Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Malligai
Karuppu Malligai
Karuppu Malligai
Ebook137 pages51 minutes

Karuppu Malligai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Short Stories Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466947
Karuppu Malligai

Read more from Arnika Nasser

Related to Karuppu Malligai

Related ebooks

Related categories

Reviews for Karuppu Malligai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Malligai - Arnika Nasser

    கை கால் முளைத்த பூப்பந்துகள்

    தன் எம்.பில். தீசிசுக்கான ஆறு காப்பிகளை ஆர்ட் பேப்பரில் எலக்ட்ரானிக் டைப்ரைட்டிங் செய்து பாந்தமாகத் தன் துறையில் ஒப்படைத்தாள், தேவிதா. அடுத்த மூன்று மாதங்களில் வைவா அட்டண்ட் செய்தாள். பத்து நாள்களில் முதல் வகுப்பு என்று புரவிசனல் சர்டிபிகேட்டும் பெற்றாள்.

    கற்பனையில் வண்ண வண்ணக் கனவுகள் கிளர்ந்தன. ‘தாவரவியலில் எம்.பில். டிகிரி - பெற்றுவிட்டோம். சில நாள்களில் விரிவுரையாளர் வேலை கிடைக்கப்போகிறது. கை நிறையச் சம்பளம் கொடுக்கப்போகிறார்கள். மொபெட்டில் வேலைக்குப் போகலாம். வாரம் இரண்டு சினிமா பார்க்கலாம். பத்து ப்ளவுஸ் பிட், ஐந்து காட்டன் புடவைகள் எடுத்து உடுத்தலாம். காதுக்குச் சிறு ஸ்டட். வலப்பக்க மூக்குக்குப் பொட்டுக்கடலை வடிவச் சிறு மூக்குத்தி, இடக்கை விரலுக்குப் பவள மோதிரம், கால்களுக்கு மாடர்ன் ஒற்றைச்சரக் கொலுசு எக்செட்ரா எக்செட்ரா வாங்கவேண்டும். இரண்டு வருடம் வேலை பார்த்த பின் கல்யாணம். இரண்டு சம்பளங்கள் அற்புதங்கள் நிகழ்த்தும். சொந்தத்தில் வீடு! வாவ்!,

    ஆனால், நாள்கள் நகர நகர, யதார்த்தம் கசந்தது. ஆங்கிலத் தினசரிகளையும், எம்ப்ளாய்மெண்ட் நியூசையும் ஒரு வரி விடாமல் வாசித்துத் தேவையான விளம்பரங்களைக் கட் செய்து அப்ளை செய்ய ஆரம்பித்தாள் தேவிதா. இன்டர்வியூ கார்டுகள் வந்தன. போய்ப் பார்த்ததில்தான் புரிந்தது.

    தனக்கு முன் தற்காலிகமாய்த் துண்டு துண்டாய் வேலை பார்த்துவிட்டு நிரந்தர வேலைக்குக் காத்திருப்பவர்களும் பிஎச்.டி. முடித்த நாலு பேர்களும் கண்களில் பட்டனர்.

    ஆணவம் சற்றே கரைந்தது. தோழியின் பாண்டிச்சேரி முகவரியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன் பெயரைப் பதிவு செய்தாள், தேவிதா.

    பிளஸ்டூ பள்ளிகளிலாவது விரிவுரையாளர் பதவி கிடைத்தால் போதும் என நிலை இறங்கி வந்தாள். தானாகவே நிறைய பள்ளிகளுக்குத் தன் கல்வித் தகுதியைக் குறிப்பிட்டுத் தன் தகுதிக்கேற்ற வேலை இருந்தால் - இல்லை, பின்னாளில் வந்தால் தன்னையும் கன்சிடர் செய்ய வேண்டுமாய் விண்ணப்பித்தாள்.

    அவளின் தவிப்பைக் கண்டு உருகினாள் அம்மா.

    படிச்சு வேலைக்குத்தான் போவணும்னு என்ன கட்டாயம்? பேசாம இரு. நல்ல மாப்பிள்ளையா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிடறேன்...

    வரதட்சணை அதிகம் வேண்டி விஷப்பாம்பை விடற காலமிதும்மா. சுயமா சம்பாதிச்சா, புருஷன் கொடுமை பண்ணாக்கூட போடா இடியட்னு நிம்மதியா விலகிடலாம். மொதல்ல எனக்கு வேலை. அப்புறந்தான் கல்யாணம் காட்சி எல்லாம்...

