Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sithra Salabam
Sithra Salabam
Sithra Salabam
Ebook229 pages1 hour

Sithra Salabam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466787
Sithra Salabam

Read more from Mekala Chitravel

Related authors

Related to Sithra Salabam

Related ebooks

Reviews for Sithra Salabam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sithra Salabam - Mekala Chitravel

    1

    வானமரத்தின் இருட்டு இலைகள் இருக்கும் இடம் தெரியாமல் நட்சத்திரப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பின் மாலைப் பொழுது.

    தம்பி நீ யாருப்பா? ஒரு நாளைப்போல வந்து மணிக்கணக்கா இந்த வீட்டையே பார்த்துக்கிட்டு நிக்கறியே? உள்ளே போய் பார்க்கணுமா? வீடு மட்டும்தான் சீல் வைச்சிருக்கு. இந்த கேட்டு சாவி என்கிட்டேதான் இருக்கு. வேணும்னா திறந்து விடட்டுமா? காவலாளி கேட்டதற்கு ‘வேண்டாம்’ என்று தலையசைத்துவிட்டு நடந்தான் அவன்.

    என்ன மச்சான், அந்த பையன்கிட்டே என்னமோ பேசினே போலிருக்கு? என்றபடி பக்கத்து பங்களாவின் காவலாளி வந்து உட்கார்ந்தான்.

    ஆமாம்... அவன் யாரு என்னன்னு கேட்டேன். வாயைத் திறக்காம போயிட்டான். நானும் வேலைக்கு வந்ததில் இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். நாள் தவறினாலும் அவன் வந்து நிற்கறது மட்டும் தவறவே இல்லையே... என்ன மழையா இருந்தாலும் பனிக்கொட்டினாலும் அவன் மட்டும் அப்படியே அசையாம மலையாட்டம் நின்னுக்கிட்டிருப்பான். அவன் யாரு? எங்க இருக்கான்? ஏன் வரான்? எதுக்காக வந்து மணிக்கணக்கா நிக்கறான்னே புரியலை. ஆனால் அவனால எதுவும் தொல்லை இல்லை. அவன் பாட்டுக்கு வரான். ஓடறான்... உள்ள போய் பார்க்கறியான்னு கேட்டேன். எதுவும் பேசாமல் போயிட்டான்.

    இந்த பங்களாவுக்கும் இவனுக்கும் போன ஜென்மத்து உறவு போலிருக்கு.

    நீ வேற... இந்த ராஜமாளிகைக்கும் இந்த பிச்சைக்காரனுக்கும் ஏழேழ் ஜென்மத்துக்கும் தொடர்பு இருக்கவே வாய்ப்பு இல்லை...

    அவனுக்கு தொடர்பு இருக்கோ இல்லையோ... எனக்கு இருக்குதுப்பா... மனுஷங்களே வராத இந்த பாழடைஞ்ச பங்களாவுக்கு ஒரு காவல்... அதுக்கு என்னை மாதிரி சின்னப் பையன் காவல்... நான் கிழவன் ஆனாக்கூட என்னை விடாது போலிருக்கு... ஏன் மாமா இந்த வீட்டைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?

    பக்கத்து பங்களா காவலாளி பீடி புகையை இழுத்து வெளியே விட்டான். ஏதோ பங்காளிங்க சண்டையில சிக்கி, கோர்ட்ல வழக்கா இழுத்துக்கிட்டிருக்கு. உரிமைக்காரன்னு பார்த்தா ஒரே ஒரு ஆள் தான். மத்தவனுங்க சித்தப்பன், பெரியப்பன் பிள்ளைங்க. எட்டு பேரு ஒண்ணா சேர்ந்து ஒருத்தனை வளைச்சா அவன் என்ன பண்ண முடியும்? அதுல எத்தனை பேரு இருக்கானுங்களோ... எத்தனை பேரு செத்துத் தொலைச்சானுங்களோ தெரியலை. அப்படியே பேய் பங்களா மாதிரி ஆகிட்டுது... புதரும் குத்துச் செடிகளுமா நிறைஞ்சிருக்கு. பார்த்து கவனமா இரு... ராத்திரியில் பத்திரமா படுத்துக்க... எதாவதுன்னா ஒரு குரல் குடு... சரி... நான் போறேன். படுக்கணும்... முதலாளி காலையில வந்திடுவாரு.

