Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivil Nee
Ninaivil Nee
Ninaivil Nee
Ebook182 pages1 hour

Ninaivil Nee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

78 வயதுடைய ஜீ.எம். பாலசுப்பிரமணியம், திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பொறுப்பான பதவியில் இருந்து பணி விருப்ப ஓய்வு பெற்றவர். இளவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். நாளும் காணும் வாழ்வின் பல நிகழ்வுகளைதன் கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுத்த முயற்சிப்பவர்.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580119702262
Ninaivil Nee

Read more from G.M. Balasubramaniam

Related authors

Related to Ninaivil Nee

Related ebooks

Reviews for Ninaivil Nee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaivil Nee - G.M. Balasubramaniam

    http://www.pustaka.co.in

    நினைவில் நீ

    Ninaivil Nee

    Author:

    ஜீ.எம். பாலசுப்பிரமணியம்

    G.M. BalaSubramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/g-m-balasubramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    நினைவில் நீ

    நாவல் பிறந்த கதை

    பதிவுலகிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் கூட முடியவில்லை

    என் சுய திருப்திக்காக எழுதிக் கொண்டிருந்த எனக்கு உடல்

    நலமில்லாமல் தேறி வந்து கொண்டிருந்தபோது இம்மாதிரி

    வலையில் எழுத முடியும் என்ற தகவல் ஆனந்தவிகடனில்

    வெளியான ஒரு கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்டேன்

    இப்பொழுதும் எனக்கு கணினி பற்றிய ஞானம் மிகவும் குறைவு.

    ஏதோ எழுதுகிறேனே தவிர இன்னும் பல சூட்சுமங்கள் பிடி

    படவில்லை

    1960-/ களில் எழுதத் துவங்கினேன். எந்த பத்திரிகைக்கும்

    அனுப்பியது கிடையாது. காதல் வசப் பட்டிருந்தபோது கவிதை

    எழுத முயற்சித்தேன். நாடகங்கள் பல எழுதி இயக்கி நடித்திருக்

    கிறேன். சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 1966-/ ம் வருடம்

    கலைமகள் இதழில் நாராயணஸ்வாமி அய்யர் நினைவு நாவல்

    போட்டி அறிவித்திருந்தார்கள். நான் ஏன் பங்கு பெறக்கூடாது

    என்னும் எண்ணம் எழவே, ஒரு நாவல் எழுதினேன். பெற்ற

    அனுபவங்களும் என் மன அபிலாக்ஷைகளுமாக கருஉருவாக்கி

    ஒரு நாவல் எழுதினேன். அதை தபாலில் போதிய ஸ்டாம்பு

    களுடன் (அவர்கள் திருப்பி அனுப்ப ஏதுவாக)பதிவுத் தபாலில்

    Ack .Due என்னும் முறையில் அனுப்பினேன். ஒரு வாரம் கழிந்தும்

    அவர்கள் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரமாக ACK. DUE FORM

    அவர்கள் கையெழுத்துடன் வராததால் தபால் நிலையத்தில்

    விசாரித்தேன். என்ன கொடுமை.! அது அனுப்பப்படாமல்

    அங்கேயே இருந்தது. கடைசி நாளும் முடிந்திருந்தது. தபால்

    நிலையத்தாருடன் சண்டை போட்டதுதான் மிச்சம். ஒரு மாதத்

    துக்கு மேல் உழைத்தது வீணாகி இருந்தது. இப்போது அதனை

    தூசு தட்டி என் வலைப் பூவில் பதிவிடுகிறேன். ஆதரவு இருக்கும்

    என்ற நம்பிக்கையில் வாரம் இரண்டு அத்தியாயங்கள் பதிவிட

    உத்தேசம் . முன் கூட்டியே ஆதரவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

    *****

    அத்தியாயம் 1

    (கலைமகள் நாராயணசாமி அய்யர் நினைவு நாவல்

    போட்டிக்காக 1966-/ ம் வருடம் எழுதியதை தூசு தட்டிப்

    பதிவிடுகிறேன்)

    மூக்கில் ஆக்ஸிஜென் ட்யூபும், உடலின் சோர்வும், உள்ளத்தின் பளுவும், இருண்ட எதிர்காலத்தின் நினைவை ரங்கசாமியின் நினைவில் நிறுத்தியது.இருட்டில் ஒளியைத் தேட கடந்த கால நிகழ்ச்சிகளை அசை போட்டவரின் கண்களில் நீர் அரும்பியது. எண்ணத் தறியில் கடந்த நிகழ்ச்சிகள் இழையோட இழையோட, எதிர்காலத்து சோபை, விடி வெள்ளிபோல் தென்படும் தறுவாயில், தறி அறுந்தது., நர்ஸின் நடையோசை கேட்டு.