    வாசலில் காப்பிக்கொட்டை நிற யூனிபார்ம் ஆசாமி சைக்கிளில் வந்து இறங்கினான். கையில் மொத்தமாகப் பத்துத் தந்திகள் வைத்திருந்தான். உள் வாசலுக்கு வந்து, இங்க தேவிதான்றது யாரு? வினவினான்.

    தந்தி என்றதும் தேவிதாவின் அம்மா அனிச்சையாய்ப் பதறினாள். பொறுமையாய் பார்மில் கையெழுத்து இட்டு விட்டுத் தந்தியைப் பெற்றாள், தேவிதா. தந்தி ஆசாமி புறப்பட்டுப் போனான்.

    தந்தியைப் பிரித்துப் படித்தாள்.

    அதில் -

    ‘வேலைவாய்ப்பு ஒன்று காத்துள்ளது. உடன் நேரில் வரவும். - பிரின்சிபால், நேருஜி மெட்ரிகுலேஷன் பள்ளி...’

    படித்தவள் கும்மாளித்தாள்.

    என்னம்மா தந்தி, தேவிதா? சீக்கிரம் சொல்லு.

    சந்தோஷமான விசயந்தாம்மா. நெய்வேலி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு நாலஞ்சு மாசங்களுக்கு முன்னாடி ஏதேனும் வேலைவாய்ப்பு இருந்தால் கன்சிடர் செய்யவேண்டியிருந்தேன். இப்ப வேலை இருக்குன்னு தந்தியே அடிச்சிருக்காங்க...

    அம்மாடி!

    ஆண்டவன் கண்ணைத் திறந்துட்டான்.

    எப்ப போகப் போற?

    இப்ப மணி எட்டரைதான் ஆகுது. பத்து பத்தரைக்கெல்லாம் போய்ச் சேந்துடலாம். உடனே புறப்படுறேன்ம்மா...,

    உல்லாசமாய் ஒரு தமிழ்ச் சினிமாப்பாடலை முணுமுணுத்தபடி குளிக்கப்போனாள், தேவிதா. குளித்துவிட்டுத் தனக்கு ராசியான பிங்க் நிற காட்டன் சேலையை அணிந்து கொண்டாள். சாமி அறையில் புகுந்து வணங்கி குங்குமம் இட்டுக் கொண்டாள். அம்மா காலில் விழுந்து வணங்கினாள். பைலில் தேவையான அனைத்து சர்டிபிகேட்டுகளையும். எடுத்து வைத்துக்கொண்டாள்.

    வாசலில் நின்று நல்ல சகுனம் பார்த்தபடி ஐம்பது ரூபாய் நோட்டைக் கையளித்தாள் அம்மா.

    ம்மா! போயிட்டு வரேன்ம்மா!

    நல்லபடியா போயிட்டு வாடியம்மா, ராஜாத்தி!

    பக்கத்து வீட்டுக்காரர்கள் வினவலுக்கு, அம்மா, மகளுக்கு வேலை கிடைத்த விவரம்பற்றி மகா பெருமையாய்க் கதைக்க ஆரம்பித்தாள்.

    சரியாக, மணி பத்தேகாலுக்கு நெய்வேலி போய்ச் சேர்ந்தாள், தேவிதா. இறங்கியவள். டவுன் பஸ் ஏறி நேருஜி மெட்ரிகுலேஷன் ஹையர் செகன்டரி பள்ளி எதிரே இறங்கினாள்.

    பள்ளியின் பெயர்ப்பலகை சுத்தமாகப் பளபளப்பாக மிளிர்ந்தது. உள்ளே நடந்தாள். இரண்டு பக்கமும் பசுமையான அலங்காரத் தாவரங்கள். பள்ளியின் உள் வாசலில் வராண்டா தெரிந்தது. அதில் அலுவலகம் தெரிந்தது.

    தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த தேவிதா, வணக்கம் சார்! என்றாள்.

    அலுவலில் இருந்தவர், வணக்கம். என்னம்மா விசயம்?

    சொன்னாள்.

    அட, நீதானாம்மா அது தேவிதா! நாந்தான் தந்தி அடிச்சேன், பிரின்சிபால் சொல்லி.

    தாங்க்ஸ் சார்!

    சரிம்மா. பிரின்சிபால் ரூமுக்கு எதிரே இருக்கிற பெஞ்சில உக்காரு. நீ வந்த விசயத்தை அவருகிட்ட சொல்றேன். கூப்பிடுவார்...

    பிரின்சிபால் அறைக்கு எதிரில், அமர்ந்தாள்.

