Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakkagava Babu?
Enakkagava Babu?
Enakkagava Babu?
Ebook103 pages44 minutes

Enakkagava Babu?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1980களில் எஸ். வேதா என்ற பெயரிலும் அதற்குப் பின்பு வேதா கோபாலன் என்கிற பெயரிலும் சிறுகதைகளை எழுதிக் குவித்தவராக என் எழுத்தாள சகோதரிக்கு வாழ்த்துரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பை உண்மையிலேயே எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக நினைக்கிறேன். இதை நான் ஒரு சம்பிரதாயமாகக் கூறவில்லை.
ஏனென்றால் அந்தக் காலக்கட்டத்தில் குமுதம், விகடன் போன்ற வார இதழ்களில் ஒரு சிறுகதை பிரசுரமானாலே, அது ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது. எத்தனையோ எழுத்தாளர்கள் அரும்பாடுபட்டு அனுப்பி வைத்த சிறுகதைகள் எல்லாம் சுவரில் அடிபட்ட பந்துகளாக திரும்பி வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வேதா கோபாலனின் கதைகள் மட்டும் குமுதத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எட்டிப் பார்க்கும்.
சில சமயங்களில் அது ஒருபக்கக் கதையாகவும், சில நேரங்களில் சற்றே பெரிய சிறுகதையாகவும் இருப்பதைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். பிறகு பல நாவல்கள் வரிசையாக வந்தன. பெரும்பாலும் குடும்பக் கதைகள் தான். ஒரு சிறிய சம்பவம், ஓர் அழகான, அன்பான குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை அற்புதமாக எடுத்துரைக்கும் வேதா கோபாலனின் ஒரு பக்கக் கதைகள் வாமன அவதாரமாகவும், சற்றே பெரிய சிறுகதைகள் விஸ்வரூபமாகவும் எனக்குக் காட்சியளித்தன. எல்லாக் கதைகளுமே எதார்த்தமாக ஆரம்பித்து கதையின் கடைசி வரிகள் படிப்பவர்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்த காரணத்தால்தான் அவருடைய கதைகள் அன்றைக்கு வந்து கொண்டிருந்த எல்லா வார இதழ்களிலும் பிரசுரமான மகத்தான வெற்றியைப் பெற்றன.
ஒவ்வொரு பக்கமும் இலக்கிய வாசனையோடு மணக்கும். வாழ்த்துக்களோடு...
ராஜேஷ்குமார்
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580128405100
Enakkagava Babu?

Read more from Vedha Gopalan

Related to Enakkagava Babu?

Related ebooks

Reviews for Enakkagava Babu?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakkagava Babu? - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    எனக்காகவா பாபு?

    Enakkagava Babu?

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    கல்லூரிக் காலத்தில் 'ஆசிரியர் கடிதம்... அரசு பதில்களுக்கு என விளையாட்டாய் ஆரம்பித்தது. கல்லூரி லைப்ரெரியில் அமர்ந்து எழுதிய நாட்கள் பொன்னாட்கள்.

    முதல் கடிதம், கேள்வி பதில் பகுதியில் முதல் கேள்வி, முதல் சிறுகதை முதல் நாவல் எல்லாமே எனக்கு எஸ்.ஏ.பி. சார் காலத்துக் குமுதம் அலுவலகத்திலிருந்து வந்தவை.

    எழுதிய முதல் சிறுகதையையே அச்சில் பார்ப்பது பெரிய சந்தோஷம். இப்படி நேர்வதால் அதன் அருமை தெரியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். என்னைச் சுற்றி எல்லோரும் கதைகள் திரும்பி வருவது பற்றி வருந்துவதைப் பார்த்திருக்கிறேன். நான் எழுதியவற்றிலும் பல திரும்பியதுண்டு.

    நண்பராயிருந்த திரு. கோபாலன் கணவரானார். எழுத்தாளர்கள்.... பத்திரிகை... கதைகள்... இலக்கியக் கூட்டங்கள்... இவையே எங்கள் உலகம்!

    திருமணமானவுடன் விகடன் பொன்விழா வந்ததனால் தேன் நிலவை ஒத்திப்போட்ட தம்பதி உலகிலேயே நாங்கதான்!! திரு. கோபாலன் குமுதத்தில் சேர்ந்த பிறகு எல்லோரும் என் கதைகள் வாரா வாரம் வரும் என்றெல்லாம் தப்புக் கணக்குப் போட்டார்கள். அதெல்லாம் இல்லை. பத்திரிகை நடத்துபவர்களுக்கு அதன் விற்பனை முக்கியம்! மற்றவர்களைப் போலவே நானும் நடத்தப்பட்டேன்.

    மற்றவர்களுக்குத் தபாலில் கதை திரும்பி வரும். எனக்கு இவரின் கையிலேயே கொடுத்து விடுவார்கள்! அதுதான் அதிகப்படி சலுகை.

    இன்னும் கேட்டால் அப்போது குமுதம் போட்டியில் நான் கலந்து கொண்டு பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்குப் பரிசு தரக் கூடாது என்று திரு எஸ்.ஏ.பி. அவர்கள் சொல்லிவிட்டாராம்! அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு ஆயிரம் பரிசுகளுக்கு சமம்! அலுவலகத்திற்கு வரலையே தவிர அவங்களும் குமுதத்திற்காக வேலை பார்க்கறவங்கதானே! நம் ஸ்டாஃப் கலந்துக்கக் கூடாதுன்னு விதிமுறை இருக்கே. என்றாராம்!

