Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa Pon Mayile
Vaa Pon Mayile
Vaa Pon Mayile
Ebook172 pages1 hour

Vaa Pon Mayile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466787
Vaa Pon Mayile

Read more from Mekala Chitravel

Related authors

Related to Vaa Pon Mayile

Related ebooks

Related categories

Reviews for Vaa Pon Mayile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa Pon Mayile - Mekala Chitravel

    வா... பொன் மயிலே!

    1

    வானக் குளத்தில் நட்சத்திரப் பெண்கள் நீச்சலடித்துக் கும்மாளமிடுவதை மேகப் படிக்கட்டில் உட்கார்ந்து நிலவு புன்னகையுடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த பின் மாலைப் பொழுது. சிலுசிலுவென அடித்த காற்றில் மகிழம் பூ மலர்ந்து வீசிய மணம் மனதை மயக்கியது. வெகு தூரத்தில் குட்ஸ் ரயில் போகும் சத்தம் சன்னமாகக் கேட்டது.

    விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வந்த பேபி மகளுடைய அறைக்குள் எட்டிப் பார்த்தாள். பொன்மகள் கணினி முன் உட்கார்ந்து தீவிரமாக படித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மகளைப் பார்க்கும்போது பெருமையில் மனம் பூரித்தது. அவளைக் கலைத்துவிடாமல் பூனை நடை நடந்து வெளிவாசலுக்கு வந்தாள். படிக்கட்டில் உட்கார்ந்து வெற்றிலை மென்று கொண்டிருந்த கோசலை, என்ன இன்னும் தம்பியைக் காணோம்? ரொம்ப தூரமா போயிருக்கா? என்று கேட்டாள்.

    இல்லை அத்தை. எங்கண்ணன் வீட்டுக்குப் போயிருக்காங்க. அந்தப் பய தங்கராசு சரியாவே படிக்கறதில்லையாம். பசங்கக்கூடக் கூடிக்கிட்டு ஊர் சுத்தித் திரியறானாம். யார் சொல்றதையும் கேக்கறதில்லை. நீங்க வந்து கொஞ்சம் புத்தி சொல்லுங்கன்னு எங்கண்ணி போனில் ஒரு பாட்டம் அழுது தீர்த்தாங்க. அதான் ஒரு எட்டு போய் பார்த்திட்டு வரலாம்னு போயிருக்காங்க. வர்ற நேரம்தான்.

    இதென்னடி கூத்தாயிருக்கு? அப்பன் ஆத்தா சொன்னதைக் கேக்காதவன் அத்தை புருஷன் சொன்னா மட்டும் கேட்டுடுவானா? இதோ பாரு பேபி, உனக்கும் உன் புருஷனுக்கும் ஒரு விஷயம் சொல்லறேன் கேட்டுக்க. படிப்பு, புத்தியெல்லாம் ஒருத்தர் திணிச்சி வர்றதில்லைடி. அதது தானா வரணும். அந்தா உள்ளப் படிக்கிதே உன் பொண்ணு. அதுக்கு யார் சொல்லி இதெல்லாம் வந்தது சொல்லு? பள்ளிக்கூடம் போன நாளா என்னிக்காவது யாராவது, ‘புத்தகத்தை எடுத்து வைச்சி படி... வீட்டுப் பாடம் எழுதுன்னு சொல்லி இருக்கோமா? தானா படிக்கிதில்லே? அதுதான். தன் புத்திங்கறது. இவளை விட மூணு வருஷம் பெரியவன். இன்னும் மேல் கிளாசுக்குப் போகாம பெயிலாயி பெயிலாயி இவகூடவே பன்னிரெண்டாம் கிளாசில படிக்கறான். அதுலயே தெரியலியா அதோட பவிஷு? உன் புருஷன் எதையாவது புத்தி சொல்லப் போக அவன் வீணா சண்டை போட்டுட போறான். ஏதாவது மரியாதைக் குறைவா பேசிட்டான்னாலும் போன மரியாதை திரும்பி வராது. அதனால இனிமே! தேவையில்லாததுக்கெல்லாம் தலை நீட்டிக்கிட்டுத் திரியாதீங்க. சொல்லிட்டேன். கோசலை சொல்வதிலுள்ள உண்மை புரிந்து பேபி அமைதியாக இருந்தாள்.

