Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madiyil Pootha Malar
Madiyil Pootha Malar
Madiyil Pootha Malar
Ebook117 pages1 hour

Madiyil Pootha Malar

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466244
Madiyil Pootha Malar

Read more from Geetharani

Related to Madiyil Pootha Malar

Related ebooks

Related categories

Reviews for Madiyil Pootha Malar

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madiyil Pootha Malar - Geetharani

    19

    1

    அலாரம் ஒலிக்கும் முன்பே பூர்ணிமாவிற்கு விழிப்புக் கண்டு விட்டது. எப்போதுமே இப்படித்தான். மறுதினம் செய்ய வேண்டிய - பிரதான வேலைகளை நினைத்துக் கொண்டு படுத்தால் காலையில் தூக்கமே வராது. நேற்று இரவும், இன்று ஆரம்பமாகின்ற முழு ஆண்டுத் தேர்வை யோசித்தபடி படுத்தது ஞாபகம் வந்தது. பூர்ணிமா, உடம்பைத் தழுவியிருந்த போர்வையை விலக்கி விட்டு, அருகில் பார்த்தாள். நான்கு வயதுக் குழந்தை பாரதி ஆழ்ந்து உறங்குவது தெரிந்தது. ஏதோ கனவு காண்கின்றாள் போலும். அவளது மெல்லிய இமைகளுக்குள் கருவிழிகள் அசைந்து கொண்டிருந்தன. குனிந்து பாரதியின் கன்னத்தில் முத்தமிட்டாள் பூர்ணிமா. ‘மடியில் பூத்த நிலவிற்கு இது இன்றைய முதல் பரிசு.’

    வெளியே சென்னை மாநகரத்திற்குரிய அன்றைய தின ஆயத்தங்கள் துவங்கியிருந்தன. எங்கோ ரெயில் வண்டி ஒன்று தடதடத்து ஓடும் ஓசை கேட்டது. பக்கத்துக் கோவிலில் பாட்டுப் போட்டிருந்தனர். பால்காரன் சைக்கிள் மணி அடிக்க, அதை வாங்குவதற்கு இரும்புக் கேட்டுகள் திறக்கப்பட்டன.

    இன்னும் சிறிது நேரத்தில் பூர்ணிமாவின் வீட்டு அழைப்பு மணி இசைக்கும். வீட்டுக்காரம்மா தான் வளர்க்கும் பசுவிலிருந்து கறந்த பாலைக் கொண்டு தருவாள். தண்ணீர் கலக்காமல் கெட்டியாக இருக்கும்.

    இங்கே வாடகைக்கு வந்த அன்றே வீட்டுக்கார அம்மாவின் குணம் தெரிந்து போயிற்று. தங்கம் என்றால் தங்கம். அழுக்குப் படிந்த ஆடைகளில் அவளைப் பார்க்கவே முடியாது. வாயில் நிரந்தரப் புன்னகை தேங்கியிருக்கும். இனிமையாக உரையாடுவாள்.

    உன் ஊரு எதும்மா?

    கன்னியாகுமரி! என்றாள் பூர்ணிமா.

    அந்த டிஸ்டிரிக்ட்ல என் சொந்தக்காரங்க இருக்காங்களே, அங்க எந்த இடம் உனக்கு?

    குழித்துறை மாமி... அப்படி உங்களைக் கூப்பிடலாமா?

    தாராளமா. நானே சொல்லணும்னு நெனச்சேன். உறவுதான் மனுஷாளோட பலம். இது யாரு?

    என் குழந்தை.

    பேரு?

    பாரதிப்ரியா. சுருக்கமா பாரதி.

    அழகா இருக்கு. எத்தினி வருசம்?

    நாலு.

    எங்க வேலை பார்க்கிற?

    இந்த வருஷம் இங்க ஸ்ரீமலர் கான்வென்ட்டுன்னு புதுசா ஆரம்பிச்சிருக்காங்களே. அங்க டீச்சர்.

    அந்த ஸ்கூல் திருச்சியில் ரொம்பப் பிரமாதமா பேரு வாங்கிடுச்சுனு கேள்விப் பட்டேன்.

    உண்மைதான் மாமி. இது நாலாவது பிராஞ்ச்.

    அது சரி. உம் புருஷன் வரலியா?

    இல்லை மாமி.

    ஏன் வெளிநாட்டுல இருக்கானா?

    ஆ... ஆமா.

    நெனச்சேன். இப்போதுள்ள பசங்க எல்லாம் ஆ ஊன்னா உடனே ஃபாரினுக்கு ஓடிடுறாங்க. நிம்மதி இல்லாம என்ன சம்பாத்தியமோ. என் மருமவனையே எடுத்துக்க. ஆறு வருஷம் மஸ்கட்ல கெடந்தாரு. இப்ப சொந்த நாடே சொர்க்கம்னு கோயமுத்தூர்ல செட்டில் ஆயிட்டாரு. உம் புருஷன் ஒழுங்கா பணம் அனுப்புறானா?

    ஆமாம் மாமி.

    அது போதும். தபாரு, இனிமே இது உன் வீடு மாதிரி. உன் இஷ்டம் போல பயன்படுத்திக்க. நான் ஏதும் குறுக்க வர மாட்டேன். அறுநூறு ரூபா வாடகை. கரண்ட் பில் தனி. சரியா?

