Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நில் கவனி கொல்
நில் கவனி கொல்
நில் கவனி கொல்
Ebook185 pages1 hour

நில் கவனி கொல்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிலைத்த விழிகளோடு சரிந்து கிடக்கும் ஜெயாம்மாவின் பிணத்தை நெருங்கி அவளுடைய கை அணைப்பில் இருந்த அந்தத் தோல் பையை மெல்ல உருவினாள் நிவேதனா. சுலபத்தில் வர மறுத்தது. - ஜெயாம்மாவின் வலது கையை விலக்கி - தோல் பையை எடுத்தாள். வெளியே ஜனதா இரைச்சலைக் கிளப்பிக்கொண்டு வெறிபிடித்த மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. கூபேயில் இருந்த ஃபேன் சூறாவளியாய்ச் சுழன்றாலும் நிவேதனா வியர்த்து வழிந்தாள்.
 தோல் பை கல் மாதிரி இருந்தது.
 அந்தப் பைக்குள் அப்படி என்ன இருக்கும்?
 நிவேதனா தோல் பையோடு தன் பெர்த்தில் போய் உட்கார்ந்து - அதன் ஜிப்பைச் சர்ரென்று இழுத்தாள்.
 வாய் கிழிபட்ட அந்தப் பைக்குள் –
 சின்னச் சின்னதாய்ப் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்ட முடிச்சுகள்.
 ஒரு முடிச்சைப் பரபரவென்று அவிழ்த்தாள் நிவேதனா. அடுத்த விநாடி அதிர்ந்தாள். அயர்ந்தாள். ஆச்சரியப்பட்டாள்.
 வைர மூக்குத்திகள், வைரக் கம்மல்கள்.
 இன்னொரு பிளாஸ்டிக் பொட்டலத்தின் முடிச்சை அவிழ்த்தாள் நிவேதனா. தங்க நகைகள், வளையல்கள், செயின்கள். நிவேதனாவின் உடம்பிலிருந்த ரத்தம் காட்டாற்று வெள்ளமானது. இதயப் பிரதேசம் இலங்கையானது.
 எல்லா பிளாஸ்டிக் பொட்டலங்களிலும் –
 நகைகள், நகைகள்!பெரும்பாலும் வைர நகைகள்.
 நிவேதனா முகத்தில் நிற்காமல் வழிந்த வியர்வையைத் துடைக்கவும் தோன்றாமல் சில விநாடிகள் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரியவே, சரேலென எழுந்து செயல்பட்டாள்.
 தான் கொண்டுவந்திருந்த வலைக்கூடையை! எடுத்தாள். கூடையில் இருந்த ஆப்பிள் பழங்களைக் கீழே பரப்பிவிட்டு நகைகள் இருந்த பிளாஸ்டிக் பொட்டலங்களை வலைக்கூடையில் திணித்து அதன்மேல் மறுபடியும் பழங்களைப் பரப்பிவிட்டு நிமிர்ந்தாள்.
 இந்தக் காலியான தோல்பையை என்ன செய்யலாம்? ஜன்னல் கதவை மேலேற்றிவிட்டு வெளியே பரவியிருந்த இருட்டைப் பார்த்தாள் நிவேதனா. ஒரு சின்ன ஸ்டேஷனை அலட்சியமாய்க் கடந்துவிட்டு மறுபடியும் வேகம் எடுத்திருந்தது ஜனதா.
 நிவேதனா அந்தத் தோல் பையை எடுத்தாள்.
