Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanikka Thottil
Maanikka Thottil
Maanikka Thottil
Ebook112 pages2 hours

Maanikka Thottil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466244
Maanikka Thottil

Read more from Geetharani

Related to Maanikka Thottil

Related ebooks

Related categories

Reviews for Maanikka Thottil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanikka Thottil - Geetharani

    11

    1

    "பவானி... நீ என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா...?" சடாரெனக் கட்டிலைவிட்டு எழுந்து விட்டான் பிரபாகர்.

    ம்... என்ற ஒற்றைத் தலையசைப்புடன் பவானி அவனை மௌனமாய் வெறித்துப் பார்த்தாள்.

    தெரியும்... எனக்கு எல்லாம் தெரியும். நீ ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தே... அதுக்கு யார் காரணம்... என்ன, ஏதுன்னு என்னால புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒண்ணும் முட்டாளில்லை. இதோ... பார்... பவானி! இனியொரு தரம் உன் வாயில் இப்படி ஒரு வார்த்தை வந்தது, அப்புறம் நான்... நான்... மனுசனாவே இருக்கமாட்டேன்... ஆமா...

    பிரபாவின் கர்ஜனை அந்த இரவின் அமைதியைக் கூறு போடும் விதமாய் அந்த அறையின் நாலாதிக்கும் எதிரொலித்தது. பொறுமையிழந்து போனவனாய்க் குறுக்கும், நெடுக்குமாய் வெறுப்புடன் அலைந்து கொண்டிருந்தான். இடையிடையே தகிக்கும் பார்வை பவானியின் மீது பட்டுத் தெறித்தது.

    ஆனால்.... பவானியோ எந்த விதச் சலனமுமின்றி அமர்ந்திருந்தாள்.

    என்ன நான் பாட்டுக்குப் பேசிட்டேயிருக்கேன். நீ பதிலே பேசாம இருந்தா என்ன அர்த்தம்னேன்...? முடிவே பண்ணிட்டியா...? மறுபடியும் இரைந்தான் பிரபாகர்.

    ஆமாம்...

    அவளின் ஒற்றைப் பதில் அவனுள் சீற்றத்தை விளைவித்தது. பவானி... உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...? பிரபாகர் அவளின் தோளைப் பற்றிக் குலுக்கினான்.

    பவானியின் அகன்ற கரிய விழிகளிலிருந்து நீர் முத்துக்கள் சிதறின பதிலாய். மனதின் கொந்தளிப்பை அடக்க முடியாது உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.

    நோ... நீ அழக் கூடாது பவானி. நீ அழவே கூடாது. ப்ளீஸ்... படும்மா. மனசைப் போட்டுக் குழப்பிக்காம பேசாம படும்மா... அவளின் கேசத்தை மென்மையாய் வருடினான்

    இல்லைங்க... நான் நல்லா யோசிச்சுப் பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். எனக்கு அமைதி வேணும். நிம்மதி வேணும். எதுக்குமே லாயக்கில்லாத வெத்து ஜடமா, ‘மலடி’ன்ற பட்டப் பெயரோட இந்த வீட்ல தினம் தினம் செத்துச் செத்து வாழறதை விட ‘வாழாவெட்டி’ன்ற பேர் கிடைச்சாலும் பரவாயில்லை. நான் என் அம்மா வீட்டோடவே இருந்திடறேன். என்னை மன்னிச்சுடுங்க... என் முடிவிலே இனிமேலும் எந்த மாற்றமும் இருக்காது.

    உறுதியான குரலில் பேசின பவானி கட்டிலிலிருந்து போர்வையையும், தலையணையையும் உருவிக் கொண்டு, கூடத்தில் சென்று ஒருக்களித்துப் படுத்துவிட்டாள்.

    பிரபாகர் என்ன பேசுவதென்றே தெரியாது குழம்பிப்போய்த் தடுமாறி, நிதானமிழந்து தவித்துக் கொண்டிருந்தான்.

    ‘பவானி...’ என்று பிடித்து உலுக்க வேண்டும் போலொரு சீற்றம் கிளம்பினாலும், இரவு என்கிற காரணத்தினால் தன்னைச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

    இந்தப் பிரச்சினைகளத்தனைக்கும் காரண கர்த்தாவான அன்னபூரணி - அவன் அம்மா - கற்சிலை போல் கூடத்துக் கட்டிலில் உறக்கம் என்ற பெயரில் விழுந்து கிடப்பதை வெறுப்புடன் பார்த்தான். ‘ச்சே...’ ஆத்திரத்துடன் தரையை உதைத்தான். சிகரெட் பிடித்தால் தேவலை போன்று எண்ணம் ஓடிற்று. பாண்ட் பாக்கெட்டிலிருந்த சிகரெட் பெட்டியையும், லைட்டரையும் எடுத்துக் கொண்டு, மொட்டை மாடிக்கு விரைந்தான்.

    சிலீரென்ற ஈரக் காற்று முகத்தில் வந்தறைந்தது.

