Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounamey Kaadhalaai..!
Mounamey Kaadhalaai..!
Mounamey Kaadhalaai..!
Ebook121 pages48 minutes

Mounamey Kaadhalaai..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விட்டுக்கொடுத்தல் இல்லாமல் விவாதங்களினால் பிரிந்த உறவுகளும், நட்பும், காதலுமே அதிகம். அனுசரிப்பு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று.

நீ தட்டி விட்டதால் நான் விழவில்லை. நீ வெற்றி பெறவே நான் ஒவ்வொரு முறையும் விழுகிறேன்!. என்பதே ஆழமான அன்பின் அடையாளம்.

நம் கதையின் நாயகன் நாயகி இருவரும் ஒருவருக்கொருவர் புரிதலின்றி பயணிக்கிறார்கள். இருவரின் வாழ்வும் வெவ்வேறு கட்டமைப்புக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சில பல சம்பவங்களுக்குப் பிறகு ஊடலுக்கு பின் காதலும் மலருகிறது. அந்த காதலை வெளிப்படுத்தி வாழ்வில் இணைந்தார்களா? அல்லது நிரந்தரமாக பிரிந்து சென்றார்களா? என்பது நாவலை படித்து தெரிந்து கொள்ளலாமே!

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580129510284
Mounamey Kaadhalaai..!

Read more from Daisy Maran

Related to Mounamey Kaadhalaai..!

Related ebooks

Reviews for Mounamey Kaadhalaai..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounamey Kaadhalaai..! - Daisy Maran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மௌனமே காதலாய்..!

    Mounamey Kaadhalaai..!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/daisy-maran

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 1

    முந்தைய மழைக்கால இரவை பின் தள்ளி புலர்ந்திருந்தது விடியல். திறந்திருந்த ஜன்னலின் வழியே அதிகாலையில் மலர்ந்திருந்த மல்லிகையின் மணம் அறைக்குள் நுழைய முயற்சித்துக்கொண்டிருக்க, மல்லிகையின் மணத்தைவிட மழையின் வாசனைதான் சுவாசத்தை நிரப்பி இதத்தை தந்தது. கண்களை திறவாமல் வலது கையை நீட்டி தலைக்கு மேற்புறமிருந்த செல்போனை கையிலெடுத்தாள் நறுமுகை.

    மொபைலை ஆன் பண்ணி பார்த்தவுடன் அதிலிருந்த புகைப்படம் இவள் கண்களை நிறைத்து கண்ணீரையும் படரவிட்டது.

    தினந்தோறும் தன் பெற்றோரின் புகைப்படத்தில்தான் கண் விழிப்பாள் நறுமுகை. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தப்பழக்கம் மாறியதில்லை. ஆனால் இன்று அந்த புகைப்படத்தை பார்த்தப்போது ஏனோ மனம் வலித்தது. அவர்கள் மூடி மறைத்த அந்த ரகசியம்? தனக்கு அவர்களுக்குமானதான தற்போதைய இடைவெளி இதையெல்லாம் எண்ணிபார்த்தாள். நேற்றைய தினம் நடந்த அந்த விஷயம் மனதை சுக்கு நூறாய் உடைந்து விட்டதுப்போல் வலிக்கச்செய்தது. இத்தனை நாளும் நம்மைப்பற்றிய ரகசியத்தை மறைத்து இருக்கிறார்களே? என்ற குமுறல் அப்பட்டமாக வெளிப்பட்டது.

    ஒரு வருடம் இரண்டு வருடமல்ல கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாய் இவளிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே அவர்கள் மேல் சொல்லொண்ணா கோபம் எழுகிறது. நறுமுகையை பொறுத்தவரை தனக்கும் தன் பெற்றோருக்கும் இடையில் ரகசியம் என்று இதுவரை இருந்ததில்லை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உடனே ஓடி வந்து பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் நறுமுகைக்கு இந்த விஷயம் தெரிந்ததிலிருந்தே அவர்களின் முகத்தைப் பார்த்து இயல்பாக பேசக்கூட முடியவில்லை. இது அவளுக்கு மிகப்பெரிய துயரமாய் இருந்தது.

    அதுவும் இவளாக கண்டுபிடித்து கேட்ட பிறகுதான் அந்த ரகசியத்தையும் ஒத்துக்கொண்டார்கள். இல்லை என்றால் கடைசி வரை இவளிடம் சொல்லாமலேயே காலத்தை கடத்தியிருப்பார்கள். எப்பேர்பட்டதான ஒரு விஷயம். அதுவும் முழுக்க முழுக்க என் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை என்னிடம் மறைக்க வேண்டிய அவசியமென்ன? என்பதுதான் நறுமுகையின் கேள்வி. அப்படியே சொல்லிருந்தால் இவள் அவர்களை விட்டுவிலகி ஓடவா போறாளா? அல்லது வெறுத்து ஒதுக்கத்தான் போகிறாளா? மாட்டாள் கண்டிப்பாக அப்படி மட்டும் பண்ணமாட்டாள். காரணம் அவர்கள் மேல் உயிரையே வைத்திருக்கும் அவளால் அவர்களை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்?

    கொஞ்சங்கூட பாசமே இல்லாமல் குப்பைத்தொட்டியில் வீசுவதுப்போல வீட்டு வாசலில் வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள். பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு தன் குழந்தை மீது பாசமில்லாமல் போய்விட்டது என்றுதானே அர்த்தம்?. தாய்ப்பாலின் சுவைகூட கண்டிறாத பச்சிளம் குழந்தை தாயின் ஸ்பரிசத்துக்காக எப்படியெல்லாம் ஏங்கித்தவித்திருக்கும்? குழந்தையே வேண்டாமென்று தூக்கி வீசிவிட்டு போன அந்த கல் நெஞ்சக்காரியை நான் தேடி ஓடவா போகிறேன்?

