள்.

    ஏன்டி... பொண்ணு பார்க்க போற நேரத்துல குறுக்கே எருமை வரும்னு சொல்றே? அபசகுனம் மாதிரி. முதல்ல... நீயும் உன் மொபைலை ஆஃப் பண்ணுடி.

    அப்படி சொல்லும்மா. ரசனையே கிடையாது உன் பொண்ணுக்கு. இத்தனை அழகான கிராமத்தை ரசிக்காம மொபைல்ல புளியோதரை செய்யறது எப்படி? தக்காளி சாதம் செய்யறது எப்படின்னு பார்த்துக்கிட்டிருக்குது அக்கா...

    போடா... நான் ஒன்னும் புளியோதரையையும், தயிர் சாதத்தையும் பார்த்துக்கிட்டிருக்கலை.

    பின்னே... இன்னைக்கு தங்கத்தோட ரேட் என்னன்னு பார்த்துக்கிட்டிருக்கியா?

    போடா... நான் பொண்ணுங்களோட போட்டோஸைப் பார்த்துக்கிட்டிருக்கேன்.

    பொண்ணுங்களோட போட்டோஸை எதுக்குப் பார்க்கறே? அதான் பொண்ணு பார்க்கப் போறோமே.

    பொண்ணு பார்க்கப் போனா என்ன? உடனே அதையே முடிச்சிடனுமா? நிறைய பொண்ணுங்களைப் பார்க்கணும். அதுல எது பெஸ்ட்டோ அதை தேர்ந்தெடுக்கணும்.

    தேவை இல்லை. நான் தேர்ந்தெடுத்தாச்சு. இந்த கோகிலாதான் என் வருங்கால மனைவி.

    அம்மாவும் இருண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

    பார்த்தியாம்மா உன் புள்ளை சொல்றதை?

    அவனுக்குப் பிடிச்சா சரிதானே?

    என்ன சரி? எல்லாம் ஒத்து வந்தாதானே முடிவு பண்ணணும். என்னமோ இவன் பொண்ணுங்களையே பார்க்காத மாதிரி ஒருத்தியைப் பார்த்ததும் ‘ஆன்னு வாயைப் பிளந்துட்டான் ஒத்து வர வேண்டாமா?

    ஒத்து வர்றதுன்னா... திரும்பாமலேயே கேள்வி கேட்டான்.

    ஒத்து வர்றதுன்னா நாம கேட்கற நகை நட்டையெல்லாம் கிராம் அளவுகூட குறையாம போடணுமில்லே?

    அப்போ... இந்த நிமிஷத்திலயிருந்து நீ ஊமை!

    அம்மா இவன் என்ன சொல்றான்?

    நீ வாயைத் திறக்கக்கூடாதுன்னு சொல்றேன். அம்மா, பொண்ணு வீட்ல அக்காவை பிறவி ஊமைன்னு சொல்றோம், சரியா?

    அம்மா, பாரும்மா இவனை! மகள் சிணுங்க அம்மா சிரித்தாள்.

    டேய்... அக்காவை ஏண்டா கோவிச்சுக்கறே? பொண்ணு வீட்ல நிறைய நகை போடணுமின்னு அக்கா எதிர்ப்பார்க்கறது உன் நலனுக்குத்தானே?

    "அம்மா, அக்கா என் நலனுக்குன்னு சொல்லிக்கிட்டு அதைக் கொண்டா இதைக் கொண்டான்னு கேட்கறது என் நலனுக்கு இல்லம்மா, எல்லாம் அக்காவோட நலனுக்குத்தான். பொண்ணு வீட்ல இத்தனை பவுன் போடணும், அத்தனை சீர் செய்யணும்னு சொல்றது ஏன் தெரியுமா? கல்யாணம் முடிஞ்ச பிறகு பாரு உன் மருமக இவ்வளவு போட்டுக்கிட்டு வந்திருக்கா, என்னைக் கட்டிக் கொடுக்கும் போது நீ

    Enjoying the preview?
    Page 1 of 1