    மாலைமதியில் என் முதல் நாவல் 1980ல் வெளியானது! ஒரு சமயம் ஒரு திருமணத்தில் திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது அவர் சொன்னது, நாங்க ரொம்ப ஆச்சர்யப்பட்டோம். கிரைம் கதைகள், நகைச்சுவைக் கதைகள், த்ரில்லர், டிராமா, கடிதக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், குறிப்பாகக் கல்லூரிக் கதைகள் எல்லாமே நீங்க எழுதறதை கவனிச்சோம். பல ரகங்கள் எழுத முடிவதால் வயது இவ்ளோ குறைவா இருக்கும்னு நினைக்கலை. எழுத்தில் அனுபவ முதிர்ச்சி இருக்கு என்றார். ஆம்! நான் எழுத ஆரம்பித்தபோது வயது 23தான்! பிறகு விரிவாக்கிக் கொள்ள வைத்தான் இறைவன்.

    குமுதத்தில் 'எப்படிக் கதை எழுதுவது' என்று ரா.கிர. வாரா வாரம் அட்டகாசமான தொடர் எழுதினார். எடிட்டர் திரு. எஸ்.ஏ.பி.யின் ஆணைப்படி அதைப் படித்த பலரும் கதை எழுதுவது எப்படி என்று அவர் ஏன் ஒரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கக் கூடாது என்று கேட்டார்கள்! ஆரம்பித்தார். (எ.க.எ.) அதில் முதல் மாணவியாகச் சேர இருந்த என்னை நிராகரித்துவிட்டார்! நீங்கதான் மேடம் என் அசிஸ்டென்ட்டா இருக்கப் போறீங்க என்றார்!

    பயிற்சிகளுக்காக மாணவர்கள் பல கதைகள் அனுப்புவார்கள்.

    பயிற்சிக் கதைகளை என் கணவரிடம் கொடுத்தனுப்பிவிடுவார்! ஒவ்வொரு கதைக்கும் ஒரு பக்கத்துக்கு நான் மாணவருக்கு விளக்கம் டைப் செய்து தர வேண்டும்! அந்தக் கதையின் குறை நிறைகளையும் அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் சொல்ல வேண்டும்! அது மட்டுமல்ல! அந்தக் கதையின் சுருக்கத்தை 3.... 4.... வரிகளில் எழுதி ஆர்.கே. ஆர் சாருக்கு அனுப்ப வேண்டும். (கிட்டத்தட்ட கதையே புதிதாகிவிடும்!) இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால்.... அந்த மாணவர்களில் பலர் நல்ல எழுத்தாளர்கள்! ஏற்கெனவே பிரபலங்கள்! இந்தப் பயிற்சி எனக்குத்தான் மிக உதவியது!

    திரு. எஸ்.ஏ.பி. திரு. ரா.கி ரங்கராஜன், திரு. ஜ.ரா. சுந்தரேசன், திரு. புனிதன் ஆகியோரின் பாசறையில் பயின்றதாலோ என்னவோ அடுத்து சாவி பத்திரிகையின் அன்புக்குப் பாத்திரமானேன்.

    என்னுடைய ‘தண்டனை' என்ற குறுநாவலைப் படித்துவிட்டு என்னை நேரில் அழைத்து சாவி சார் அரை மணி நேரத்துக்குப் புகழ்ந்தார்!

    திரு. சுஜாதா எடிட்டராக இருந்தபோது நேரடியாகப் பராட்டும்போது மன நிறைவாக இருக்கும்!

    திரு. மாலன் குமுதம் எடிட்டராக இருந்தபோது சில அழகிய சவால்கள் விடுப்பார். கதை முழுக்க வரும் பாத்திரங்களெல்லாம் ஊர் பேர்களாகவே இருக்கும்!

    ஐந்து தனித் தனி ஒரு பக்கக் கதைகள் எழுத வேண்டும். சேர்த்துப் படித்தால் 5 பக்கத்துக்கு ஒரு பெரிய கதையாக இருக்க வேண்டும் என்பார். அப்படி எழுதிய கதையும் என் ஒரு பக்கக் கதைத் தொகுப்பில் உள்ளது.

    முன்னுரையே ஒரு நன்றியுரையாக அவதாரமெடுத்துக் கொண்டிருக்கிறது!

    எல்லா எடிட்டர்களுக்குமே கடமைப்பட்டிருக்கிறேன்.

    குறிப்பாக அமுத சுரபியின் முன்னாள் ஆசிரியர் திரு. விக்கிரமன் சமீபத்தில் உடல்நிலை குன்றிப் படுத்த படுக்கையாகிவிட்ட போதும் (நீங்க டிக்டேட் பண்ணுங்க சார்... நாங்க எழுதிக்கறோம் என்று நாங்கள் சொல்லியும்) தன் கைப்பட வாழ்த்துரை எழுதித் தந்தார்!

    முன்னுரை வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்ததும் மடமடவென்று எழுதிக் கொடுத்தவர்களின் லிஸ்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1