Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathai Thiranthathu Poovasam...!
Manathai Thiranthathu Poovasam...!
Manathai Thiranthathu Poovasam...!
Ebook130 pages48 minutes

Manathai Thiranthathu Poovasam...!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

என்னைப் பற்றி...

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.

திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.

தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்

பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வாசிப்பை நேசிப்போம்.

அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129504722
Manathai Thiranthathu Poovasam...!

Read more from Daisy Maran

Related to Manathai Thiranthathu Poovasam...!

Related ebooks

Reviews for Manathai Thiranthathu Poovasam...!

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathai Thiranthathu Poovasam...! - Daisy Maran

    http://www.pustaka.co.in

    மனதை திறந்தது பூவாசம்...!

    Manathai Thiranthathu Poovasam…!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    பௌர்ணமி இரவு... நிலவு தன்னுடைய ஒளியை ஊரெங்கும் பரவவிட்டிருந்தது! சிதறிக்கிடந்த நட்சத்திரங்கள் வானம் முழுவதும் வர்ணஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்தன.

    போதாக்குறைக்கு, அடுத்த நாள் நடக்கவிருந்த திருமணத்துக்காக, ஊரின் பாதி பகுதியை வளைத்து வண்ண விளக்குகள் பொருத்தியிருந்தனர். சீரியல் பல்புகளும், டீப்லைட்டுகளும் போட்டி போட்டுக் கொண்டு வெளிச்சத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.

    ஒரு பக்கம் ஒளிபெருக்கில் வழிந்தோடும் புதுப் பாடல்கள் மனதை வருட! மறுபக்கம் பட்டாசுகளின் வான வேடிக்கை சத்தம் காதை துளைத்தது! இன்னும் சற்று நேரத்தில் பெண் அழைப்பு நிகழ்ச்சி ஆரம்பமாகிவிடும். அதற்காகக் கூட இருக்கலாம் இந்த ஆரவாரங்கள்.

    இந்த ஊரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாவட்டத்தில் இருக்கும் கொட்டகுடிதான் இந்த ஊரின் பெயர். மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூருக்கு அருகில் உள்ளது இந்த ஊர். வயல்வெளிகள் சூழ்ந்த பசுமையான நிலப்பரப்புடையது.

    இந்த ஊரில் பல்வேறு இனத்தவர் வாழ்ந்து வந்தாலும் மனதால் ஒன்றுப்பட்டு, ஜாதி, மதம் என்ற பிரிவினை இன்றி ஏழை பணக்காரர் என்ற பாகுபாடும்மின்றி ஊர் மக்கள் ஒற்றுமையோடு வாழ்ந்ததாலோ என்னவோ ஒரு கோடீஸ்வரனோட மகனுக்கு வாக்கப்பட போகிறாள் நம்ப அபிராமி!

    விடிந்தால் திருமணம்.

    ஆமாம்! நீங்கள் நினைப்பது சரிதான்.

    அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் ஒருவரின் மகனைத்தான், நமது அபிராமி மணக்கப் போகிறாள்.

    இனி.... அபிராமியைப் பற்றி பார்ப்போம்!

    அந்த ஊரிலே...

    விரலை நீட்டி அழகி என்று சொல்வதென்றால், அது நம்ம அபிராமியாகத்தான் இருக்க முடியும்.

    ரோஜா நிறம், கயல் விழிகள்! கார்முகில் கூந்தல்! மல்லிகையை ஒத்த வெண்ணிறப் பற்கள். கொடிப் போல உடல், கொவ்வை இதழ்கள்.

    இவளுக்கு, பாட தெரியும். ஆடத் தெரியும், படிப்பில் முதலிடம். இவ்வளவு இருந்தும் என்ன பயன்?

    ஏழ்மை என்ற மூன்றெழுத்து எல்லாவற்றையும் முடக்கிவிடுகிறதே...?

    "என்னங்க... நம்ம பொண்ணை வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக் கொடுக்கனுங்க! அவளுக்கு இருக்கும் அறிவிற்கும், அழகிற்கும், நம்ப ஜாதி சானத்துல யாருமே இல்லேங்க...

    கற்பகம் தன் கணவனிடம் சொல்லும் ஒவ்வொரு முறையும், அவரிடமிருந்து திட்டு வாங்கிக் கொண்டது தான் மிச்சம்.

    ஏண்டி.... உனக்கு அறிவு, கிறிவு இருக்கா? ஆசைக்கு ஒன்னு, ஆஸ்த்திக்கு ஒன்னுன்னு ரெண்டே ரெண்டை பெத்து வச்சிருக்கேன். அதுவும் எங்க குடும்பத்துக்கே இவ ஒருத்தி தான் பொம்பளைப்புள்ள, அவளைப் போயி வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்துட்டு வயித்துலே ஈர துணியை கட்டிக்கிட்டு இருக்க சொல்றியா?

    ஏண்டா... இந்த மனுஷங்கிட்ட வாயைக் கொடுத்தோன்னு இருக்கும் பகத்துக்கு.

    எம் பொண்ணுக்கு இருக்கிற அறிவுக்கும், அழகுக்கும் கோட்டீஸ்வரன் சிட்டுக்குத் தான் மருமகளா போப் போகிறா நீ வேணுன்னா பாரு....

    சீனிவாசன் எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ அவர் வாய் முகூர்த்தம் அப்படியே நடக்கப்போகுது. என்ன இதை இருந்து பார்க்கத்தான் அவ'க்கு கொடுத்து வைக்கலை.

    மனுஷன் போயி இன்னையோட பத்து நாளாகுது. அவரு இப்படி போய் சருவாருன்னு யாரும் நெனைச்சிக்கூட பார்க்கலை.

