Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Ondru Ketppen
Unnai Ondru Ketppen
Unnai Ondru Ketppen
Ebook106 pages55 minutes

Unnai Ondru Ketppen

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 200 novels, 150 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466374
Unnai Ondru Ketppen

Read more from Manimala

Related to Unnai Ondru Ketppen

Related ebooks

Related categories

Reviews for Unnai Ondru Ketppen

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Ondru Ketppen - Manimala

    8

    1

    அதிகாலை!

    பனி விலகாத சென்னை நகரம் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருந்தது. கொடைக்கானலில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் யாருக்குமே எழுமளவிற்கு ரோடில் எதிர்வரும் நபரை அடையாளம் காண முடியாதபடி பனி போர்த்தியிருந்தது.

    இன்னும் பரபரப்பை தொடாத மத்திய சிறைச்சாலை. நான்காம் செல்லில் தன் லத்தியால் கதவைத் தட்டி சப்தம் எழுப்பினார் கான்ஸ்டபிள்.

    கையை தலைக்கு வைத்து, கால்களை குளிருக்கு நடுங்கி கங்காரு போல் குறுக்கிப் படுத்திருந்த நாகராஜன் சட்டென்று கண்விழித்தான் கதவுக்கு வெளியே மசமசப்பாய் தெரிந்த போலீஸ்காரரின் உருவம் மூளைக்கு உணர்த்த பட்டென்று எழுந்து ஓடி வந்தான்.

    என்னங்கய்யா?

    ஐயா உன்னை உடனே வரச்சொன்னர்! என்றபடி பூட்டை விடுவித்தார் 802.

    ஐயா என்பது ஜெயில் சூப்ரின்டென்ட் விக்டர் இம்மானுவேலை குறிக்கும். அந்த ‘ஐயா’ என்ற வார்த்தைக்கு சிறையில் களி தின்னுபவர்களிலிருந்து கைநீட்டி சம்பளம் வாங்கும் போலீஸ்காரர் வரை அத்தனை பேருக்கும் வயிற்றை ஒருகணம் இழுத்துப் பிடித்து நிறுத்த செய்யுமளவிற்கு பயம் கலந்த மரியாதை.

    இதோ... வரேங்கைய்யா! என்ற நாகராஜன் விக்டர் இருந்த அறையை நோக்கி விரைந்து நடந்தான். மூளையோ சிந்திக்க மறுத்து குழம்பியது.

    ‘ஏன்... எதற்காக ஐயா கூப்பிடறார்... அதுவும் இவ்வளவு அதிகாலைலே?’

    ‘ஐயாக்கூட ஏழு மணிக்குத்தானே வருவார்! இவ்வளவு சீக்கிரம் ஏன் வந்தார்?’

    ‘சூப்ரின்டென்டன்ட்’ என்று பெயர் பலகை பொறிக்கப்பட்டிருந்த அறைக்கதவு திறந்தே இருந்தது. நாற்பது வாட் பல்ப் அழுது வடிந்துக் கொண்டிருந்தது.

    ஐயா...! அறை வாசலிலிருந்தே குரல் கொடுத்த நாகராஜன் பவ்யமாய் கைகளை மார்புக்குக் கட்டி முதுகை வளைத்து நின்றான்.

    ஃபைலை புரட்டிக் கொண்டிருந்த இம்மானுவேல் நிமிர்ந்து, உள்ளே வா... நாகராஜன்! என்றார்.

    ஐயா கூப்பிட்டீங்களாம்...!

    கண்ணாடியை கழற்றி துடைத்து மாட்டிக் கொண்டவர்... அவனையே சில கணங்கள் உற்றுப் பார்த்தார்.

    நான் ஒண்ணு கேக்கறேன்... பதில் சொல்லு! இந்த நிமிஷம் நீ சந்தோஷமா நினைக்கறது எதை?

    இந்த உசிரு பொட்டுனு போய்ட்டா... அதை விட பெரிய சந்தோஷம் எனக்கில்லேய்யா...!

    பச்... இப்படியெல்லாம் பேசக்கூடாது. கடவுள் நம்மை எப்போ படைக்கணும்ன்னு நினைச்சானோ... அப்பவே... நம்ப ஆத்மாவை திருப்பி எடுத்துக்கறதுக்கான நாளையும் குறிச்சி வச்சிருக்கான். மரணம் நிச்சயம்... எந்த மனுஷனுமே அதிலேர்ந்து தப்பமுடியாது. அதனால... அந்த பேச்சை விடு

    …..

    ஓக்கே... உனக்கொரு சந்தோஷமான செய்தியை வச்சிருக்கேன் ஜஸ்ட் இப்பத்தான் அந்த நியூஸ் எனக்கு கிடைச்சது. அதை உடனே உன்கிட்ட சொல்லணும்னுதான் வந்தேன்... ஏன்னா, இப்படியொரு செய்திக்காக நான் எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா? இம்மானுவேலின் முகம் மகிழ்ச்சியில் பளபளத்தது.

    ஐயா... எனக்கு... எதுவுமே புரியலீங்க...

    உன் தண்டனைய குறைக்கச் சொல்லி ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டிருந்தேன்... தெரியுமில்லே!

