Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anthi Mazhai Saaral
Anthi Mazhai Saaral
Anthi Mazhai Saaral
Ebook253 pages1 hour

Anthi Mazhai Saaral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்திதா சென்னையில் நூறு பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளிக்கும் ஒரு தொழிற்சாலையைத் திறம்பட நடத்தி வருகிறாள். பெண்களாலேயே நிர்வகிக்கப்படும் அந்தத் தொழிற்சாலையை தன் உயிர் மூச்சாக மதிப்பவள் நந்திதா.

உடல்நலம் குன்றியதால் அவள் ஓய்விற்காக குன்னூர் செல்கிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் நாயகன் ப்ரணேஷ் முன் 'ஹவுஸ்கீப்பர்' வேடம் போடவேண்டிய நிர்பந்தம்.

பெண்களைப் பற்றி நல்ல எண்ணம் இல்லாத ப்ரணேஷ் அவளை எப்படி நடத்துகிறான். அவள் அதற்கு திரும்ப பதில் அடி எப்படிக் கொடுக்கிறாள் என்பதே கதை.

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580140906943
Anthi Mazhai Saaral

Read more from Lakshmi Sudha

Related to Anthi Mazhai Saaral

Related ebooks

Reviews for Anthi Mazhai Saaral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anthi Mazhai Saaral - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    அந்தி மழைச் சாரல்

    Anthi Mazhai Saaral

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை

    இந்தக் கதையின் நாயகி நந்திதா சென்னையில் நூறு பேருக்கு மேல் வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு தொழிற்சாலையைத் திறம்பட நடத்தி வருகிறாள்.

    பெண்களாலேயே நிர்வகிக்கப்படும் அந்தத் தொழிற்சாலையை தன் உயிர் மூச்சாக மதிப்பவள் நந்திதா.

    உடல்நலம் குன்றியதால் அவள் ஓய்விற்காக குன்னூர் செல்கிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் நாயகன் ப்ரணேஷ் முன் 'ஹவுஸ்கீப்பர்' வேடம் போடவேண்டிய நிர்பந்தம்.

    பெண்களைப் பற்றி நல்ல எண்ணம் இல்லாத ப்ரணேஷ் அவளை எப்படி நடத்துகிறான். அவள் அதற்கு திரும்ப பதில் அடி எப்படிக்கொடுக்கிறாள் என்பதே கதை.

    படித்துப் பாருங்கள்... உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்... ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    உங்கள்

    லட்சுமி சுதா

    (lakshmisudha2010@yahoo.com)

    1

    "தென்றல்

    என்னைத்

    தீண்ட...

    மேகம்

    என்மேல்

    பன்னீர்,

    தெளிக்க...

    நிலவு

    என் மேல்

    அமுதைப்

    பொழிய...

    வானவில்

    என்மேல்

    ஒளிக்கீற்றாக

    கண்சிமிட்ட...

    தீர்த்தக்

    கரையினிலே...

    நான் காத்திருக்கிறேன்!

    உனக்காக

    உன்

    பார்வைக்காகக்

    காத்து

    இருக்கிறேன்!

    எங்கே நீ

    பெண்ணே!"

    நந்திதா கணினியிலிருந்து பார்வையைத் திருப்பினாள். கண்கள் ஓய்வு தேவை எனக் கெஞ்சுவது போல் பிரமை அவளுக்கு.

    ரூமில் இருந்த சோஃபாவை நோக்கி அவள் கால்கள் சென்றன. சோபாவில் சாய்ந்து உட்கார்ந்த பின்பு சோர்வு போனதுபோல் தோன்றியது அவளுக்கு.

    மேடம் ஆர் யூ ஆல்ரைட் என்று சுபாவின் குரல் அருகே கேட்க கண்களைத் திறந்தாள் அவள்.

    ஐயாம் ஃபைன்.

    மேடம் இப்ப மீட்டிங் இருக்கு. உங்களால வரமுடியுமா?

    சுபா மீட்டிங்கை கேன்சல் செய்துவிடேன் ரொம்ப சோர்வாக இருக்கு... என்ன காரணம்னு தெரியலை.

    சரி மேடம். நான் மீட்டிங்கை கேன்சல் செய்துவிடுகிறேன்.

    மேடம் நான் ஒண்ணு சொன்னால் தப்பாக நினைக்கக்கூடாது.

