Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ayyayiram Plus Ainooru
Ayyayiram Plus Ainooru
Ayyayiram Plus Ainooru
Ebook96 pages34 minutes

Ayyayiram Plus Ainooru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே பல்வேறு பத்திரிகைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளி வந்தவை..

பத்திரிகைகளில் மேலான ஆதரவு இருப்பதுடன் புஸ்தகா ராஜேஷ் ஜியின் ஆதரவும் இருப்பது இறைவனின் கருணை அதைவிடப் பெரிய ஆதரவு வாசகர்களாகிய யுவர்ஸ்!!

பத்திரிகைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் புஸ்தகாவுக்கும் உங்களுக்கும் வந்தனம் கலந்த நன்றிகள்

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580128406857
Ayyayiram Plus Ainooru

Read more from Vedha Gopalan

Related to Ayyayiram Plus Ainooru

Related ebooks

Reviews for Ayyayiram Plus Ainooru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ayyayiram Plus Ainooru - Vedha Gopalan

    https://www.pustaka.co.in

    ஐயாயிரம் பிளஸ் ஐநூறு

    Ayyayiram Plus Ainooru

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓணான் போய் ஜெய்க்கா வந்தது…

    கிலிஃபோர்னியா

    ஐயாயிரம் பிளஸ் ஐநூறு

    நம்பிக்கை நட்சத்திரங்கள்

    வயது பதிமூன்று

    அழகிய உடையும் நூறு டாலர் அன்பளிப்பும்

    மொய் கவரில் ஒரு வெடிகுண்டு

    இது போன்ற ஜோடி இல்லை!

    போன்ஸாய் ‘மனுஷி’

    நம்பிக்கை நட்சத்திரங்கள்

    ஸூம் ஸூமென்று ..

    என்னுரை

    ஹலோ..

    பெரியவர்களுக்கு வணக்கம்.. சின்னவர்களுக்கு ஆசிகள்.. சமவயதுக்கு ஹாய்….

    இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே பல்வேறு பத்திரிகைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளி வந்தவை..

    பத்திரிகைகளில் மேலான ஆதரவு இருப்பதுடன் புஸ்தகா ராஜேஷ் ஜியின் ஆதரவும் இருப்பது இறைவனின் கருணை

    அதைவிடப் பெரிய ஆதரவு வாசகர்களாகிய யுவர்ஸ்!!

    பத்திரிகைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் புஸ்தகாவுக்கும் உங்களுக்கும் வந்தனம் கலந்த நன்றிகள்

    என்றும் உங்கள் ஆதரவை நாடும்

    வேதா கோபாலன்

    5,4,2021

    (இங்கு நான் தேதி குறிப்பிட்டால்தானே நான் மேலே குறிப்பிட்ட ‘கடந்த இரண்டு ஆண்டுகள்’ எவை என்று உங்களுக்குப்புரியும்!)

    ஓணான் போய் ஜெய்க்கா வந்தது…

    எங்கள் வீட்டுக்கு ‘ஜெய்க்கா’ வந்ததன் பின்னணி சம்பவம் இதுதான்.

    அதற்கு முன்…

    ஜெய்க்கா யாரு?

    கஸின்? முறை மாப்ஸ்? ஃபாரின் நண்பன்? கல்லூரிக் காதலன்?

    நோ.

    உங்க ஊகத்தையெல்லாம் தூக்கி வங்காள விரிகுடாவில் போடுங்க. ஜெய்க்கா ஒரு ஆண் குரங்கு.

    இதோ அந்தப் பின்னணி சம்பவம் (இரண்டு புள்ளிகள் கொண்ட ‘கோலம்’ அல்ல ‘கோலன்’ மற்றும் ஒரு ஐஃபன்)

    எந்தப் பக்கம் போச்சு சரியாச் சொல்லு மை டியர் மம்மி கையில் ஒரு சின்ன ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்து கேட்டாள்.

    மம்மி.. இன்னும் சின்னதா ஏதாவது எடுத்து வர்றதுதானே?

    என் கேள்வியில் இருந்த நகைச்சுவை கலந்த எரிச்சல்.. அல்லது எரிச்சல் கலந்த நகைச்சுவை என்ற விஷயம், மம்மிக்குப் புரியவில்லை.