    ஆ... ஆமாங்கைய்யா... சொல்லியிருக்கீங்க.

    நான் எதிர்பார்த்த ரிசல்ட் வந்திருக்கு நாகராஜன். வர்ற காந்தி ஜெயந்தி அன்னைக்கு உனக்கு விடுதலை!

    …..

    என்னப்பா? நான் எவ்ளோ பெரிய சந்தோஷமான விஷயம் சொல்றேன்! கடப்பாரைய முழுங்கின மாதிரி நிக்கறியே! ஆச்சர்யமாய் கேட்டார்.

    ஏங்கய்யா எனக்கு விடுதலை வாங்கிக் குடுத்தீங்க? யாருக்காக இந்த வெளி உலகத்திலே போய் வாழப்போறேன்? ஆயுசு வரைக்கும் இந்த ஜெயிலே போதுமய்யா எனக்கு... எனக்கு விடுதலை வேண்டாங்கய்யா! அழத்துவங்கினான் நாகராஜன்.

    இதோ பார் நாகராஜன்! மனுஷனோட மனசு முகத்திலே ஒட்டப்பட்டிருக்கு! உன்கிட்டே மட்டும் ஏன் எனக்கு தனிப்பட்ட பிரியம் ஏற்படணும்? உன்னோட குணம்தான் காரணம். தவறுசெய்யாத மனுஷனே இல்லப்பா! சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும்தான் மனுஷனை குற்றவாளியாக்குது மத்தபடி மனுஷன் மனுஷன்தான். இந்த எட்டு வருஷமா உன்னை நான் கவனிச்சிட்டுதானே வர்றேன். நீ தப்பு செய்திருந்தாலும், செய்யாமலேயிருந்தாலும், என் கண்ணுக்கு அப்பாவி மனுஷன், பாசமான அப்பா சட்டத்தின் விதிப்படி நீ சிலுவை சுமந்தது போதும் நாகராஜன். அதை இறக்கி வைக்க ஜீஸஸ் எனக்கொரு சந்தர்ப்பம் கொடுத்தாரேன்னு ஆண்டவனுக்கு நன்றி செலுத்தறேன்!

    என் மேல உங்களுக்குள்ள அன்பை நினைச்சி பெருமைப்படறேங்கய்யா! என்மேல அன்பு செலுத்த நீங்க ஒருத்தராவது இந்த உலகத்திலே இருக்கீங்களேன்னு சந்தோஷப்படறேங்கய்யா! நெகிழ்ந்துப் போய் கையெடுத்து கும்பிட்ட நாகராஜன் சடுதியில் உடைந்து போய் அழ ஆரம்பித்தான்!

    சுருகருவென்று உச்சிவெயில் ஓட்டை போட்டு மண்டையில் ஊடுருவியது ஏதோ புதிய உலகத்தில் காலடி வைப்பது போல் சென்னையின் பிரம்மாண்டம் நாகராஜனை பயமுறுத்தியது. எட்டு வருடம் முன்பு பார்த்த சென்னைக்கும், இப்போதைய சென்னைக்கும் ஏகப்பட்ட வித்தியாசமிருந்தது.

    ஆண்கள் பெண்களைப் போல முடியை பின்பக்கம் நீளமாய் வளர்த்து, ஒற்றை காதில் வளையம் போட்டிருந்தார்கள். பெண்கள் முடியை ஓட்ட சம்மர் கட் போல வெட்டிக்கொண்டு, பொட்டின்றி, பூவின்றி, பேண்ட் சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு, ஆணா, பெண்ணா என்று வித்தியாசம் காண முடியாதிருந்தார்கள்.

    இன்னும் பத்து வருடம் போனால் தமிழர்களின் தாய்மொழி ஆங்கிலமாகி விடுமோ யாரைப்பார்... ஆங்கிலத்தில்தான் பொளந்து கட்டினார்கள்.

    சிரித்தாலும், அழுதாலும், திட்டினாலும், வாழ்த்தினாலும் இங்கிலீஷில்தான். வாட் யார்? ஓஹ்... நோ... யார்! அஃப்கோர்ஸ்... ஐ அக்ரி... என்றே காதில் மோதியது. சென்னையின் நாகரிகம் அசுரகதியில் வளர்ந்து விட்டிருந்தது.

    சாலையை கடக்க நின்றிருந்தபோது நாகராஜனை கடந்தாள் ஒரு யுவதி! பிரின்டட் காட்டன் ஸாரியில், போனிடைல் முதுகில் புரள... ‘ஸன்னி’யை ஓட்டிக்கொண்டு போனவளை நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்த நாகராஜனின் கண்கள் துளிர்த்தது.

    ‘விஜி... விஜிக்குட்டி! என் விஜிக்குட்டி இப்போ இந்த மாதிரிதானே உசரமா வளர்ந்திருப்பா!’

    ‘எப்படிடா இருக்கே? இந்த அப்பாமேல உனக்கென்னம்மா கோபம்? நான் எந்த தப்பை செஞ்சிருந்தாலும்,

    Enjoying the preview?
    Page 1 of 1