Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhai Vil
Mazhai Vil
Mazhai Vil
Ebook200 pages1 hour

Mazhai Vil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466879
Mazhai Vil

Read more from Mekala Chitravel

Related authors

Related to Mazhai Vil

Related ebooks

Related categories

Reviews for Mazhai Vil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhai Vil - Mekala Chitravel

    1

    நட்சத்திர வேலையாட்கள் கைகளில் சிக்காமல் நிலா பாப்பா மேகத்திரைக்குள் ஒளிந்து மறைந்து ஓடி கண்ணாமூச்சியாடும் பின் மாலைப்பொழுது.

    பங்களாவின் நடுக்கூடத்தில் அப்பாவும், மகளுமாய் எதிர் எதிரில் உட்கார்ந்திருந்தார்கள். கையிலிருந்த சின்னக் கோப்பையிலிருந்து வேண்டும் என்றே மிடறுமிடறாக தேநீரைக் குடித்துக் கொண்டிருக்கும் மகளை பார்வையால் அளவெடுத்து கொண்டிருந்தார் அப்பா. அவளோ அவரை பார்ப்பதை தவிர்த்துவிட்டாள்.

    அப்பாவே ஆரம்பித்தார், நேத்து நான் சொன்னதைப் பத்தி நீ எதுவுமே பதில் சொல்லலியே... ஏதாவது சொன்னாத்தானேம்மா நான் மேற்கொண்டு முடிவெடுக்க முடியும்.

    அது சரியாக வராதுப்பா... மகள் மறுத்தாள்.

    அப்பா சிரித்தார். "நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? மழைவில்லை மாலையாக்கி கழுத்தில் மாட்டிக்கறது மாதிரி இருக்கேம்மா... மழைவில்னா புரியலையா? மழை நேரத்தில் வானத்தில் வருமே அந்த வானவில்... அது பார்க்க அழகா இருக்குமே தவிர வாழ்க்கைக்கு ஒத்து வருமா? அதனால இந்த விஷயத்தில் நீ சொல்ற எதையும் நான் கேக்கறதா இல்லை... நீ கல்யாணம் பண்ணிக்கிட்டுத்தான் ஆகணும். நான் சொன்ன டாக்டர் பையன் பிடிக்கலைன்னா... நீயா ஒரு பையனைச் சொல்லு. நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.

    நான் வெளியே போகிறேன். நீ காத்திருக்காமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்."

    கார் புறப்பட்டு போகும் சத்தம் கேட்டது. அதுவரை தேக்கி வைத்திருந்த பொறுமை அணை உடைந்தது போல பீறிட்டது. கையிலிருந்த டீக்கோப்பையை தூக்கி விசிறி அடித்தாள். குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். கைகளைக் குத்திக் கொண்டாள். அந்த மாதேஸ்வரக் கிழவன் எதிரில் இருந்திருந்தால் சட்னி ஆகிவிட்டிருப்பார்.

    பத்து நாட்களுக்கு முன் அப்பாவின் நண்பர் மாதேஸ்வரக் கிழவன் மைசூரிலிருந்து வந்தார். வாய்க்கு ருசியாக தவசிப்பிள்ளை சமைத்த விருந்தை தின்றுவிட்டு சும்மா போய் தொலைய வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு தவளை மாதிரி வாயால ‘கொளக்... கொளக்...’ன்னு பேசிவிட்டு போய் தொலைஞ்சிட்டார்.

    ரொம்ப கரிசனமாக, என்ன திருமலை... இன்னும் நம்ம சொர்ணாவுக்கு கல்யாணம் பண்ணாம இருக்கியேடா. அவளுக்கும் வயசாகிக்கிட்டே போகுதில்லே? சீக்கிரமா முடிக்கப்பாரு என்று சொன்னதைக் கேட்டால், அப்பாவை போல பொறுப்பானவர் என்ன செய்வார்? உடனே தரகர் வந்துவிட்டார்.

    பத்து போட்டோவை எடுத்து கொடுத்தார். அப்பா சல்லடைபோட்டு சலித்து டாக்டர் பையன் போட்டோவை எடுத்து அவளிடம் நீட்டினார். பெரிய சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு முன்னால் விழுந்த வழுக்கையோடு ‘இ’ என்று இளித்துக் கொண்டிருந்தவனைக் கண்ட சொர்ணாவுக்கு குமட்டியது. அவள் முகம் போன போக்கை பார்த்து அப்பா சொன்னார், நோ... நோ... இப்படி பார்க்காதேடா செல்லம். அவன் கண்ணாடியும் முன்னாலிருக்கிற சின்ன வழுக்கையும் அவனோட அறிவைக் காட்டுதும்மா. படிப்பில் கோல்ட் மெடல் வாங்கினவன் தெரியுமா? இந்த சின்ன வயசிலேயே வெளிநாடெல்லாம் போய் படிச்சிட்டு வந்திருக்கான்.