 ஜன்னல் கம்பிகளினூடே அதை மெதுவாய் நுழைத்து வெளியே விசிறினாள். இறைச்சித்துண்டை வீசியெறிய, அதை லபக்கென்று பிடித்து விழுங்குகின்ற நாய் மாதிரி இருட்டு அந்தத் தோல் பையை ஜீரணித்துக் கொண்டது. ஜன்னலை மூடினாள் நிவேதனா.
 ஜெயாம்மா இன்னமும் நிலைத்த விழிகளோடு அப்படியே தெரிய, கூபேயை விட்டு வெளியே வந்தாள் நிவேதனா.
 கம்பார்ட்மெண்டில் அசாத்திய நிசப்தம்.
 மெல்ல நடந்தாள். கம்பார்ட்மெண்டின் கோடியில் ஒரு கூபேயில் வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி நடந்தாள். கூபேயை நெருங்கினாள்.
 உள்ளே - அந்த வயதான டி.டி.இ. தன் கறுப்புக் கோட்டை கழற்றிவிட்டு - படுக்க ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தார்ஸார்' பதட்டமாய் நிவேதனா கூப்பிட்டாள். தமிழ் தெரிந்த - நெற்றியில் குங்குமம் தெரிந்த அந்த டி.டி.இ., தூக்கக் கலக்கத்தோடு தலையை உயர்த்தினார். ''என்னம்மா?''
 ''என்கூடப் பயணம் செய்த ஜெயாம்மாங்கிற ஒரு பாசஞ்சர்க்கு ஹார்ட் அட்டாக்! தூங்கிட்டிருந்த அந்த அம்மா திடீர்னு எழுந்திருச்சு உட்கார்ந்தாங்க. நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டே மாத்திரை வேணும்னு கேட்டாங்க. நான் அவங்க சூட்கேஸைத் திறந்து மாத்திரையை, எடுத்துத் தர்றதுக்குள்ளேயே அப்படியே சாஞ்சிட்டாங்க. வந்து பாருங்க ஸார்!''
 டி.டி.இ.யின் தூக்கக் கலக்கம் அவருடைய முகத்திலிருந்து வாபஸானது. நிவேதனாவிடமிருந்து பதட்டத்தைத் தானும் கொஞ்சம் வாங்கிக்கொண்டார்.
 ''எந்த சீட் நம்பர்?''
 ''முப்பத்து மூணு.''
 டி.டி.இ. தன் கோட்டுக்குள் கையை நுழைத்து நிவேதனாவோடு வேகமாக நடை நடந்து கூபேக்குள் - நுழைந்தார். ஃபேன் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்று சீறிக்கொண்டிருக்க, பட்டுச்சேலை படபடக்க - ஜெயாம்மா நிலைத்த விழிகளோடு -
 லேசாய்ப் பிளந்த வாயோடு.
 டி.டி.இ. ஜெயாம்மாவின் நாசியருகே தன் புறங்கையை வைத்துப் பார்த்தார். மெளனம். நிவேதனாவைக் கவலையாய் திரும்பிப் பார்த்தார். "ஷி ஈஸ் நோ மோர்.''
 "ஸார்!'' குரல் நடுங்கியது நிவேதனாவுக்கு.
 ''இந்தம்மா உனக்குத் தெரிஞ்சவங்களா?''
 ''இல்லை சார். அந்தம்மா ஒரு கோ - பாஸஞ்சர். தட்ஸ் ஆல்.''
 டி.டி.இ. ஓடிக்கொண்டிருந்த ஃபேனை நிறுத்திவிட்டு மோவாயைத் தேய்த்தார். தன் கையில் கட்டியிருந்த பழங்கால் பேவலூபாவின் மக்கிப்போன டயலைப் பார்த்துச் சிரமத்தோடு நேரத்தைத் தெரிந்துகொண்டார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224995493
நில் கவனி கொல்

