Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pani Vadiyum Pookkal
Pani Vadiyum Pookkal
Pani Vadiyum Pookkal
Ebook108 pages53 minutes

Pani Vadiyum Pookkal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 200 novels, 150 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466145
Pani Vadiyum Pookkal

Read more from Manimala

Related to Pani Vadiyum Pookkal

Related ebooks

Reviews for Pani Vadiyum Pookkal

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pani Vadiyum Pookkal - Manimala

    15

    1

    அன்று அதிசயமாய் சூரியனைக் காணோம். மழை வேண்டுமா என்று ஆசையைத் தூண்டி, கருமேகங்கள் ஒன்று சேரத் தொடங்கின.

    பூங்கோதையும், தனசேகரனும் சற்றுத் தள்ளி என்னவோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

    திலகவதி விசனமாய், நாற்காலியில் அமர்ந்திருந்தாள். நொடிக்கொருதடவை துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

    அந்த மருத்துவமனை வெகு சுத்தமாய் இருந்தது.

    முகுந்தன், மாமியாரின் அருகில் வந்தான்.

    அத்தை...!

    என்ன மாப்பிள்ளை. காயத்திரி கண்ணைத் திறந்துட்டாளா? திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.

    இல்லே அத்தை... முதல்ல உட்காருங்க!

    என் பொண்ணு கண்ணைத் திறந்துப் பார்ப்பாளா மாப்பிள்ளை! நாங்க யாருக்கு என்ன பாவம் பண்ணினோம்? அவளுக்கேன் இப்படியொரு சோதனை?

    அழாதீங்க. காயத்திரிக்கு கண்டிப்பா நினைவு திரும்பும். நீங்க ரெண்டு நாளா எதுவுமே சாப்பிடலே. உங்க பொண்ணுக்கு எந்த ஆபத்தும் இல்லேன்னுதான் டாக்டர் சொல்லிட்டாங்களே! இப்பவாவது வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு, சாப்பிடுங்க. காயத்திரிக்கு ரெண்டு சேலை எடுத்துட்டு வாங்க!

    அவசியமான வேண்டுதல் என்பதால் திலகவதியால் மறுக்க முடியவில்லை.

    கிளம்பினாள்.

    முகுந்தன் ஆயாசத்துடன் நாற்காலியில் சாய்ந்து கொண்டான். அடிபட்ட இடங்கள் வலியில் கதறின. நடந்த சம்பவங்கள் மறுபடி கண்முன் விரிய- தலை சிலிர்த்துக் கொண்டான்.

    ‘வேண்டாம்... வேண்டாம்... மற!’

    தனசேகரனும், பூங்கோதையும் அவனருகில் வந்தமர்ந்தனர்.

    முகுந்த்... உங்கப்பா சொல்ற கூத்தைக் கேளு! என்றாள், கோபமாய்.

    என்னப்பா?

    இந்த விபத்துப்பத்தி போலீசுக்கு தகவல் தர்றது அவசியம், முகுந்தன்.

    என்னப்பா... தெரிஞ்சுதான் பேசுறீங்களா?

    புரியுதுப்பா! ஆனா, இது ஓய்வு பெற்ற நீதிபதி தனசேகரன் குடும்பத்துல நடந்த விபத்து. போலீசுக்கு தெரியப்படுத்தலேன்னா தப்பாப் போயிடும்.

    தெரிஞ்சாலும் தப்பாதான் பேசுவாங்க. தயவுப்பண்ணி இந்தப் பேச்சை இப்படியே விட்டுடுங்கப்பா!

    சார்! இடையே நர்ஸ் ஒருத்தி அழைத்தாள்.

    .....

    உங்க மனைவி கண் திறந்திட்டாங்க. டாக்டர் கூப்பிடுறார்.

    காயத்திரி முழிச்சிட்டாளா? ஜிவ்வென்று உடம்பெங்கும் புது ரத்தம் பாய... ஓடினான் முகுந்தன். பின்னாடியே அவனது பெற்றோரும்.

    கா... ய... த்... தி... ரி!

    இல்லை... மிஸ்டர் முகுந்தன். அவங்ககிட்டே பேச்சுக் குடுக்காதீங்க. ரொம்ப களைப்பா இருக்காங்க. ஓய்வு எடுக்க விடுங்க. பார்த்துட்டுப் போயிடுங்க டாக்டர் விக்ரம் அவன் தோளை அழுத்திச் சொல்ல - மெல்ல தலையாட்டினான், முகுந்தன்.

    டாக்டர் வெளியேற... உள்ளம் நெகிழ மனைவியையே பார்த்தான்.

    உதிர்ந்த சருகாய். கசக்கிப் போட்ட காகிதமாய், மலர்கள் உதிர்ந்த நாராய்... உடம்பெங்கும் காயங்களுடன்... பார்த்தாலே நெஞ்சம் அடைத்தது.

