Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanimarath Thoppu
Thanimarath Thoppu
Thanimarath Thoppu
Ebook152 pages1 hour

Thanimarath Thoppu

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Family Based Fiction written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466404
Thanimarath Thoppu

Read more from Rajendrakumar

Related to Thanimarath Thoppu

Related ebooks

Reviews for Thanimarath Thoppu

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanimarath Thoppu - Rajendrakumar

    12

    1

    மரத்தாலான பள்ளங்களைப் பதித்த மோடி வராண்டாவில் குதிகால் செருப்புகள் ஓசைப்பட நடந்து கொண்டிருந்தாள் அவள். பெயர் அனாமிகா.

    இருட்டும் விலகாத, பொழுதும் விடியாத கங்குல் நேரம். நிலவைத் தொலைத்த அமாவாசை இருட்டு. நட்சத்திரங்கள் சிந்தும் கஞ்சத்தனமான ஒளியினால் அனைத்துக் காட்சிகளும் சில்-அவுட்டாகத் தெரிந்தன

    நடந்தவளின் நடை நின்றது.

    மரத்தாலான கைப்பிடிச் சுவரைப்பற்றிக் கொண்டு கண்கொள்ளு மட்டும் பார்த்தாள்.

    சற்றே தொலைவிலிருந்த கடலில் அலைகளின் ஓசை மட்டும் விட்டு விட்டு ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

    பார்த்தாள்.

    எங்கோ கடலில் போகும் கப்பல் ஒன்று, சிக்னல் என்கிற பெயரால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது..

    அந்த இருட்டுச் சூழ்நிலையிலும்கூட அவள் முகத்தின் சோகத்தை உணர முடிந்தது.

    நிமிர்ந்தவள் மீண்டும் பின்னங் கைகளைக் கட்டிக் கொண்டு மீண்டும் உலாவத் தொடங்கினாள். தூக்கமில்லாத இரவின் தளர்ச்சி அவள் கால்கள் பின்னுவதில் தெரிந்தது. சோர்வு தாக்கியிருந்தது.

    இப்படிப்பட்ட சோர்வு இப்போதெல்லாம் அடிக்கடி தாக்குகிறது.

    நடந்தாள்.

    வீட்டைச் சுற்றிலும்-சண்டை போட்டுக் கொண்ட குழந்தைகள் போலப் பல திக்குகளைப் பார்த்து நிற்கும் தனித்தனி வீடுகள்.

    தனித்தனியே குடும்பத்தோடு ஒருநாள் வாடகை நூற்றி ஐம்பது கொடுத்தால் தற்காலிகக் குடும்பம் நடத்தும் வசதி கொண்ட ஸூட்கள்.

    அது ஒரு காலம்! வாங்குவதற்கு ஆளில்லாமல் போன கால கட்டத்தில், இவள் அப்பா வாங்கிப்போட்ட இருபது ஏக்கரா நிலப்பரப்புக்கு நடுவே தனிமரமாகத்தான் இந்த பங்களா கட்டப்பட்டிருந்தது.

    இங்கிருந்துதான் தினம் மாட்டு வண்டி ஏறி டவுனுக்குப் போய், படித்து விட்டு வந்தாள். இங்குதான் கல்யாணமும் நடந்தது.

    1947 இல் இந்தியாவை விட்டு ஓடும் அவசரத்தில் இருந்த ஒரு பிரிட்டிஷ் என்ஜினியர் அவசரமாகத் தயாரித்துக் கொடுத்த வரைபடத்தை வைத்து அப்பா நேரடிப் பார்வையில் கட்டிய பங்களா...

    உயர உயர விதானம். தூண்கள் தாங்கி நிற்க, நீண்டு படர்ந்திருந்த படிக்கட்டுகளின் உச்சத்தில் கட்டடம் கம்பீரமாக நின்றது. தரையிலும், மாடியிலும் மரப் பலகைகளினால் ஆன தளங்கள். (அந்நிய நடமாட்டமிருந்தால் காட்டிக் கொடுத்துவிடும்.)

    இத்தனை நாள்களாகத் தனிக்காட்டு ராஜாவாக இருந்த அந்த பங்களாவைச் சுற்றிச் சின்னஞ்சிறு குடியிருப்புகள் சமீபத்தில்தான் முளைத்திருந்தன.

    காரணம்? அரசாங்கம்!

    தேவைக்கு மேல் இருக்கும் உபரி நிலத்தை அரசு கையகப்படுத்தும் என்ற அரசு நோட்டீஸ் வந்ததும், முதல் வேலையாக இருபது ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பினாள் அவசரம் அவசரமாக நிறைய வீடுகளைக் கட்டி, வாசல் வளைவில் ‘தங்க சொர்க்கம் பீச் ரிஸார்ட்’ என்று எழுதி வைத்தாள்.

    ‘தங்க’ இரட்டை அர்த்தச் சொல். ‘தங்கம்’ என்றும் சொல்லலாம்; தங்குவதற்கு என்றும் சொல்லலாம்.