Read more from Rajeshkumar

Related to நில் கவனி கொல்

Related ebooks

Related categories

Reviews for நில் கவனி கொல்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நில் கவனி கொல் - Rajeshkumar

    1

    பம்பாய் வி.டி.ஸ்டேஷன்.,

    ஸ்டேஷனின் முகப்பிலிருந்த எலக்ட்ரானிக் கடிகாரம் ரத்தச் சிவப்பில் 6.40, 6.41, 6.42, 6.43 என்று மெஷின் தனமாய் விநாடிகளைத் தின்று கொண்டிருக்க ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு புஷ்பமாய் உதிர்ந்தாள் நிவேதனா. டீன் ஏஜின் கடைசிப்படி.

    சாமந்திப் பூவின் மஞ்சள் நிறத்தில் ஷிபான் சேலை. அதே நிற பிளவுஸ். நிஜமாகவே நிலா முகம். கோக் நிற விழிகள். ரோஜா மொட்டையொத்த மூக்கின் வலது புறம் சுடர் தூவும் சின்ன பேசரி. கிளிசரின் தடவினாற் போன்ற - லிப்ஸ்டிக் பூசாத - இளஞ்சிவப்பு உதடுகள். அவரைத்தோல் காதுகளில் மெலிதாய் ஆடும் பொன்ன் வளையங்கள். கூர்மோவாய். வெண்ணெயாய் வழுக்கும் கழுத்து (ஏதாவது ஓர் அவயம் விட்டுப் போயிருந்தால் அதைப் பின்னால் வரப்போகிற ஏதாவது ஒரு பாராவில் வர்ணித்துவிடுகிறேன்).

    வலது கையில் சின்னதாய் ஒரு சூட்கேஸோடும், இடது கையில் ஒரு வலைக் கூடையோடும் ஸ்டேஷன் படியேறினாள் நிவேதனா - கல்யாணிலிருந்து வந்த ஓர் எலக்ட்ரிக் ட்ரெயின் ஜனங்களைப் பிளாட்பாரத்தில் குப்பையாய்க் கொட்ட, ஜனங்கள் பலவிதக் கவலைகளோடு சுவர் சுவராய் வந்தார்கள். நிவேதனா ஒதுங்கி நின்று கூட்டம் வடிந்ததும் உள்ளே போனாள்...

    ஸ்டேஷனில் உள்ளே காற்று கெட்டிருந்தது. ஜனங்கள் வெளிவிட்ட கார்பன் டை ஆக்ஸைடு காற்று மண்டலத்தில் ஜீரணமாகாமல் அஜீர்ணமாய் நின்றது. போர்ட், அம்பர்நாத், குர்லா, கல்யாண், தாதர் போகும் எலக்ட்ரிக் ட்ரெயின் இண்டிகேட்டரின் சிக்னலுக்காகக் காத்திருக்க - அந்தக் காலை வேளையில் குல்லா அணிந்து பம்பாய் வாசிகள் எல்லா ரயில்களிலும் காய்த்துத் தொங்கினார்கள். ஆண்களை இடித்துக் கொண்டு பெண்கள், பெண்களை இடித்துக் கொண்டு ஆண்கள் கதம்பமாய் தெரிந்தார்கள்.

    லோக்கல் ரயில் பிளாட்பாரங்களைக் கடந்து - வெளியூர் ரயில்கள் புறப்படும் பிளாட்பார எல்லைக்குள் நுழைந்தாள் நிவேதனா, எதிரே டெலிவிஷன் பெட்டி ஏகப்பட்ட நீலநிறக் கோடுகளோடு எழுத்துக்களைப் பிரசவித்திருந்தது. 13 - ஜனதா எக்ஸ்பிரஸ் டிபார்ச்சர் டைம் 7.55.

    நிவேதனா தன் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தாள். 6.50. ‘இன்னும் முழுசாய் ஒரு மணி நேரம் இருக்கிறது. அந்த ஒரு மணி நேரத்திற்குள் ஏதாவது டிபன் சாப்பிட வேண்டும். ரிசர்வேஷன் சார்ட்டில் பெயர் இருக்கிறதாவென்று பார்க்க வேண்டும். ‘டி’கம்பார்ட்மெண்ட்டைத் தேடிப் பிடிக்கவேண்டும். ரயிலில் பயணிக்கும் போது படிக்க சேஸையோ, இர்வின் வாலஸையோ வாங்கவேண்டும். இரண்டு பத்து பைசா நாணயங்களை வேயிங் மெஷினில் போட்டு எடையையும் அதிர்ஷ்டத்தையும் பார்க்கவேண்டும்.’ யோசித்துக் கொண்டே நடந்தாள் நிவேதனா.

