Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoorigai Kadhaigal
Thoorigai Kadhaigal
Thoorigai Kadhaigal
Ebook179 pages56 minutes

Thoorigai Kadhaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தப் புத்தகத்திலுள்ள பல கதைகளை, முகநூலில் சங்கப்பலகை என்னும் ஒருகுழுவில் எழுதியவை. சில கதைகள், நானே கூகுளிலிருந்து எடுத்த ஃபோட்டோக்களுக்காக எழுதியவை.

அக்குழு அட்மின்கள் எழுத்துத் திறமைக்காகப் பலவிதமான போட்டிகளை மட்டுமே வருடம் முழுவதும் நடத்துகின்றனர்.

அதில் ஒருவரான திரு. கணேஷ்பாலா என்பவர் பலவிதமான வித்தியாசமான ஓவியங்கள் (பத்திரிகைகளில் பிரபலங்களால் வரையப்பட்ட), வித்தியாசமான தலைப்புகள் (1 தடவை சொன்னா போன்ற நம்பர் தலைப்புகள்) வரிகள் போன்றவற்றைக் கொடுத்து, அவற்றுக்குப் பொருத்தமான வரிகள், வாக்கியங்கள் வரும்படி, கவிதைகள், கதைகள் எழுதச் சொல்லி ஊக்குவித்தார். அதேபோல் இன்னொரு அட்மினான ஜி. ஏ. பிரபாமேடம், பொன்மொழி, பழமொழி ஆகியவற்றிற்குப் பொருத்தமான கதைகளை எழுதச் சொன்னார்.

அதுபோல அவர்கள் கொடுத்த ஓவியங்கள், தலைப்புகள் போன்றவற்றிற்குப் பொருத்தமான கதைகள் எழுதி ஐந்தாறு முறைப் பரிசுகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள இந்நூலில் எழுதியிருக்கிறேன்.

எனக்கு சிறந்த பல வாய்ப்புகளை அளித்த சங்கப்பலகைக் குழுவின் ஆரம்பகால அட்மின்களான மேடம் ஜி.ஏ. பிரபா, திரு. ரிஷபன் ஸ்ரீநிவாசன், திரு. கணேஷ்பாலா, திரு. சுரேஷ் சந்த் சார் இவர்களுக்கும் , இச் சிறுகதைகள் புத்தகமாக வெளிவரக் காரணமான Pustaka நிறுவனத்தில் பணிபுரியும் அத்தனை நபர்களுக்கும், திரு. புஸ்தகா ராஜேஷ் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580169910655
Thoorigai Kadhaigal

Read more from Geetha Kannan

Related to Thoorigai Kadhaigal

Related ebooks

Reviews for Thoorigai Kadhaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoorigai Kadhaigal - Geetha Kannan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தூரிகைக் கதைகள்

    Thoorigai Kadhaigal

    Author:

    கீதா கண்ணன்

    Geetha Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/geetha-kannan

    பொருளடக்கம்

    மனதிலோர் இசை

    சாதனை

    எதிர்பாராதது

    ஆரஞ்சு மிட்டாய்

    யார் யார் யாரவர் யாரோ

    அன்பு என்பது...

    பஸ் ஸ்டாப்

    அ...ப்...பா

    ஆசை ஆசையாய்

    கதை, வசனம்

    செண்பகமே... செண்பகமே...!!

    இரண்டாம் குலோத்துங்க சோழன்

    சித்தீ...!

    நன்னடத்தை

    உள்பெட்டி

    அன்பின் எல்லை

    வி...டு...த...லை

    நெ...ரு...ப்...பு

    மனப்பாச்சி மனிதர்கள்

    1 தடவை சொன்னா

    2 இதயங்கள்

    4 நாள் காதல்

    5 வயதினில்

    6 தல்

    9 தாராவும் 9 கிரகங்களும்

    சிறுகதை 1

    மனதிலோர் இசை

    வீணை கற்று வந்த காலம். ஒரு நாள் மாலை வகுப்புக்குப் போனதும், என் குரு, இன்னிக்கு வசந்தா மாமியாத்துக்குப் போய்த் தந்தி போட்டுக் கொடு. என்றார்.