    பக்கத்தில் கன்னியாகுமரிக்கு உல்லாசப்பயணம் வரும் பயணிகளுக்குத் தங்குமிடம் என்று பெயர். ஆனால் வரத்தான் ஆள் இல்லை. ஈயோட்ட வேண்டியிருந்தது.

    ஆனால் –

    அரசு வாய் பொத்திக் கொண்டு விட்டதுதான் லாபம்.

    - ஆரம்ப நாள்களில் தனிமையை அறிந்த ஹிப்பிகள் நிறையப் பேர் வந்தார்கள். கஞ்சா பிடித்து, பிறந்த மேனியாகத் திரிந்து, நீச்சல் அடித்து நாறடித்தார்கள்.

    பார்க்கச் சகிக்காமல் போலீஸாரை விட்டுத் துரத்தியடித்து விட்டாள்.

    கண்ணியவான்களும் காரில் வந்து தங்குவதுண்டு. கதை டிஸ்கஷன், பாட்டு கம்போஸிங் என்றால் சில இசை அமைப்பாளர்கள் தபேலா, ஹார்மோனியத்துடன் வந்து, வாரம் பத்து நாள் தங்கி, தயாரிப்பாளர் செலவில் தட்டுக் தட்டாக முந்திரிப் பருப்பும், ஆப்பிள் ஜூஸுமாக வாங்கிச் சாப்பிட்டுத் தொந்தியைக் கணிசமாக வளர்ப்பார்கள்...

    அவர்களுக்காகவே ரெஸ்டாரெண்ட் ஒன்றும் கட்டியிருந்தாள்.

    அநேகமாக மாதத்திற்குப் பாதி நாள் வாங்க ஆளில்லாமல் காப்பி தவிர வேரெதுவும் தயார் செய்யப்படாத ரெஸ்டாரெண்ட் சமையல்காரர்களும் சப்ளையர்களும் தனிச் சமையலைத் தவிர்த்து பங்களாவுக்கே வந்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள்.

    அந்த அளவு ஈயடிக்கும்.

    ஆனாலும் அதைப் பற்றி அனாமிகா கவலைப்பட்டதே இல்லை..

    காரணம்?

    தனிமை அவளுக்குப் பழகிப்போன ஒன்று.

    மனம் திரும்பிப் பார்த்தது.

    திறந்திருந்த அடுத்த அறைக் கதவு வழியாக, தனது கணவர் போன் பேசுவதும்-எழுதுவதுமாகத் தெரிந்தது.

    கட்டிலில் கவிழ்ந்து தலையணையைக் கண்ணீரால் நனைத்துக்கொண்டு இருந்தவள் எழுந்து போனாள்,

    மணி ஒண்ணரையாகுதுங்க...

    நிமிர்ந்தவர், மூக்குக் கண்ணாடியை உயர்த்தி உச்சந்தலையில் குந்த வைத்தார்.

    அரை மணிக்கு முன்னால் வாட்ச்சைப் பார்த்தப்ப மணி பதினொண்ணரை. இப்ப பன்னிரண்டு ஆயிருக்கும்னு எதிர்பார்த்தேன். ஒண்ணரை ஆயிடுச்சா? இருக்கும். இருக்கும்... நீ போய்ப் படு. ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்." –

    இந்த ராத்திரியிலே யாரைத் தொல்லைப்படுத்தப் போறீங்க?

    ராத்திரியா, முண்டம்! இங்க ராத்திரி. அங்கே அமெரிக்காவிலே பகல் நேரம்டி. போ. போய்த் தூங்கு. பகல்ல பண்ணினாத்தான் அவனைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டி வரும். அவசரமான ரெஃபரன்ஸ் ஒண்ணு கேட்கணும். போ. போய்த் தூங்கு.

    காத்திருந்து காத்திருந்து தூங்கிப் போனவள், விடியற்காலையில் எழுந்து பார்க்கும்போது அவர் மேஜை மீதே கைகளை மடித்துத் தூங்கிக் கொண்டிருப்பார்.

    எழுப்பிக் கைத்தாங்கலாக அழைத்துப்போய் கட்டிலில் படுக்கவரை விட்டுவிட்டுக் குளியலறையில் குளிக்கப் போய் விடுவாள்.

    சாப்பிடும் நேரத்தில் மட்டும், என்ன எப்படி இருக்கே? என்பார் அக்கறையாக. அநேகமான நாள்களில் இவளிடம் அவர் பேசும் பேச்சு இது ஒன்றாகத் தானிருக்கும்.

    கோபம் மிகுந்த ஓர் இரவில் கேட்டே விட்டாள்; மனைவி தேவையில்லாதப்ப எதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?

    இதபார் அனாமிகா! நான் நைட் கிளப்புக்கோ, தண்ணியடிக்கவோ போகலை. ஆராய்ச்சிக் கட்டுரை சப்மிட் பண்ணற நாள் நெருங்கிக்கிட்டிருக்கு. தயார் பண்ண வேணாமா?

