Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Whatsappil Vanthavai
Whatsappil Vanthavai
Whatsappil Vanthavai
Ebook180 pages59 minutes

Whatsappil Vanthavai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில சமயங்களில் காலை எழுந்தவுடன் வாட்ஸப்பில் ஐம்பது அறுபது மெசேஜ்கள் வந்ததாகக் காண்பிக்கும். ராத்திரி முழுக்கக் கண்விரித்து வியர்வை சிந்திப் பலர் அனுப்பியிருப்பார்கள்(!) அல்லது அதே வியர்வையை அதே விதமாகச் சிந்தி… ஃபார்வேர்ட் செய்திருப்பார்கள். ஆரம்பத்திலெல்லாம் சலிப்பாய் இருக்கும். ஆனால் நான்கு ஃபார்வேர்ட்களில் ஒன்று சுவையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

நன்றாய் இருக்கிறதே என்று சிலவற்றை காபி செய்து வேர்ட் ஃபைலில் போட்டுப் பாதுகாத்தேன். யான் பெற்ற இன்பத்தை இவ்வுலகம் பெற என்ன வழி என்று யோசித்தபோது இப்படி ஒரு ஐடியா ஃப்ளாஷ் ஆனது.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580128408608
Whatsappil Vanthavai

Read more from Vedha Gopalan

Related to Whatsappil Vanthavai

Related ebooks

Reviews for Whatsappil Vanthavai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Whatsappil Vanthavai - Vedha Gopalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வாட்ஸப்பில் வந்தவை

    Whatsappil Vanthavai

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    ஃபாலீன் பூஜாரி

    அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

    அந்திம காலத்தில் நாம் படும் சிரமங்கள்

    அன்னமிடும்போது…

    புனித்

    புலாங் என்ற மலேசிய படம்.

    மிகத்திறமையான மாணவன்

    தங்கம்மாவின் வாதம்

    மஹாபெரியவா திருவடிக்கே.,,

    வெட்டி வேரை.. பறிக்கவும்.

    ஆண்டவன் என்பவன் ஏது?

    கர்ம வினை!

    கடந்து செல்லுங்கள்…

    எச்சரிக்கை...

    அர்ச்சகரும் மூதாட்டியும்…

    முழுப் பூசணிக்காயை சோற்றில்…

    மருள் ஒழிக்கும் கடுசர்க்கரை யோகம்

    பக்தியை உன் அங்கமாக மாற்று

    நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

    ராமாநுஜரின் சத்துணவுத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    பாவங்கள் நீங்க

    திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்

    தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்

    பயமாக இருக்கிறது...

    கார்டெலியா குரூஸ்

    திரும்பிப் பார்க்கிறேன்...!

    பேஸ்புக்கில் படித்ததில் பிடித்த

    கோடை விடுமுறை

    திரும்பிப் பார்க்கிறேன்...!

    அம்மா.. அப்பா..

    ஆசிர்வாதம்!

    மகிழ்ச்சியான வாழ்வுக்குப் பத்துக் கட்டளைகள்.

    அருந்தமிழ் மருத்துவம்

    எஸ்.ரங்காச்சாரி என்ற டாக்டர் செய்த அற்புதங்கள்.

    வியத்தலும் இகழ்தலும்…

    கல் கருடன் உருவான கதை

    அக்னி நட்சத்திரம் எவ்வாறு தொடங்கியது?

    கண்ணதாசன் கண்ணதாசன்தான்யா..

    கூட்டுக் குடும்பமே நாட்டின் உயர்வு

    சித்ரா பௌர்ணமி

    அந்த காலம் தான்

    கரண்டு கம்பத்துல பீஸ் போயிடுச்சா..?

    சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

    நீங்க சண்டைக்கோழிகளா? இதைப் படிங்க

    நிமிர்ந்து நில்லுங்கப்பா..

    தெய்வம் என்றால் அது தெய்வம்..

    இலக்கியங்கள்.

    தாயா? தந்தையா?

    தர்ம சிந்தனை

    மதிப்பு மிக்க மகிழ்ச்சி

    பெண்நம்மாழ்வாரினி ....

    தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி

    என்னுரை

    சில சமயங்களில் காலை எழுந்தவுடன் வாட்ஸப்பில் ஐம்பது அறுபது மெசேஜ்கள் வந்ததாகக் காண்பிக்கும். ராத்திரி முழுக்கக் கண்விரித்து வியர்வை சிந்திப் பலர் அனுப்பியிருப்பார்கள்(!) அல்லது அதே வியர்வையை அதே விதமாகச் சிந்தி… ஃபார்வேர்ட் செய்திருப்பார்கள்.

    ஆரம்பத்திலெல்லாம் சலிப்பாய் இருக்கும். ஆனால் நான்கு ஃபார்வேர்ட்களில் ஒன்று சுவையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

    மிகவும் சுவாரஸ்யமாய் இருந்தாலன்றி நான் ஃபார்வேர்ட் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் நிறைய ஃபார்வேர்ட் ஆனவற்றை அது ஒரே ஒருவருக்குத்தான் ஃபார்வேர்ட் செய்ய அனுமதிக்கும். இல்லாவிட்டாலும் ஐந்தே பேருக்குத்தான். பல சமயங்களில் அதையும் செய்ய முடியாதபடி பிஸி.

    ஒரு சமயம் சிங்கப்பூரில் உடனடியாக அர்ச்சகர் தேவை என்ற வாட்ஸப் பதிவை எனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்ப அதை ஏன் கேக்கறீங்க வேதா.. இதெல்லாம் போலி நியூஸ். இப்படியெல்லாம் இல்லையாம். ஃபேக் தகவல்.. என்றார்கள்.

    ஒரு முறை சென்னையில் பிரளயமாய் மழை பெய்துகொண்டிருக்க துரைசாமி சப்வே மேட்லி சப்வேயெல்லாம் நிரம்பி வழிய .. அதை போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார்கள். உடனே டக் டக்கென்று ஃபார்வேர்ட்.

    அடுத்த நிமிஷம் ஆன்ட்டீ இது 2015 ம் வருட வெள்ளத்தின் பழைய போட்டோ.. நான்தான் எடுத்தேன். என்று ஒரு பெண் ரிப்ளை.

    சரி .. என்று ஜோக்குகளை ஃபார்வேர்ட் செய்தால்.. இதை நான் ஏற்கனவே படிச்சுட்டேன். இது பல முறை சுற்றிச் சுழன்று ஃபார்வேர்ட் ஆகிக்கொண்டிருக்கிறது என்று பதில் வரும்.

    சுஜாதாவைவிட யாரால் இப்படி எழுத முடியும் என்று வந்த ஃபார்வேர்ட்டுக்குக் கொதித்தே போனேன். அது என் ஆசான் எழுதியதே அல்ல. யாரோ ஒரு ஹாஃப் பாயில்ட் எழுதியது. அவர் நடை நமக்கெல்லாம் தெரியாதா என்ன?

    சில பதிவுகள் சுஜாதா எழுதியதாக வரும். அவற்றை நம் நண்பர் சுஜாதா தேசிகனோ, டி வி எஸ் சோமுவோ எழுதி நான் ஏற்கனவே படித்ததாக இருக்கும்.

    அவர்களிடம் சொல்லும்போது அதை ஏன் கேட்கறீங்க மேடம். யாரோ இப்படி ஒரு குறும்பு செய்துட்டாங்க. எத்தனை பேருக்கு விளக்கமளித்து சலித்துப்போயிடுச்சு. சிலர் என் பதிவை எனக்கே அனுப்பி ‘சுஜாதா எழுதியது’ என்னும்போது அழுவதா சிரிப்பதா என்கிறார்கள்.

    சலித்துப்போனேன். ஃபார்வேர்ட் செய்வதை நிறுத்தியே விட்டேன்.

    நன்றாய் இருக்கிறதே என்று சிலவற்றை காபி செய்து வேர்ட் ஃபைலில் போட்டுப் பாதுகாத்தேன்.

    யான் பெற்ற இன்பத்தை இவ்வுலகம் பெற என்ன வழி என்று யோசித்தபோது இப்படி ஒரு ஐடியா ஃப்ளாஷ் ஆனது.

    நம் புஸ்தகா டிஜிடல் மூலம் பலரும் பலன் பெறச் செய்தால் என்ன?