    விரிப்பை சரி செய்து, ஆக்ஸிஜென் ட்யூபை மாற்றிப் பொருத்தி டக், டக், என்ற மிதியோசை வெளிப்படக் கடந்து சென்ற நர்ஸின் விருப்பு வெறுப்பற்ற கடமை உணர்வைக் கண்டதும், காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை என்ற உண்மையும் தெள்ளெனத் தெரிந்தது. காலத்துடன் காலனும் போட்டி போடுகிறானோ என்ற நினைவு உதித்ததும் உள்ளம் வெதும்பியது. ஆண்டவனே நான் சாகக் கூடாது.எனக்கு இன்னும் எவ்வளவொ கடமைகள் இருக்கிறதே. காலனே என்னை அண்டாதே என்று வேண்டலும் வெதும்பலுமகக் கிடந்தவரின் நினைவுத் தறி மீண்டும் ஓட ஆரம்பித்தது. த்றியின் இழையோட்ட எண்ணங்கள் பாபுவை சுற்றியே பின்னப் படுகிறது. ஏன்.? இருண்ட எதிர்காலத்தின் விடி வெள்ளியாக பாபுவைத்தான் காண்கிறாரோ.?

    அன்று வேலை தேடிசென்ற பாபு ஒரு மாதகாலத்துக்கு திரும்பி வரவேயில்லையே. அந்த இள வயதிலேயே எதிர்பாராத ஏமாற்றத்தின் ஏகபோக உரிமைக்கு ஆளாக்கப் பட்டுவிட்டான் பாபு. வேலை தேடி வந்தவனைக் கண்டதும்வேலை இருக்கிறது என்று சொன்னவர்கள் எள்ளி நகையாடினர். உடல் வளர்ச்சி குறைவு என்று நிராகரித்தனர். ஏமாற்றம் அவன் உள்ளத்தை வைரமாக்கியது. வேலையில்லாமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியாய் இருந்தவன் முயற்சியெல்லாம் முக்கால்தோல்விதான், வேலை கிடைக்கவில்லை என்ற நிலையைப் பொறுத்தவரையில்.ஆனால் கால் பங்கு வெற்றி, உலகத்தின் நடவடிக்கைகளை அந்த இடைக் காலத்தில் உணரக் கிடைத்த வாய்ப்பினால்.கடைசியில் வீடு வந்து சேர்ந்தவன் எடுத்த காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்ற உண்மை உணர்த்தப் பட்டவனாக இருந்தான். தந்தையைக் கண்டதும் தாங்க முடியாத வேதனையாலும் அவமானத்தாலும் நிலை குன்றிப் போனான்.

    அப்படி அன்று மனமொடிந்து வந்தவன் இன்று வாழ்வின் அடிப்படியில் காலெடுத்து வைத்திருக்கிறான். அவனை ஒளிவட்டமாகக் காண்பதில் தான் பெரியதவறு செய்கிறோமோ என்று ரங்கசாமி உருகினார்.அவர் அப்படி நினைக்கக் காரணமுண்டு. தன் மூத்த பிள்ளைகளால் ஏமாற்றப் பட்டு பழிக்கப் பட்ட அவர் சுட்ட பால் குடித்த பூனையாயிற்றே. தன்னைப் பழிப்பவர் சுற்றாரும் உற்றாரும் மட்டுமா? உலகமுமா.? அப்படி என்ன பழிதான் செய்துவிட்டோம் தன் இரு மூத்த பிள்ளைகள் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தான் வேண்டியதில்லை என்று நினைத்தால் நடக்காதென்ற காரியமாயிருந்தால் இப்படி ஒரு நிலையே ஏற்பட்டிருக்காதே.

