Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

BalaSubramaniyanin Kavithaigal
BalaSubramaniyanin Kavithaigal
BalaSubramaniyanin Kavithaigal
Ebook117 pages30 minutes

BalaSubramaniyanin Kavithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

78 வயதுடைய ஜீ.எம். பாலசுப்பிரமணியம், திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பொறுப்பான பதவியில் இருந்து பணி விருப்ப ஓய்வு பெற்றவர். இளவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். நாளும் காணும் வாழ்வின் பல நிகழ்வுகளைதன் கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுத்த முயற்சிப்பவர்.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580119702269
BalaSubramaniyanin Kavithaigal

Read more from G.M. Balasubramaniam

Related authors

Related to BalaSubramaniyanin Kavithaigal

Related ebooks

Reviews for BalaSubramaniyanin Kavithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    BalaSubramaniyanin Kavithaigal - G.M. Balasubramaniam

    http://www.pustaka.co.in

    பாலசுப்பிரமணியனின் கவிதைகள்

    BalaSubramaniyanin Kavithaigal

    Author:

    ஜீ. எம். பாலசுப்பிரமணியம்

    G.M. BalaSubramaniam

    For more books
    http://www.pustaka.co.in/home/author/g-m-balasubramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காக்கக் காக்க

    கவிதைத் தாகம்

    செய்யாத குற்றம்.

    இயலாமை

    நான் ஏன் பிறந்தேன்

    தகப்பன்சாமி அல்ல - தாத்தா சாமி

    சிறு துளி பெரு வெள்ளம்.

    நடப்பது என்றும் நலமாய் நடக்கும்..

    விடியலுக்காக காத்திருக்கிறேன்.

    வெற்றியும் தோல்வியும்

    முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்....

    ஹாப்பி பர்த் டே

    உஷ்...! தொந்தரவு செய்யாதீர்கள்.

    அவதாரக் கதைகள்...பாகம்-மீனாக-

    கேள்விக்கென்ன பதில்.?

    அவதாரக் கதைகள் - பாகம் 1 - அனபெனப்படுவது...

    அவதாரக் கதைகள் - பாகம் 2 - ஆமையாக

    அவதாரக் கதை - பாகம் 3 - பனறியாக

    அவதாரக் கதை - பாகம்.4 - இப்பூவுலகே எனக்கன்றோ

    அவதாரக் கதை - பாகம்.5 - வாமனனாக.

    சாதாரணன் இராமாயணம்.

    பதி சொல் தட்டா பத்தினி

    எண்ணச் சிறகுகளில்.

    என்ன நீதி.?

    அவதாரக் கதை - பரசுராமர்.

    தனிமைப் பறவை

    பாவைக்கு ஒரு பாமாலை...

    கிருஷ்ணாயணம்

    நம்பிக்கை...

    ஆண்டவன் முன்...

    என்னை நானே உணர வை.

    அம்மா

    போய்ச் சேர் வீடு நோக்கி...

    உயிலொன்று எழுத...

    பொங்கல் வாழ்த்துக்கள்.

    எனக்கென்ன செய்தாய் நீ.?

    பணம் என்ன செய்தது.?

    காதலுக்கு வயதில்லை

    எண்ணிப் பார்க்கிறேன்.

    மணவினை சிறைவாசம்...?

    நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு

    முதுமையின் பரிசு.?

    முருகா நீ அப்பாவியா.?

    சூரா அது உன் சதியா...?

    கடவுள் – அறிவா உணர்வா.?

    கேசாதி பாதம் காதலி

    ***

    கவிதைகள்

    காக்கக் காக்க

    பட்டாம் பூச்சிப் பிடிக்கப்

    பதுங்கிப் பதுங்கி முன்னேறும்

    பத்து வயசுச் சிறுமி.

    அவளிடமிருந்து அதைக் காக்க

    எம்பி எம்பித் துரத்தும்

    ஐந்தே வயசுப் பாலகன்.

    எப்படியும் பிடிக்க வேண்டும்

    என்ற முனைப்பில்

    தடுக்க வந்த தம்பியை

    அடித்து விடுகிறாள் அக்கா.

    அவனும் ஆற்றாமையால் கூவுகிறான்,

    அன்று தும்பியைக் கல் தூக்க வைத்தாள்

    இன்று இதன் இறகைப் பிய்ப்பாளோ.?

