Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yuga Purushan Kathai
Yuga Purushan Kathai
Yuga Purushan Kathai
Ebook220 pages1 hour

Yuga Purushan Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மஹாகவி பாரதிக்கு அறிமுகம் தேவையில்லை. பாரதியும் தன்னைத்தானே யாரிடமும் சுய அறிமுகம் செய்து கொண்டதில்லை

காலம் தான் பாரதியின் செயல்பாடுகளைத் தீர்மானித்தது. அந்தக் காலம் தான் பாரதியை நமக்கும் அறிமுகப்படுத்தியது. ஆக, காலத்தின் தேவைகள் உணர்த்திய வழியில் செயல்பட்ட அந்த மானுடனை, 'இவன் தான் பாரதி. தெரிந்து கொள்ளுங்கள்' என்று அந்தக் காலம் தான் நமக்கு அவனைத் தெரியப் படுத்தியும் வைத்தது. காலத்தின் கைபட்டு உருவான பன்முகப்பட்ட கீர்த்திகள் நிறைந்தவனான் பாரதி.

அதனால் தான் காலங்களின் தேவைகள் வெவ்வேறாக மாறிப் போயினும் அந்த மாறிய காலங்களுக்கும் பயன் தருகிற வகையில் காலம் கைப்பட்ட பாரதியின் தேஜஸ் மட்டும் மங்காமல், மறையாமல் இன்னும் இன்னும் ஒளியை பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது. அதனாலேயே அவன் யுகப்புருஷன்.

பாரதி வாழ்ந்த காலத்தில் நாம் வாழக் கொடுத்து வைக்கவில்லை. இருப்பினும் அவனோடு நட்பு பூண்டு பிரமிப்புடன் வாழ்ந்த பலர் அவனைப் பற்றிச் சொல்லி, எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்புகள் பல கோணங்களில் சரித்திரமாய் காணக் கிடைக்கின்றன. அந்த வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் முயற்சியாகவே இந்த நூல் அமைய வேண்டியதும் காலத்தின் கட்டாயமாயிற்று என்றே நினைக்கிறேன்.

வாருங்கள், மஹாகவியை தரிசிப்போம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580118706622
Yuga Purushan Kathai

Read more from Jeevee

Related to Yuga Purushan Kathai

Related ebooks

Reviews for Yuga Purushan Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yuga Purushan Kathai - Jeevee

    https://www.pustaka.co.in

    யுகபுருஷன் கதை

    Yuga Purushan Kathai

    Author:

    ஜீவி

    Jeevee

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jeevee

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    யுகபுருஷன்

    %25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25BF

    கதை

    1

    தென்பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர் திருநெல்வேலி.

    திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து பெறப்படுகின்ற காரணம் எளிமையானது. நெல் வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்து இருந்ததால் அவ்வூர் திருநெல்வேலி என்று பெயர் கொண்டது எனலாம்.

    இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும் பெரிய நகரங்கள் எல்லாம் இதற்கு முன்னால் ஜில்லா என்று அழைக்கப்பட்டன.. திருநெல்வேலியும் ஒரு ஜில்லா தான்.

    திருநெல்வேலி ஜில்லாவில் எட்டையபுரம் சின்ன ஊர். இப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியாக இருக்கிறது. எட்டையபுரம் இளசை என்றும் அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னரின் ஆளுகைப் பகுதியாக இருந்த இடம். பின்னர் பாளையக்காரர்கள் வசம் வந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சமஸ்தான மன்னர்கள்.

    அது 1882-ம் ஆண்டு. எட்டையபுரத்தில் வாழ்ந்த சின்னசாமி ஐயருக்கும், இலஷ்மி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். குழந்தையை சீராட்டி வளர்த்தனர். சுப்பிரமணியனை செல்லமாக சுப்பையா என்று அழைத்தனர். சின்னசாமி அய்யர் சமஸ்தானத்தில் கணக்கு வழக்குகளை மேற்பார்வை செய்யும் பணியில் இருந்தார். வசதியான குடும்பம் தான். குழந்தையின் ஐந்து வயது பிராயத்தில் தாயார் இலஷ்மி அம்மாள் இயற்கை எய்தினார்.

