Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjathil Nee
Nenjathil Nee
Nenjathil Nee
Ebook123 pages54 minutes

Nenjathil Nee

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 200 novels, 150 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466367
Nenjathil Nee

Read more from Manimala

Related to Nenjathil Nee

Related ebooks

Related categories

Reviews for Nenjathil Nee

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjathil Nee - Manimala

    14

    1

    அரக்குநிற பெங்கால் காட்டன் சேலையை லாவகமாய் மடிப்பு வைத்து கட்டி... ஜாக்கெட்டுடன் இணைத்து பின்பண்ணினாள். லேசான ஒப்பனையோடு பனிச்சிட்ட முகத்திற்கு தோதாய் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி... அதன்கீழ் சிறு தீற்றலாய் குங்குமம் இட்டு, வகிட்டிலும் சிறிது ஒற்றி எடுத்துவிட்டு... முழுதாய் தன்னை கண்ணாடியின் முன்னிருத்தி ஆராய்ந்தாள் அருந்ததி.

    படிப்படியாய் அமைந்திருந்த சுருட்டைமுடி... முதுகுவரை அடர்ந்திருந்தது. ஒற்றை ரோஜா காதோரம் எட்டிப் பார்த்தது. சற்றே நீள்வட்ட முகம். பேசினால்கூட குழிவிழுந்த கன்னம். மருட்சியாய் பார்க்கும் விழிகள். குவிந்த சதை திரட்சியான உதடுகள். ஒல்லியும் இல்லாது, குண்டாகவும் இல்லாத நடுத்தர உடல்வாகிற்கு ஏற்ற உபரம். மாநிறத்திற்கும் சற்று அதிகப்படியான நிறம்.

    அருந்ததி தன் அழகைப் பார்த்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். அந்த சிரிப்பில் சோகம் கலந்திருந்தது.

    எங்கோ ஒரு சோம்பேறி சேவல் ஒன்பதரை மணிக்கு கூவியது.

    பால்கனி பக்கம் வந்து நின்றாள்.

    தோட்டக்கார வேலவன் மண்வெட்டியும், கையுமாய் பரபரப்பாய் வேலை செய்துகொண்டிருந்தான். நேற்று மாலை நர்சரியிலிருந்து வாங்கிவரப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட குரோட்டன்ஸ் செடிகளை தொட்டியிலிருந்து எடுத்து நடைபாதையின் இருமருங்கிலும் தட்ட வைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு கூடமாட ஒத்தாசை செய்து கொண்டிருந்தான் அவன் மனைவி முத்தம்மா!

    அருந்ததிக்கும் தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வமுண்டு. அவள் பிறந்த வீட்டின் கொல்லைப்புறம் மிகப்பெரிய பரந்த இடம். தோட்டம் அழகுக்காக மட்டுமேயன்றி பயன்தரக்கூடிய வகையிலும் அமைய வேண்டுமென்பதில் கவனமாய் இருப்பாள்.

    தலுக்கி மினுக்கும் சுந்தரிகள் போல் பயன்தராத, பகட்டுக்காக மட்டுமே வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிகள் மீது அவளுக்கு எள்ளளவும் நாட்டம் இருந்தது இல்லை.

    மா, சப்போட்டோ, கொய்யா, வாழை, மாதுளை, நெல்லி மரங்களினூடே வேப்ப மரமும் நிழலுக்காக நட்டிருந்தாள். சுவரோரங்களில் பாத்தி கட்டி, ரோஜா, மல்லி, கனகாம்பரம், சம்பங்கி, முல்லை, ஜாதி என அழகாய் வளர்த்திருந்தாள். அதில் ஜாதிமல்லி செடி மீது தனி கவனம் செலுத்தி வளர்த்தாள்.

    தன் அறையொட்டிய சன்னலோரம் அக்கொடியை படரவிட்டிருந்ததால்... மாலையானதும் பூத்து குப்பென்று வாசம் அறை முழுக்க மணக்கும். அந்த நறுமணத்தின் முன் லாவண்டர் வாசம் எம்மாத்திரம்? தலைநிறைய தொடுத்து சூட்டிக்கொள்வாள்.

    இதுமட்டுமின்றி ஏழெட்டுகீரை வகைகள், காய்கறி செடிகளும் அவள் தோட்டத்தில் அடக்கம். தினமும் சமையலுக்கு தேவையான காய்கறிகள் தன் பராமரிப்பில் வளர்த்த செடிகளிலிருந்தே பறிப்பதில் அளவற்ற திருப்தியும், பெருமைமிகுந்த கர்வமும் அவள் முகத்தில் தெறிக்கும்.

    தன் கண்போல் பாதுகாத்துவந்த அந்தத் தோட்டத்தில் தன் கணவனாய் வரப்போகும் ஆடவனுடன் கைகோர்த்து, ஜாதிக்கொடி போல் அவன் தோளில் சாய்ந்துகொண்டு, அந்தி சாயும் பொழுதில் மெல்ல நடந்தபடி ஒவ்வொரு செடியாய், அதை வளர்த்தது முதல், பூத்தது காய்த்தது வரை ஒவ்வொன்றாய் அறிமுகப்படுத்தி, தன் ரசனையை அவனுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது அவளின் நீண்டநாளைய கனவு:

    கடைசிவரை அது கனவாகவே நிலைப்பெற்றுவிட்டது. வித்யாதரன் அவள் கணவனாக வந்து, அவளையேப் பகிர்ந்துகொள்ள விரும்பாதபோது, ரசனையை மட்டும் பகிர்ந்துகொள்வானா? என்ன?