    போனேன். தந்தி போட்டதும், ஒரு பாட்டு வாசிம்மா. மாமி.

    ‘ரகுவம்ஸ சுதா’ வாசித்து முடித்ததும், இரட்டைக் கைதட்டல்கள். ஒன்று பின்னாலுள்ள அறையிலிருந்து. வெட்கத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தேன். இளம் வயதுப் பெண் ஒருத்திக் கட்டிலில் சற்றே சாய்ந்து உட்கார்ந்த்திருந்தாள்.

    நாளையிலிருந்து இங்கு வந்து இவளுக்கு நீ க்ளாஸ் எடுக்கறயாம்மா? இவ என் அண்ணன் பொண்ணு... பி.எஸ்.ஸி. மாத்ஸ். ஒரு ஆக்ஸிடென்ட்...ல வலது முழங்காலுக்குக் கீழ் எடுத்தாச்சு. அதான்.

    அம்மா, குருகிட்டல்லாம் அனுமதி...

    நான் முடிக்கும் முன்பே, நான் ஃபோன்ல பேசி அனுமதி வாங்கறேன்.

    மாமி, அம்மா, குரு அனைவரின் ஆசியுடன் முதன்முதலில் வெளியிடத்திற்குச் சென்று வகுப்பெடுத்தேன்.

    கற்பூர புத்தி... அபார ஞானம்... எதிர் வீணையில்லாமலே குருவும் சிஷ்யையுமாக நானும் அவளும் வகுப்புகளில் வேறோர் உலகில்.

    மூணு வருஷங்கள் ஓடிவிட்டன. பெரிய கீர்த்தனைகள், நிறைய விஷய ஞானங்கள்... எனத் தொடர அட்டஹாசமான வாசிப்பு என்றான வேளை.

    என் கல்யாணம் நிச்சயமாகிப் பத்திரிகையை நேரில் கொடுக்கச் சென்றேன். கொடுத்தபின் மனசு வேதனை. கண்கள் கனக்க, இனிமே நாம பாக்க முடியாது. என்றேன்.

    ஆனா நான் உங்கள இந்த வீணை, சங்கீதம், கற்பனைல சொல்லித் தரும் உங்க உருவம், குரல்ன்னு... நிறைய நினைச்சுப்பேனே...

    கிளம்பி கேட் அருகே வந்ததும், கொஞ்சம் இரும்மா. மாமியின் குரல்.

    கேட்டுக்கு வெளியே வந்து, திரும்பி தாழ்ப்பாளில் கைவைத்துக் கொண்டே பார்த்தவள், விக்கித்துப் போனேன்.

    என்ன தூக்கிண்டுபோய்க் காண்பிங்கோ...கடைசில பார்வைல மறையறவரை பாக்கணும்னா... அதான்...

    அவளை மாமி சிறுகுழந்தை போல் இரு கைகளில் சுமந்துகொண்டு நின்று கொண்டிருக்க... அவள் கடைசிவரை கையாட்டி டா டா சொன்னது இன்னும் என் மனசில்!

    சிறுகதை - 2

    சாதனை

    சாதனா... அறிவுஜீவியான இருபத்தெட்டு வயது அழகுப்புயல். ஸ்லீவ்லெஸ்ஸில் இன்னும் கொள்ளை அழகுடன் கார் ஓட்டிக் கொண்டிருத்தாள்.

    காரின் மேல் கேரியரில் ஒரு இளைஞன் மல்லாக்க படுத்த நிலையில் கயிற்றால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தான். பீதியில் கண்கள்.

    சிக்னலில் வண்டி நிற்க பஸ், டூவீலர் என அனைத்து வாகனங்களில் சென்றவர்களும் வியப்புடன் உற்றுப் பார்த்தனர்.

    போலிஸ் வந்தது. கேட்ட கேள்விகளுக்கு தன் ஐ.டி. கார்டைக் காட்ட சல்யூட் அடித்து வழிவிட்டது.