    உன் அண்ணிக்காரியை லேசா நினைச்சிக்காதே. இதை சாக்கா வைச்சிக்கிட்டு அவ எதையாவது சொல்லி உறவு அது இதுன்னு உள்ள நுழைஞ்சிடப் போறா... கவனம் திரும்பவும் கோசலை பேசியபோது பேபிக்கு கோபம் வந்தது.

    எங்க வீட்டுல யாரும் சந்துல நுழையறவங்க இல்லை. அது உங்கக் குடும்பத்துப் பழக்கம். எங்கண்ணன் வீட்டுலதான் பையன் இருக்கானா? ஏன் உங்க தங்கச்சி வீட்டுல இதே வயசில ஒரு பேரன் இருக்கானே. அப்ப அவங்க மட்டும் வரமாட்டாங்களா? எப்பவும் எங்க மனுஷாள்னா எளப்பம்தான். எதைப் பேசினாலும் கவனமா பேசணும்.

    மாமியாரும் மருமகளும் காரசாரமாக பேசிக் கொண்டிருக்கும்போது பொன் மகள் வெளியில் வந்தாள். அவளைக் கண்டதும் இருவரும் ஜாடை காட்டி சண்டைக்குத் தொடரும் போட்டுவிட்டு, என்னடா ராஜாத்தி படிப்பு முடிஞ்சிதா? ஏண்டி பிள்ளைக்கு குடிக்கறதுக்கு ஏதாவது கொண்டு வந்து குடேன். காபி வேணாம். ஹார்லிக்ஸ் குடு என்று கோசலை சொன்னாள்.

    இதோ வரேன் அத்தை. கொறிக்கறதுக்கு ஏதாவது வேணுமா பொன்னு? என்று கேட்டாள் பேபி.

    வேணாம்மா. அப்பறம் சாப்பிட முடியாது. குடிக்க மட்டும் வேணும். அப்பா எங்கம்மா? ரொம்ப நேரமா காணோம்? பொன்மகள் கேட்டாள்.

    தெரியலைடா... வெளிய போயிருக்காங்க. வர்ற நேரம் தான். நீ உட்காரு... என்று சொல்லிவிட்டுப் பேபி போனாள்.

    என்னடா கண்ணு படிச்சே? எனக்கெல்லாம் எழுத்து வாசனையே இல்லைடா. நம்ம வீட்டுல உங்கப்பாதான் பத்து படிச்ச பிள்ளை. மேல படிக்கணும்னு ஆசைப்பட்ட பிள்ளையை உங்க தாத்தா கடையைப் பார்த்துக்க ஆள் இல்லைன்னு சொல்லி நிறுத்திட்டாரு. அவரை எதிர்த்து நான் என்ன பேசறது? மனசு அடிச்சிக்கிட்டாலும் புருஷன் மேல இருந்த பயத்தால மவனை மேல படிக்க வைக்க மனசு ஓடலை... நல்லவேளை... உன்னைப் படிக்க வைக்கிற பாக்கியமாவது கிடைச்சிது. நீயும் சமத்தா படிக்கிறதால எங்களுக்கு நிம்மதியாகிட்டுது. பத்தாங்கிளாசில வாங்கினா மாதிரி இந்த தரமும் நெறைய மார்க் வாங்கிடு... கோசலை பேத்தியை அணைத்துக் கொண்டாள்.

    வாங்கிடுவேன் அப்பத்தா. அதுக்குதான் இப்படி படிக்கிறேன். உங்க எல்லாரோட அன்பும் பாசமும் இருக்கும் போது என்னால் அது முடியும் அப்பத்தா... பொன் மகள் புன்னகைத்தாள்.

    அப்படி சொல்லுடி என் ராசாத்தி... என்று பேத்தியை சொடக்கிட்டு திருஷ்டி கழித்தாள் கோசலை. அதற்குள் பேபி சூடான ஹார்லிக்ஸோடு வந்தாள். பொன்மகள் குடித்துக் கொண்டிருக்கும்போது நீலமேகத்தின் பைக் வருவது தெரிந்தது.