    அவள் யோசித்தபடியே எல்லாம் செய்தாள். ரயில்வே கேப்டீரியாவில் உளுந்து மாவு கலக்காத இட்லியைச் - சாம்பாரில் நனைத்து விழுங்கினாள். ரிசர்வேஷன் சார்ட்டில் முத்து முத்தாய் அவளுடைய பெயர் டைப்பில் இருந்தது. எஞ்சினிலிருந்து நாலாவது போகி ‘டி’கம்பார்ட்மெண்ட், ஹிக்கின்பாதம்ஸில் சூடாய் இர்வின் வாலஸ் கிடைத்தார். வேயிங் மெஷினில் ஐம்பத்திரண்டு கிலோவோடு ஓர் அதிர்ஷ்ட குறிப்பும் வந்தது. ‘பிவேர் ஆப் ஆப்போசிட் செக்ஸ்.’ எரிச்சலோடு அட்டையைக் கசக்கித் தூர எறிந்தாள். எறிந்து விட்டுத் திரும்புகையில் எவனோ ஒருத்தன் அவளுடைய தோள் பட்டையில் ‘நக்’கென்று இடித்துவிட்டுப் போனான்.

    நிவேதனா நின்று முறைக்க –

    அவன் சிகரெட் புகை வழியும் வாயோடு இளித்துவிட்டு நகர்ந்தான். ‘ஓடிப்போய் அவனுடைய சட்டைக் காலரைப் பற்றி - முகத்தைத் திருப்பி ‘ரப்’பென்று ஓர் அறை விடலாமா?’ அவள் யோசித்து முடிவதற்குள் அவன் கும்பலில் கரைந்து போயிருந்தான். நிவேதனா ‘டி’கம்பார்ட்மெண்டை நோக்கி மெல்ல நடை போட்டாள். பிளாட்பாரம் முழுவதும் கதம்ப ஒலியாய் இந்திய மொழிகள். தமிழ் அதிகம். காரணம் மெட்ராஸ் போகும் ஜனதா. "வாட்டர் ஐக்கில தண்ணி ரொம்ப வெச்சிருக்கிறேன். புனா வரைக்கும் தாங்கும். புனா போனதும் வாட்டர் கூலர்ல தண்ணியைப் பிடிச்சிக்கோ ஜானு!’’ மடிசார் புடவையோடு இருந்த மாமி ஒருத்தி மகளுக்கோ மருமகளுக்கோ... சொல்லிக்கொண்டிருந்தாள்.

    இண்ட்டர்வியூவை நல்லாப் பண்ணு. மத்ததை நம்ம எம்.எல்.ஏ. பார்த்துக்குவார்.

    ‘‘சோலாப்பூர் எத்தனை மணிக்குப் போறான்? சாயந்திரம் ஆறு மணிக்கா?’’

    ‘‘இனிமேல் கபில்தேவ் கிட்டிப்புள் விளையாடப் போலாம். இவங்களெல்லாம் ஏன் கிரிக்கெட் விளையாட வர்றாங்கன்னு இருக்கு.’’

    ‘‘இன்காபாஸ் பூச்சோனா.’’

    காற்றில் வந்த பேச்சொலிகள் நிவேதனாவின் காதுமடல்களைத் தடவிவிட்டுப் போயின. நீல நிற டீசல் எஞ்சினிலிருந்து 6598 எண்ணோடு, பேப்பரில் அச்சிட்ட ‘13’ எழுத்தோடு நான்காவதாய் அந்த முதல் வகுப்பு கம்பார்ட்மெண்ட் தெரிந்தது. டி..டி.இ. சார்ட்டோடு கம்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே நின்றிருந்தார்.

    நிவேதனா வலைக்கூடையைக் கீழே வைத்துவிட்டுத் தோளில் தொங்கிக் கொண்டிருந்த டம்பப் பையை எடுத்துப் பிரித்து டிக்கெட்டை எடுத்து நீட்டினாள்.

    ‘‘நேம்!’’ டி.டி.இ. தன் கண்ணாடியினூடே அவளைப் பார்த்துக் கேட்டார்.

    "நிவேதனா!’’

    கையிலிருந்த பால் பாயிண்ட் பேனாவினால் ஒவ்வொரு பேராய் நகர்த்திக் கொண்டே வந்தார். நிவேதனாவும் தலையை எக்கிப் பார்வையை சார்ட்டின் மேல் போட்டாள். அவளுடைய பெயருக்கு மேலாய் மிஸஸ் ஜெயாம்மா பெயர் தெரிந்தது.