    என்ன சுபா... சொல்லு. அதுக்கு முன்னாடி இந்த 'மேடம் மேடம்'ன்னு சொல்றதை நிறுத்து.

    எனக்கு வயது இருபத்தி ஆறுதான் ஆகிறது. நானும் உன்னிடம் எவ்வளவோ தடவை சொல்லிவிட்டேன்.

    ஆனால் நீ இதில் ரொம்பப் பிடிவாதம் பிடிக்கிறாய்.

    மேடம்... ஸாரி... உங்கள்மேல் எனக்கு எப்பவும் மரியாதை அதிகம். இந்தச் சின்ன வயதில் எப்படி இவ்வளவு திறமையாக இந்தக் கம்பெனியையும் ஃபேக்டரியையும் நிர்வகிக்கிறீர்கள் என்று எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும்.

    அந்த மரியாதை தான் அப்பப்ப என்னை 'மேடம்' என்று உங்களை அழைக்கத் தூண்டுகிறது.

    கமான் சுபா... நான் அப்படி ஒன்றும் பிரமாதமாக எதையும் செய்துவிடவில்லை.

    "நான் படித்தது ஃபேஷன் டெக்னாலஜி. அதனால் ஆடைகளை, குறிப்பாகப் பெண்களின் ஆடைகளை வடிவமைப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

    அந்த ஆர்வம்தான் எனக்கு இந்தக் கம்பெனியைத் தொடங்க உதவி செய்தது.

    படித்தவர்கள் எல்லோருமே அந்தப் படிப்பை உபயோகிப்பது இல்லை.

    குறிப்பாகப் பெண்கள். அவர்களுக்கு மற்றவை முக்கியமானதாக மாறிவிடுகிறது. அதனால் நிறையப் பெண்கள் வேலைக்குப் போவதில்லை.

    நீ சொல்வது சரி தான் சுபா. ஆனால் நான் அப்படிக் கிடையாது.

    எனக்கு இந்தக் கம்பெனி தான் உயிர் மூச்சு. எக்காரணம் கொண்டும் நான் இதை விட்டுவிட்டு இருக்கமாட்டேன்.

    நீங்கள் சொல்வது ரொம்பவே சரி. ஆனால் உங்கள் உடல்நிலையையும் நீங்கள் கவனிக்கவேண்டும்.

    எப்பவும் வேலை வேலை என்று அதிலேயே மும்முரமாக இருப்பதால் உங்கள் ஹெல்த் ரொம்ப டவுன் ஆகிவிட்டது.

    ம்... காலேஜ் முடித்தபின்பு பத்து பேரைக்கொண்டு ஆரம்பித்த இந்த பேக்டரி இப்பொழுது நூறு பேராக வளர்ந்துவிட்டது சுபா.

    ஆறு வருடங்களாக நான் தொடர்ந்து நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததற்கு நல்ல பலன் இருக்கிறது.

    ஐயாம் ஹேப்பி.

    வெற்றி என்பதே ஒரு போதை. அதை ஒரு தடவை அனுபவித்தால், அவ்வளவுதான் மனம் தொடர்ந்து அதற்காக ஏங்கும்.

    ஐயாம் இன் டு இட். எனக்கு அது நன்றாகவே தெரிகிறது.

    உங்கள் வெற்றியைப் பாராட்டித்தானே சென்ற ஆண்டு இளம்பெண் தொழிலதிபர் விருதை உங்களுக்குக் கொடுத்து கௌரவித்தார்கள்.

    இப்பொழுது இந்திய அளவில் பெண்கள் மத்தியில் ‘இட்ஸ் ஃபார் யூ’ பிராண்ட் உடைகள் ரொம்பவே பிரபலமாக இருக்கிறது.

    அதனால் நீங்கள் கொஞ்சம் உங்கள் உடல்நிலையைக் கவனியுங்கள். நீங்கள் நன்றாக இருந்தால்தான் நாங்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கமுடியும்.

    ப்ளீஸ் நான் சொல்வதைக் கேளுங்கள். யூ லுக் பேல் அண்ட் டல்.

    ம்... நீ சொல்வது கரெக்ட் தான் சுபா. ஐ ஃபீல் டயர்ட். நான் எப்பவும் நான்கு மணிநேரம் தான் தூங்குவேன்.