    தாய்வழி பாட்டனாரின் வளர்ப்பில் குழந்தை சுப்பையா வளர்ந்தான். ஆங்கிலம், தமிழ், கணிதப் புலமையில் தேர்ச்சி பெற்றிருந்த சின்னசாமி ஐயர் தன் அருமை மகனும் இப்படியான கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சுப்பிரமணியனுக்கோ கணிதம் என்றால் அது வேப்பங்காயாகக் கசந்தது. அவனுக்கோ கவி புனையும் ஆற்றலில் பெரும் ஈடுபாடு இருந்தது. கண்டிப்பு கொண்ட தந்தை தெருப் பிள்ளைகளுடன் கூடி ஆடி விளையாட தன்னை அனுமதிக்காமல் இருந்த நேரத்து தன் மனதில் குவிந்த ஏக்கத்தை பிற்காலத்தில் தன் கவிதை வழியே பாரதியார் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார்.

    பாரதிக்கு ஏழு வயதாகும் பொழுது சின்னசாமி அய்யர், வள்ளியம்மாள் என்னும் மங்கையை மறுமணம் புரிகிறார். வழக்கமான சீற்றம் கொண்ட சிற்றன்னையாக இல்லாமல் வள்ளியம்மாள் தாயில்லா சிறுவன் சுப்பிரமணியனுக்கு பெற்ற தாயாகத் திகழ்ந்தாள். சிறுவனுக்கு உபநயனம் செய்து வைக்கின்றனர்.

    சமஸ்தான பணிகளுக்குச் செல்லும் பொழுது சிறுவன் சுப்பிரமணியனையும் கூடவே அழைத்துச் செல்லும் பழக்கமும் சின்னசாமி அய்யருக்கு இருந்தது. அதுவே சுப்பிரமணியனுக்கான சமஸ்தான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது.

    எட்டையபுர மன்னருக்கு தமிழ்க்காதல் உண்டு. சமஸ்தானத்து மன்னர் அவையில் தமிழ் மொழியில் ஆற்றல் மிகுந்தவர்கள் கெளரவிக்கப்பட்டனர். சமஸ்தானப் புலவர்கள் தரும் ஈற்றடிக் கொண்டே முழுக்கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தான் சிறுவன் சுப்பிரமணியன்.

    இந்த ஆற்றல் சுப்பிரமணியனின் பதினோரு வயதில் கவிதைப் பிழம்பாய் ஜொலித்து நாம் இன்றும் முண்டாசுக் கவிஞனை நினைவு கொள்கிற 'பாரதி' என்ற பட்டப்பெயர் எட்டையபுர அவைக் களத்தில் அவன் கொள்ள ஏதுவாயிற்று.

    சிவஞான யோகியார் அக்காலத்தில் சிறப்புப் பெற்ற புலவர். அவர் தலைமையில் எட்டையபுர தமிழ்ச் சான்றோர் கூடியிருந்த அரசவையில் பதினோரு வயது சுப்பிரமணியனின் கவிதை புனையும் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்து எட்டையபுர மன்னர் 'பாரதி' என்ற பட்டத்தை அவனுக்கு அளிக்கிறார். சிறுவன் சுப்பிரமணியன், சுப்பிரமணிய பாரதி ஆகிறான்.

    பாரதியின் தந்தைக்கோ தன் மகன் ஆங்கிலப் புலமையும், கணித மேன்மையும் கொண்டு தன்னை போல அரசவையில் அதிகாரி தோரணையில் உலா வர வேண்டும் என்ற கனவு. அந்தக் கனவை நனவாக்க பாரதியை திருநெல்வேலி திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்திருந்தார். அந்த வயதிலேயே ஆங்கிலக் கல்வி கற்பதில் பாரதிக்கு உள்ளூர ஒரு வெறுப்பு படிந்திருந்தது.