    - தவறிப் போய் சில நாள்களில் நேரத்தோடு நெருங்கி வந்தார். விளைவு?

    குழந்தைகள்!

    பெரியவன் மகேஷ்குமார். மகள் வினிதா.

    குழந்தைகளைப் பார்க்க வந்த அம்மாவிடம் சொன்னாள். இனிமே நான் தனிமரமில்லைம்மா. எனக்காக ரெண்டு பிள்ளைங்க எனக்குத் துணை இருப்பாங்க..

    அவள் பூரிப்பு அதிக நாள்கள் தாங்கவில்லை. அவர்களுக்கும் இவளுக்கும் இருந்த உறவு-பத்து மாதம் வயிற்றில்; மூன்று வருஷம் எதிரில். பிறகு?

    அபூர்வமாக அவரே கூப்பிட்டுப் பேசினார்.

    இந்தக் கிராமச் சூழ்நிலையில் வளர்ந்தா அவங்களுக்கு உலகம் புரியாது. தவிர, குழந்தைகளின் நடமாட்டம் என் ஆராய்ச்சிக்குத் தடை என்றார். ஸோ, நான் ஒரு தீர்மானத்துக்கு வந்துட்டேன்.

    பகீரென்றது.

    நீங்க என்ன சொல்றீங்க?

    இந்தச் சூழ்நிலை, இந்தத் தனிமை அவங்களை ரொம்பவும் பாதிக்கும் தீர்மானமாகச் சொன்னார். படிப்போட நல்ல ஒழுக்கமும் வரணும். அதனாலே...

    அதனாலே...?

    அவங்களை ஊட்டி, கொடைக்கானல் ஸ்கூல் அண்ட் ஹாஸ்டலுக்கு அனுப்பிடப் போறேன் என்றவர் -

    அவள் தடுத்தும் கேளாமல் அனுப்பிவிட்டார்.

    அவள் முயற்சி தோற்றது. மீண்டும் அதே தனிமரமாக ஆகிவிட்டாள்.

    பிரிச்சிட்டீங்க கத்தினாள், என்னையும் என் குழந்தைகளையும் பிரிச்சிட்டீங்க. ஏன்? கதறினாள், சொல்லுங்க, ஏன்?

    உன்னாலதான் விரலால் அவளைச் சுட்டினார்.

    உன்னாலதான் அனாமிகா! உன் தாய்ப்பாசமும், நீ காட்டும் அபரிமிதமான அன்பும் அவங்களைச் சில சமயம் ஆபத்தில் கொண்டு விட்டுடும். கோழைகள் ஆயிடுவாங்க. குழந்தைகளுக்குப் பாசம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு கண்டிப்பும் அவசியம். அது உன்னால முடியாது.

    உறுதியாகச் சொன்னார். அதுக்கு ஹாஸ்டல்லயே வளரட்டும். இத பாரு. உன் நன்மைக்காகத்தான் சொல்றேன். ஒரே சமயம் இரண்டு பேரையும் உன்னால் சமாளிக்க முடியாது. தவிர என் ஆராய்ச்சிக்கும் குழந்தைகள் முக்கிய தொல்லையாய் இருப்பார்கள்.

    வாய்மூடிக் கொண்டு விட்டாள்.

    மீண்டும் கடல் சூழ்ந்த நிலையில் தனித் தீவாகி விட்டாள்.

    காத்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறை நாள்களுக்காக ஆவலுடன்-ஆசையுடன் காத்திருந்தாள்.

    பிள்ளைகள் வருவார்கள். கொஞ்சலாம். அவர்களை அழைத்துப் பிக்னிக் போகவேண்டும். அங்கே அவர்களுக்கு இணையாக தானும் சின்னப் பிள்ளையாகி ஓடியாடி விளையாட வேண்டும். காரில் சுற்றவேண்டும். கம்பளத்தைப் புல்வெளியில் விரித்துப் பேப்பர் தட்டில் கேக், லட்டு, வெல்ல அவல், பருப்பு அடையென்று பரிமாறி, ஊட்டி, தானும் உண்டு...

    கனவு-வெறும் கனவு.

    ஒவ்வொரு தடவையும் விடுமுறையில் வீட்டுக்குள் நுழையும்போதே- ஹாய் மம்மீ என்ற கையோடு மாடியேறி அப்பாவிடம் போவார்கள்.

    அப்பா... அப்பா... என் பிரண்ட்ஸ் காஷ்மீர் போக ஆசைப்படறாங்க. எங்களையும் கூப்பிடறாங்க. ப்ளீஸ் அப்பா. நாங்களும் போகவா?

    "போயிட்டு வாங்க - கண்ணுங்களா. நாலு இடத்துக்குப் போய் வந்தால்தான் பொது அறிவு

    Enjoying the preview?
    Page 1 of 1