    உனக்கு முதலாளி வருவாரு... எனக்கு யமதர்மன் தான் வருவான் போலிருக்கு... பயமாத்தான் இருக்கு. என்ன பண்றது? வயித்துப் பாடு இருக்கே... அதற்கு மேல் அங்கே அமைதி நிலவியது.

    என்ன தம்பி முகம் வாட்டமா இருக்கு? எங்கே போயிருந்தே? அங்கதான? அங்க போகாதேன்னு எத்தனை தரம் சொல்றேன்? ஏன் கேக்கவே மாட்டேங்கறே? அங்க போனாலே இழப்பும், வெறுமையும் தான் உண்டாகும். எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கி உன்னை மேலே நகரவிடாம முடக்கிப் போட்டுடும். தயவு செய்து அங்கே போகாதே. இந்த டீயைக் குடி. நீ, இப்படி இருக்கறதைப் பார்த்தா என் அடி வயிறு கலங்கித் தவிக்குது... என்று சொல்லிய கோபால் அழக்கிளம்பினான். அவன் கையிலிருந்த கோப்பையில் டீ தளும்பியது. சட்டென அதை தன் கையில் வாங்கிக் கொண்டான் பிரதாபன்.

    என்ன கோபாலண்ணா... இன்னிக்கு டீ சுகமில்லை? ஏதோ குறையுதே... பிரதாபன் கேட்டபோது கோபால் இன்னும் அழுதான்.

    ஓகோ... வீட்டில சர்க்கரை இல்லையா? என்று பிரதாபன் சிரித்தான். பிரதாபவர்மன் இனிமேல் சர்க்கரை இல்லாமலே சாப்பிடவும் குடிக்கவும் கற்றுக் கொள்வான். நீங்க கவலைப்படாதீங்க கோபாலண்ணா... இன்றைய பொழுதுக்கு ஏதும் உண்டா? என்று வாயையும் கையையும் ஜாடை காட்டினான்.

    இருக்கு தம்பி... அதுக்கு குறையில்லை... வெளியே போக வேண்டிய வேலை எதுவும் இல்லைன்னா கொஞ்ச நேரம் தூங்கு. நான் வெளியே போயிட்டு வரேன்... கோபால் வெளியேறினான்.

    அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த பிரதாபன் ஜன்னலருகில் போய் நின்றான். ஒற்றை அறை. அதில் ஒரு சின்ன தடுப்பு. சமையலறை என்பதற்கு சாட்சியாக ஒரு மண்ணெண்ணெய் அடுப்பும் நாலைந்து நசுங்கிப் போன அலுமினிய பாத்திரங்களும் இருக்கும். கூடவே அவனுக்காக சுத்தமான பீங்கான் தட்டும் எவர்சில்வர் டம்ளரும் உண்டு. சாயம் போய் அழுக்கடைந்து போய் காலியான மளிகை சாமான் போடும் பிளாஸ்டிக் டப்பா ஏழெட்டு... இந்தப் பக்கம் ஒரே ஒரு பாய் தலையணை அதையும் அவனுக்கு கொடுத்துவிட்டு தான் தரையில் படுத்துக் கொள்ளும் கோபாலண்ணாவுக்கும் தனக்கும் இந்தக் காலம் செய்துவிட்டக் கொடுமையை என்னவென்று சொல்வது? ஆனால் அதற்காக பெருமூச்சு விட்டுக் கொண்டு வெறுமையாக இருக்க பிரதாபன் விரும்புவதில்லை. அதை எதிர்கொண்டு வெல்ல தன்னை அவன் தயார் செய்து கொண்டிருக்கிறான்.

    தம்பி... நல்லவேளை தூங்கலியா? அதுதான் அரக்கப் பரக்க ஓடிவந்தேன். இந்தா இதை சாப்பிடு... தன் முன் நீட்டப்பட்ட பார்சலை கேள்விக்குறியுடன் வாங்கிக் கொண்டான்.

    இட்லி சூடா இருக்கும்போதே சாப்பிட்டுடு. நான் இந்த சாமானை வைச்சிட்டு வரேன். கோபால் கையிலிருந்த பையை சமையல் தடுப்பில் வைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

    கோபாலண்ணா... ஏது இந்த சாமானெல்லாம்? கொஞ்ச முந்திதானே டீக்கு சர்க்கரைகூட இல்லை? இது என்ன ஜீபூம்பா மந்திரமா? பிரதாபன் கேட்டதற்கு கையிலிருந்த கத்தியையும் வெட்டும் பலகையையும் காட்டினான்.