    அருகில் அமர்ந்து கையைப் பற்றி இதமாய் அழுத்தினான், முகுந்தன், தனசேகரன் மருமகளின் தலையை ஆறுதலாய் தடவிக் கொடுத்தார். அவரின் கண்களும் கலங்கி இருந்தன.

    காயத்திரி லேசாக சிரிக்க முயன்றாள். உதட்டில் இருந்த பெரிய காயம்... பயங்கர வலியைத் தர... முகம் சுருங்கினாள்.

    உனக்கு ஒண்ணுமில்லே காயத்திரி. நிம்மதியா ஓய்வு எடும்மா. பூங்கோதை வா... அவளைத் தொந்தரவு பண்ண வேண்டாம் என்றழைத்தார் தனசேகரன்.

    வெளியே இருக்கிறோம்மா...! அவளின் கன்னத்தை தட்டிக் கொடுத்துவிட்டு, கணவரின் பின்னாடி சென்றாள், பூங்கோதை.

    சோர்வுடன் கண்களை மூடித் திறந்த காயத்திரி, கணவனைப் பார்த்து கலங்கினாள்.

    என்னடா... வலிக்குதா?

    ஊகூம்... உங்களுக்கும்... நி... நிறைய அடி... பட்டிருக்கே... வ... வலிக்குதா?

    எனக்கெந்த வலியும் இல்லைடா. நீ பேசக்கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார். பேசாதே காயத்திரி!

    ப... பரவாயில்லீங்க... டா... டாக்டர் சொன்னாரா... அதைப்பத்தி...

    எதைப்பத்தி?

    நீ... நீங்க அப்பா ஆகப்போறதைப் பத்தி.

    ம்... சொன்னார்.

    சந்தோசமா இருக்குங்க... கடவுள் இவ்வளவு பெரிய விபத்திலேயும் நம்ம குழந்தையைக் காப்பாத்தி இருக்காரே... அவருக்கு நன்றி.

    முகுந்தன் அமைதியாக இருந்தான்.

    எ... என்னங்க! அமைதியா இருக்கீங்க... எவ்வளவுப் பெரிய சந்தோசமான விஷயத்தைப்பத்தி பேசுறேன்... பேசும்போது மூச்சு வாங்கியது.

    நீ முழுசா தேறி வரணும். அதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோசம். பாரு, எப்படி மூச்சுவாங்குது? பேசாம ஓய்வு எடு காயத்திரி.

    அ... அம்மா எங்கே? வரலையா?

    இப்பதான் வீட்டுக்கு அனுப்பி வச்சேன். வருவாங்க. முதல்ல... நீ கண்முழிச்ச விஷயத்தை அவங்களுக்கு சொல்லணும்! பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

    காயத்திரி நினைவுத் திரும்பிவிட்டாள் என்றதும், வெகுவாய் மகிழ்ந்தாள். திலகவதி.

    உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வருவதாகக் கூறினாள்.

    பூங்கோதை மகனை நோக்கி வந்தாள்.

    முகுந்த்...

    என்னம்மா?

    கொஞ்சம் அப்படி வாயேன்... உன்கிட்ட பேசணும்.

    இங்கேயே சொல்லும்மா!

    ப்ச்... அப்படி வாயேன்!

    வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றாள்.

    வளைவான மிகப்பெரிய குஷன் சோபா... அந்த ஹாலையே நிறைத்திருந்தது. அதில் தனசேகரன் அமர்ந்திருந்தார்.

    வரவேற்பில் இருந்த இளம்பெண் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த நான்கைந்து தொலைபேசிகளை எடுத்துப் பேசி சுறுசுறுப்பாய், முகத்தில் புன்னகை மாறாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

    நோயாளிகளும், உடன் வந்தோருமாக... எப்போதும் கூட்டம் வருவதும், போவதுமாக இருந்தது.

    தனசேகரனின் பக்கத்தில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.

    காயத்திரியோட அம்மாவுக்கு தகவல் சொல்லிட்டியா முகுந்தன்?

    இப்பதாம்பா... பேசினேன். வந்துட்டிருக்காங்க!

    பாவம்... அந்தம்மாவும் ரொம்ப உடைஞ்சுப் போயிட்டாங்க!

    ஆமாம்ப்பா... ரெண்டு நாளா பச்சைத் தண்ணீர்கூட குடிக்கல...

    இருக்காதா பின்னே? ஒரே மகளாச்சே!

    சரி... அந்த விஷயத்தை சொல்லுங்க!

    "அதை நீயே சொல்லேன் பூங்கோதை.

    Enjoying the preview?
    Page 1 of 1