Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kana Kanden Kanne
Kana Kanden Kanne
Kana Kanden Kanne
Ebook111 pages1 hour

Kana Kanden Kanne

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466589
Kana Kanden Kanne

Read more from Arnika Nasser

Related to Kana Kanden Kanne

Related ebooks

Related categories

Reviews for Kana Kanden Kanne

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kana Kanden Kanne - Arnika Nasser

    21

    1

    திருவள்ளுவர் வலப் பக்கம் குலுங்கித் திரும்பி, பின் இடப் பக்கம் திரும்பிப் புழுதி பறக்க பிரேக்கிட்டு நிற்க, கண்டக்டர் எழுந்து கதவை ட்ரக்... என்று திறந்து வெளியே குதித்துப் பதிவு அலுவலகம் நடந்தார். டிரைவர், தன் வலப் பக்கம் குட்டிக் கதவைத் திறந்து கொண்டு டயருக்கு மேல் கால் வைத்துக் குதித்து இறங்கினார்.

    பெயர் ராஜப்பா. மிலிட்டிரி ரிட்டர்ன். தூக்கிச் சீவப்பட்ட வெள்ளி நிற கேசமும், பட்டையாய்க் கிருதாவும் முறுக்கி டை அடிக்கப்பட்ட அகன்ற மீசையும் பழைய தங்கப் பதக்கம் சிவாஜியை நினைவூட்டும்.

    அவரைப் பற்றிய வர்ணனை ஓ.கே. அவரின் மகளைப் பற்றி வர்ணனை? கர்னலுக்குத் தெரிந்தால் உதைப்பார். அவர் போகட்டும். விலாவரியாய் வர்ணிப்போம்.

    கர்னலையும் அவரது மகளையும் நெருங்கி வந்து நின்று ஓர் ஆட்டோ சிரித்தது.

    எங்க சார் போகணும்?

    மெய்யப்பன் நகர். எவ்வளவு கேட்கிறேப்பா?

    ஆறு ரூபா கொடுங்க சார்.

    அஞ்சு ரூபா வாங்கிக்கப்பா.

    ஆட்டோ யோசித்தது. ‘சரி, ஏறுங்க சார். அங்கே எங்கே போகணும்?"

    அங்கேயா? அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸ் போப்பா.

    இடது கையால் ஆட்டோ டிரைவர் கிக் ஸ்டார்டரை அசுர கதியில் மேலுக்கு இழுத்து ஆட்டோவை உயிர்ப்பித்து உருமியபடி சாலையில் சீறினான்.

    எதிரே வரும் டவுன் பஸ்ஸின் மீது மோதுவது போல் போய் நொடியில் விலகி, இடப் பக்கம் சைக்கிள்காரனை இடிப்பதாகப் பூச்சி காட்டி, கட்டை வண்டி வேடிக்கை பார்க்கும் எட்டு பிளாட்பார பாதசாரிகள் கடந்து ரயில்வே லெவல் கிராசிங்கின் வேகத்தடைகளில் திணறி ஏறிக் குலுங்கிக் குலுங்கி பல்கலைக் கழகத்தை நோக்கிப் பறந்தது ஆட்டோ.

    பல்கலைக் கழக அட்மினிஸ்ரேடிவ் கட்டிடத்தின் பிரதான வாசலில் ஆட்டோ நின்று மரித்தது.

    கர்னல் கனத்த மணிபர்ஸ் திறந்து ஒரு பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்து, மீதி ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டார்.

    ஆட்டோ அடுத்த சவாரி தேடிப் புறப்பட்டது.

    இறங்கிய இவர்களை விசாரிக்க ஒரு செக்யூரிட்டி படி இறங்கி வந்து, என்ன விஷயம்? என்பதாய்ப் பார்த்தது.

    மிஸ்டர் செக்யூரிட்டி! ஆபீஸ் எத்தனை மணிக்கு?

    ஒன்பதரை சார். என்ன, அட்மிஷனா?

    இந்தக் கேள்வி கர்னலுக்குப் பிடிக்காவிட்டாலும், ஆமாம்பா.

    அதோ தெரியுது பாருங்க, ஒரு மஞ்சள் பில்டிங். அதுதான் யூனிவர்சிடி கேண்டீன். சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க. நேரம் சரியாயிருக்கும்.

    தேங்க்ஸ்ப்பா. நாங்க வழியிலேயே ப்ரட் ஜாம் சாப்பிட்டுட்டோம்.

    45 நிமிடங்கள் கழித்து ஆபீஸ் இயக்கக் கதிக்கு வந்தது. முதல் மாடிக்குப் படி ஏறி இடப் பக்கம் திரும்பினார்.

    ஸ்காலர்ஷிப் செக்ஷன். செக்ஷன் முகப்பில் அமர்ந்திருந்த கறுத்த மனிதரிடம் கர்னல், டென்டல் பர்ஸ்ட் இயர் அட்மிஷன் செய்யணும். இதோ நிற்கிறாளே இவளுக்கு... என் டாட்டருக்கு...

    உள்ளே முதுகுக்குப் பின்னால் சுட்டி, உள்ளே போங்க. ஒரு லேடி இருப்பாங்க. அவங்ககிட்டே உங்க அட்மிஷன் கார்டையும் ஒரிஜினல் மார்க் லிஸ்ட், டி.சி., கிசி எல்லாவற்றையும் காட்டினீங்கன்னா வெரிஃபை பண்ணித் தருவாங்க...