    வண்டியை விட்டு இறங்கியவர் கையிலிருந்த பையை மகளிடம் நீட்டினார். என்னடா பொன்னு அதிசயமா இருக்கு? இந்த நேரம் வெளிய உட்கார்ந்திருக்கியே... என்று கேட்டபடி தானும் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார். பையைப் பிரிச்சிப் பாரு... என்ன இருக்குன்னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவே.

    அதற்குள் அவருக்கு காபி கலந்து கொண்டு பேபி வந்து விட்டாள். அதை வாங்கிக் கொண்டே, அம்மா நீங்க குடிச்சிட்டீங்களா? என்று கேட்டார் நீலமேகம்.

    ஆச்சுப்பா... பையில் என்ன இருக்கு? ரொம்ப விடுகதை போடறே? என்று வியந்தாள் கோசலை.

    பையைத் திறந்து பார்த்த பொன்மகள் கும்மாளமாய் சிரித்தாள். ஒரு நகைப் பெட்டியை எடுத்து பாட்டியிடம் நீட்டினாள். அழகான முத்துக்கள் சரம் சரமாய் தொங்கிய வெள்ளிக் கொலுசு. உன்கூட படிக்கற கரீம்பாய் மக போட்டிருக்கு நல்லா இருக்குன்னு சொன்னியேடா. அதான் பாய் வீட்டுக்குப் போய் எங்க வாங்கினார்னு கேட்டு அதே கடைக்குப் போய் வாங்கிட்டு வந்திருக்கேன். சாமி படத்துக்கிட்ட வைச்சிட்டு நாளைக்குப் போட்டுக்கடா...

    என்னப்பா நீங்க? எதுக்காக இப்படி அவதிபட்டிருகீங்க? பார்த்ததும் அழகா இருந்தது. அதைத்தான் சொன்னேன். அதுக்காக இப்படி அலைஞ்சிருக்கீங்களேப்பா. ஸாரிப்பா... என்று சொன்ன பொன்மகளின் கண்களில் கண்ணீர்.

    அட என்னடா கண்ணு நீ? இதுக்கெல்லாம் கண் கலங்கறே? நீதானேடா எங்களோட உயிர்? உனக்காக இந்த சின்ன வேலைகூட அப்பா செய்யக்கூடாதா? போய் சாமி படத்துக்கிட்ட வை... போ... என்ற நீலமேகம் பேபி இன்னிக்கு சூடா தோசை சாப்பிடணும் போலிருக்கு. போய் ரெடி பண்ணு என்று சொல்லிவிட்டு காலை நீட்டி உட்கார்ந்து பெருமூச்சு விட்டார்.

    கோசலை மெதுவாக, ஏம்ப்பா... நீ அந்த மாரிசாமி வீட்டுக்குப் போயிருக்கறதா பேபி சொன்னாளே. நெசமாப்பா? நமக்கு எதுக்குப்பா அந்த வேண்டாத வேலை? எதா இருந்தாலும் கவனமா இருந்துக்க... என்றாள்.

    நீங்க எதுக்கும்மா பயப்படறீங்க? நானா போய் மாட்டிக்குவேன்? அந்த தங்கராசுப் பய சரியான தறுதலையா திரியறானாம். நான் போய் ஏதாவது சொன்னா சிகரெட்டை பிடிச்சி புகையை என் மூஞ்சில ஊதக்கூடத் தயங்கமாட்டான். நமக்கு வேணுமா? பேபி அவங்க அண்ணனுக்கு பரிஞ்சிக்கிட்டு ரெண்டு நாளா மல்லுக்கட்டறா அவளுக்காக போறேன்னு சொல்லிட்டுப் போனேன். அவ்வளவுதான் என்று சொன்னார்.

    நல்லதாப் போச்சுப்பா. நம்ம பொன் மகள் மேல மரிக்கொழுந்து ஒரு கண்ணு வைச்சிருக்கா. அதுதான் எனக்கு பயமா இருக்கு. கோசலை சொன்னாள்.