    ஃபேக்டரியில் இருப்பவர்களுக்கு புதிய ஆடைகள் வடிவமைக்க டிஸைன் போடுவதில் பிஸியாக இருப்பேன். ஆனால் இரண்டு மூன்று நாட்களாக ரொம்பச் சோர்வாக இருக்கிறது.

    என்னாலே சரியான டிஸைன் வடிவமைக்க முடியவில்லை. ஐயாம் நாட் ஹேப்பி வித் தி டிஸைன் ஐ ஹாவ் மேட்.

    ம்... உங்களுக்கு ஓய்வு தேவை. நீங்கள் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை என்று நான் ஒரு வேலை செய்துவிட்டேன்.

    நேற்றே செய்து முடித்துவிட்டேன்.

    என்ன சுபா என்ன வேலை அப்படிச்செய்துவிட்டாய்.

    அதற்குள் கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, பேச்சு தடைபட்டது.

    ஹலோ நந்திதா ஹவ் ஆர் யூ என்று புன்முறுவலோடு உள்ளே நுழைந்தார் டாக்டர் முகுந்த்.

    நந்திதாவிற்குப் புரிந்துவிட்டது இது சுபாவின் வேலை என்று.

    ஐயாம் குட் டாக்டர் என்றாள் புன்னகையை வரவழைத்தபடி நந்திதா.

    பட் உன்னைப் பார்த்தால் அப்படித்தெரியலை. முகம் வெளிறிப்போய் இருக்கிறது.

    கண்களுக்குக் கீழ் கருவளையம். முகம் களையிழந்து, தெளிவில்லாமல்... ஸம்திங்க் இஸ் ராங் ரியலி.

    ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள் நந்திதா.

    நான் வெளியே இருக்கிறேன் என்று சமயம் பார்த்து நழுவினாள் சுபா."

    சோபாவில் உட்கார்ந்து இருந்த நந்திதாவை டாக்டர் பரிசோதிக்கத் தொடங்கினார். அவர் முதல்முதலாகப் பார்ப்பதுபோல் பரிசோதிப்பது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

    டாக்டர் போனவாரம் தான் எனக்கு ஃபுளூ காய்ச்சல் வந்தது. அப்ப நீங்கதான் என்னைப் பரிசோதித்தீங்க.

    இப்ப ஏதோ ரொம்ப வருஷம் முன்னாடி டெஸ்ட் செஞ்சமாதிரி மறுபடியும் செய்யறீங்க என்றாள் கிண்டலாக.

    இது சிரிக்கற விஷயம் இல்லை. எனக்கு உன்னைவிட அனுபவமும் ஜாஸ்தி. வயதும் ஜாஸ்தி. நான் சொன்னபடி நீ கேட்கவில்லை.

    உன்னை நான் ஒரு மாதம் ஓய்வு எடுக்கச்சொன்னேன்.

    ஆனால் நீ இங்கே ஆபீஸில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறாய்.

    இல்லை... எனக்கு உடம்பு சரியாகிவிட்டது அதான்... என்று அவள் முடிக்கும் முன்பு குறுக்கிட்டார் முகுந்த்.

    ஸ்டாப் இட். உன் அஸிஸ்டென்ட் சுபா ஃபோன் செய்யாவிட்டாலும் நான் உன்னைவந்து சந்திப்பதாக இருந்தேன் இன்று.

    காரணம் உன் டெஸ்ட் ரிஸல்ட் எல்லாமே வந்துவிட்டது. நான் உன்னிடம் முக்கியமாகப் பேசவேண்டும்.

    "டாக்டர் என்னை பயமுறுத்தாதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது.

    ஒரு புது ஆர்டர் வந்திருக்கு. அதற்கு நான் வடிவமைக்கவேண்டும்.

    அது தான் நீ வடிவமைக்கும் கடைசி ஆடையாக இருக்கவேண்டுமா?

    ஆனால் நான்...

    நான் சொல்வதைக்கேள் நந்திதா.

    அவர் முகத்தில் எப்பொழுதும் இருக்கும் புன்னகை இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பு 'முகுந்த் டாக்டர்' இந்தமாதிரி இருந்தது அவள் நினைவுக்கு வந்தது.

