Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iduppu Siruthavale
Iduppu Siruthavale
Iduppu Siruthavale
Ebook125 pages1 hour

Iduppu Siruthavale

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 200 novels, 150 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466329
Iduppu Siruthavale

Read more from Manimala

Related to Iduppu Siruthavale

Related ebooks

Related categories

Reviews for Iduppu Siruthavale

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iduppu Siruthavale - Manimala

    16

    1

    ஒரே நேர்க்கோடாய்... சரம் சரமாய்ப் பெய்த மழை... பூமியை அழுத்தமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

    அலுவலகத்திற்குப் போகலாமா? வேண்டாமா? என்கிற சோம்பலை உற்பத்தி செய்தன, கருத்த கனத்த மழைமேகங்கள். குளிர்காற்று, மழையோடு சேர்ந்து கும்மாளம் போட்டன.

    மரக்கிளைகளில் தஞ்சம் அடைந்திருந்த பறவைகள் நிமிடத்திற்கு ஒருமுறை சிறகுகளை விரித்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.

    அந்த நேரத்திலும் மேகப் புகையினூடே ஒரு விமானம் நனைந்து பறந்து வந்தது.

    சலவைக்கல் பதிக்கப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான பங்களா, மழையில் குளித்து இன்னும் பளிச்சிட்டது. வெளியில்தான் சோம்பல்தனம். ஆனால், உள்ளே....? வேலை ஆட்கள் பரபரப்பாய் இங்கும் அங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தனர்.

    இந்த சோபாவை நகர்த்திப் போடு! இந்த ஜாடியில் இன்னும் பூங்கொத்தை மாற்றி வைக்கவில்லையா? கம்பளத்தை விரித்துப் போடு!

    கோகுல் அந்த வீட்டின் இளைய எஜமான். அனைவருக்கும் உத்தரவிட்டு வேலை வாங்கிக்கொண்டிருந்தான்.

    அவனையே பார்த்தபடி சிரித்துக்கொண்டே படிகளில் இறங்கி வந்த ரத்தினம் ஐம்பது வயதைக் கடந்தவர். சாயலில் அந்தக் கால நடிகர் எஸ்.வி.ரங்காராவை நினைவுபடுத்தினார். சபாரி சூட்டில் படு கம்பீரமாய் இருந்தார். முகத்தில் பணக்காரக் களை வழிந்தோடியது.

    பின்னே சும்மாவா? ரத்தினம் யார்? தொழிலதிபர். கோடி கோடியாய் பணம் கொட்டிக் கிடக்கிறது. அனைத்தும் அவரின் சுயசம்பாத்தியம். இடைவிடாத உழைப்புக்குத் தலைவணங்கிய தனலட்சுமியின் கைங்கர்யம்.

    நகைக்கடை, துணிக்கடை, உர ஆலை, சர்க்கரை ஆலை, கணிப்பொறி நிறுவனம், அவ்வளவு ஏன்... அழகு நிலையத்தைக் கூட விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றிலும் பணத்தைக் கொட்டி இருந்தார். அவரின் சாம்ராஜ்யம் கடல் கடந்தும் பரந்து விரிந்திருக்கிறது. வி.ஐ.பி.கள் கூட அவர் முன் நின்றுகொண்டுதான் பேசுவார்கள். அவரிடம் உள்ள பணக்கட்டு, செய்யும் வித்தை அது.

    கோகுல்...! குரல் கேட்டு திரும்பிய கோகுல், முகம் மலர்ந்தான்.

    வாங்கப்பா...! காலையிலேயே அமர்க்களப்படுத்திட்டிருக்கே? இன்னிக்கு பிரியங்காவோட பிறந்த நாள் ஆச்சேப்பா? மறந்துட்டீங்களா?

    மறக்க முடியுமா? இந்த வேலையெல்லாம் உனக்கு எதுக்கு கோகுல்? வேலை ஆட்களே பார்த்துக்கமாட்டாங்களா? வாஞ்சையுடன் கேட்டார்.

    பிரியங்கா சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் என்னுடைய பங்கு சிறு அளவாவது இருக்கணும்னு ஆசைப்படறேன்ப்பா! பாவம்... தாய் இல்லாப் பொண்ணு! எனக்காவது பதிமூணு வயசு வரைக்கும் அம்மா உயிரோடு இருந்தாங்க. ஆனா, பிரியங்காவுக்கு அம்மாவோட அன்பும், அரவணைப்பும் அஞ்சு வயசு வரைக்கும்தானேப்பா கிடைச்சது? எவ்வளவுதான் நம்மகிட்டே பணம் கொட்டிக்கிடந்தாலும் அம்மாவுக்கு இணை ஆகுமா? இப்ப அவளுக்கு நாம காட்டுற அன்பும், அக்கறையும் தானே மகிழ்ச்சி.... ஆறுதல்...

    மகன் கூறியதை ஆமோதிப்பவராய் ரத்தினம் பெருமூச்சு விட்டார்.

    மன்னிச்சிடுங்கப்பா... அம்மாவை ஞாபகப்படுத்திட்டேனா? என்றான் வருத்தத்தோடு.

    அதெல்லாம் ஒண்ணுமில்லே கோகுல்! ஆமாம்... பிரியங்காவை எங்கே காணோம்?

    அவள் ஏழு மணிக்கு முன்னாலே ஊர், உலகத்தை என்னைக்குப் பார்த்து இருக்காள்? அதுவும் இன்னைக்கு மழை வேறு! அந்தக் கதகதப்புல அம்மணி கண் திறக்க கூடுதலாய் ஒரு மணி நேரம் ஆகுமே....?