    காதற் வயப்பட்டோருக்கு விநோதமான அனுபவங்கள் உண்டு. காதலில் முதற் காதல் என்பதும் உண்டு என்போர் அனுபவப்பட்டோர். மராத்திய எழுத்தாளர் காண்டேகர் 'முதல் காதல் என்பது வெட்டி விட்டுப் போகும் மின்னல்' என்று சொல்லுவார். 'ஏதோ பருவக் கோளாறு; அது காதலே அல்ல' என்பது அவர் கட்சி.. ஒருவிதத்தில் அவர் சொல்வது நியாயம் தான். முதல் காதலுக்கு வாழ்க்கை பூராவும் அதை நினைத்து உருகுகிற, தேகம் பூராவும் உருக்குகிற சக்தி கிடையாது.. காண்டேகர் அகராதியில் முதல் காதல் உப்புக்கு சப்பாணி காதல். நிஜக்காதல் என்பது அதுக்குப் பின்னால் வருவது. இது தான் காதல் என்று காதலுக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொண்ட பின்னாடி அர்த்தபூர்வமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் விளைவது.

    'காதல், காதல், காதல் போயிற்-- சாதல், சாதல், சாதல்' என்று காதல் பொய்த்துப் போயின் சாதல் தான் என்று பரிந்துரைத்த பாரதிக்கும் முதல் காதல் அனுபவம் அவனது பத்து வயசில் வாய்த்ததாம். பத்து வயசில் வாய்ப்பதெல்லாம் காதலா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் பாரதி தனது அந்தப் பிள்ளைக் காதல் உணர்வைப் பற்றித் தெளிவாகச் சொல்கிறான்..

    "ஆங்கோர் கன்னியைப் பத்து பிராயத்தில்

    ஆழ நெஞ்சிற் ஊன்றி வணங்கினன்;

    ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்

    எந்தை வந்து மணம் புரிவித்தனன்..

    அதெல்லாம் சரி; அதற்கப்புறம் அவன் சொல்வது தான் முக்கியமானது:

    "மற்றோர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்

    மாதரா ளிடைக் கொண்டதோர் காதல் தான்

    நிற்றல் வேண்டுமென உளத்தெண்ணிலேன்.." என்கிறான்.

    அந்தக் காதலை தன் தந்தையிடம் எடுத்துக் கூறும் திறனற்றுப் போயினேன் என்றும் சொல்கிறான். காண்டேகர் சொல்கிற மாதிரி முதல் காதல் காதலே இல்லை என்பதினால் அதைப் பற்றி அதிகமாகச் சொல்வதற்கும் ஏதுமில்லை.

    'முதல் காதலாவது, இரண்டாவது காதலாவது?.. காதல் என்பது ஒன்று தான் ஐயா!' என்பவர்களால் காண்டேகர் சொல்லும் இந்த முதல் காதலைப் புரிந்து கொள்ள முடியாது என்பது வாஸ்தவம் தான்.

    பாரதிக்கு வாய்த்தது அவன் தந்தையார், சிற்றன்னை பார்த்து முடித்து வைத்த திருமணம்.

    நெல்லை இந்துக் கல்லூரி சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே பாரதியாரின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார் சின்னசாமி அய்யர். அந்தக் கால இளம் பருவ விவாகம். கடையம் செல்லப்பா அய்யரின் புதல்வி செல்லம்மாள் பாரதியின் கரம் பற்றும் பாக்கியம் பெற்றாள். திருமணத்தின் போது பாரதிக்கு 14 வயது; செல்லம்மாவுக்கோ ஏழே வயது. பிற்காலத்தில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைப் பெருமையைப் பார்க்கும் பொழுது போட்டி போட்டுக் கொண்டு இருவரும் ஒருவர் பெருமையில் இன்னொருவரின் பெருமையைக் கரைத்ததாகவே தெரிகிறது.

    இந்தத் திருமணம் நடந்து முடிந்த ஓராண்டிலேயே இதற்காகவே காத்திருந்து நடத்தி வைத்த கடமையை முடித்தாற் போல பாரதியின் தந்தையார் சின்னசாமி அய்யர் காலமானார். 'தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ, ஐயா?'-- என்று சிவபெருமானை நினைத்து பொன்னையா பிள்ளை இயற்றி, என்.ஸி. வஸந்த கோகிலம் பாடிய பாடல் ஒன்று உண்டு. அம்பலவாணனின் அப்படியான நிலைதான் பாரதிக்கும்.

    ஐந்து வயதில் தாயை இழந்து, பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தன் துயரம் தன்னையே சுமக்க வறுமை சூழ்ந்த நிலையில் அநாதை போல வாழ்க்கையின் வாசல் படிகளில் பாரதி நின்றார்.