    பணம் நிறைய இருக்கு. இந்த நாலு கட்டு வீடும் நாற்பது ஏக்கர் நஞ்சை நிலமும், வண்டிகளும் அவ கண்ணக்கரிக்கும். அதைவிட முக்கியம் நம்ம பொன்மகளோட அழகும், அடக்கமும், படிப்பும் எல்லாரோட கவனத்தையும் கவர்ந்திருக்கு. இவ என்ன மரிக்கொழுந்து? நம்ம பண்ணையாரே ஒரு மாசத்துக்கு முன்னால கடைக்கு வந்தாரும்மா... நீலமேகம் சொன்னார்.

    என்னப்பா இது? என்கிட்டே சொல்லலியே... என்ன விஷயமா வந்தாரு? பெரிய கோடீஸ்வரராச்சே... கோசலை வியந்தாள்.

    எல்லாம் நம்ம பொன்மகளைப் பத்தி பேசத்தான். அவரோட மகன் டாக்டருக்கு படிக்கிறாரில்லே? அவருக்கு பொண்ணு தேடறாங்களாம். நம்ம பொன் மகளுக்கு ஏதாவது பார்க்கறா மாதிரி இருந்தா மேல பேசலாம்னு கேட்டார். நான் இப்ப எதுவும் யோசனையில் இல்லைங்கன்னு பணிவா சொன்னேன். புரிஞ்சிக்கிட்டு ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பிட்டாரு. எப்பவுமே மேன் மக்கள் தானேம்மா? அவரு வந்து போனதை யார்கிட்டயும் சொல்லத் தோணலைம்மா... நீலமேகம் சொன்னதை கோசலையும் ஒப்புக் கொண்டாள்.

    அது சரிதான். முடிக்கிறாப்போல இருக்கணும். பேசணும். இல்லைன்னா விட்டிட வேண்டியதுதான். உன் பெண்டாட்டி வரா. இது தெரிஞ்சா தாண்டிக் குதிப்பா கோசலை எச்சரித்தாள்.

    வாங்க... தோசை ரெடியாகிட்டுது. எல்லாருமா சாப்பிட்டுட்டா வேலை முடியும் என்று பேபி பொதுவாகக் கூப்பிட்டாள்.

    சாப்பிடும்போது பொன்மகள் சொன்னாள்.

    அப்பா எனக்கு கணினி டியூசன் படிக்கணும்ப்பா. மார்க் அதிகம் எடுக்கணும்னு நான் நினைக்கறதுக்கு அது எனக்கு உதவும்ப்பா. நம்ம ஊரிலயே நல்ல மாஸ்டர் இருக்காருப்பா. வனிதா, ராணி, எலிசபெத், துலாரி எல்லாரும் அவர்கிட்டதான் பாடிக்கிறாங்க. என்னையும் சேர்த்து விடுங்கப்பா.

    ஒரு நிமிடம் மகளை அன்பாகப் பார்த்த நீலமேகம், ஆகட்டும்மா. நாளைக்கு சேர்த்து விடறேன். சந்தோஷமா? என்று கேட்டார்.

    ரொம்ப தேங்க்ஸ்பா என்று சொன்னாள் பொன் மகள்.

    ரொம்ப படிச்சி நெறைய மார்க் வாங்கி என்ன பண்ணப்போறே? பேபி கொஞ்சினாள்.

    நான் கலெக்டராகப் போறேன்மா பொன்மகள் கண்களில் கனவு.

    என் பேத்தி கலெக்டராகிட்டா அவ கூட ஊர் ஊரா நான் போவேன். நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரிலயே இருங்க. என்னடா செல்லம். நான் சொல்றது சரிதானே? கோசலை சொன்னபோது சிரிப்பு அலை அலையாய் கிளம்பியது.

    2

    "என்னடா பிரித்வி இப்படியே பண்றே? ஏதோ கூடப்படிச்ச நண்பனாச்சேன்னு உனக்கு இருக்க இடம் குடுத்தேன். அதுக்காக இப்படியா என் பணத்தை எடுத்து செலவு பண்றது? இது நியாயமா இருக்கா?" என்று தன்னைப் பார்த்துக் கேட்கும் எட்வர்டை அலட்சியமாகப் பார்த்தான் அவன்.

    "என்னடா இப்படி அலட்டிக்கறே? நான் என்னமோ உன்

    Enjoying the preview?
    Page 1 of 1