    அதுக்காக... பிறந்த நாளும் அதுவுமா இவ்வளவு நேரம் தூங்கறதா? கோவிலுக்குப் போகவேண்டாமா? கூப்பிடு அவளை!

    அதற்குமேல் அவர் பேச்சை மறுக்க முடியாமல் பிரியங்காவின் அறைக்கு இன்டர்காமில் தொடர்புகொண்டான்.

    முப்பதுக்கு முப்பதடி நீள அகலமுள்ள அறையின் நடுவில் சொகுசு மெத்தை. அதில் குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தாள் பிரியங்கா! ஜன்னல் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு உட்புகுந்த குளிர்த் தென்றல் பிரியங்காவின் மேனியைத் தீண்டிச் சிலிர்க்க வைக்க... இரு கைகளையும் மடியில் புதைத்து இன்னும் குறுகிப் படுத்தாள்.

    அப்போதுதான் இன்டர்காம் ஒலித்தது. உறக்கம் கலைந்த பிரியங்கா, கண்களைத் திறக்காமலேயே கையை நீட்டி ரிசீவரை எடுத்தாள்.

    ‘அலோ...’ சொல்லக்கூட சோம்பல்பட்டு, ம்... என்றாள்.

    "பிரியமான எங்கள் பிரியங்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    தொற்றிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச தூக்கமும் கலைந்தது.

    ‘அட கடவுளே... இன்னைக்கு எனக்குப் பிறந்த நாளா?’ மனத்துக்குள் நினைத்தாள். மகிழ்ந்தாள்.

    ரொம்ப நன்றி கோகுல் அண்ணா... எனக்கு இன்னைக்குப் பிறந்த நாளுங்கிறதே மறந்துபோச்சு!

    சரி... சீக்கிரம் குளிச்சிட்டு கீழே வா!

    சரி அண்ணா...! மெத்தையை விட்டு இறங்கிய பிரியங்கா அழகாய்ச் சோம்பல் முறித்தாள். மெல்லிய உடையில் அவளின் கட்டான உடல் அழகு காட்டியது.

    இளமை கொப்பளிக்கும் முகம். துருதுரு கண்கள். எந்நேரமும் புன்னகையைத் தேக்கி வைத்திருக்கும் கச்சிதமான அதரங்கள். பளிங்குச் சிலை போல உடம்பு. உலக அழகி ஆவதற்கான அத்தனை தகுதிகளும் அந்த இருபது வயது உடம்பில் கொட்டிக் கிடந்தன.

    இரவு உடையின் முடிச்சை அவிழ்த்தபடி குளியலறைக்குள் நுழைந்தாள் பிரியங்கா.

    ஒரே நேரத்தில் இருபது பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய, வேலைப்பாடு மிகுந்த உணவு மேசை. ரத்தினம், கோகுல், பிரியங்கா மூவரும் அமர்ந்திருந்தனர். விதவிதமான உணவுப் பண்டங்கள் அவர்கள் பசியாற்றக் காத்திருந்தன. கண்ணாடி தம்ளரில் தண்ணீர், வெள்ளியாய் மின்னியது.

    பிரியங்கா, புதிய உடையிலும் அழகான அலங்காரத்திலும் இன்னும் அம்சமாகத் தெரிந்தாள். ரத்தினம், மகளுக்குத் தன் கையாலேயே பரிமாறினார்.

    சாப்பிடும்மா....

    போதும்... போதும்ப்பா...! ஒரு வாரத்துக்குச் சாப்பிட வேண்டியதை ஒரே நாள்ல சாப்பிடச் சொன்னா எப்படி? சிணுங்கினாள்.

    இருபது வயசுக்கு இன்னும் கொஞ்சம் பூசின மாதிரி இருந்தாதாம்மா அழகு!

    என்னது? இன்னும் குண்டாகறதா? இதையே குறைக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன். விநோதினி என்னை இப்ப பார்த்தாள்னா பப்ளிமாஸ்னு கிண்டல் பண்ணுவா!

    விநோதினியா? யாரும்மா அவ...?

    என்னைப்பா அதுக்குள்ளே மறந்துட்டீங்க? பிளஸ்-2 வரைக்கும் ஒண்ணாவே படிச்சோம். அவங்க அப்பாவுக்கு வேலை மாற்றல் கிடைச்சதுன்னு டெல்லிக்கு போயிட்டாங்களே...

    ஓ.... அவளா....?

    இன்னைக்கு என்னோட பிறந்த நாள் விழாவுல அவளும் கலந்துக்கறா! அதுக்காகவே அவள் இப்ப சென்னைக்கு வருகிறாள் போலும்.

    உண்மையாகவா? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நட்புன்னா இப்படித்தான் இருக்கணும். சரி சீக்கிரம் சாப்பிட்டுக் கிளம்பும்மா! கோவிலுக்குப் போய் வரலாம்!

    கோவிலுக்கா? இப்பவா? முடியாதுப்பா! போய் விநோதினியைக் கூட்டிக்கிட்டு வரணும் என்றாள் அவசரமாய்ச் சாப்பிட்டபடி.

    உன் பிறந்த நாளுக்காகச் சிறப்பு அர்ச்சனைப் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கோம் பிரியங்கா! நீ வராம எப்படி? விநோதினியை டிரைவரை அனுப்பி அழைச்சு வரலாம்! என்றான் கோகுல்.

    "ஊகூம்.... அது மரியாதை இல்லே! தவிர, நாம நமக்காக வேண்டிக்கிறதைவிட, அடுத்தவங்களுக்காக வேண்டிக்கிட்டாதான் சாமி சீக்கிரம் பலன் தருமாம். எனக்காக எப்பவும் வேண்டிக்கிட்டே இருக்கிற அப்பாவும்

    Enjoying the preview?
    Page 1 of 1