    உள்ளே சென்று அட்மிஷன் கார்டையும் சர்டிபிகேட்டையும் ஒரே சேர

    நீட்டினார் கர்னல்.

    உட்காருங்க. ஒரு அஞ்சே நிமிஷம்.

    ஒரு கனத்த ட்ரேயிலிருந்து ஒரு கட்டிலிருந்து ஒரு அப்ளிகேஷன் பாரம் கவர்ந்து,

    ம்! மதுனிகா ராணி... முணுமுணுத்தாள்.

    போட்டோஸ்டட் காப்பிகளை ஒரிஜினலுடன் ஒப்பிட்டுத் திருப்தியுடன் டிக்கினாள் கிளார்க்.

    இளம் ஊதா நிற பாங்க் சலானை எடுத்து பில் அப் செய்து கொடுத்து, கீழே இடது கோடியிலே பாங்க் ஆப் மெஜ்ரா இருக்கு. அட்மிஷன் ஃபீஸ் கட்டிவிட்டு டென்டல் டிபார்ட்மெண்டுக்குப் போய் என்ட்ரி பண்ணிடுங்க பெண்ணை ஹாஸ்டல்லே சேர்க்கப் போய் வார்டனைப் பாருங்க... சிரித்தாள் சிநேக பாவமாய்.

    மதுனிகா பதிலுக்குப் புன்னகைத்து.

    தேங்க்ஸ் மேடம். எழுந்தாள் அப்பாவுடன். பாங்க்கில் பணம் கட்டிய மூன்றாவது காப்பியுடன் டிபார்ட்மெண்ட் புறப்பட்டார்.

    டிபார்ட்மெண்ட் கிளார்க் ஸ்லிப் வாங்கிப் பார்த்து ‘ஓ...மதுனிகா ராணி! லேட் அட்மிஷன். நீதாம்மா லாஸ்ட். பாடமெல்லாம் நிறைய நடந்திருக்கு. கோ ஸ்டூடன்ஸ் நோட்ஸ் வாங்கிக் காப்பி பண்ணிக்குங்க..." மிழற்றினார் வாய் நிறைய வெற்றிலை சீவல் கலவையுடன்.

    எழுநூறு பெண்கள் தங்குவதற்குப் போதுமானதாகக் கட்டப்பட்ட அந்தப் பெண்கள் விடுதிக்குள் நுழைந்தாள் மதுனிகா, தன் அப்பாவுடன்.

    வார்டன் சாரதா 40 வயது நெருங்கி 4 அடி 1 அங்குல உயரத்தில் மாநிறத்தில் மனோரமா சாயலில் இருந்தார்.

    கர்னல், வணக்கம்மா... நெஞ்சில் கை குவித்தார். மதுனிகா, குட்மார்னிங், மேடம், என்றாள்.

    வார்டனம்மா நிமிர்ந்து, வணக்கம், வணக்கம். என்ன விஷயம்? அட்மிஷனா? நெற்றி சுருக்கினார்.

    ஆம், என்றார் கர்னல்.

    அட்மிஷன் கார்டு பீஸ் கட்டிய செலான் பார்த்து விட்டு, உட்காருங்க, என்றார்.

    ஒரு லெட்ஜரைப் புரட்டிப் பார்த்துவிட்டு, பிஜி பிளாக்லே ரூம் நம்பர் தர்ட்டி ஃபோர்லே ஒரு இடம் இருக்கு. அந்த ரூம்லே இருக்கிற மத்த நான்கு பிள்ளைகளும் டென்டல் தான். என்ன, அங்கே போட்டுடட்டுமா?

    உங்க இஷ்டம்மா. இனி என் மகள் உங்க பொண்ணு மாதிரி.

    ஷ்யூர்! ஷ்யூர்! இனி எனக்கு 721 பொண்ணுங்க. சரியா?

    அது போதும்மா. அந்த நம்பிக்கைலதான் திருவனந்தபுரத்லயிருந்து என் பொண்ணை இவ்வளவு தூரம் கொண்டு வந்து படிக்கப் போடுறேன்.

    ஆமா. உங்க மிசஸ் வரலியா பொண்ணை அட்மிஷன் பண்ண?

    அவ இருந்தா எனக்கு கவலையே இல்லியேம்மா. ஒரு கார் ஆக்சிடென்டில் இறந்துட்டாம்மா.

    ஒ சாரி. நடந்தத கிளறிட்டேனா?

    இட்ஸ் ஆல்ரைட்மா ஹாஸ்டல் ஃபீசுக்கான பணத்தை நீட்டினார். வார்டனம்மா மணி பன்னன்டு ஆயிடுச்சு. அந்த ரூம் பொண்ணுங்க நாலும் வந்திருக்கும். வரச்சொல்லி பரஸ்பரம் அறிமுகம் பண்ணிடுறேன். காலிங் பெல் ஜிரிங்கி அழைத்துவரச் சொன்னார்.

    8 நிமிட 41 நொடி தாமதத்தில் வாட்ச்மேன் ஐவராய் திரும்பினான்.

    வணக்கம்மா கோரசாய்.

    வாங்கடி பொண்ணுங்களா! இதோ இவ பேரு ஆர். மதுனிகாராணி. புதுசா உங்க கிளாஸ்ல ஜாயின் பண்ணியிருக்கா. உங்களோடதான் தங்கப் போறா. நல்லபடியா இருங்க.

    சரி என்று தலை ஆட்டினர் நால்வரும்.

    "மதுனிகாராணி! இது சந்தியா. ஊரு

    Enjoying the preview?
    Page 1 of 1