    அப்பா... இந்த முகரைக்கு நீங்க தருகிற விளக்கமெல்லாம் அதிகம், அநாவசியம்... கொஞ்சம் நிதானமாக இருங்கப்பா... ப்ளீஸ்...! சொர்ணா சொன்னதற்கு அப்பா தோளைக் குலுக்கிக்கொண்டு சிரித்தார்.

    அதன் பிறகு அவருடைய அணுகுமுறை வேறு மாதிரியாக இருந்தது. தரகர் கொண்டு வந்த அடுத்த செட் புகைப்படத்தையெல்லாம் சொர்ணாவின் முன்னால் பிரித்துப் போட்டார். இப்போது உன்னுடைய டர்ன். யாரையாவது தேர்ந்து எடுத்துக்கோ...

    சொர்ணாவுக்கு சிரிப்பு வந்தது. நல்லா சர்க்கஸ் கோமாளி கூட்டமாட்டம் இருக்கு. வரவர உங்க புத்தி ஒரு மண்ணுக்கும் இல்லாதபடி குப்பையாகிட்டுதுப்பா... இத்தனை வசதியோடும் அதிகாரத்தோடும் வாழப் பழக்கிவிட்டு, என்னை இப்படி கஷ்டப்படுத்தி முன்னே பின்னே தெரியாத ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதால உங்களுக்குத்தான் தொல்லை ஆரம்பிச்சிடும். எச்சரிக்கை பண்ணிட்டேன்...

    அப்பா அவளுக்கு மேல் சிரித்தார். எனக்கு இது தெரியாதா? உன் கல்யாணம் முடிஞ்சதுமே பொறுப்பையெல்லாம் உன் கையில் கொடுத்திட்டு, உன்னை மாப்பிள்ளை கையில் ஒப்படைச்சிட்டு நான் வெளியே கிளம்பிடப் போறேன். அப்புறம் எனக்கென்ன தொல்லை ஆரம்பிக்கப்போகுது? நான் யார் தெரியுமா? ஒரே ஒரு இருபது ரூபாயும், ஒரு மஞ்சள் பையும் எடுத்துக்கிட்டு இந்த ஊருக்கு வந்து இப்படி ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினவன்... அதனால...

    சரிப்பா... கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் விட்டிடுங்க. எனக்கு ஏதாவது சாதிக்கணும்பா... அப்புறம்தான் எல்லாம்... சொர்ணா சொன்னாள்.

    எனக்கும் அந்த எண்ணம் உண்டும்மா. நிச்சயம் நீ சாதிக்கப் பிறந்தவள் தான். அதை உனக்கு புருஷனா வர்றவனோடு சேர்ந்து சாதிச்சிட்டுப் போயேன். உன்னை யாராவது தடுக்கவாப் போறாங்க?

    எதைச் சொன்னாலும் அதை மாற்றிப் பேசிவிடும் வல்லமை கொண்ட அவரிடம் எதுவும் எடுபடாது என்பதை புரிந்து அவள் அமைதி காக்கலானாள்.

    இருந்தாலும் இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவர் தொல்லை செய்ததால் அவளுக்கு பொறுமை போயிற்று. அதுதான் இன்று டீ கோப்பையைத் தூக்கிப் போட்டதில் முடிந்தது.

    ‘அவள் யார்? சொர்ணா... ஒரு மகாராணிப்போல வாழவும், மற்றவரை அதிகாரம் செய்யவும் பிறந்தவள். அவள் எப்படி ஒரு ஆணுக்கு அடங்கி போவது? என்னங்க... ஏங்க... தப்பு செய்திட்டேங்க. சரிங்க... என்று சொல்லிப் பேசி கூழைக் கும்பிடு போடுவது? அதெல்லாம் முடியாது. தலைக்கு மேல் எவ்வளவு வேலை இருக்கு? அதை விட்டிட்டு அப்பாவின் பேச்சைக் கேட்பதாவது?’

    சொர்ணா, இத்தனை நாள் தேடிக்கிட்டிருந்தது வீண் போகலை. ஒரு மிக நல்ல பையன் கிடைத்திருக்கிறான். நல்ல படிப்பு, ஆளும் பார்க்க ரொம்ப அழகாக கம்பீரமாக இருக்கிறான்...