    இப்படி யோசிக்க ஆரம்பத்தவுடன் வாட்ஸப் ஃபார்வேர்ட்கள் சலிப்பு ஏற்படுத்தவில்லை. சுவாரஸ்யம் தந்தன. எதைத் தொகுக்கலாம் என்று சுறுசுறுப்பாக இயங்கினேன். தினமும் வாட்ஸப்பில் வரும் நல்ல ஃபார்வேர்ட்களை எடுத்துத் தொகுக்க ஆரம்பித்தேன் (கவனியுங்க ஃப்ரெண்ட்ஸ் நல்லவற்றை மட்டுமே..)

    எனக்குத் தெரிந்த அளவில் தவறான தகவல் பரப்பும் பதிவுகள்… சில சுய தம்பட்டங்கள்.. சில தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் புகழ்.. சில சாடல்கள்.. சில குத்தல்கள்.. நெகடிவ் அம்சங்கள் இருந்தால் அவற்றை அறவே தவிர்த்துவிடுவேன். எனக்குப் பிடித்த தலைவரை உங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன?

    என்னை மிக நல்ல முறையில் ஊக்குவித்து, அருமையாக.. நேரம் தவறாமல் ராயல்டி அனுப்பிக்கொண்டிருக்கும் புஸ்தகா டிஜிடல் நிறுவனத்துக்கே கொடுக்க வேண்டும் என்று எப்போதும்போல் தீர்மானித்து.. இதோ உங்கள் டிவைஸில் என் ‘வாட்ஸப்பில் வந்தவை’ ஒன்றிரண்டை நீங்கள் படித்திருக்கலாம். பல புதிதாகவும் இருக்கலாம். மீண்டும் படித்தாலும் சுவையாய் இருக்கக்கூடியவற்றை மட்டுமே இங்கு தந்திருக்கிறேன். பத்து ஃபார்வேர்ட்களில் கிட்டத்தட்ட நான்கு மட்டுமே பொறுக்கியெடுத்துத் தந்திருப்பேன்.

    என்ஜாய். குட் லக்.

    இப்படிக்குப் பிரியங்களுடன்

    உங்கள் அன்பு

    வேதா கோபாலன்

    9.6,2022

    சென்னை – 44

    ஃபாலீன் பூஜாரி

    நேற்று ஃபாலீன் பூஜாரி ஹோலிதாஹான் நெருப்பைக் கடந்தார் நாரத முனி கயாது (பிரஹலாதனின் தாய்) கற்பித்த இடம் இது. இந்த இடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பிரஹலாத் கோவில் மற்றும் பிரஹலாத் குண்டம் உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் கோயிலின் பூஜாரிகள் 15 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்ட எரியும் நெருப்பை பிரஹலாத் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கடந்து செல்வார்கள். அவர்கள் ஹோலிக்கு 40 நாட்களுக்கு முன்பு தங்கள் சடங்கை தொடங்குகிறார்கள், தானியங்கள் மற்றும் உப்பு உணவை கூட சாப்பிடாமல், வெறும் மந்திரத்தை உச்சரிக்கிறார்கள்.

    ஹோலி நாளில் அதிகாலை 4:00 மணிக்கு பூஜாரி பிரஹலாத குண்டத்தில் குளிப்பார். மேலும் பிரஹலாதரின் உணவு முறையின் அதிர்வுகள் பூஜாரியின் உடலில் நுழைவதாக கருதப்-படுகிறது. அவர்கள் தீயைக் கடக்கும் முன் பெரிய தீப்பிழம்புகளில் கையை வைத்து பார்க்கின்றனர். அவரது கை எரிய- வில்லை என்றால், அது நெருப்பைக் கடக்கும் நேரம் என்று அவர்கள் புரிந்து

    கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் நெருப்பைக் கடக்கத் தொடங்குகிறார்கள், அங்கு நிற்கவே கடினமாக உள்ளது. ஹோலி தஹானில் இரவில் இந்த திருவிழாவைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ஒரு நாள் முன்னதாக பலர் இங்கே கூடுகிறார்கள்

    அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

    முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.

    தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.

    அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும்.

    எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

    அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன.

    "அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.

    இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான்.

    கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான்.

    அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

    அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார்.

    அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன்

    Enjoying the preview?
    Page 1 of 1