    ‘‘யுவர்ஸ் நம்பர் தர்ட்டி போர்..." டிக்கெட்டில் எதையோ கிறுக்கி சார்ட்டில் டிக் செய்து கொண்டு டிக்கெட்டை மறுபடியும் நீட்டினார் டி.டி.இ.

    "தேங்க்யூ ஸார்.’’ - நிவேதனா வார்த்தைகளை உதிர்த்து விட்டுக் கம்பார்ட்மெண்ட்டில் ஏறினாள். வலைக்கூடையோடும் சூட்கேஸோடும் மெல்ல நகர்ந்தாள். 30, 31, 32, 33. 34 எண்ணிட்ட கூபேக்குள் நுழைந்தாள். உள்ளே போனதும் -

    அந்த அம்மாள் ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்திருப்பது கண்ணில் பட்டது. ‘இவள்தான் அந்த ஜெயாம்மாவாய் இருக்கவேண்டும். நிவேதனா எண்ணிக் கொண்டே சூட்கேஸையும், வலைக்கூடையையும் கீழே கிடத்திவிட்டு ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தாள். வெளியே பிளாட்பார ஒலி பெருக்கியில் கொச்சையான ஆங்கில உச்சரிப்போடு, ‘‘நம்பர் தர்டீன் மெட்ராஸ் ஜனதா எக்ஸ்பிரஸ் பெளண்ட் ஃபார் மெட்ராஸ் வயா புனா சோலாப்பூர் கடப்பாவில் லீவ் ப்ரம். பிளாட்பார்ம் நம்பர் செவன் ஷார்ட்லி,’’ என்று கரகரத்துக்கொண்டிருந்தது. ,

    தோளில் தொங்கிக் கொண்டிருந்த டம்பப் பையை தற்காலிகமாகக் கழற்றி மடியில் வைத்துக் கொண்ட நிவேதனா அந்த அம்மாளை ஏறிட்டாள்.

    ஐம்பதுக்கும் அறுபதுக்கும் இடைபட்ட ஏதோ ஒரு வயது. எழுபது சதவிகித நரைத்த தலை. இருந்த சொற்பக் கூந்தலைச் சிரத்தையாய்ச் சீவி எண்ணெய் மினுமினுப்போடு கொண்டை போட்டிருந்தாள். எலுமிச்சை நிறம். காதில் சிவப்புக் கற்களோடு கம்மல்கள். மூக்கில் முத்து மாதிரி ஏதோ ஒரு நகை சமாச்சாரம். தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடி. நெற்றியில் மிக லேசாய்த் தெரிந்த விபூதி தீற்றல். மாம்பழ நிறப்பட்டுப்புடவை, வெள்ளை நிற ப்ளவுஸ். வலது கையில் வாட்ச். இடது கையில் சொற்பமாய்த் தங்க வளையல்கள். டாக்டரின் கிட் மாதிரி இருந்த ஒரு தோல்பையை மடியில் வைத்திருந்தாள். சீட்டுக்கு கீழே ஒரு சூட்கேஸ் தெரிந்தது. அவளுடைய ஒவ்வோர் அசைவிலும் பணக்கார வாசனை அடித்தது.

    வண்டி புறப்பட முதல் மணி அடித்தார்கள்.

    கோட்டும் டையுமாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் கூபேக்குள் ஏறி அந்த அம்மாளின் முன் பவ்யமாய் நின்றார். "புனா 12.35க்குப் போகும். லஞ்ச் போகிக்கே வந்துடும் மேடம்.’’

    அந்த அம்மாள் மெதுவான குரலில் கேட்டாள். ‘‘லஞ்சுக்கு என்ன சொல்லியிருக்கீங்க?’’

    ‘‘சுட்ட சப்பாத்தியும் தயிரும்.’’

    "உப்புக் கலக்காத தயிர்தானே?’’

    "ஆமா மேடம்.’’

    ‘‘சரி நீங்க போங்க. நான் எஸ்டேட் வேலைகளை முடிச்சிட்டு அடுத்த வாரம் தாதர் எக்ஸ்பிரஸ்ல திரும்பிடறேன். டெலிகிராமில் வர்ற டேட்டைக் கன்பர்ம் பண்றேன். ஸ்டேஷனுக்கு காரோடு வந்திடுங்க." அந்த அம்மாள் உதடுகளைச் சிக்கனமாய் அசைத்துப் பேசினாள்.

