Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Oru Vasantham
Meendum Oru Vasantham
Meendum Oru Vasantham
Ebook132 pages45 minutes

Meendum Oru Vasantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466954
Meendum Oru Vasantham

Read more from Vijaya Chandran

Related to Meendum Oru Vasantham

Related ebooks

Related categories

Reviews for Meendum Oru Vasantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Oru Vasantham - Vijaya Chandran

    1

    மதியம் வெயில் மண்டையைப் பிளந்தது. கல்லூரி அரை நாள் விடுமுறை என்பதால் அப்பாவுக்கு போன் செய்து சொல்லிவிட்டு காரின் வருகையை எதிர்பார்த்து கல்லூரியின் வாயிலிலேயே காத்து நின்றாள் திவ்யா.

    ‘போன் செய்து ஒரு மணிநேரம் ஆகுது. ஏன் இன்னும் கார் வரலை’. நிற்கவே சங்கடமாக இருந்தது. அப்பா எதிலுமே அதுவும் என் விஷயத்தில் அக்கறையாக இருப்பார். ஏன் என்ன காரணம் என்று யோசித்து நின்றவள் அலைபேசியை முடுக்கினாள்.

    திவ்யா சொல்லு.

    கார் இன்னும் வரலையே.

    ஒரு மணிநேரம் ஆகுது திவ்யா! டிரைவரிடம் கேட்க வேண்டியது தானே

    நீங்களே கேட்டு அனுப்புங்க.

    ஏதோ காரணம் இல்லாமல் லேட் பண்ண மாட்டார் டிரைவர் கேட்கிறேன்

    அலைபேசியை கட் பண்ணினாள்.

    சங்கரலிங்கம் டிரைவருக்கு போன் செய்தார்.

    ஐயா வருகிற வழியில் முன்னாள் மந்திரி ஜெகவீரபாண்டியனை கைது செய்துட்டாங்களாம். ஒரே கல்வீச்சு ரகளை. அதனால் அதிலே மாட்டிரிவீசாகி வேறு பாதையில் போய்க்கிட்டிருக்கேன். போயிடுவேன். ஐந்து நிமிடத்தில் திவ்யாம்மாவை பத்திரமா அழைச்சுக்கிட்டு வந்திடறேன்

    சரி பத்திரமா வாப்பா

    சரிங்கய்யா

    கல்லூரிக்கு கார் வந்தது. ஏறினாள். டிரைவர் எல்லா விபரத்தையும் கூறினான். திவ்யாவுக்கு டிரைவரின் மேல் உள்ள கோபம் குறைந்தது.

    கார் வீட்டு முன் நின்றது. சங்கரலிங்கத்துக்கு நிம்மதி வந்தது. அக்கா மகள் வினயா சித்தி... என ஓடி வந்து கால்களை பிடித்தாள்.

    வினயா செல்லக்குட்டி என வாரி அணைத்து தூக்கி முத்தமிட்டாள்.

    சங்கரலிங்கம் வந்தார்.

    வந்துட்டியா?

    நாடே ரொம்ப குட்டிச்சுவராயிடுச்சுப்பா.

    என்ன திவ்யா அப்படி ஒரு கவலை?

    எதற்கு எடுத்தாலும் பஸ் மறியல் போராட்டம். இதனால் பாதிக்கிறது, யார் பொதுமக்கள் தானே.

    அதைப்பற்றி வருத்தப்பட்டு பலன் இல்லை. இப்ப இருக்கிற அரசியல் நிலையே இது தான்.

    சித்தி எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க சாக்லெட். திவ்யா பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

    அக்கா திலகம் வந்தாள்.

    அழகுச்சிலையாட்டம் இருந்த அக்காவைப் பார்த்து இப்படி பொலி விழந்து போய் விட்டாளே என்ற கவலை இயல்பாக எழுந்தது. முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் உள்ளே போய் டிரஸ்சேஞ்ச் பண்ணிக் கொண்டு வந்தாள்.

    அம்மா மங்கையர்க்கரசி வந்தாள்.

    என்னடி சாப்பிடலையா?

    அம்மா வெயிலில் வந்தது தயிர் சாதம் மட்டும் போதும்.

    அம்மா கொண்டு வந்தாள். வினயாவும், திவ்யாவும் சாப்பிட்டனர்.

    சங்கரலிங்கம் அறையில் படுத்திருந்தார். திலகம் தன் கணவர் மாலையுடன் கண்ணாடி பிரேமில் காட்சியளிப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அப்பா வந்தார்.

    திலகம்! ஏன் இப்படி பார்த்துப் பார்த்து அழுதா திரும்பியா வந்திடப் போகிறார். மனதை தேற்றிக் கொள். குழந்தை வினயா முகத்தைப் பார். அப்பா சொன்னது ஆறுதலாக இருந்தது. கண்ணீரை துடைத்து திரும்பினாள்.

    மங்கையர்க்கரசி எரிச்சலுடன் நின்றாள்.

    என்னடி அழுது அழுது தான் வீடே களை இழந்து போச்சு. உன் விதியை யார் என்ன செய்ய முடியும்?

    திவ்யா வந்தாள்.

    அம்மா அக்கா மனதில் உள்ள துக்கத்தை வெளியே அழுதாவது கொட்டித்தீர்க்கறா. ஏன் அவகிட்ட கோபப்படறே?

    நான் எதைப் பேசினாலும் கெட்டதாக தெரியும் என்று கூறியபடி சமையல் கட்டிற்குள் போய் விட்டாள்.