    ஆமாம் தம்பி... நீ சொன்ன ஜீபூம்பா மந்திரம் இது ரெண்டும்தான்.

    புரியலியே... பிரதாபன் இழுத்தான்.

    "உனக்கு வயிறு நிறைய சாப்பாடு போட முடியலியேன்னு ராவும் பகலும் அழுதுகிட்டிருக்கறதைவிட ஏதாவது செய்யலாம்னு யோசிச்சேன். எதிர் பிளாட்டில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கு. அங்க இருந்து நிறைய பெண்கள் வேலைக்குப் போறதைப் பார்த்தேன். நாள் பூராவும் வேலை செய்துக்கிட்டு இருக்கற அவங்களுக்கு காலை சமையலுக்குத் தேவையான காய்கறிகள் அரிந்து, கீரை சுத்தம் பண்ணித் தரட்டுமான்னு போன வாரம் போய் கேட்டேன். இன்னிக்கு வரச் சொன்னாங்க. முதல்ல பத்து வீடுகள்ள வேலை குடுத்திருக்காங்க. இதோட போன் பில் கட்டறதும், கரெண்ட் பில் கட்ட முடியுமான்னும் கேட்டாங்க. ஒத்துக்கிட்டு வந்திருக்கேன்.

    கையோட அட்வான்ஸ் வாங்கி உனக்கு டிபனும், வீட்டுக்குத் தேவையானதையும் வாங்கிட்டேன். இனிமேல் வீட்டைப் பத்தி எந்த பிரச்சினையும் இல்லை. நீ நம்ம வேலையைப் பார்க்கலாம். சீக்கிரமா சாப்பிடுப்பா. நாளையில இருந்து சூப்பர் டீ போட்டுத் தரேன்."

    தனித்தனியாக பெயர் சீட்டுகள் ஒட்டப்பட்டிருந்த பைகளிலிருந்து காய்களைக் கழுவி உலர வைத்துவிட்டு கீரையைக் கிள்ளி பொடியாக நறுக்கக் கிளம்பினான்.

    கீரையைக் கழுவி வைக்க முடியாது. ஒரு மாதிரி ஆகிடும். அதனால சமைக்கும்போது கழுவிக் கொள்ள சொல்லணும். சாம்பார் வெங்காயம் உடம்புக்கு நல்லது. அதை வாங்கித்தரவும் நினைப்பு மூட்டணும் தானே பேசிக்கொண்டு வேலையில் தீவிரமான கோபாலைப் பார்க்கும் போது பிரதாபனின் கண்கள் கலங்கின.

    கோபாலண்ணா, நீங்க வேலை முடிச்சிட்டு வாங்க... ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்...

    எனக்கு வேலை முடிய நேரமாகும் தம்பி... நீ சாப்பிட்டுட்டுப் படு. நான் அப்புறமா சாப்பிடறேன் என்ற கோபாலின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்? என்று நினைத்த பிரதாபன் டிபன் பொட்டலத்தைப் பிரித்தான்.

    2

    "நான் சொல்றது எதையும் நீ கேக்கமாட்டியாடி? அங்கங்க பொண்ணுங்க பெத்தவங்க இன்னும் மாப்பிள்ளை பார்க்கலியேன்னு கிடந்து அல்லாடுதுங்க. நீ என்னடான்னா பாக்கற மாப்பிள்ளைகளை எல்லாம் நொட்டு சொல்லிக்கிட்டுத் திரியறே... அது வேற ஒண்ணுமில்லை. தட்டுல வைச்சு திங்கக் குடுத்தா அதோட அருமை தெரியுமா? காய்ஞ்சி போய் தேடிக்கிட்டு ஓடிப்போய் தின்னாத்தானே அதன் மதிப்பு தெரியும்?

    ஏன்டி நான் என்ன கதாகாலட்சேபமா பண்றேன்? இப்படியே உட்கார்ந்து கேட்டுக்கிட்டிருக்கே? தரகர் இப்ப வருவாரு... என்ன பதில் சொல்றது? இவன் தங்கம்னா சொங்கத்தங்கம்டி.".