    சீனிவாசன், லண்டன்காரர் ராஜலிங்கத்தோட வீட்டிலே கார் டிரைவராக இருந்தார். கிட்டதட்ட இருபது வருஷமாக அந்த வீட்டிலே டிரைவராக இருந்ததால் இவரை குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி பழகினார்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள்.

    அம்பாசிட்டர் போய் சுமோ வந்தது. சுமோ போய் இனோவா வந்தது. ஆனால் சீனிவாசன் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தார்.

    இராஜலிங்கத்தோட முதல் பையனுக்கு கல்யாணம் முடிவானது. பையன் வீட்டைப் போல, பொண்ணு வீடும் நல்ல வசதி. பணத்தோட பணம் சேரும் என்று சொல்வார்கள். அதுப்போல கிலோ கணக்கிலே நகைப்போட்டு வெளிநாட்டு கார் ஒன்னு வாங்கி தருவதாக வாக்கு கொடுத்திருந்தனர் பெண் வீட்டார்.

    இராஜலிங்கம் கொஞ்சம் வீம்பு பிடித்தவர், சீனிவாசனை அழைத்து சென்னைக்கு போயிட்டு வரலாம் கிளம்பு என்று உத்தரவு போட்டார். தீடீர்னு எதுக்குங்கையா சென்னைக்கு?

    கார் வாங்கத்தான்.... புது மாடல் காரா பார்த்து புக் பண்ணிட்டு வந்துடலாம்...

    ஐயா! சொன்னா தப்பா எடுத்துக்கக் கூடாது. நம்மக்கிட்டதான் ஒன்னுக்கு ரெண்டு காரு இருக்கே பிறகு எதுக்கு?

    அட! என்னா இப்படி கேட்டுபுட்டே? பொண்ணுக்கு வெளிநாட்டு காரு வாங்கித்தர்றாங்களாம். அப்படீன்னா என்ன அர்த்தம்? மாப்பிள்ளை வீட்டிலே அது இல்லேன்னுதானே அர்த்தம்.... மாமனார் வாங்கிக் கொடுத்த காருலே எம்பையன் போனா அது நல்லாவா இருக்கும்? அவங்க வாங்குற காரோட ஒரு பத்து லட்சம் கூட போனாலும் பரவாயில்லை, அதை விட அதிக விலையிலே நாம வாங்கறோம்! புரியுதா?

    இப்படி பிடிவாதம் பிடிக்கிறவர்கிட்டே என்ன சொல்லி என்ன புரியபோவுது பேசாமல் அவருடன் கிளம்புவது என்று முடிவு செய்தார் சீனிவாசன் இராஜலிங்கத்துக்கு மூன்று பிள்ளைகள். மூத்த பையன் குணசேகரன், அதற்கு அடுத்து பாண்டியன், மூன்றாவது திவ்யா.

    மாப்பிள்ளை குணசேகரன் - சென்னையிலே சாப்ட்வேர் இன்ஜினியராக வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான். இளையவன் பாண்டியன் மதுரையிலே பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருக்கிறான். கடைக்குட்டி திவ்யா ப்ளஸ்டு படிக்கிறாள்.

    சென்னைக்கு கிளம்புவதற்கு முன் குணசேகரனுக்கு போனைப் போட்டு இன்று இரவு சென்னைக்கு வரப்போவதை தெரிவித்துவிட்டு கிளம்பினார்.

    ஐயா... போகிற வழியிலே, ஒரு அஞ்சி நிமிஷம் என் வீட்டுக்கு போயிட்டு வந்துடவா...?

    ம்ம்... போயிட்டு சட்டுபுட்டுன்னு வா... காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு தன் வீட்டை நோக்கி நடந்தார்.

    அப்பா... நாங்க இங்கே இருக்கோம்பா.... மகள் அபிராமியின் குரல் பின் பக்கத்தில் ஒலித்தது.

    சீனிவாசன் சட்டென்று திரும்பிப் பார்த்தார். மனைவி, மகன், மகள் மூன்று பேரும் பூஜை கூடையோடு நின்றிருந்தனர்.

    கோயிலுக்கு போயிட்டு வர்ரீங்களா? சரி... வாங்க நேரமாகுது. நான் ஐயா கூட சென்னைக்கு போகிறேன். அதான் சொல்லிட்டு கிளம்பலான்னு... கற்பகம்... இந்தா இதுலே ஐநூறு ரூவா இருக்கு, நாளைக்கு அபிராமியோட பிறந்தநாளில்லே! அவளுக்கு எதையாவது செஞ்சிக்குடு... நான் வரும்போது --ரெஸ் எடுத்துட்டு வர்றேன்...

    இராஜலிங்கம் பொறுமை இழந்து காரை விட்டு இறங்கினார்.

    என்னப்பா... போகலாமா? கேட்டவரின் பார்வை அங்கே நின்றிருந்தவர்களின் மேல் படிந்தது.

    அட! இது உம்பொண்ணு அபிராமியா? சின்னப்பிள்ளையா இருக்கும்போது பார்த்தது. இப்படி நெடுநெடுன்னு வளர்ந்து இருக்கிறாளே!

    ……….

    "எப்படீம்மா இருக்கே? என்னப் படிக்கிறே?

    பிஎஸ்சி... த்தேடு இயர் சார்....

    சிறு புன்முறுவலோடு பதில் சொன்னாள்.

    சந்தோஷம்... நல்லா படிக்கனும்...

    ம்ம்.... தலையசைத்தாள்.

    "ஐயோ...

    Enjoying the preview?
    Page 1 of 1