    ஐ.ஜி. அலுவலகம். சாதனா கீழிறங்கிச் சென்றவுடன், பின்னாலேயே கட்டவிழ்க்கப்பட்டு குனிந்த தலையுடன் அவன்... போலிஸ் பந்தோபஸ்துடன் தொடர்ந்தான்.

    உள்ளே ஐ,ஜி. கைகுலுக்கி வரவேற்றார். வெல்கம் மிஸ். சாதனா. யூ டிட் எ வெரி ஸ்ப்லெண்டிட் ஜாப்.

    அடுத்த அறையில் மீடியாக்காரர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களைச் சந்தியுங்கள் என்றார்.

    மீடியாக்காரர்கள் கேமரா, மைக் சகிதம் சூழ்ந்து கொண்டு விடாமல் கேட்ட நிறைய கேள்விகளுக்கு,

    ப்ளீஸ் வெய்ட். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்றேன். என்றாள்.

    "என் பெயர் சாதனா. என் பூர்வீகம் கும்பகோணம். காலேஜ் படிப்புவரை அங்குதான். எனக்கு அப்பா அம்மா, ஒரு அண்ணன். அவன் பைலட். நான் டில்லியில் உளவுத்துறையில் வேலை பார்க்கிறேன். இப்போ குடும்பமே அங்குதான்.

    சென்னையில் ஒரு மாத லீவில் ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருக்கேன். அந்தத் தெருக்கோடியில் ஒரு வீட்டில் இவன் குடியிருந்தான்.

    எனக்கு மேலிடத்திலிருந்து ஃபோட்டோக்களுடன் ஒரு செய்தி வந்தது.

    புல்வானாவில் நடந்த கோர சம்பவத்தில் நம் படைவீரர்கள் நாற்பது பேர் கொல்லப் பட்டனர் அல்லவா? அந்த நம் வீரர்கள் பற்றியும் இங்குள்ள அரசியல் நிலவரம் குறித்தும், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் தெரிவித்து உதவி செய்த சென்னை இளைஞர்களைப் பற்றியது.

    லீவில் இருந்தாலும் எங்கள் கவனம் கடமையில்தான் இருக்கும். போட்டோக்களில் ஒன்றில் இவன் முகம் பாத்த ஞாபகம். சந்தேகம் உறுதியானது.

    கடைசி வீட்டு ஓனரிடம் போய் என்னை அறிமுகப் படுத்திண்டேன். விஷயம் சொன்னேன். அவர், மாடி போர்ஷனுக்கு போன மாசம் ஒரு பையன் குடிவந்துருக்கான். கேட்ட பணம் குடுத்தான். அதனால குடி வெச்சேன் என்றார்.

    இப்போ இருக்கானான்னேன். ராத்திரிதான் வருவான்னார். அவர் கிட்ட இருந்த சாவியால மாடி போர்ஷன சர்ச் பண்ணேன்.

    அறை முழுக்க, பல தளவாடங்கள், பலவித ஒயர்லெஸ் மைக்குகள், கேமராக்கள், விதவிதமான குண்டுகள், துப்பாக்கிகள், ஏ.கே.47 துப்பாக்கிகள், ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் தயாரிக்க பொருட்கள், ஜெலட்டின் குச்சிகள், மஞ்சள், நீல, சிகப்பு, கருப்பு என பல வண்ணங்களில் ஒயர்கள், மைக்ரோஃபோன், ப்ளாஸ்டிக் பைப்புகள்... என நிறைய குவிந்திருந்தன.

    அந்த வீட்டிலேயே இரவு தங்கினேன். காலையில சரமாரியா அடிச்சு இவன அள்ளிப் போட்டு கார்மேல கட்டி, ஊர் பாக்க எடுத்துண்டு வந்து சேர்த்துட்டேன். வேறொரு ரூமில் நான் சொன்ன அத்தனை பொருட்களும் இருக்கு. நீங்க ஃபோட்டோ எடுத்துக்கலாம்." என்றாள்.