    பாவம் பட்டாம் பூச்சி !

    கடவுளே, நீ அதைக் காப்பாற்று.

    பிறிதொரு நாள், குறும்பு செய்த பிள்ளையை

    கூடத்தின் ஓரத்தில் நிற்க வைக்க,

    நில்லாமல் ஓடிப்போனவனைப் பிடித்து

    ஓரடி அடித்தாள் அவன் தாய்.

    சிறிது நேரம் அழுது ஓய்ந்தவன்

    மாடியின் மேலேறி வானம் பார்த்து

    வேண்டிக்கொண்டான்,

    " பட்டாம் பூச்சியைக் காத்த கடவுளே,

    என்னையும் இவர்களிடமிருந்து காப்பாற்று.!"

    ***

    கவிதைத் தாகம்

    நண்பரின் கவிதை ஒன்று படித்தேன்.

    நிலத்தடி நீர் வேருக்குக் கீழே

    வெகு ஆழம் போனது ,

    கடல் நீர் கன தூரம் கசிஞ்சு

    ஊருக்குள் வந்தது,

    என்றெல்லாம் அங்கலாய்த்து

    என்று தணியும் என் தாகம் என்று

    ஏக்கத்தில் எழுதியிருந்தார்.

    வானம் பொய்ப்பதும், நிலம்

    வறண்டு வெடிப்பதும் ,

    பயிர்கள் வாடுவதும்,

    கடல் சீறுவதும்,

    இயற்கையின் நியதி,

    நாமென்ன செய்ய

    நம்மால் தவிர்க்கப்பட முடியாதவை,

    அனுபவிக்கப்பட்டே ஆகவேண்டும்,

    என்றேன் நான்.

    நாம் ஒருமுகப்பட்டு செயலாற்றினால்,

    வானத்தையும் வளைக்கலாம்

    என்றார் அவர்.

    அவரது எழுத்தின் தாக்கமோ,

    என் எண்ணத்தின் குறையோ,

    வானம் பொத்துக்கொண்டு,

    தமிழ் நாடே வெள்ளக் காடாக உள்ளது.

    உணர்ந்ததை இன்னும் விளக்க

    என்னால் இயலவில்லை,

    எண்ணியதனைத்தையும் கவிதைக்குள்

    முக்கியெடுக்கும் ஆற்றலுமில்லை.

    நானென்ன,

    வார்த்தைகளால் தவமியற்றி

    வரங்கேட்கும் கவிச்சித்தனா....

    பார்த்தவற்றை கவிதைக்குள்

    பதுக்கி வைக்கும் பகல்திருடனா...

    பாட்டை ஆளும் பாட்டாளியா..!

    ஊர்க்குருவி நானும் பறக்கிறேன் ,

    ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவே.

    ***

    செய்யாத குற்றம்.

    தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

    நிறையவே பார்த்து விட்டு,

    நித்திரை செல்லப் போகுமுன்,

    அன்றைய நிகழ்வுகள்

    நினைவினில் நிழலாடும்.

    என்னென்னவோ செய்ய எண்ணியவை

    செய்தே முடிக்காமல் மறக்கப்பட்டிருக்கும்.

    மறந்தாலும் பாதகமில்லை

    முக்கியமானதாய் இல்லாதவரை.

    கண்ணயர சில நேரம் பிடிக்கும்

    பின் கண் மூடி உறங்கிவிட்டால்

    கலர்கலராய்க் கனவுகள், அலை அலையாய்

    கதை போல விரிந்து பரவும்.

    எழுத்தில் கொண்டு வந்தால்

    இனிதே ரசிக்கலாம்,

    இடுகையில் பதிக்கலாம்

    என்றெல்லாம் கனவினூடே

    நினைவுகளும் கூடவே வரும்,

    விடியலில் எழுந்து இனிய கனவுகளை

    அசை போட முயன்றால், மசமசவெனத்

    தெளிவின்றித் தோன்றுவதை எழுத்தில்

    வடிக்க வார்த்தைகளும் வராது,

    கற்பனையும் கை கொடுக்காது.

    அதிகாலை நடை பயிலுகையில்

    எழுதுவதற்கு விஷயங்கள் யோசிக்க

    Enjoying the preview?
    Page 1 of 1