    அப்படியா? அப்ப ஒண்ணு செய்... ஜிமிக்கி பண்ணி போட்டுக்க. வைரக்கல்லு வைச்சு செய்துக்கிட்டா சூப்பர்.

    மகளின் பரிகாசப் பேச்சு புரிந்ததால் காயாம்பூவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. உன் திமிருக்கு அளவே இல்லையாடி? எல்லாம் உங்கப்பா குடுக்கற இடம். நான் கிடந்து மல்லாடி என்னாகும்? என் தொண்டைத் தண்ணிதான் வத்திப்போகும். எப்படியோ போங்க... காயாம்பூ முடிக்கும் நேரத்தில் தரகர் நேரம் தெரியாமல் வந்து நின்றார். அவரிடம் என்ன பேசுவது என்று காயாம்பூ விழித்துக் கொண்டிருக்கும்போது மணவாளன் மாடியிலிருந்து கீழிறங்கினார்.

    அவரைக் கண்டதும் தரகர் பெரியதாக கும்பிடு போட்டார். என்ன தரகரே... வழக்கமா மாசம் ஒருதரம் வர்ற விசிட்டா? காபி பலகாரமெல்லாம் ஆச்சா? மணவாளன் கேட்டபோது தரகர் அசடு வழிந்தார். உட்காருய்யா... இந்தா காயாம்பூ... உன்னுடைய கவனிப்பை செய்திடு என்று மணவாளன் கட்டளையிட்டார். ‘

    தரகர் பலகாரம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு காபி மட்டும் கேட்டு வாங்கிக் குடித்தார். அதுவரை தினசரி பத்திரிகையை புரட்டிக் கொண்டிருந்த மணவாளன், ஏன்யா தரகரே. இவதான் ஏதோ உளறிக்கிட்டிருக்கான்னா ஜால்ரா போட நீ வந்துடறியே. உனக்கு புத்தி இல்லை? எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. இவளுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி... இவங்க வீட்டுல எல்லாம் தடிதடியா பையனுங்க இருக்கானுங்க. என் பெண்ணுக்கு முறை பையனுங்க அவனுங்க. வெளியில மாப்பிள்ளை எடுத்தா... யாருக்கு பதில் சொல்றது? அதனால நீ இனிமே இது விஷயமா வராதே... புரியுதா? பணம் ஏதும் வேணும்னா உரிமையா வந்து நூறோ ஐநூறோ வாங்கிக்கிட்டுப் போ... இந்தா இதை வைச்சிக்க... இப்ப கிளம்பு.

    மணவாளன் நீட்டிய ஐநூறு ரூபாய்த் தாளை, வேண்டாம் சார். நாங்க வேலை முடிக்காம கமிஷன் வாங்கறதில்லை. பாப்பாவுக்கு ஏற்பாடு ஆனா பத்திரிகை அனுப்புங்க. வந்து ஒரு வேளை வயிறு நிறைய சாப்பிட்டுட்டுப் போறேன். வரேன்மா. என்று தரகர் வெளியில் நடந்தார்.

    "உங்க திருவாயை வைச்சிக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டீங்களா? நீங்க சொன்ன முறை மாப்பிள்ளைங்க எல்லாம் வெறும் முட்டாப் பயலுங்க. அப்பன் சம்பாதிச்சி வைச்சிருக்கற சொத்துல தின்னுக்கிட்டு இருக்கிற வெத்து கழுதைங்க. வெளிய போய் நாலு காசு சம்பாதிக்க முடியாத சோம்பேறிங்க. படிப்பு சொல்லவே வேணாம். அழகும் குணமும்... அப்பாடி இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்... அப்படி ஒரு பேரழகுப் பெட்டகங்க... மூஞ்சிங்களைப் பார்க்கலை? இஞ்சி தின்ன குரங்குகளாட்டம்.

    இதோ பாருங்க இப்ப சொல்றேன்... நல்லா கேட்டுக்குங்க. நான் வைச்சிருக்கறது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு. அதை இவனுங்களுக்குக் குடுக்க ஒப்புக் கொள்ள மாட்டேன். நெறைய படிச்சவனா... பெரிய பணக்காரனா பார்த்துதான் கட்டிக் குடுப்பேன். புரிஞ்சுக்குங்க..." காயாம்பூவுக்கு மூச்சிறைத்தது. மடமடவென தண்ணீர் குடித்தாள்.

