Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Paarvai Sangeetham
Un Paarvai Sangeetham
Un Paarvai Sangeetham
Ebook122 pages45 minutes

Un Paarvai Sangeetham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466428
Un Paarvai Sangeetham

Read more from Geetharani

Related to Un Paarvai Sangeetham

Related ebooks

Related categories

Reviews for Un Paarvai Sangeetham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Paarvai Sangeetham - Geetharani

    13

    1

    "உன் கால் சலங்கைகள் ஓசை

    உன் கூந்தல் பூ வாசனை

    உன் பூவிதழ்களின் புன்னகை

    உன் ஓர விழிப் பார்வை

    என்னைப் பார்த்த துள்ளலில்

    விரையும் உன் மென்பாதங்கள் யாவும்

    பார்த்து நாளாயிற்றடி, கண்ணே!

    உன்னைப் பார்த்த கண்களுக்கு...!"

    சாம்பல் முளைத்த வெள்ளி நிலாக் கீற்று கிழக்கின் அடிவானில். தூரத்தே கண் சிமிட்டும் மின்மினிப் பூச்சிகளாய் நட்சத்திரங்கள். ஓசையற்ற கடலின் ஒய்யார அலைகள் ஒருமித்த கதியில் இயங்கிக்கொண்டிருந்தன. சற்று தூரத்தே தெரியும் மொட்டை மாடியின் விளிம்புச் சுவர் பற்றினபடி கண்ணெதிரே ஆகாசமாகப் பரந்து விரியும் கடற்பரப்பையும், மணற்பரப்பையும் அதில் தனித்தும், ஜோடிப் புறாக்களாக ஒருமித்தும் கிடந்த மனிதத் தலைகளை வெறித்தவனின் விழிகளில் கண்ணம்மா வந்து போனாள்.

    ‘கண்ணம்மா! எங்கேயிருக்கிறாயடி... என் காதற் பைங்கிளியே...? ஏன் என்னை மறந்தாய், தென்றலே...? உன் மனச்சாளரத்தில் நானில்லாது போனேனோ...? என் சாபமோ...? விடை தர என்று வருவாயடி, என் கண்மணி...?’

    நினைவலைகளின் சுருட்டல் இதயக் கடலின் பேரிரைச்சல் இமை வழியே துளிகளாய்க் கசிந்து நின்றன.

    தமிழ்... என்ன பண்றீங்க, இங்கே...? லைட்டே இல்லை. நல்ல இருள் கவிஞ்சுட்டது. தனிமையிலே என்ன சிந்தனை...?! என்றவளாய் உமா மகேஸ்வரி காபி கப்புடன் மாடியேறி வந்தவள் மொட்டை மாடி விளிம்புச் சுவர் பற்றி இவன் நிற்கும் இடத்தைச் சற்றுத் தாமதமாகக் கணித்து மெல்லப் பேசினவளாய் இவனருகே வந்து நின்றாள்.

    ம்... பொழுது இருளடைஞ்சதே தெரியலை, உமா. நின்னுட்டேன், என்றவன், அவள் நீட்டிய காபி கோப்பையை வாங்கிக் கொண்டான்.

    காய்ச்சல் இப்போ எப்படியிருக்கு?

    பரவாயில்லை, கொஞ்சம்...!

    ஊதக்காற்றில் இப்படி வந்து நின்றால் இன்னும்தான் கூடும்...!

    காபியை மெல்ல உறிஞ்சியவனாய் வெற்றுப் பார்வை பார்த்தான்.

    என்ன யோசனை தமிழ்...? கண்ணம்மாவை நினைத்துத்தானே...?

    உமா...! கண்ணம்மா... எனக்காகவேதான் அவள், அவளுக்காகத்தான் நான் என்ற மாதிரிப் பிணைந்த பந்தம் ஆறு வயசு முதற்தொட்டு இறுகிப்போன காதலாகி இருபத்தாறு வயசுக்கு மேற்பட்டு இடம் தேடி அலையறதா ஆகிப் போச்சு. என் கண்ணம்மாவுக்கு நான் இதுவரை எழுதின கடிதத்திற்குப் பதிலேயில்லை. தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. டெல்லி என்ன தொலை தூர தேசமா...? இல்லை, என் காதலையே தொலைத்து விட்டாளா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னால்... இப்போதிருக்கும் இந்த மனநிலையில் அவளைப் பார்க்கவேண்டும் போலொரு துடிப்பு...!

    தமிழ்மாறன் மனம் திறந்து பேசிக்கொண்டே போனான். உமாவிற்குச் சற்று சங்கடமாகவும் இருந்தது.

    தன்னுடைய பள்ளித் தோழன். அதே சமயத்தில் தாய் மாமன் மகன் என்கின்ற நெருங்கிய உறவு. ஒன்றாகவே விளையாடிப் பள்ளிக்குச் சென்ற பருவம் முதற்தொட்டே சகோதரத்துவத்தின் மேன்மையிலேயே நட்போடு பின்னிப் பிணைந்து போனது. உமா கல்லூரி முடிந்து மரைன் என்ஜினீயர் புஷ்பநாத்திற்கு மனைவியாகி, அழகிய ஆண் குழந்தைக்குத் தாயாகியும் விட்டிருந்தாள். புஷ்பநாத்திற்கு ஷிப்பிங் கார்ப்பரேஷனில் வேலை. எனவே தண்ணீரில் ஆறு மாதம், தரையில் ஆறு மாதம் என வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

    உமாவின் நெருங்கிய தோழிதான் கண்ணம்மா. கண்ணம்மாவின் மீதான தமிழ் மாறனின் நேசத்தை உமா நன்கு அறிவாள். ஆனால், இதுநாள் வரையிலும் தமிழ்மாறன் தனித்த முறையில் தனது நேசத்தைச் சொல்லியவனும் இல்லை. தூது செல்லத் துணை நாடியதும் இல்லை.