    அவளுடைய அம்மா ரொம்ப நாள் உயிர் வாழமாட்டார்கள் என்று அவளிடம் சொல்லும்பொழுது அவர் முகத்தில் புன்னகை உறைந்திருந்தது.

    டாக்டர் இந்த ஆர்டர் முடிந்தபின்பு நான் ஒரு மாதம் லீவ் எடுக்க முடிவுசெய்திருக்கிறேன்.

    மூன்று மாதம் ஓய்வு... உனக்கு இந்த நிமிஷத்தில் இருந்து தேவை.

    சரி ஒரு இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள். நான் திங்க்ஸ் எல்லாம் கொஞ்சம் ஆர்கனைஸ் செய்யணும்.

    தட்ஸ் குட். ஏதாவது மலைப்பிரதேசத்திற்கு போ நந்திதா. உனக்கு பிரண்ட்ஸ் யாராவது ஹில் ஸ்டேஷனில் இருக்காங்களா?

    என்னோட காலேஜ் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.

    நோ காலேஜ் ஃபிரண்ட்ஸ் வேண்டாம். நீ அங்கே போய் ஃபேஷன், பிஸினெஸ், டிரெஸ் டிஸைன் இதைப்பத்திப் பேசறது நீ ஓய்வு எடுக்கப்போற பர்ப்பஸையே வீணாக்கிவிடும்.

    "அதனால ‘நோ பிஸினெஸ் ஆர் பிஸினெஸ் ரிலேட்டட் ஃபிரண்ட்ஸ்’

    ஓ... இது வேறயா. வெளிநாட்டுக்குப் போகலாம். ஆனால் விஸா எக்ஸ்பையர் ஆயிடுச்சு. மீண்டும் புதுப்பிக்க எப்படியும் இரண்டு வாரங்கள்கிட்டே ஆகும்.

    என்ன செய்யலாம்.

    "உனக்கு ஏற்ற இடம் இங்கே பக்கத்திலேயே இருக்கு. குன்னூர் போகலாமே.

    "அங்கே சீதோஷ்ணநிலை ரொம்பப் ப்ளஸென்ட்டா இருக்கும். உன் மனதிற்கு நல்ல அமைதியைத் தரும்.

    "எனக்குத் தெரிந்த 'காட்டேஜ்' ஒன்று அங்கு உள்ளது. காட்டேஜ் உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கிறார்.

    "ஆனால் காட்டேஜைப் பராமரிக்க ஒரு ஆள் இருக்கிறார். பாதுகாப்பிற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

    நான் உனக்கு அந்த முகவரியைத் தருகிறேன். ஊரில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் இடம்.

    "ஓ... தேங்க்ஸ் டாக்டர். எனக்கு ஹோட்டல்களில் தங்கி போர் அடித்துவிட்டது. பிஸினெஸ் விஷயமாகப் போகும்பொழுதெல்லாம் ஹோட்டலில் தங்குவதாலோ என்னவோ ஹோட்டல்ன்னாவே அலர்ஜியாகிவிட்டது.

    இது வித்தியாசமாக இருக்கும் அப்படின்னு நினைக்கறேன்.

    தட்ஸ் குட் நந்திதா. நான் முகவரியை உனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன்.

    அப்புறம் அங்கே எனக்குத்தெரிந்த டாக்டர்ஸ் விவரங்களும் உனக்கு அனுப்புகிறேன்.

    ஓ... டாக்டர். நீங்கள் என்னைப் 'பேஷண்ட்டா' பாவிக்காதீர்கள். ஐ யாம் ஆல்ரைட்.

    ஓ... அப்படியா? உன் டெஸ்ட் ரிஸல்ட்ஸ் அப்படிச்சொல்லலியே.

    ம்... வைரஸ் ஃபீவர் வந்ததுதானே. போனவாரம். அதனால இருக்கலாம்.

    டாக்டர் நான் அதைத் தீர்மானிக்கறேன். உன் பி.பி. அதிகமாக இருக்கிறது. சரியாகச் சாப்பிடாததாலேயோ என்னவோ அல்ஸர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

    இட் மே பி காஸ் ஆஃப் ஸ்ட்ரெஸ் ஆல்ஸோ.

    நந்திதாவிடமிருந்து ஒரு பெருமூச்சு பிறந்தது.