    இத்தனை நாள் வாழ்ந்ததில் இந்த ஒரு சின்ன விஷயத்தைகூட தன் தாய் தகப்பன் புரிந்து கொள்ளவில்லையே? என்பதுதான் இவளின் மொத்த துயரத்திற்கும் காரணம்.

    அன்று ஒரு இன்டர்வியூக்கு சென்று வீடு வந்தடைந்த நறுமுகைக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.

    டைனிங் டேபிள் மேல் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தாள். எதுவுமே இல்லை. வெள்ளிக்கிழமை என்பதால் அம்மா கோவிலுக்கு சென்றிருப்பார் என்பதை புரிந்து கொண்டவள் சமையலறையில் நுழைந்து ஒவ்வொரு டப்பாவா திறந்து பார்த்தபோது கிட்டத்தட்ட எல்லாமே சமையலுக்கு பயன்படுத்தும் பருப்பு வகையாகத்தான் இருந்தது. மேல் அறையிலிருந்த அந்த பழைய சில்வர் டப்பா கண்ணில் படவும், ஸ்டூல் போட்டு ஏறி அதை எடுத்து திறந்து பார்த்தாள். கடலைபருப்பு பாதிவரை நிரம்பியிருந்தது. கடலைப் பருப்பிற்கு மேல் நான்காய் மடித்து வைக்கப்பட்ட அந்த பேப்பர் கண்ணில்பட்டது.

    அம்மா எதற்காக இந்த பேப்பரை இதற்குள் வைத்திருக்கிறாள்? என்ற யோசனையோடு மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த பேப்பரை எடுத்து பிரித்து பார்த்தாள். அது ரீபிள் பேனாவால் எழுதப்பட்ட ஒரு கடிதம் என்பது புரிந்தது. யாரோ யாருக்காகவோ எழுதப்பட்ட கடிதம் அப்படிதான் அதன் சாராம்சம் இருந்தது. மற்றவர்களில் கடிதத்தை படிப்பது நாகரிகமற்ற செயல் என்று உள்ளுணர்வு உணர்த்த, திரும்பவும் கடிதத்தை மடிக்க எத்தனித்தப்போது அதன் தலைப்புரத்தில் இருந்த தேதி யோசனையில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதமது. அதை இத்தனைநாள் யார் கண்ணிலும் படாமல் பாதுக்காக்க வேண்டிய அவசியமென்ன? தோன்றிய மறுநிமிடம் கடிதத்தை பிரித்து படிக்கத்தொடங்கினாள். பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குரிய ஜெயக்கொடி செல்வராஜ் அவர்களுக்கு சாந்தா வணக்கத்துடன் எழுதிக்கொண்டது என்று அந்தக் கடிதம் துவங்கியிருந்தது.

    நமக்கு தெரியாம யார் இந்த சாந்தா? அப்பா அம்மாவுக்கு அப்படி என்ன விஷயமா கடிதம் எழுதி இருக்காங்க? என்ற கேள்வியோடு அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். மொத்த சாராம்சத்தையும் படித்து முடித்தப்போது அவள் முகம் வேர்த்து விறுவிறுத்திருந்தது.

    அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை மூச்சு விடவே சிரமமாக இருந்தது. என்ன இது இதில் எழுதப்பட்டிருக்கும் விஷயம் உண்மைதானா? என்று தன்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டாள். மீண்டும் அந்தக் கடிதத்தைப் படித்தாள். கண்கள் இருண்டது இயல்பு நிலைக்கு வருவதற்கு சில நொடிகள் பிடித்தது.

    ஓரிரு நிமிடங்கள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள். அழுகை குமறிக்கொண்டு வந்தது. ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு மனம் லேசானது போன்று தோன்றவே மெல்ல எழுந்து ஹாலுக்கு வந்தமர்ந்தாள்.

    அந்த சமயம் கதவைத் திறந்துகொண்டு அம்மா ஜெயக்கொடி உள்ளே வந்தாள்.

    ஏம்மா நறுமுகை லைட் கூட போடாம ஏன் இப்படி இருட்டுல உட்கார்ந்து இருக்கே?

    மகளிடம் பதில் இல்லாமல் போகவே லைட்டை ஆன் பண்ணிவிட்டு நறுமுகையின் அருகில் வந்தமர்ந்தாள் ஜெயக்கொடி.

    ‘தலை வலிக்குதா போன விஷயம் என்னாச்சு? எத்தனை மணிக்கு வந்தே... ஏதாவது சாப்டியா நீ ஒன்னும் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு வரும்போதே டிபன் வாங்கிட்டு வந்துட்டேன் தட்டில் எடுத்து வைத்து சாப்பிடு போ...

    அம்மா இயல்பாக பேசுவது போல் நறுமுகைக்கு தோன்றவில்லை இந்த அக்கறை அன்பு இதெல்லாம் ஒட்டாமல் தனித்து நிற்பதாய் தோன்றியது.

    சே...நான் ஏன் இப்படியெல்லாம் நினைகிறேன்? எனக்காக இதுவரை எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கும் இவர்களை என்னால் எப்படி இப்படியெல்லாம் நினைக்க தோன்றுகிறது? யாரோ பெற்றெடுத்த குழந்தையை தன் பிள்ளையாய் அரவணைத்து பாசம் காட்டி வளர்ப்பதென்பது சாதாரண விஷயமல்ல. அதற்கெல்லாம் நல்ல மனசும் சகிப்புத்தன்மையும் அவசியம் வேண்டும். அப்படி இருக்கும்போது அவர்களை பிரித்து பார்ப்பதே இழிவான மனநிலை. இப்படி நினைக்க

    Enjoying the preview?
    Page 1 of 1