    வராண்டாவில் அங்குமிங்குமாய் வகுப்பு டீச்சர்கள் கையில் திருத்திய பரீட்சை பேப்பர் கட்டுடன் அலைந்து கொண்டிருந்தனர். காலை பதினொரு மணி. வழக்கமாய் ஏலக்காய் மணக்கும் டீ அனைவருக்கும் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.

    தேவிதாவிடம், நீங்கதானம்மா தேவிதா! அய்யா கூப்பிடுறாரு... போங்கம்மா உள்ளே... என்றான் பியூன்.

    தள்ளுகதவைத் தள்ளிக்கொண்டே பய ஆர்வமாய் உள்ளே நுழைந்தாள், தேவிதா. இந்திய அரசியல் தலைவர்களின் உருவப்படமும், ஏராளமான ஷீல்டுகள் வைக்கப்பட்ட கண்ணாடி பீரோவும் காற்றோட்டமான அறையில் காணப்பட்டன.

    ஐம்பத்திரண்டு வயதின் மத்தியில், மங்கிய வெண்கருமை கேசம் வகிடெடுக்கப்பட்டு படியச் சீவப்பட்ட தோற்றத்தில் காட்சியளித்தார், பிரின்சிபால். பைலட் ஹைடெக்பாயின்ட் பேனாவால் மேஜை பேப்பர்களில் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தவர், மூக்குக் கண்ணாடி மூக்கின் முழங்காலில் சரிய ஏறிட்டார். ஹிட்லர் மீசை சற்றே நீளமாய் நரைசலாய் வைத்திருந்தார். கதர்ச் சலவை முழுக்கைச் சட்டை அணிந்திருந்தார். பார்வையில் காந்தி வீசினார்.

    வணக்கம், சார்! பவ்யமாகக் கை கூப்பினாள்.

    பதில் வணக்கத்தைத் தலை ஆட்டலில் காண்பித்தபடி, ஒலிக்கும் தொலைபேசியைக் காது வாயில் இணைத்தார்.

    எஸ். முருகையாதான் பேசறேன்... ஓ! ஹரியோட் பேரன்ட்சா? நீங்க என்ன சொன்னாலும் சரி, கிளாஸ் டெஸ்ட் சமயத்துல உங்க பையன் லீவு எடுத்தது தப்புதான்... வீட்டு விசேஷம் பரீட்சை எழுதி முடிச்சுட்டு அட்டண்ட் பண்றது... திஸ் இஸ் லாஸ்ட் டைம்... இனிமே உங்க பையன் தப்பு செஞ்சா, ஐ வில் டேக் சிவியர் ஆக்ஷன். டொக்... ரிசீவரைச் சாத்தினார்.

    அட நிக்கறியாம்மா! உட்காரும்மா!

    இன்னொரு வாத்தியார் உள்ளே வந்தார்.

    என்ன சார் விசயம்? வினவினார் பிரின்சிபால்.

    நம்ம ஸ்கூல் பஸ் என் பெர்சனல் யூசுக்கு ஒரு அரைமணி நேரம் வேணும்...

    நோ சார். நீங்க அசிஸ்டெண்ட் பிரின்சிபால். நீங்களும் நானும் ஒழுங்கா இருந்தாத்தான் மத்தவங்களுக்கு ஸ்ட்ரிக்ட் டிசிபிளின் அமண்ட் பண்ணலாம். வேற ஏதாவது ரென்ட்டுக்கு பஸ் பாருங்க... என்றார்.

    தேவிதாவுக்கு மகா மலைப்பு வந்தது.

    இந்தக் கறார், கண்டிப்புக் கிழத்திடம் டீச்சராகக் குப்பை கொட்டுவது எப்படி?

    ம்... இப்ப உன் விசயத்துக்கு வருவோம். எங்க உன் சர்டிபிகேட்ஸ் எல்லாம், எடு பார்ப்போம்!

    எடுத்து நீட்டினாள் தேவிதா.

    ஒவ்வொண்ணும் ஆராய்வுப் பார்வைக்கு உட்பட்டன.

    "ஹ், நல்ல பிரிலியன்ட் பொண்ணுதான் நீ! திடீர்னு ஒரு டீச்சர் மேரேஜ் ஆவுறதனால வேலைய ரிசைன் பண்ணிட்டுப் போயிடுச்சு. அப்பத்தான் உன் அப்ளிகேஷன் ஞாபகம் வந்துச்சு... இன் வியூ ஆப் அர்ஜென்சி, ஆறு ரூபாய் தொண்ணூறு காசு செலவு பண்ணி உனக்குத் தந்தி அடிக்க வேண்டியதா

    Enjoying the preview?
    Page 1 of 1