    நீங்க சொல்றது சரிதான் டாக்டர். நான் உடற்பயிற்சி எதுவும் செய்வது இல்லை.

    வேலை வேலை என்று அதிலேயே மூழ்கி இருப்பதால் சரியான நேரத்தில் சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே போய்விட்டது.

    குட்... நீ இதை உணர்ந்துகொண்டாயே அதுவே பெரிய வெற்றி தான்.

    நான் உனக்கு சில மருந்துகளைத் தருகிறேன். நீ அதைத் தவறாமல் சாப்பிடு. குன்னூர் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துவிடு.

    அது கண்டிப்பாக உனக்கு நல்ல மனஅமைதியைத் தரும்.

    தேங்க்ஸ் டாக்டர்.

    நோ ப்ராப்ளம். டேக் கேர்.

    டாக்டர் சென்றபின்பு யோசனையில் மூழ்கினாள் நந்திதா. ‘அவர் சொல்வது போல் நான் என்னை ரொம்ப வருத்திக்கொள்கிறேனா?’

    காலேஜ் முடித்தபின்பு வங்கியில் கடன் வாங்கி தொழிற்சாலை அமைத்த பின்பு இண்டஸ்ட்ரியில் ஸ்டெபிலைஸ் ஆக கடுமையாக உழைக்கவேண்டி இருந்தது.

    இப்பொழுது கம்பெனி நன்றாக இருக்கிறது. அதனால் நான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கப் பழகிக்கொள்ளணும்.

    இந்த குன்னூர் ட்ரிப் அதற்கு உதவும். ‘ஹோப் ஃபார் இட்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

    ‘இட்ஸ் ஃபார் யூ’ பிராண்ட் ஆடைகள் பெண்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். சல்வார், லாங் ஸ்கர்ட்ஸ். டாப்ஸ், ஜீன்ஸ், டி-ஷர்ட், பேண்ட், காக்ரா-சோளி என விதவிதமான ஆடைகளைப் பெண்களின் மனதிற்கேற்பத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் நன்றாகத் திறம்படச் செய்கிறது.

    அடுத்து இந்தியா தவிர மற்ற இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யவேண்டும் என்பது நந்திதாவின் கனவு.

    அதற்குள் உடம்பு இப்படிப் பாடுபடுத்திவிட்டது, சரி, நடப்பதெல்லாம் நன்மைக்கு என நினைத்துக்கொள்ளவேண்டும்.

    இந்த குன்னூர் ட்ரிப் மூலம் எனக்கு ஒரு நல்ல பிரேக் கிடைக்கலாம். என்னுடைய தொழிலில் நான் மேலும் மேலும் முன்னேறுவதற்கு இது உதவி புரியலாம்.

    அதனால் நான் இதை பாஸிடிவாக எடுத்துக்கொள்ளவேண்டும். நல்லகாலம் என்னிடம் வேலை பார்ப்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.

    அதனால் தைரியமாக அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடலாம். குறிப்பாக சுபா ரொம்ப நல்ல பெண்.

    திறமைசாலியும் கூட. அதனால் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம். அதுதான் சரி என முடிவு செய்தவள் லேப்டாப்பை உயிர்ப்பித்தாள்.

    முக்கியமான ஈ-மெயில்களுக்குப் பதில் அளித்தாள். பின்பு லீவ் நாளில் யார், யார் என்னென்ன வேலை செய்யவேண்டும் என குறிப்பெடுத்துக்கொண்டாள்.

    சுபாவிடம் சொன்னால் அவள் சந்தோஷப்படுவாள் குன்னூர் சென்று ஓய்வு எடுக்கப்போவதாகச் சொன்னால் ரொம்பவே குஷியாகிவிடுவாள்.

    அவளுக்குத் தன்மேல் மதிப்பு, மரியாதை கலந்த அன்பு இருக்கிறது என நினைக்கும்பொழுது நந்திதாவிற்கு பெருமையாக இருந்தது.

    சுபா... இங்கே என் ரூமிற்கு வா என்று இண்டர்காம் மூலம் அழைத்தாள்.

    யெஸ் மேடம் ஸாரி... மேடம்ன்னே வருது.

    "தேங்க்ஸ் சுபா. நீ டாக்டரை வரவழைத்தது நல்லதாகப் போய்விட்டது.

    Enjoying the preview?
    Page 1 of 1