    பௌர்ணமி நிலவின் தண்ணொளி பாலாய்ப் பொழிந்து கொண்டிருந்தது. தென்னை மரக் கீற்றோலைகளுக்கிடையே நிலவின் பிரகாசம் பட்டுத் தெறித்தது. தூரத்தே எங்கோ தெருநாயின் குரைப்பொலியைத் தவிர, எங்கும் நிசப்தமான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

    ஆனால்... பிரபாகரின் மனம் மட்டும் செந்தணலிடைப் பட்ட புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தது.

    சிகரெட்டை உதட்டில் வைத்து, லைட்டரால் உயிர்ப்பித்தான். புகையை மெல்ல ஆழ்ந்து சுவாசித்து வளையங்களாய் வெளியேற்றினான். என்னவோ இன்றுதான் முதன் முதலில் சிகரெட்டைப் புகைக்கின்ற புது இளைஞனுக்குப் புரையேறி, நெஞ்செல்லாம் கமறிக் கண்ணோரம் நீர் கட்டிக் கொண்டு, புகையுடன் இருமலும் வெளிக்கிளம்புமே, அது மாதிரியானதொரு அவஸ்தையில் ‘ச்சீ’ என்று விரலிடுக்கிலிருந்த சிகரெட்டைத் தூர விட்டெறிந்தான்.

    நெஞ்சு எரிகிறாற் போன்றிருந்தது. அதற்குக் காரணம் –

    சிகரெட் புகையல்ல. மனது எரிந்தது. எண்ணங்கள் நெஞ்சைத் தீய்த்தன. வாழ்க்கை கருகிப் போகுமோ என்ற நினைவு இதயமெங்கும் புகைந்தது.

    இது இன்று நேற்றல்ல நடக்கின்ற பிரச்சினை.

    பவானிக்குத்தான் குறை என்று முதன் முதலாக டாக்டரால் தீர்மானிக்கப்பட்டதோ - அன்றுதான் ஆரம்பமானது.

    இதோ... பார்டா... என்னால இனியும் இதையெல்லாம் சகிச்சுட்டு, கண்ணால பார்த்துட்டு இருக்க முடியாதுடா. நான் கண்ணை மூடறதுக்குள்ளே என் வம்சத்துக்குன்னு ஒரு வாரிசைப் பார்த்துடணும்னுதான் என் உயிரைப் பிடிச்சுட்டு இருக்கேன். என் வம்சமே விளங்காமப் போயிடுமோன்னு தான்டா எனக்குக் கவலையாயிருக்கு. அதுக்காகத்தான் சொல்றேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதுதான் உத்தமம்...

    அன்னபூரணி பேசிக் கொண்டே போனாள்.

    அம்... மா... பிரபாகர் இரைந்து கத்தினான்.

    ஏன்... ஏன்... நான் சொல்றதுல என்ன தப்புன்றே...? அண்டை அசலுல தலை காட்ட முடியலை. எங்கே போனாலும் என்ன... பூரணி! உன் மருமகள் இன்னும் வெத்து மரமாத்தான் இருக்காளான்னு கேள்வி. நாக்கைப் பிடுங்கிக்கலாம் போலயிருக்கு. ஊர் உலகத்துல அவனவன் புள்ளையும், குட்டியுமா சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கறதைப் பார்க்கறப்போ, எனக்குப் பொறாமையாக்கூட இருக்குடா, என் மகனோட வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லாமப் போச்சேன்னு இந்தத் தாய் மனசு உள்ளுக்குள்ள தினம் தினம் வேகுது...

    அன்னபூரணி முந்தானைத் தலைப்பால் விழிகளின் ஈரத்தை ஒற்றி எடுக்க, பிரபாகர் மேற்கொண்டு பேசுவதற்கு வாய்ப்பற்றுப் போனான்.

    எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு நின்றிருந்த பவானியின் விழிகளில் மடை திறந்தாற் போன்று வெள்ளமாய்க் கண்ணீர் அருவி.

    தாயின் கண்ணீரா...? மனைவியின் கண்ணீரா...? - இரண்டுமே பிரபாகரின் நெஞ்சைச் சுட்டது.

    அம்மா...! இந்த விசயத்துல நீ இனிமேல் எதுவும் பேசக் கூடாது. இது என்னோட வேண்டுகோள். ப்ளீஸ்மா...! என்னை மன்னிச்சுடு. நான் உன் பிள்ளை. அதே சமயம் பவானியோட புருஷன். உன்னைக் கை விடறது எப்படி மகாபாவமோ அது மாதிரி கட்டின மனைவியைக் கை விடறது அதைவிட மகாபாவம்மா...! அந்த துரோகத்தை நான் ஒருநாளும் பண்ண மாட்டேன். ப்ளீஸ்மா... என்னை நிம்மதியா இருக்க விடு... பிரபாகர் கிட்டத்தட்ட அழ மாட்டாத குறையாய்க் கெஞ்சினான்.

    "சரிப்பா...! ரொம்ப சரி... நிம்மதியா இரு. நான் வேண்டாம்னு ஒரு போதும் சொல்லலை. ஆனா... இனிமேலும் இந்த வீட்டுல என்னால இருக்க முடியாதுடா. வெறுமே தூணையும், விட்டத்தையும் வெறிபிடிச்சாப்ல மாத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1