    அப்பா... இந்த மாப்பிள்ளை தேடும் வேலையை மூட்டைக்கட்டி வைக்கவே மாட்டீங்களா? இந்த புதுவேலையைப் பார்த்தீங்களா? இருநூறு வீடு கட்டும் திட்டம் எல்லாமே வசதியானவர்கள் இருக்கப்போகும் தனித்தனி வீடுகள்... நாலு படுக்கையறை, ரெண்டு போர்ட்டிக்கோ, ஐந்து கார் நிற்கும் வசதி, வீட்டைச் சுற்றி நாலு புறமும் தோட்டம், கிணறு, முன்புறம் பெரிய லானோடு கூடிய சின்னப்பூங்கா. இப்படித் தேவைப்படும் வசதிகளோடு கட்ட வேண்டும். சிலருக்கு நம்முடைய வீட்டு அமைப்பு பிடிக்காது. அவர்களுக்கு தனியாக சொல்கிறபடி கட்டித்தர வேண்டும். இருநூறு வீடுகளை இரண்டு பேருக்கு பிரித்துத் தருவார்களாம். அதில் ஒன்றை நாம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்வதை விட்டுவிட்டு இப்படி மாப்பிள்ளைக்கு வலைவீசி பிடிக்கிறேன் பேர்வழி என்று அலைகிறீர்களேப்பா... வேலையைப் பாருங்கப்பா... சொர்ணா திட்டினாள்.

    என்னது? மாப்பிள்ளை பையன் பார்க்கற வேலையா? அது கெட்டுது போ... நான் சொன்னது எனக்கு ஒரு உதவியாளனை. இதுவரையிலும் இருந்தவன் கொஞ்சம் சிடுமூஞ்சியா இருந்தான்னு எல்லோரும் சொன்னாங்க. எப்படி அவனை நிறுத்தறதுன்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன். அவனா நின்னுட்டான். அப்புறம்தான் இவனை வரச்சொன்னேன்...

    அப்பாடா... எனக்கு ஒரு தொல்லை விட்டுது. நீங்க முதலில் நான் சொன்ன வேலையை முடிச்சிக்கிட்டு வந்து சேருங்க. நான் நம்ம இஞ்சினியர்களை பிளான் போடச்சொல்றேன். நம்ம வேலையில இப்ப நிக்கக்கூட நேரமில்லை. ஓடிக்கிட்டே இருந்தாத்தான் சரியா வரும்...

    சொர்ணா சொன்னதைக் கேட்ட அப்பா, அதுதான் சரி... இனிமே நமக்கு வேலைக்குதான் நேரமிருக்கும். அதனால அறுபதாம் கல்யாணத்தோட இந்த இருபதாம் கல்யாணத்தையும் வைச்சிக்கலாம் என்றார்.

    தான் சிரிக்காமல் தன்னை கேலி செய்யும் அப்பாவைப் பார்த்து பல்லைக் கடித்துக்கொண்டு அப்பா... உளறினது போதும். ரொம்பத்தான் புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பு உங்களுக்கு... போய் வேலையைப் பாருங்க... என சிடுசிடுத்தாள் சொர்ணா.

    2

    "அன்புள்ள தேவூ, நானும் உன் அம்மாவும் உன் நினைவாகவே இருக்கிறோம். நம் வீட்டு மேலே வாங்கின கடனைப் பற்றிதான் பிரச்சினை ஏற்பட்டிருக்கு. இப்போதைக்கு வட்டி வரைக்கும் கொடுத்திருக்கு, அசலை உனக்கு வேலை கிடைத்ததும் திருப்பிவிடறதாக கெடு வைச்சிருக்கு. அதனால் இப்போதைக்கு கவலை இல்லை. நீ உன் உடம்பை கவனித்துக்கொள். வேளாவேளைக்கு சாப்பிடு... இப்படிக்கு உன் அப்பாவும், அம்மாவும்."

    நூறாவது முறையாக இந்தக் கடிதத்தை தேவன் படித்தான்.

    படாதபாடு பட்டு அப்பாவும் அம்மாவும் அவனைப் படிக்க வைத்தார்கள். இந்திய கிராமங்கள் எல்லாவற்றையும் போல வானம் பார்த்துக் கிடக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தை தேவனின் படிப்புக்காக துண்டுதுண்டாக விற்றபோதெல்லாம் எதுக்குப்பா தேவூ வருத்தப்படறே? நல்லபடியா படிச்சி முடித்து நல்ல வேலைக்குப் போயிட்டின்னா இதைப்போல ஆயிரம் ஏக்கர் நிலத்தை நீ வாங்கப்போறே... இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாம வேலையைப் பாருப்பா. பெரிய படிப்பெல்லாம் படிச்சு சும்மா துரை மாதிரி வந்து நில்லுடா... எனக்கு அது போதும்... என்றபடி கையில் பணத்தைத் திணித்த அப்பாவும் அம்மாவும் மனம் மகிழும்படி இதுவரை தன்னால் என்ன செய்ய முடிந்தது?