    அரை அடி ஸ்கேலை எடுத்துக்கிட்டு வரட்டுமாடீ? என்று டவுட் கலந்த குரலில் கேட்டாள்.

    என்னைவிடச் சின்னவளாய் இருந்திருந்தால் அந்த ஸ்கேலாலேயே ஒன்று போட்டிருப்பேன்.

    ஐயோ என் அம்மாவே.. பெரிய கொம்பு கொண்டு வா.. என்று கத்தினேன்.

    அதற்குள் ‘அது’ எங்கேயாவது போய் ஒளிந்து கொண்டுவிடும் என்ற பதைப்பு எனக்கு.

    ஆ.. புக்ஸ் இருக்கும் கப்போர்ட்டுக்குள் போயிடுச்சு.. சற்றே(!) உரக்கச் சொல்லிவிட்டேன் போல..

    பக்கத்து ஃப்ளாட்.. எதிர் ஃப்ளாட்.. மாடி ஃப்ளாட்… பக்கத்து காம்பவுண்ட் ஃப்ளாட்… தெருவை கிராஸ்பண்ணினால் எதிர் வரும் ஃப்ளாட்…. அதன் பக்கத்து ஃப்ளாட்… அதன் மாடி ஃப்ளாட்… இன்னபிறகு குடியிருப்புக்களில் இருந்த எல்லோரும் எங்கள் வீட்டு வாசலில் கூடினார்கள்.

    பாம்பா? என்று யாரோ கேட்க

    ஆமாம் என்று யாரோ சொல்ல..

    ஒருவர் ஆறடி நீளம் என்று சொல்ல..

    இல்ல.. பன்னிரண்டடி என்று யாரோ சொல்ல..

    அது பாட்டுக்கு அவர்கள் பேச்சில் வளர்ந்து கொண்டே போனதைச் சகிக்காமல் நான் வெளியே சிலம்பு ஏந்தாத கண்ணகியாக வந்து பாம்பு இல்லைங்க ..ஓணான்… என்று சொல்லித்தொலையும்படி ஆயிற்று.

    பக்கத்துவீட்டுப் பாட்டி என்ன வேணாம்ங்குது இந்தப் பொண்ணு என்று கேட்க

    ஆங்.. நாமெல்லாம் இங்கே நிக்க ஓணாமாம்.. என்று எதிர்வீட்டு இளைஞன் எரிச்சல்பட்டு நகர்ந்தான்.

    நான் உள்ளே வந்தபோது கூடவே நாலு பேர் ‘உதவுவதற்கு’ உள்ளே வந்ததில்.. ஓணான் வெளியேறவில்லை. ஒரு வெள்ளி டம்ளர் வெளியேறிவிட்டது.

    நாங்கள் முயற்சி செய்து வியர்த்து விறுவிறுவிறுவிறுத்துப் போனபோதெல்லாம் வெளியேறாத அந்த ஓணான்… சிறிது நேரத்தில் நாங்கள் சோர்ந்துபோய், பேய் மாதிரிப் பறந்த கூந்தல் மற்றும் உடம்போடு வியர்வையில் ஒட்டியிருந்த சூடிதார் சகிதம் ஃபேன் அடியில் வெறுப்படித்து உட்கார்ந்தபோது சாது மாதிரி மெல்ல வெளியேறியபோது கோபம் வருமா வராதா?

    எனக்கென்னவோ பயமா இருக்குடீ மம்தா.. என்றாள் அம்மா.

    எதற்காம்? புருவங்களால் கேட்டேன்.

    ஒரு நாள் அரணை வந்தது.. ஒரு நாள் ஓணான் வந்தது.. அப்புறம் எலி… இது மூணும் டெர்ம் போட்டுக்கிட்டு நம் வீட்டுக்கு மாற்றி மாற்றி வந்துக்கிட்டே இருக்கு.. நாம் கத்துவதும் அக்கம் பக்கம் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் புலி வருது கதையாக் கலையறதும் பற்றிக் கவலை இல்லை.. ஆனால் கிரக தோஷம் ஏதும் இருக்குமான்னுதான் பயம்..

    எரிச்சலுடன்தான் கேட்டேன். ஏன் கொரங்குப்பேட்டை ஜோசியரைப் போய் கன்சல்ட் பண்ணிட்டு வந்துடறதுதானே? கோபத்தில் குரோம்பேட்டை

    Enjoying the preview?
    Page 1 of 1