Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhalukku Yengum Marangal
Nizhalukku Yengum Marangal
Nizhalukku Yengum Marangal
Ebook91 pages45 minutes

Nizhalukku Yengum Marangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003034
Nizhalukku Yengum Marangal

Read more from Anuradha Ramanan

Related to Nizhalukku Yengum Marangal

Related ebooks

Reviews for Nizhalukku Yengum Marangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhalukku Yengum Marangal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    நிழலுக்கு ஏங்கும் மரங்கள்

    Nizhalukku Yengum Marangal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    தாங்க்யூ.

    கெளதம் தன் தாயின் கையிலிருந்த காபி தம்பளரை வாங்கியபடியே சிரிக்கிறான். கண்களில் தூக்கம் இன்னமும் கலையவில்லை.

    போறுமே... அம்மாவுக்கு எதுக்குடா தாங்க்ஸ்.

    பூரணி, அவன் முன் நெற்றி முடியைச் செல்லமாய்ப் பிடித்துக் குலுக்க... அவன் குறும்புடன் ஒரு கண்ணை மாத்திரம் இடுக்கியபடியே தாயைப் பார்க்கிறான்.

    வேண்டாம்னா, இதோ இந்தப் பாக்கெட்லே திருப்பிப் போட்டுடு.

    மடையா, வார்த்தைய எப்படி பாக்கெட்லே போட முடியும்?

    கையிலே வாங்கி, பையிலே போடேன்.

    கெளதம், சிறு குழந்தையைப் போலச் சிணுங்க... பூரணி, மூடிய கையை அவனது தொளதொளத்த நைட் டிரஸ்ஸின் பாக்கெட்டுக்குள் நுழைத்து கிச்சு கிச்சு மூட்ட...

    வாவ்... என்னம்மா இது...

    எழுந்திருடா தடியா, மணி ஏழாகப் போகுது.

    பூரணி மிகச் சிரமப்பட்டுக் குரலில் கடுமையை வரவழைத்துக்கொள்ள முயன்று, தோற்றுப்போய், மகனைப் பார்த்துப் பரிவாய் சிரிக்கிறாள்.

    எழுந்திரும்மா... காலேஜுக்கு நேரமாச்சு இல்லே...

    அந்தப் பதினெட்டு வயசுக் குழந்தைக்கு, தினசரி இவள் பாடும் பள்ளியெழுச்சி இது.

    ஒரு காலத்தில் இவள் கையில் பூனைக்குட்டி போல உறங்கியவன்... இன்று அவளையே மிஞ்சும்படியாக உயரத்திலும், வளர்த்தியிலும்...

    ஏன் மெடிகல் காலேஜில் இடம் கிடைத்த சந்தோஷத்தில் அவன் பூரணியை, அப்படியே தூக்கி இரண்டு சுற்று சுற்றி அவளை அலற அடித்தானே...

    பூரணி இவனது அம்மா மட்டுமல்ல. தகப்பன், சிநேகி தன் எல்லாமும் அவளே...

    சின்ன வயசிலிருந்தே அவனுக்குப் பூரண சுதந்திரம் அளித்திருந்ததாலோ... என்னமோ... அம்மாவிடம் எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது என்கிற பாகுபாடு கிடையாது.

    அவனது உலகம் அம்மா... நண்பர்கள் கேலி செய்யும் அளவுக்கு... பூரணியே பயப்படும் அளவுக்கு அம்மா பைத்தியம் அவன்.

    அம்மா என் ஃபிரண்ட்ஸ்க்கு ஒரு சந்தேகம்.

    என்னடச?

    நீ என்னோட சொந்த அம்மாதானா, இல்லே சின்னம்மாவான்னு... ஏன்னு கேட்டா... அவனுங்க அம்மாக்களுக்கு எல்லாம் தலை நரைச்சாச்சு... உடம்பு எக்கச்சக்கமா ஊதிப்போச்சு. எழுந்தா உட்கார முடியல்லே, உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல்லே.

    அது சரிதான். உன் ஃபிரண்ட்ஸோட அம்மாக்களுக்கு அவங்க எல்லாரும் கடைசிப் புள்ளைங்க இல்லையா? ராகவனோட அம்மா பாட்டியாயாச்சு, ஸ்ரீதரோட அக்காகூட ரெண்டாவது பிரசவத்துக்கு வந்திருக்கா... இங்கே அப்படியா...? நீதானே என்னோட மூத்த குழந்தே. என்னோட பதினேழாவது வயசுல நீ பொறந்தே. இன்னிக்கு உனக்கு வயசு பதினெட்டு. எனக்கு முப்பத்தியஞ்சு. இன்னும் அஞ்சாறு வருஷம் கழிச்சுப்பாரு… நானும் புஸ்ஸுன்னு ஊதிப்போய், தலை நரைச்சு, எழுந்தா உட்கார முடியாம உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாம...

    ஸ்டாப், ஸ்டாப்.

    பூரணி சொல்லி முடிக்கு முன் கெளதம், அவளுடைய வாயைப் பொத்துவான்.

    நீ அந்த மாதிரி ஆகமாட்டே. எப்பவும் இப்படியே தான் இருப்பே.

    ஏன், எனக்கு மாத்திரம் பாட்டியாகணும்னு ஆசை இருக்கக்கூடாதா?

    தாராளமா நீ பாட்டியாகு. ஆனா, அழகான, இளமையான பாட்டியாவே இரு.

    கெளதம், தாயின் முகத்தை, இரு கைகளிலும் ஏந்திய படி சொல்லுவான்.

    எல்லா விஷயங்களிலுமே தன் தாய், மற்ற தாய்களிலிருந்து மாறுபட்டிருக்க வேண்டுமென்பதே அவன் ஆசை.

    அவள், அவளது ரசனையை வளர்த்தவள். கெளதம் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஐப்பசி மாத அடை மழையை, மழைச்சரம் ஜலதாரை வழியே லயத்துடன் வழிவதை அவனுடன் ரசித்திருக்கிறாள்,

    கெளதம்... மழைச் சத்தத்துக்கு ஏத்த மாதிரி மெட்டு போடட்டுமா…?

    எங்கே... போடு, போடு...

    ஸரி கப கரி கப தப ஸரிக ஸ...

    "கெளதம், உழக்கு மாதிரி அவளெதிரில் நின்று விரலைச் சொடுக்குவான்.

    அது மட்டுமல்ல. அவனுடன் சேர்ந்து கோலி விளையாட, காற்றாடிக்குக் கண்ணாடித் தூளைப் பொடி செய்து பசை காய்ச்சி, மாஞ்சா நூல் தயாரிக்க, விடிகாலைப் பொழுதில் ரோஜாப்பூ மலருவதை, பனித் துளி மெல்ல மெல்ல உருகி 'பொட்'டென உதிருவதை, அவனுடன் படுத்து இந்திர ஜால் காமிக் படித்து ரசிக்க, கண்களில் துண்டைச் சுற்றிக் கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாட...

    எல்லாமே அவளால்தான் முடியும்.

    இயல்பிலேயே குழந்தைத்தனம் மிகுந்தவள்தான் பூரணி. பெற்றோர்தான் அந்தக் குழந்தை மனசைப் புரிந்துகொள்ளாமல், குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல ஒரு முரட்டுக் கணவனை இவளுக்காகத்

    Enjoying the preview?
    Page 1 of 1