    ஆண், ஒரு பெண் தனக்கு பக்கபலமாய் இருப்பதில் பெருமை கொள்கிறான். ஆனால் பெண்ணோ கணவனுக்கு தாழ்ந்த ஸ்தானத்தில் இருந்துகொண்டு அவனால் ஆளப்படவேண்டுமென்று ஆசைப்படுவாள்.

    இதுவும் அடிமைத்தனம்தான். அன்புக்கு அடிபணியும் அடிமைத்தனம். இது விலங்கல்ல, பொற்சங்கிலி. தாம்பத்ய வாழ்க்கைக்கு இந்த சங்கிலியல்லவா அவசியம்?

    அருந்ததிக்கு அந்த வீட்டில் எல்லாமே கிடைத்தது... அந்த பொற்சங்கிலியைத் தவிர. ஏன்... எதனால் இப்படி நேர்ந்தது? நீண்டதொரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டு அடங்கியது.

    ஏதோ நினைத்துக்கொண்டவளாய் திரும்பி நடந்தவள்... படுக்கையறையினுள் மெல்ல எட்டிப் பார்த்தாள்.

    நொய்ங்... என்ற ஏசியின் ரீங்காரத் தாலாட்டிலும் குளிர்ச்சியிலும் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான் வித்யாதரன்.

    அலுவல் விசயமாக ஒரு வாரம் முன்பு மும்பை சென்றவன் நேற்று இரவுதான் வந்தான்.

    வந்ததும் குளித்து, சாப்பிட்டு படுத்தவன்தான்! பயண அசதி... அவனை அசையவிடாமல் தூங்க வைத்துவிட்டது.

    அவன் பக்கத்தில் அமர்ந்து காதில் உப்பென்று ஊதி, காதை வலிக்காமல் கடித்து, அவன் தூக்கம் கலைந்து சிணுங்கியபடி கண் திறந்ததும்... அவர் முகத்தை வாரி எடுத்து தன் மார்போடு அணைத்து... தலையை கோதிவிட்டால்... அசதியாவது... மண்ணாவது? பறந்து விடாதா?

    நடக்கக்கூடிய காரியமா அது?

    நெஞ்சுக்கூடு ஏமாற்றமாய் ஒருமுறை விம்மித் தணிந்தது.

    மெல்ல... மெல்ல... பூனைப் பாதம் வைத்து, கொலுசு சத்தம் கேட்காது, மெட்டி ஒலி கேட்காது... கவனமாய் அடிமேல் அடிவைத்து கட்டிலருகே சென்றாள்.

    வித்யாதரனை விழிப் பார்வை அகலாது பார்த்தாள். மீண்டும் எப்போது கிட்டுமோ, இப்படியொரு சந்தர்ப்பம்! காலில் கொதிநீரை ஊற்றிக்கொண்டவனைப் போல் எப்போதும் அலுவலகம், மீட்டிங், பார்ட்டி என்று வேளைக்கொரு வேலையை வைத்துக்கொண்டு பறப்பவன்...

    கண்களில் எப்போதும் கதிரவனின் வெப்பம். அதுவும் அவளைக் கண்ட மாத்திரத்திலேயே தகிக்க ஆரம்பித்துவிடும். கிட்டே நெருங்க முடியாது அவளால். அதனாலேயே அவனை நேருக்குநேர் ஏறிட்டு பார்க்க இயலவில்லை... முடியவில்லை... கணவனை ஆசைதீர... அங்குலம் அங்குலமாக பார்த்து ரசித்தாள். வித்யாதரன் நல்ல உயரம். அதற்கு ஏற்ற உடல்வாகு. ரொம்ப சிவப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் அவனுக்கு அதுதான் சரியாய் இருந்தது. அடர்த்தியான, கருமையான கேசம். மார்பில் சுருள்சுருளாய் ரோமம். பொறாமையாய் பார்த்தாள். அது செய்த பாக்கியம்கூட நான் செய்யவில்லையே! தொப்பை, தொந்தியென்று எதுவும் அண்டாத வயிறு. வடிவமான உதடிற்கு மேலாடையாய் அடர்த்தியான மீசை. சிரித்தால்... தப்பாமல் வரியோடு நின்று மின்னும் பற்கள். முழங்கை வரை எப்போதும் சட்டையை மடித்துவிட்டுக்கொள்வான். அதுவும்கூட அவனுக்கு கவர்ச்சியாய் இருக்கும். பேன்ட்டைவிட ஜீன்சுதான் அவனுக்கு மிகவும் பிடிக்கும். விதவிதமாய், கலர்கலராய், வகைவகையாய்... பீரோ நிறைய அழகாய் அடுக்கப்பட்டிருக்கும்.

    ஜீன்சுக்கென்றே பிறந்தவன் போல் அவனுக்கு வெகு நேர்த்தியாய் இருக்கும். சிக்கென்று பற்றிக்கொண்ட கொடி போல... உடலோடு ஒட்டிக்கொள்ளும். அப்போது அவன் நடந்துவரும் அழகிருக்கே...

    வித்யாதரன் பார்க்க முடியாத கோணத்தில் எட்ட நின்று மறைந்திருந்து தன் கணவனைப் பார்ப்பாள் அருங்குதி,

    அவனாக பார்த்து, விரும்பி, பெண் கேட்டு மனந்தவன்தான் அருந்ததி.

    ஆனாலும்... எல்லாமே தப்பாகிவிட்டது.

    தோள்பட்டையில் மிளகளவு மச்சம் உருண்டு திரண்டு மரு போல் இருந்தது. அதன் உச்சியில் இரண்டு மூன்று முடிகள்.

    அவனைப் பார்க்கப் பார்க்க...

    Enjoying the preview?
    Page 1 of 1