    இன்னிக்கு காலைல நியூஸ் கேள்விப்பட்டிருப்பீங்களே... எல்லோரும்... ‘இந்திய மிராஜ்-2000 விமானங்கள் கைபரில் பாகிஸ்தான் முகாம்களை அழித்ததாக. உளவுத்துறையின் உதவியால் துல்லியமாகத் தாக்கி, பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க முடிஞ்சுது’...ன்னு... அது என் டிபார்ட்மெண்ட்தான்.

    ஃபைனலா ஒரு க்வெஸ்டின் மேடம்

    சொல்லுங்க

    ஏன் போலிஸ் ஜீப்ல ஏத்தாம அவன இப்படிக் கார் மேலக் கட்டிக் கொண்டு வந்தீங்க?

    சின்ன வயசுலயே நிறைய நாவல்கள் படிப்பேன். இப்போதான் சமீபத்துல எழுத்துலகில் பிரபலமான கணேஷ் பாலா என்பவர் இது போல ஒரு படம் போட்டு, போட்டிக்கதை எழுத ஃபேஸ்புக்ல கேட்ருந்தார். அந்தப் படத்துல பார்த்தத அப்படியே செயல் படுத்திட்டேன்

    மேடம் ஒரே ஒரு கேள்வி

    கேளுங்க...

    ‘ஃபேஸ்புக்ல போட்டிக்கதைக்கு இத அப்டியே எழுதுவீங்களா?"

    எழுதிட்டாப்போச்சு... சிரித்துக் கொண்டே கைகூப்பி விடை பெற்றாள் சாதனா.

    சிறுகதை - 3

    எதிர்பாராதது

    என்னங்க நேத்து ராத்திரி நான் ஒரு கனவு...

    "இரு... இப்போ கேக்க நேக்கு டைம் இல்லை. மத்தியான்னம் சாப்பிட வரும்போது கேட்கிறேன்...மா

    பை."

    நான் சொல்லி முடிப்பதற்குள் காருக்குள் புகுந்து வண்டியைக் கிளப்பி போயே போயாச்சு.

    ம்ம்... இனி நான் ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டார்.

    சின்ன வயசு. அப்போ எனக்கு எட்டு...ஒன்பது வயசிருக்கும். அத்தை வீட்டில் காஞ்சிபுரத்தில் ஏப்ரல் லீவுக்குப் போயிருந்தேன்.

    ஒருநாள் தூங்கி எழுந்ததும் அத்தையிடம், அத்தை நான் ஒரு கனவு கண்டேன். சாயங்காலம் கடைவீதியில் நாமெல்லொரும் போறோம். நிறைய மாம்பழங்கள் வாங்கறீங்க. கடைக்காரனிடம் பேரம் பேசிண்டு இருக்கும்போது மெயின் ரோடுக்கு எதுர்த்த ப்ளாட்ஃபாரத்துல சிவராமன் சித்தப்பா வறார். நான் சொல்ல நீங்க பார்த்து கூப்புடறீங்க வீட்டுக்கு. என்றேன்,

    "வெறும் கனவும்மா. காஞ்சிபுரம் எங்கே... ஹைதராபாத் எங்கே... அண்ணா கிட்டேர்ந்து தகவலே இல்லயே.’ அத்தை பதில் கூறினார்.

    அன்று மதியம் வேறு யாரோ தெரிந்தவர் வரப் போவதாகத் தகவல் வர அவருக்குப் பிடித்த மாம்பழங்கள் வாங்கினார் அத்தை மாலையில் கடை வீதியில்... கூட நானும்.

    எனக்கு ஆவல் தாளலை. எதிர் ப்ளாட்ஃபார்மில் கண்கள் போக சித்தப்பாவைப் பார்த்தேன். அத்தையும் ஆச்சர்யப்பட்டு அவரை அழைத்தாள்.

    நான் என் வீட்டிற்குத் திரும்பினதும் அப்பா கிட்ட இதெல்லாம் சொன்னேன். இன்னும் சில நாள் கவனிக்கலாம் என்றார்.

    திடீரென கிராமத்தில் இருந்து தந்தி. அம்மாவின் அம்மா போய்விட்ட செய்தியைச் சொன்னது. அம்மா, நான் தம்பி பெரியம்மா கிளம்பினோம். அப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1