    முதன் முறையாக உமாவும் கேட்டு விட்டாள். அவளுக்கு அவனின் இன்றைய உருவமும், தோற்றப் பொலிவும் காணச் சகியாததாய் இருந்தன. மனமாற்றத்திற்காக இடம் மாறி வந்து நின்றாலும், நினைவு அலைகள் போட்டி போட்டு அவனைத் துரத்திக் கொண்டிருந்தன.

    தமிழ்...! கண்ணம்மாவைப் பற்றித் தீர விசாரிக்கலாம். இல்லை, டெல்லிக்கே நாம் நேரில் சென்று விசாரித்துக்கொண்டு வரலாம். முதலில் இப்போதைய மனநிலையிலும், உடல் நிலையிலும் மாற்றம் தேவை. அதைக் கருத்தில் கொள்ளுங்கள். ம்... நாளை மறுநாள்தானே உங்களுக்கு விசாரணை நாள்...?

    ம்... ஹ்... ஆமாம் உமா...! என்னைவிட நீ நன்றாக நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாய்...! என்றவனின் குரலில் கவலை தோய்ந்து நின்றது.

    யாராலும் மறக்க முடியாத அந்தச் சம்பவத்திலிருந்து மறுபிறவி எடுத்து வந்தாற் போன்று நிற்கும் மனிதரிடம் விசாரணை என்பது தேவைதானா என்றே தோன்றுகிறது. வித்தியாசமான சட்ட திட்டங்கள்...!

    எது நடக்குமோ... அது நடக்கும் என்று உன் அத்தை தான் அடிக்கடி சொல்வார். அதன்படி நடக்கட்டும் என்று நானும் அமைதியாகி விட்டேன், உமா. என்னால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை இன்னும். ஈடு செய்ய இயலாத பேரிழப்புகளுக்கு விசாரணை வினாக்கள் புத்துயிர் தந்திடாது. ஆனாலும், அரசுப் பணியாளன் என்கின்ற காரணத்தினால், அவசியம் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், உமா. என்னுயிரை மாய்த்துக் கொள்வது அத்தனை கடினமான ஒன்றல்ல எனக்கு. ஆனாலும், என் கண்ணம்மாவிற்காகவே இத்தனைக்குப் பின்னரும் நான் காத்திருக்கிறேன்...!

    காலம்தான் எல்லாவித ரணங்களையும் ஆற்றவல்ல உன்னத மருத்துவன். தமிழ்...! நீங்க கண்ணம்மா மீது வைத்த நேசம் நிஜம்... அதை ஒரு கால கட்டத்தில் கொண்டு வந்து சேர்த்து விடும் தானாகவே... அதுவரை நமக்குத் தேவை பொறுமைதான்...!

    பொறுமை... அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, உமா. என் கண்ணம்மாவிற்கு எனது இன்றைய நிலை தெரியுமா, தெரியாமல் போனதா... என்பதுதான் என் கேள்விக்குறி. என்னோடு பேசாது ஒரு நாள்கூட நகர்த்தியதில்லை இத்தனை வருட காலங்களில். முழுதாய் நூற்று நாற்பது நாட்கள் அவளின் குரலைக் கேட்டு. அவளின் மணிப்பரல்கள் போன்ற கையெழுத்துகளை வாசித்து. கண்ணம்மாவிற்கு ஏதோ ஆகிவிட்டது என்று என் உள்மனம் சொல்கிறது. அதைப் பற்றித்தான் என் கலக்கம் எல்லாம். இந்த வாரம் விசாரணை முற்றிலுமாக முடிவு பெற்று விடும். அதன் பின்னர், நான் டெல்லிக்கு அவசியம் சென்றேயாக வேண்டிய கட்டாயமான உந்துதலில் இருக்கிறேன், உமா!

    ம்... ஆகட்டும். டெல்லி அவசியம் செல்லலாம். முடிந்தால் புஷ்பநாத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டு செல்லலாம்! இப்போது தேவை உங்களுக்கு ஓய்வு. ரொம்ப நேரமாயிற்று மாடிக்கு வந்து. முதலில், அறைக்குச் சென்று ஓய்வு எடுங்கள், தமிழ். இரவு டிபன் இன்னும் அரை மணி நேரத்தில் தயாராகி விடும்!

    உமா...! எனக்கென்னவோ இந்த மொட்டை மாடியும், ஆகாசப் பெருவெளியும் மனதிற்கு நிம்மதி தருவதுபோல் உள்ளன. அறைக்குள் வந்து எத்தனை நேரம்தான் தனிமனிதனாக அடைந்து கிடப்பது? அத்தையும் கோவிலுக்குச் சென்றுவிட்டதால், பரிவுடன் பேச ஆளின்றித் தொலைக்காட்சிப் பெட்டியின் முகங்களின் செயற்கைத் தனத்தில் மனது இடம் பெறுவதாக இல்லை. இந்தத் தனிமை சுகமானதாக இருக்கிறது, உமா...!

    தமிழ்மாறன் மிக மென்மையான குரலில்

    Enjoying the preview?
    Page 1 of 1