    வீட்டுக்கார அம்மாவிற்கு ஒரே ஒரு மகள்தான். திருமணமாகிக் கோவையில் வசிக்கின்றாள். அம்மாவின் கணவருக்கு நிரந்தர வேலை கிடையாது. குடிப்பழக்கம் உண்டு. முதலில் குழம்பிப் போன அம்மா, பின்னர் சேட்டிடம் இரண்டு பைசா வட்டிக்குக் கடன் வாங்கிச் சொந்த நிலத்தில் ஐந்து சிறு வீடுகளைக் கட்டினாள். அதில் ஒன்றில் தான் வசித்தபடி ஏனையவற்றை வாடகைக்கு விடுகின்றாள். இரண்டாயிரத்து நானூறு ரூபாய் வருகின்றது. சேட்டிற்குத் தர வேண்டியது போக மீதம் செலவிற்கு.

    பூர்ணிமா, ஐந்து மணிக்கு இருபது நிமிஷங்கள் பாக்கியிருந்த அலாரம் டைம்பீசை அணைத்து விட்டு ஆளுயரப் பீரோ கண்ணாடியின் எதிரில் நின்றாள். நைட்டி லேசாகக் கலைந்திருந்தது. ஸ்டிக்கர் பொட்டு கழன்று எங்கேயோ விழுந்திருந்தது. ஆனாலும் பொலிவு குறையவில்லை. சற்றே நீண்ட முகம். நெற்றி ஓரங்களை வெகுவாக மறைக்கும் அடர்ந்த தலைமுடி. அகன்ற விழிகள். நேர்த்தியான உதடுகள். கட்டுக்கோப்பான தேகம். இந்த அழகுதானே ஜெயந்தை முதலில் என் வசம் ஈர்த்தது?

    வாசல் சப்தித்தது.

    வீட்டுக்கார அம்மா பாலை நீட்டி விட்டு, ஒரு சந்தோஷமான விஷயம் பூர்ணிமா! என்றாள்.

    என்ன மாமி?

    ஆறு மாசமா என்னோட மூணாவது வீட்டுக்கு ஆள் இல்லைன்னு வருந்திட்டிருந்தேனே. அந்தப் பிரச்சினை தீர்ந்தாச்சு.

    அப்படீன்னா?

    வாடகைக்குப் புதுசா வர்றாங்க.

    யாரு?

    அதெல்லாம் கேட்டுக்கல. வேற ஊரு. புரோக்கர் கூட்டியாந்தான். நாளன்னிக்கு சுப முகூர்த்தம். குடி வர்றாங்க.

    சந்தோஷம் மாமி.

    குழந்தை தூங்குறாளா?

    ம்.

    பாலைக் குக்கரில் ஊற்றியதும் பாத்திரத்தைச் சுத்தமாக அலம்பிக் கொடுத்துவிட்டுக் குளியல் அறைக்குள் புகுந்தாள் பூர்ணிமா. பாரதி எழுந்து தேடுவதற்குள் தலைமுழுகிக் கூந்தலைத் துவட்டியபடி வெளியே வந்தாள்.

    பூர்ணிமாவிற்குக் குளித்ததும் ஸ்வாமி கும்பிட்டாக வேண்டும். ஆதிபராசக்தி அவளது இஷ்ட தெய்வம். அம்மனின் கனிவும் கண்டிப்பும் ஒருங்கே அமைந்த பார்வை அவளுக்கு மிகவும் பிடிக்கும். பூஜைக்கென்று சுவரில் பொருத்தப் பட்டிருந்த விளக்கில் தீபமேற்றி, இருகை குவித்து விழிகள் மூடி நமஸ்கரித்தாள்.

    ‘ஓம் சக்தி ஆதி கௌரி தேவி வா வா ஸ்வாஹா.’

    ஒன்பது முறை பக்தியுடன் உச்சரித்து, திருநீறைத் தொட்டு நெற்றியில் வைத்துக் கொண்டு வேலைகளைத் துவங்கினாள். இப்போது ஆரம்பித்து ஒவ்வொன்றாக முடிக்கும் போது வாசலில் ஸ்கூல் வேன் ஹாரன் அடிக்கும்.

    முதலில் பாலைக் கொதிக்க வைத்துச் சீனி சேர்த்தாள். தம்ளர்களில் அதை ஆற்றியவாறு பெட்ரூமில் நுழைந்தவளுக்கு ஆச்சரிரியமாக இருந்தது. குழந்தை எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தாள்.

    ஏன் கண்ணே, பாத்ரூம் போகணுமா?

    ‘வேணாம்,’ என்று தலையசைத்தாள்.

    அப்புறம்?

    உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்.

    இந்தக் காலையிலா?

    நேத்து மறந்துட்டேன். கோவப்படாம சொல்லுவியா?

    என் செல்லக் குட்டி மேல என்னிக்காச்சும் கோவப் பட்டிருக்கனா? கேளு.

    குழந்தை சில வினாடிகள் மிரட்சியுடன் நோக்கினாள். பின்னர் மழலையில், என் அப்பா யாரும்மா? என்றாள்.

    பூர்ணிமாவின் இதயம் ஒரு கணம் துடிப்பை இழந்தது.

    2

    ஸ்ரீமலர் கான்வென்ட் வேன் சாலையில் சீராக ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பிள்ளையை அதனுள் அனுமதிக்கின்ற போதும் இயந்திரத் தனமாக உணர்ந்தாள் பூர்ணிமா. இத்தனை வருடங்கள் எத்தனையோ துயரங்களைக் கடந்து வந்த போதும் ஏற்பட்டிராத கலக்கம் இப்போது அவளை ஆட் கொண்டிருந்தது.

    காலையில் பாரதி அந்தக் கேள்வியை வினவியதும் அப்படியே அரை நிமிஷம்

    Enjoying the preview?
    Page 1 of 1