    கஷ்ட நஷ்டங்களைப் பற்று வரவு பார்க்கும்போதும் சில சமயங்களில் ஒரு அலாதியான திருப்தி ஏற்படுகிறது. நிவர்த்திக்கப்பட முடியாத காரியங்களிலும் சில நன்மைகள் தெரிகிறது. தன் காரியங்களைப் பழித்துதனக்கெதிராக கிளம்பியுள்ள பிள்ளைகளால் நன்மைகள் ஏதும் ஏற்படாவிட்டாலும் துன்பங்களாவது தவிர்க்கப் பட்டு விட்டதே.இல்லையென்றால் என்றும் ஒரே போராட்டமாயிருந்திருக்கும். இப்போதும் போராட்டம் இல்லையென்றல்ல. இப்போதைய போராட்டங்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் பாதையமைக்கும் பணியில்தான். மற்றபடியிருந்தால் கூடவே மனப் புகைச்சல்களும் பூசல்களும் கூடவே இருந்திருக்கும். தன் சுய கௌரவமும் எண்ண ஈடுபாடுகளும் செயல்களும்பிறருக்காக விட்டுக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும். விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் சந்தோஷ்மிருந்திருக்கும் இரு பக்கமும் அந்த எண்ணமிருந்திருந்தால். இரு கையும் சேரும்போதுதானே ஓசை

    தான் எண்ணியபடி இரண்டாம் முறை மணந்தது தவறு என்றால், தவறு எது சரி எது என்று நிர்ணயிக்கப் படமுடியாத ஒரு சந்தர்ப்பத்தினால் ஏற்படும் ஒரு முடிவேயாயிருக்கும். எந்த ஒரு கொள்கைக்கும் இரண்டு வாதம் இருக்கும். அது சந்தர்ப்ப சூழலால் அவரவர் ஏற்கும் முடிவைப் பொறுத்தது. தான் செய்தது தவறு அல்ல என்ற எண்ணம் இறக்கும் தருவாயிலும் இருப்பது தன் கொள்கையின் , முடிவின் சரித்தன்மையைக் காட்டுகிறது. மேலும் தன் இரண்டாம் மனைவி தன் மூத்தாள் பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் கவனித்தது எல்லோரும் அறிந்ததே. அறிந்ததை இல்லையென்று நிரூபிக்க முயல்வது செயல் நிகழ்த்தியவரைப் பழிப்பதற்கே ஆகும். அது யார் குற்றமுமல்ல.

    மேலும் இருந்த ஒரே பெண்ணும் மணமுடிந்து குடியும் குடித்தனமுமாக எங்கோ இருக்கிறாள். .இவர்கள் எல்லோரும் தன் சாவுக்காவது வருவார்கள். வந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால் அவர்களின் அறியாமையும் மன்னிக்கப்படும்.

    ஆனால் சாவை எதிர்பார்க்கும் நிலையிலா ரங்கசாமி இருந்தார்.? வளர்ந்த பிள்ளைகள் வளர்க்கப்பட்ட விதத்திலாவது வளர்ந்து வரும் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டுமே.. அதற்கு பற்றுகோல் போல் பாபுவை நாடுவது சரியா. பாபுவோ சுயமாக வாழ இப்போதுதான் வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறான். தன்னாலேயே தாங்க முடியாத வறுமைப் பிணியை அந்த இளம் பிள்ளை தாங்குமா.? தெய்வமே தனக்கு சாவு வரக் கூடாது என்ற பிரார்த்தனையே அடிக்கடி எழுந்தது. பிரார்த்திக்கும்போதெல்லாம் பாபுவையே கோடி காட்டும் தெய்வம் அவனிடமே தன் பொறுப்புகளை சுமத்தச் செய்யுமா.? சிந்தனைகள் சிக்கலில் சுழலச் சுழல எண்ணம்தடை படுகிறது. நெஞ்சு வலிக்கிறது. இதோ....டாக்டர் போகிறாரே...அவரை கூப்பிடலாமா டாக்டர்