    மணவாளன் கை தட்டினார். அப்படி போடு... இதை இதைத்தான் உன்கிட்டே இருந்து எதிர்பார்த்தேன். அந்த தடிப்பசங்களைப் பத்தி நீ சொன்ன எல்லாத்தையும் நானும் ஒப்புக் கொள்கிறேன். நீ சொன்ன மாதிரிதான் நம்ம சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்க்கணும். ஒரு வேளை உறவில குடுக்கணும்னு நீ ஆசைப்படுவியோன்னுதான் உனக்கு ஒரு டெஸ்ட் வைச்சுப் பார்த்தேன். பர்ஸ்ட் கிளாஸ்ல பாசாயிட்டே... ஆனா நாம எதிர்பார்க்கிற மாப்பிள்ளையை இந்த சின்ன தரகர் கொண்டு வர முடியாது. அதுக்கு வேற ஆள் உண்டு. அவங்க மூலம் நான் ஏற்பாடு செய்திட்டேன்.

    அப்படியா? ரொம்ப நல்லதா போச்சு. என்கிட்டே இதை முன்னாலேயே சொல்லி இருக்கலாமில்லே? காயாம்பூ செல்லக் கோபம் கொண்டாள்.

    சொல்லி இருக்கலாம்தான். நீ மதில்மேல் பூனையாச்சே. தடார்னு எந்தப் பக்கம் குதிப்பேன்னு சொல்ல முடியாதே. இது நம்ம ஒரே செல்ல மகளுடைய வாழ்க்கை சம்மந்தப்பட்டது. இதுல விளையாட்டெல்லாம் பிரச்சினையை உருவாக்கிடும். அதுதான்... எனக்கு ரொம்பப் பசியா இருக்கு. டிபன் தயாரா?

    எல்லாம் தயாரா இருக்கு. நீங்க வாங்க. சூடா நெய் ரோஸ்ட் போட்டுக் கொண்டு வரேன். சந்தியா நீயும் வா.

    சந்தியாவுக்கு அவர்களின் பேச்சு வேடிக்கையாக இருந்தது. குண்டூசி வாங்குவதில் தொடங்கி பண்ணை வீடு வாங்குவது வரை சண்டை போட்டேத் தீரும் தீவிரவாதிகள் அவர்கள். மாப்பிள்ளையை வாங்கும் விஷயத்தில் மட்டும் எப்படி ஒத்துப் போகிறார்கள் பார். இவர்களின் பேராசைக்கு ஏற்ப வரும் மாப்பிள்ளைக்கு எத்தனை சீர்வரிசை செய்து, வரதட்சிணை கொடுத்து... வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்க வேண்டுமே. அப்பா வீம்புக்காகச் செய்வார். அம்மாவின் வீம்பு உலகப் பிரசித்தம்... அப்புறமென்ன?

    அவளை மேலே சிந்திக்கவிடாமல் அம்மாவின் குரல் சாப்பிடக் கூப்பிட்டது.

    "தம்பி... பலகாரம் பண்ணி வைச்சிருக்கேன். சாப்பிடு. இந்த காய்கறி பாக்கெட்டையெல்லாம் கொடுத்திட்டு கரண்ட் பில்லும், பால் கார்டும் வாங்கிட்டு வந்திடறேன்" கோபால் சொன்னது தூக்கத்தில் கேட்டது. மீண்டும் கண் விழித்தபோது பத்து மணியாகி விட்டிருந்தது. பரபரப்புடன் எழுந்து குளித்து சாப்பிட உட்கார்ந்தான்.

    பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது பூரிகளும் உருளைக்கிழங்கு குருமாவும் இருந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பிடித்தமான உணவு. இரவு கோபால் எப்போது தூங்கினான். எப்போது காலையில் எழுந்தான் என்றே தெரியவில்லை. தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் கோபாலுக்கு என்ன கைமாறு செய்வது? என்ன செய்து இந்தக் கடனை அடைப்பது? நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறவில்லை. நிழலாய் தன்பின் தொடரும் கோபாலின் கனவை நிறைவேற்ற வேண்டும். செய்ய வேண்டியது மனதில் கனவு படமாய் விரிந்தது. ஆனால் முதல் நுனி மட்டும் பட்டத்து நூலாய் பிடி

    Enjoying the preview?
    Page 1 of 1