    திலகம் சிலையாய் நின்றாள்.

    அக்கா, அம்மா எப்பவும் பேசறது உனக்குத் தெரிந்தது தானே. இந்த காதில் வாங்கி அந்த காதில் விடு. இனி அழுவதை விடு. நடந்ததை மறந்து வாழப்பழகு. ஒன்றும் அறியாத வயசுவினயாவுக்கு. அவளும் உன்னைப் பார்த்து வேதனைப்படுவா. இல்லியா?

    சங்கரலிங்கம் போய் விட்டார்.

    திலகம் மனதிற்குள்ளேயே அழுதபடி ஷோபா அருகில் தரையில் அமர்ந்திருந்தாள். கண்ணீர் கடகடவென வடிந்தது.

    அக்கா இனி அழக்கூடாது என்று கண்ணீரை துடைத்து வெளியே ஹாலுக்கு அழைத்து வந்தாள் திவ்யா.

    அப்பா நான் திருமணத்திற்கு முன்னே சென்னையில் வேலை பார்த்தேனல்ல. அந்த கம்பெனியில் வேலைக்கு மீண்டும் போகிறேன்

    என்ன திலகம்... வினயா படிப்பு?

    நான் அங்கேயே செட்டிலாகி வினயாவையும் படிக்க வைச்சுடுவேன். என்னை நல்லா படிக்க வைச்சிருக்கீங்க. இனி எப்படியும் வாழ்ந்து காட்டணும் வினயாவுக்காக

    திலகம்! சென்னையில் போய் ஒரு பெண் இந்த காலத்திலே தனியா வாழ முடியுமா?

    அப்பா தைரியமும், மனதிலே நம்பிக்கையும் இருக்கு

    சரிம்மா. நமக்கு இருக்கிற சொத்தில் சும்மா உட்காந்துகிட்டு சாப்பிடலாம். நீ வேலைக்கு போய் கஷ்டப்படறது எல்லாம் வேண்டாம்.

    ஒரு தாயிடம் கிடைக்கிற அன்பு. அடுத்து கணவனிடம் தான் கிடைக்கும். அந்த இரண்டு பாக்கியமும் எனக்கில்லை. அதனால் மன நிம்மதிக்காக நான் வேலைக்கு போகலாம்னு நினைக்கிறேன்.

    அப்பா, அக்கா சொல்கிறதில் நியாயம் இருக்கு. வேலைக்கு அனுப்புங்களேன். அவளுக்கும், மனசுக்கும் ஆறுதலா இருக்கும்

    சங்கரலிங்கம் யோசித்தார்.

    மங்கையர்க்கரசி வந்தாள்.

    என்னடி அப்பன்காரன் கிட்டே என்ன, என்ன சொல்றே? நீ வேலைக்குப் போயிடுவே சித்திக்காரி கொடுமை பண்ணி துரத்திட்டான்னு ஊர், உலகம் எல்லாம் என்னை கரிச்சுக்கொட்டணும். அதுதானே உன் நோக்கம்?

    அவள் அப்பாவுக்கு இரண்டாம் தாரம்.

    அம்மா, அக்கா உங்க மீது குறை எதும் சொல்லலைம்மா. அவளோட கணவர் இழப்பை மறப்பதற்கு அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கா. நீயா அதையும், இதையும் முடிச்சுப் போட்டு பேசாதே.

    போடி போ நீ எனக்கு எப்பவும் எதிரி தான். எனக்கு சாதகமாகவே பேசமாட்டே. உன்கிட்ட ஒட்டி பிறந்தாளே அவளோட பேச்சு தான் பெரிசா தெரியும்.

    புரியாமல் பேசாதம்மா. உனக்கு அக்காவை எப்பவும் பிடிக்காது. அதனால் இந்த நிலையிலும் அவளை குறை சொல்றே.

    நான் இந்த வீட்டு வேலைக்காரியா? எதுவும் சொல்லக்கூடாதா?

    அப்படியே நீ நினைச்சுக்கம்மா.

    மங்கையர்க்கரசி விருட்டென உள்ளே போக சங்கரலிங்கம் வெளியே கிளம்பினார்.

    திலகத்தை தனியே அழைத்து வந்தாள் திவ்யா.

    அக்கா, அம்மா புத்தியே இது தான். அவளை மாற்ற முடியாது. அவ பேசறதை பெரிசா எடுத்துக்காதே. அந்த நேரம் வினயா வந்தாள்.

    அவளை அப்படியே தூக்கி அணைத்துக் கொண்டாள் திவ்யா.

    2

    திவ்யா கல்லூரிக்கு கிளம்பினாள். அந்த பொறியியல் கல்லூரியில் இரண்டாம் வருடமாணவி. பதினைந்து ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைந்த அந்த கல்லூரிக்கு குறுகிய காலத்தில் நல்ல பெயர்.

    காரை விட்டு இறங்கி நடந்தாள்.

    சக மாணவனில் அவளுடன் படிக்கும் புவனேஷ் அருகே வர அவள் பேசவில்லை.

    அவளுக்கு புவனேசை பிடிக்காது. நாகரிகமில்லாத உடை, பேச்சு, செயல். மவுனமாக நடந்தாள் திவ்யா.

    மீண்டும் அழைத்தான்.

    எனக்கு உன்கிட்ட பேசவேபிடிக்கலைன்னு முன்னமே சொன்னேன். ஆனா நீ தான் குட்டி போட்ட பூனையாய் ஏன்

    Enjoying the preview?
    Page 1 of 1