    தான் முதல் வகுப்பில் தங்கப் பதக்கத்தோடு தேர்வு பெற்றிருப்பதால் தன்னை சிவப்பு கம்பள வரவேற்போடு வேலையை தட்டில் வைத்து நீட்டுவார்கள் என்று தேவன் கண்ட கனவெல்லாம் கானல் நீராகிவிட்டது. திரும்பின பக்கமெல்லாம் சிபாரிசும், லஞ்சமும் அவனை தலைதூக்க முடியாமல் செய்துவிட்டன. அரசாங்க வேலை கனவுக்கெல்லாம் மூட்டைக்கட்டி குட் பை சொல்லிவிட்டு தனியார் நிறுவனங்களிலும் நிறைய வேலைகள் இருக்கின்றன, அங்கேயும் சம்பாதிக்கலாம் என்று அவன் புரிந்துகொண்டு வேலை தேடின போது ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.

    அதன் பிறகு, ஓடி ஓடித் தேடி கடைசியாக நேற்று தான் சொர்ணா குழும நிறுவனங்களில் காலியாக இருந்த உதவியாளன் பதவியை கேள்விப்பட்டு ஓடினான். அவனுடைய நல்லநேரம். அந்த இடத்தில் சிபாரிசுகள் எதுவும் எடுபடவில்லை. திறமையைப் பார்த்து தேர்வுகள் நடந்தன. தன் முன்னால் நின்றவனைப் பார்த்துக் கேட்டார் திருமலை.

    நீ நிறைய படித்திருக்கிறாயே... இந்த வேலைக்கும், உனக்கும் சரியாக வருமா? இது கொஞ்சம் கஷ்டமான வேலைப்பா. எப்போதும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை வேலை கொடுத்த பிறகு, நினைத்ததும் விட்டுவிட்டுப் போய் விட முடியாது. குறைந்தபட்சம் ஆறுமாத நோட்டீசாவது நீ கொடுக்க வேண்டியிருக்கும். ஏன்னா, வேலை அத்தகையது. கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணுமானாலும் எடுத்துக்கொள். அவசரமில்லை. ஆனால் உன் முடிவில் நீ சரியாக உறுதியாக இருக்க வேண்டும். என்ன சொல்கிறாய்?

    ஸார்... நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் விட எனக்கு என் பெற்றோரின் தியாகம்தான் நினைவுக்கு வருகிறது. நான் எப்போது வேலைக்கு வரவேண்டும் என்பதை மட்டும் சொன்னீர்கள் என்றால் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்...

    வெரிகுட்... பெற்றவர்களுக்காக இத்தனை உணர்ந்து செயல்பட நினைக்கும் உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீ நாளைக்கு காலையில் வேலையில் சேர்ந்துக் கொள்ளலாம். போகும்போது கேஷியரிடம் கேட்டு இருபதாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு போ. ஆயத்தத் துணிக்கடையில் புது சட்டைகளும், பேண்டுகளும், புது ஷூ, டையும் வாங்கிக்கொள். என்னுடைய நேர்முக உதவியாளன் என்ற பதவியில் நீ பெரிய பெரிய ஆட்களையெல்லாம் சந்திக்க வேண்டியது வரும். மற்றவர்கள் உன்னைப் பார்த்ததும் முதல் வணக்கம் அவர்களுடையதாக இருக்க வேண்டும். இன்று போய் இதையெல்லாம் ஒழுங்கு செய்துகொண்டு காலையில் வா. உன்னிடம் செல்போன் இருந்தால் கம்பெனி சிம் கார்டை மாற்றிக்கொள். இல்லையென்றால் கம்பெனியிலிருந்து ஒரு செல்போனை வாங்கி கொண்டு போ...

    எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையைச் சொல்லி வேலை கேட்டதால் உனக்கு சம்பளம் முப்பதாயிரம் தரப்படும் என்பதை உன் பெற்றோருக்கு சொல்லிவிடு. குட்லக்... என்றார்.

    இத்தனை அன்பான வார்த்தைகளை வெளி மனிதர்களிடமிருந்து கேட்டறியாத தேவனின் கண்கள் பனித்தன.

    Enjoying the preview?
    Page 1 of 1