    ‘‘சரி மேடம்." அவர் பவ்யமாய்ப் பின்வாங்கி நகர்ந்தார். ஜனதா ஓர் உலுக்கலோடு புறப்பட்டது. பிளாட்பாரச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கூலி அமிதாப்பச்சன்கள் பின்னோக்கி ஓட, ஜனதா வேகம் பிடித்தது. நிவேதனா ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் போட்டிருந்தாள். ரயில் புறப்பட்டதுமே மனசுக்குள் பாலகிருஷ்ணன் புகுந்திருந்தான். பாலகிருஷ்ணன் 1980 மார்ச் 20லிருந்து நிவேதனாவின் காதலன். ரொம்பவும் சின்சியர் காதலன். கோயம்புத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் ஓர் எஞ்சினியரிங் கம்பெனியில் முதல் கிரேட் சூப்பர்வைசர். போனவாரம் அவன் எழுதியிருந்த கடிதம் - அதன் வாசகங்கள் அவளுடைய இதயச் சுவர்களைப் பிறாண்டிக் கொண்டிருந்தன.

    நிவேதனா தன்னுடைய டம்பப் பையைப் பிரித்து அந்த இண்லேண்ட் லெட்டரை எடுத்தாள். நீண்ட விரல்களால் பிரித்துப் பதினேழாவது தடவையாகப் படிக்க ஆரம்பித்தாள்.

    அன்புக்குரிய நிவேதனா!

    நான் உன் பாலகிருஷ்ணன். நேற்றைய தினமே உன் கடிதம் கிடைத்தது. நீ வேலை செய்யும் பத்திரிகை ஆபீஸில் எல்லோரும் நல்ல விதமாய்ப் பழகுகிறார்கள் என்று எழுதியிருந்தாய், மிக்க மகிழ்ச்சி, உனக்கு அந்த பிரஸ் ரிப்போர்ட்டர் வேலை பிடிக்காத பட்சத்தில் நீ நம்முடைய ஊருக்கு எந்தக் கணமும் புறப்பட்டு வந்துவிடலாம். இங்கே வேறு வேலை ஏதாவது பார்த்துக் கொள்ளலாம்.

    அப்புறம் இங்கு வழக்கம்போல் என்னுடைய வீட்டில் எனக்காகப் பெண் தேடும் படலத்தில் மும்முரமாய் இருக்கிறார்கள். நேற்றைக்கு ராத்திரிதான் என்னுடைய அம்மாவிடம் நம்முடைய காதலைப் பற்றிச் சொன்னேன். அம்மா முதலில் அதிர்ந்து போனாலும் பின்னர் சமாதானமாகிவிட்டாள். ‘அப்பா இந்தக் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டுமானால் வரப்போகிற பெண் ஐம்பது பவுன் நகையாவது கொண்டு வரவேண்டும். அவ்வளவு வசதி நீ காதலிக்கும் பெண்ணுக்கு இருக்கிறதா?’ என்று என் அம்மா என்னிடம் கேட்டாள். நான் ‘இல்லை’என்று சொன்னேன். அப்படியானால் உன்னுடைய காதலும் வெற்றி பெறும் சாத்தியம் இல்லை’என்று அம்மா சொன்னாள்.

    நிவேதனா! நான் என்னுடைய அம்மா சொன்னதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நீ அடுத்த வாரத்தில் ஒரு நான்கு நாள் லீவு எடுத்துக்கொண்டு கோவை வரவும். நானும் நீயும் உன் அண்ணனும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நாட்களைக் கடத்தினால் நம்முடைய காதலும் தள்ளிப்போயிடும். ஆகவே அடுத்தவாரம் இங்கே வந்துவிட்டுப் போகவும்.

    என்றும் உன்,

    பாலகிருஷ்ணன்.

    கடிதத்தைப் பெருமூச்சோடு படித்து முடித்த நிவேதனா அதை மறுபடியும் மடித்து டம்பப் பைக்குள் வைத்தாள்.

    வெளியே

    Enjoying the preview?
    Page 1 of 1