Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velli Kanavu
Velli Kanavu
Velli Kanavu
Ebook128 pages1 hour

Velli Kanavu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003004
Velli Kanavu

Read more from Anuradha Ramanan

Related to Velli Kanavu

Related ebooks

Reviews for Velli Kanavu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velli Kanavu - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    வெள்ளிக் கனவு

    Velli Kanavu

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    'இனியும் தேடுவதில் அர்த்தமே இல்லை’இந்த முடிவுக்கு கங்கா ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே வந்து விட்டாள். ஆனாலும் மனசு கேட்கவில்லை. விமான நிலையத்துக்கு வந்திருக்கிறாள்.

    எப்பொழுது இலங்கையிலிருந்து அகதிகள் வருவதாகத் தகவல் தெரிந்தாலும் கங்கா, எல்லாக் காரியங்களையும் போட்டது போட்டபடி வைத்துவிட்டு ஓடி வருவாள்...

    அவளது பார்வை- எங்கேயாவது தன் தாய், அல்லது தங்கையின் முகம் தென்படுகிறதா என்று அலசும்-

    சில முகங்கள் பரிச்சயமானவை போலத் தோற்றமளிக்கும்- கிட்டப் போனால்- வேறு யாரோவாக இருப்பார்கள்...

    சில சமயங்களில் நிஐமாகவே தெரிந்த முகங்கள், அவளது கண்களில் சிக்குவதும் உண்டு.

    உடனே பரவசப் புன்னகை. அது அப்படியே பூவாய் மலர்ந்து - கடைசியில் துக்கம் தாளாமல் 'ஓ'வென்று ஒப்பாரியில் போய் முடியும்...

    யாரு... கங்காவா... அந்தப் பழைய கங்காவா... நீ அந்த விபரீதத்துல இருந்து தப்பிச்சிட்டியா... ஓ... அந்தக் கொடுமைய வாயைத் திறந்து வேற சொல்லணுமா...

    அக்கா, உங்க கூட எங்க அம்மா, தங்கச்சி வந்தாங்களா... விவரம் ஏதும் சொல்லி அனுப்பினாங்களா... தகவல் போக்குவரத்து நின்றுபோய் ரெண்டு வருஷமாயிட்டுது...

    யாரு... உங்க அம்மாவா... நாங்க ரொம்ப நாளாவே பார்க்கலையே... அவங்க எல்லாம் எப்பவோ தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதாக இல்லே நினைச்சிட்டிருந்தோம்... வரல்லையா... 'லிஸ்ட்'டுல பெயர் படிச்சாங்களா...

    'லிஸ்ட்'டில் பெயர் படிக்கப்படுவது என்பது, நரகம். கண் காணாத ஊரில்- தங்களின் உயிரின் உயிர்... ரத்தத்தின் ரத்தம்- மண்ணோடு மண்ணாகப் போய் விட்டதை உறுதி செய்வதற்காக வாசிக்கப்படும் பட்டியலின் செல்லப் பெயர் தான் லிஸ்ட்...

    இந்த தடவையும் ஏமாற்றம் தான்...

    கங்கா, புடவைத் தலைப்பினால் முகத்தில் பெருகிய வியர்வையைத் துடைத்தபடி விமான நிலையத்தின் வரவேற்பு கூடத்தில் ஓர் ஓரமாய் நின்றாள்.

    அ...ம்...மா... பசிக்குது...

    இது நேரம் வரையில் பொறுமையாய் அம்மாவுடன் அவளது விரலைப் பிடித்தபடி அலைந்த சசி குரல் கொடுத்தான்...

    பெற்றவளையும், சகோதரியையும் தேடும் அவசரத்தில்- குழந்தைக்கு பால் புட்டியை எடுத்து பையில் போட்டுக்கொள்ள கூட மறந்துவிட்டாள்.மூன்று வயசு சிறுவன். எத்தனை நேரம் தான் பசி பொறுப்பான்...

    கங்கா, ஒரு கோப்பை தேநீரை வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் பீங்கான் தட்டில் ஊற்றி, ஊதி மகனின் உதட்டில் பதித்தாள்...

    கண்கள் அவளையுமறியாமல் கலங்கியது...

    இந்த நிமிஷம்- அவளது வாழ்க்கைக்கு ஓர் துணை- பக்க தேவை... உண்மையானப் பாசமும், நேசிப்பும் பெற்றவளைத் தவிர- கூடப் பிறந்தவளைத் தவிர வேறு யாரிடம் எதிர்பார்க்கமுடியும்...

    அம்மா... எங்கே இருக்கே...

    இருக்கிறாயா... இல்லையா...

    நாலு வருடங்களுக்கு முன் அம்மா, யமுனாவைவும் அழைத்துக்கொண்டு தமிழ் நாட்டுக்கு வந்திருந்தாள். அது தான் கடைசி. அதற்குப் பின் அவர்களிருவரையும் பார்க்கும் சந்தர்ப்பமே கங்காவுக்கு கிடைக்கவில்லை...

    ஆனால்-

    அப்பொழுதே கங்காவின் தாய் அவளிடம் படித்துப் படித்துச் சொன்னாள்:

    கங்கா... வெறும் கல்லூரி படிப்புக்காக மட்டும் உன்னை நான் இங்கே விட்டுப் போகல்லே... நாட்டியத்துல நீ ஈடு இணையில்லாதத் தாரகையாகணும். உன் பாட்டி - மல்லிகேஸ்வரியோடப் பெயரைச் சொல்லும்படியா... இதைத் தவிர உனக்கு வேற எந்த சிந்தனையுமே இருக்கக் கூடாது…, படிப்பு கூட நாட்டியத்துக்குப் பிறகு தான்... நான் சொல்றது புரியறதா...