    தனது சுயசரிதைக் கவிதையில் பாரதி இதை சொல்லும் பொழுது இறுக்கிப் பிழிந்த துணி மாதிரி நம் மனமும் துவண்டு போகும்.

    பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தன் பெற்றோர் வாழக் கொடுத்து வைத்தவர்களாலும் இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது.

    ***

    என்னை ஈன்று எனக்கு ஐந்து வயது பிராயத்தில்

    ஏங்க விட்டு விண் எய்திய தாய்

    தனது சுயசரிதையில் பாரதியார்

    ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்

    ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்

    ஈண்டு பன்மரத்து ஏறி இறங்கியும்

    என்னொடு ஒத்த சிறியர் இருப்பரால்;

    வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்

    வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,

    தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்

    தோழமை பிரிதின்றி வருந்தினேன்.

    சுயசரிதை: 4

    பள்ளிப் படிப்பினிலே மதி

    பற்றிட வில்லை எனினும் தனிப்பட

    வெள்ளை மலரணை மேல் அவள்

    வீணையும் கையும் விரிந்த முகமலர்

    விள்ளும் பொருள் அமுதும் கண்டேன்

    வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா

    'ஸரஸ்வதி காதல்'--1

    செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது;

    தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன;

    நலம் ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை

    நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்.

    சுயசரிதை: 29

    தந்தை போயினன், பாழ்மிடி சூழ்ந்தது

    தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;

    சிந்தையில் தெளிவு இல்லை; உடலினில்

    திறனும் இல்லை; உரன் உளத்து இல்லையால்

    எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?

    ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?..

    சுயசரிதை

    2

    வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை.

    அதிலும் ஒரு விசேஷம் என்னவென்றால் எந்த நெருக்கடியிலும் அடுத்து நடக்க வேண்டியது இது தான் என்று ஏற்கனவே யாரோ தீர்மானித்து வைத்திருக்கிற மாதிரி அந்த அந்த நேரத்து அது அது நமது எந்த பிரயாசையும் இன்றி சொல்லி வைத்தாற் போல நடப்பது தான்.

    இதை பகவான் கிருஷ்ணர் உபதேசித்ததாகச் சொல்லப்படும் 'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது' என்ற கீதாச்சாரம் வரியோடு இணைத்துச் சொல்லலாம். நடப்பது எதுவும் நம் தேவைகளுக்காக நம்மை இணைத்துக் கொண்டு தான் செயல்படுகின்றன. நம்மை நாமே புரிந்து கொள்வதற்கான ஞானம் இது பெரியோர் சொல்வர்.

    %25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF

    தன் தந்தை மறைவுக்குப் பிறகு அலமந்து நின்ற பாரதியார் வாழ்விலும் அவர் அடுத்தப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டல் கிடைக்கிறது. பாரதியாரின் தந்தை சின்னசாமி அய்யரின் சகோதரி காசிமாநகரில் இருந்தார். அந்த மாதரசியின் பெயர் குப்பம்மாள். குப்பம்மாளும் அவர் கணவர் கிருஷ்ணசிவனும் தமிழ் நாட்டிலிருந்து சிவ ஸ்தலமான காசிக்கு வரும் யாத்திரிகர்களுக்கு வேண்டுகிற உதவிகளை தாமாக முன் வந்து செய்யும் மேன்மயான குணம் பெற்றிருந்தார்கள். சொந்த சகோதரனின் மகன் நிலை புரிந்ததும் 'நீ காசிக்கு வந்து விடு' என்று அத்தையிடமிருந்து பாரதியாருக்கு அழைப்பு வந்தது. எந்த சக்தி பாரதியை உந்தித் தள்ளியதோ தெரியவில்லை, மறுக்காமல் பாரதியும் உடனே காசி கிளம்பி விட்டார்.

    'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்பது தமிழ்ச் சான்றோனின் அமுத வாக்கு. யாதும் ஊராயினும் ஒவ்வொரு தலத்திற்கும் இயற்கையின் கொடையால் விதவிதமான நேர்த்திகள் கிடைத்திருக்கின்றன என்பதும் நமது புரிதல்களில் ஒன்றாகியிருக்கிறது. காசி 15000 வருடங்களுக்கு மேலான பழைமை வாய்ந்த இடம்.

    புனித

    Enjoying the preview?
    Page 1 of 1