    வாழ்க்கையில் கிடைத்த பெரும் வெற்றி பாபுவுக்கு அவனைப் பொறுத்தவரை அவனாகவே தேடிப் பெற்ற வேலைதான். வேலை என்பதைவிட பயிற்சி என்பதே சரியாகும் மூன்று வருஷங்களில் ஒரு வருஷத்தை ஓரளவு முடித்தாயிற்று. தான் சம்பாதிக்கும்போது தன் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியடையும். அப்பாவுக்கு சரி நிகராகப் பணிக்குப் போகலாம். தன்னையும் தந்தையை மதிப்பது போல் தம்பிகள் மதிப்பார்கள்.. அம்மாவும் ஒருவித ஸ்பெஷல் கவனிப்பைக் காட்டுவாள். ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் அப்பா ரிடையர் ஆகிவிடுவாரே. அப்போது இந்தக் குடும்பம் ஒருவன் சம்பாதித்து வாழ வேண்டி இருக்குமே. வித்தியாசம் தந்தைக்குப் பதில் தான் பொறுப்புகளை ஏற்பதாகத்தான் இருக்கும். வறுமை ஒழியாது. சந்தோஷம் இருக்காது. எண்ணியது நடக்காது மொத்தத்தில் வாழ்க்கையே சுவைக்காது. நடக்காத செயல்களை நடப்பதாக பாவித்துஇன்பமும் துன்பமும் அடைபவர்கள் ஏராளம். ஆனால் வறுமையிலேயே பிறந்து வறுமையிலேயே வாழும் பாபுவுக்கு இன்பத்தை பற்றியும் சுக வாழ்வு பற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.இதனைவிட கஷ்டமில்லாமல் இருந்தால் சரி என்ற துறவு உணர்ச்சியே அந்த இள வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. எதிர்காலத்தை எதிர் நோக்கும்போது எதிர்பாராதது ஏதும் இருக்கலாகாது என்ற கொள்கை அவனை அறியாமலேயே அவனிடம் இருந்தது., அவனது பிற்காலத்தில் பெரிதும் உதவியது. ரங்கசாமியும் பாபுவுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை நல்லதை எதிர்பார். அல்லாததற்கும் தயாராய் இரு என்பதுதான்.

    பாபு உனக்கு அர்ஜெண்டாக ஒரு செய்தி வந்திருக்கிறது. உன் அப்பா, ஆஸ்பத்திரியில் கொஞ்சம் சீரியசாம்...உடனே போ. செய்தி சொன்னவன் முடிக்கவுமில்லை., பாபு பறந்து விட்டான். ஆஸ்பத்திரி வாசலில் தடை செய்த காவலர்களையும் சட்டை செய்யாமல் பதறிச் சென்ற பாபுவை ரங்கசாமி புன்னகையுடன் வரவேற்றார், தாயும் தம்பிகளும் இருந்தனர். பயங்கரமான சூழ்நிலையை எதிர்பார்த்துச் சென்ற பாபுவுக்கு ரங்கசாமி இருந்த விதம் ஆறுதல் தந்தது.

    என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன் நீங்களானால் அரச தர்பாரில் இருக்கிறமாதிரி இருக்கிறீர்களே. உடம்பு பரவாயில்லையா அப்பா, டாக்டர் என்ன ச்ப்ல்கிறார்.? டாக்டர் எங்கே.?

    டேய், டேய், பதட்டப்படாதே.! ஏதோ உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்தது. டாக்டரிடம் சொன்னேன். உனக்கும் செய்தி அனுப்பினார்கள்.கவலைப்பட எதுவுமேயில்லை.

    முசு முசு என்று வரும் மூச்சுக் காற்றையும் கட்டுப்படுத்த முயன்று முழ பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார் ரங்கசாமி. அணையும் தீபச்சுடர் நின்றெரியும்போது ஏற்படும் பிரகாசம் அலாதியாக அவர் முகத்தில் தெரிந்தது. தெரிவித்ததை உணரும் வயதில்லையே பாபுவுக்கு. அவனும் நம்பினான். சிறிது நேரம்

    Enjoying the preview?
    Page 1 of 1