    கங்கா, தங்கையின் பின்னலை விளையாட்டாய் இழுத்துக் கொண்டே தலையாட்டினாள்...

    மதுரம்- கங்காவின் தாய்- தன் மகள் பத்தொன்பது வயதுக்கும் சின்னக் குழந்தையாகவே இருப்பதை நினைத்துப் பெருமூச்செறிந்தாள்.

    இன்னிக்கு உன் டான்ஸ் டீச்சரைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு இருக்கேன்...

    யாரு... அந்த அல்சேஷம்மா கிட்டயா... வேற வினையே வேண்டாம்... நீ பேசாமக் கிளம்பு- உம்... போறதுக்கு முன்னாலே ஒரு பட்டுப்புடவை, ரவிக்கைத் துணி, கொஞ்சம் பூ, பழம் வாங்கித் தா... உன் சார்புல அல்சேஷம்மா கிட்ட நானே கொடுத்துடறேன்...

    கங்கா, குருவை இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... முதல்லே வயசானவங்களை மதிக்கக் கத்துக்க... உன் பாட்டி சொன்னதை எல்லாம் மறந்துட்டியா...

    இல்லேம்மா... இருந்தாலும்...

    கங்காவின் குரல் அமுங்கி விட்டது...

    கங்காவின் பாட்டி மல்லிகேஸ்வரியைப் பற்றி - ஓரளவுக்கு அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள். ஏன், அவள் தாய் மதுரமே பேச்சுக்குப் பேச்சு சொல்லுவாள்.

    மல்லிகேஸ்வரி நாட்டியம்னா- கொழும்புவுல மட்டுமில்லே... தமிழ்நாடு, மலேயா, சிங்கப்பூர் எல்லா ஊர்களிலேயும் ரொம்பப் பிரசித்தம்...

    அம்மாவுக்கு அவனுக்கு குரு கொடுத்த சலங்கை- அப்படியே பத்திரமா என்கிட்ட இருக்கு... எப்படியும் என் பேத்தி கங்காதான் என்னோடக் கலை வாரிசா வருவாள்னு உன் பாட்டி அடிக்கடி சொல்லிட்டே...

    கங்காவுக்குத் தெரியும்; தன் அம்மாவுக்கு தன்னைப் பெற்றவளைப் பற்றிப் பேசத் தொடங்கினால் நேரம் போவது தெரியாது என்பது...

    அது மட்டுமில்லை... இந்த பரதநாட்டியத்தினால் பாட்டி நிறைய கஷ்டப்பட்டாள் என்பதும் தெரியும். அந்த நாளில் தாத்தா பெரும் செல்வந்தர். மல்லிகேஸ்வரியின் நடனத்தைப் பார்த்து மோகித்தே - 'மணந்தால் இவளைத்தான் மணப்பேன்’என்று ஒற்றைக் காலில் தவமிருந்து பெற்றோரின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி அவளைக் கைப்பிடித்தாராம். மணமான பிறகு மனைவி. நாலு பேர் பார்க்க, சபையில் ஆடக் கூடாது என்று கட்டளையும் விதித்தாராம்…

    அதெல்லாம் பெரிய கதை... கங்காவின் தாய் மதுரம்- கண்களில் ஈரம் படர- மெல்லியக் குரலில் கதை கதையாய் சொல்லுவாள்.

    தாத்தாவின் வார்த்தையை மீறி எதையும் செய்தறியாதப் பாட்டி- அன்றைக்கு தனது சலங்கையை எடுத்து சந்தனப் பேழைக்குள் போட்டு மூடி வைத்தவள் தான். தனது ஒரே மகளுக்கு கூட தனதுக் கலையைக் கற்றுத் தரவில்லை... -

    ஏன், உன்னை சபையிலத்தான் ஆடக் கூடாதுன்னு சொன்னேனே தவிர- பெத்த மகளுக்கு கத்துத் தரக் கூடாதுன்னு ஒருபோதும் சொல்லலையே... அவளுக்கு நீ தாராளமாக் கத்துத்தரலாம்...

    தாத்தா இப்படியொரு நாள் சொன்னபோது மட்டும். பாட்டி - நிதானமாய். ஆனால் அழுத்தமாய் சொன்னாளாம்-

    எதுக்கு அவளுக்கு இதைக் கத்துத் தருவானேன்... நாளைக்கு அவ புருஷன் வந்து நிறுத்துடீயின்னு சொல்லுவானேன்... இவ உங்க பொண்ணாகவே வளரட்டும்... என் பொண்ணு வயித்துல ஒரு புழு பூச்சி பொறக்காமயாப் போயிடும்... நிச்சயமா என் பேரைச் சொல்ல ஒருத்தி - என் பேத்தியா வந்து பொறப்பா...

    தன் மகள் பூப்படைவதற்கு முன்பே இப்படிச் சொன்ன மல்லிகேஸ்வரி, மகள் வயிற்றுப் பேத்தியான கங்காவை எட்டு வயது வரை வளர்த்தாள். ஆனால் பேத்திக்கு நாட்டியம் சொல்லித் தர ஆரம்பிக்கும் முன்பே கண்

    Enjoying the preview?
    Page 1 of 1