Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulasi
Thulasi
Thulasi
Ebook538 pages4 hours

Thulasi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வருடங்கள் பலவாகியும் கரு சுமக்காத துளசி.கணவன் வினோத் வீட்டிற்கு தெரியாமல் வற்புறுத்தி இன்னொருவரின் ஜீவ அணுக்கள் மூலமாக குழந்தையை பெற்று பெற்றோர் ஆனாலும்,நாளாக ஆக...வினோத் மனதளவில் தடுமாறுகிறான்.அவனால் குழந்தையும் இயல்பிலிருந்து தடம் மாறுகிறான்.அணுக்களை தானமாக கொடுத்தவன் அசந்தர்ப்பமாக துளசியின் எதிர்வீட்டில் குடிவர....எதிர்வினை மாற்றங்கள்.முடிவு?
எதிர்பாராதது!
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140606484
Thulasi

Read more from R. Manimala

Related to Thulasi

Related ebooks

Reviews for Thulasi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulasi - R. Manimala

    http://www.pustaka.co.in

    துளசி

    Thulasi

    Author:

    ஆர்.மணிமாலா

    R. Manimala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    1

    பூஜையறை!

    சுவாமி படங்களுக்கு, பழைய பூச்சரங்களை அகற்றி, புத்தம் புது பூச்சரங்களை அணிவித்தாள். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு விளக்கை ஏற்றினாள். கற்பூர ஆராதனையைக் காட்டிவிட்டு கை கூப்பி, கண்மூடிப் பிரார்த்தித்தாள்... துளசி.

    வெகுநேரம் மனமுருக வேண்டியவள், சில நிமிடங்களிலேயே கண் திறந்தாள்.

    தூபத்தில் சாம்பிராணி போட்டு வீடு முழுக்கக் காட்டிக்கொண்டுவந்த துளசி, அழகான பெண்! இருபத்தி ஐந்து வயதென்றால் யாராலும் நம்ப முடியாத இளமை! டவல் சுற்றிய ஈரக் கொண்டையும், திலகத்திற்கு மேல் தீற்றப்பட்ட விபூதியும், நடக்கும்போது மெல்லிய ஒலியெழுப்பிய மெட்டியுமாய்... அவள் வலம்வரும் அழகே தனிதான்!

    என்னம்மா துளசி? காபி ரெடியா? அப்போதுதான் தூங்கியெழுந்து, அறையை விட்டு வெளியே வந்த செண்பகம் கேட்டாள்

    செண்பகம் துளசியின் மாமியார்.

    இதோ... ரெண்டு நிமிஷத்துலே போட்டுடறேன் அத்தே!

    மாமாவும் எந்திரிச்சிட்டார். அவருக்கும் சேர்த்தே எடுத்துக்கிட்டு வந்துடு! ஆமா... இன்னைக்கென்ன வெள்ளிக்கிழமைகூட இல்லையே,... கிருத்திகையா?

    இல்லே அத்தே!

    பின்னே ஏன் வீடு முழுக்க சாம்பிராணி போட்டுக்கிட்டிருக்கிறே?

    இன்னைக்கு ராகுவோட பிறந்த நாள்! என்றாள் மெல்லிய குரலில்

    அதுக்கா இவ்ளோ அமர்க்களம் பண்ணிக்கிட்டிருக்கே! ஹும்... மொதல்ல காபிக்கு ஏற்பாடு பண்ணு.

    செண்பகத்தின் குரலில் அலட்சியம் மேலோங்கி இருந்தது.

    துளசி பெருமூச்சு விட்டபடி கிச்சனிற்குள் நுழைந்தாள். துரிதகதியில் செயல்பட்டாள்.

    மூன்று கப்பில் காபியைக் கலந்து ஊற்றிவிட்டு, ஒரு கப்பில் காம்ப்ளான் கலந்தாள்.

    ராகுல் காம்ப்ளான் மட்டும்தான் சாப்பிடுவான்.

    செண்பகம் இருந்த அறைக்குள் நுழைந்தாள். ராமநாதனும் படுக்கையை விட்டு எழுந்திருந்து அன்றைய தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார்.

    அத்தே காபி - துளசி அவள் முன் ட்ரேயை நீட்டினாள். செண்பகம் எடுத்துக் கொண்டாள்.

    மாமா! என்று ராமநாதன் அருகே நீட்டினாள்.

    சுகர் இல்லாமக் கேட்டேனே?

    சுகர் போடாமதான் கலந்திருக்கேன். நேத்தே சொல்லியிருந்தீங்களே...? நான் மறக்கலே மாமா! நைட்டு நீங்க டேப்லெட் எடுத்துக்காமப் படுத்திட்டீங்களா? இதோ டேபிள் மேல மாத்திரை அப்படியே இருக்கே? துளசி செல்லமாய்க் கோபித்தபடி கேட்டாள்.

    நைட்டு கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டுட்டேன் போலிருக்கு. படுத்ததும் தூங்கிட்டிருக்கேன்.

    அத்தே... நீங்களாவது நினைவுபடுத்தியிருக்கலாமே!

    அடப்போமா! எனக்கு முன்னே இவ குறட்டை விட்டுத் தூங்கிட்டிருக்கா! என்றார் கிண்டலாய்.

    ஆமா... என்னைப் பத்திச் சொல்லலேன்னா... உங்களுக்குத் தூக்கமே வராதே! காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த செண்பகம் கழுத்தை நொடித்துக் கொண்டாள்.

    துளசி செல்ல நகைத்துக் கொண்டாள்.

    காபி ஆறிடப் போகுது! போ... போய் வினோத்தை எழுப்பிக்கொடு! விரட்டாத குறையாய்க் கூறினாள் செண்பகம்.

    துளசி மாடிப்படி ஏறினாள்.

    குழந்தையைப் போல் குப்புறப்படுத்திருந்தான் வினோத்! பக்கத்தில் அவன் மேல் ஒரு காலைப் போட்டுக்கொண்டு ராகுல்.

    துளசி ட்ரேயை முக்காலி மீது வைத்துவிட்டு வினோத்தை எழுப்பினாள்.

    ம்... ம்..." என்று புரண்டானே தவிர கண்களைத் திறக்கவில்லை.

    மாப்பிள்ளை சார்! நேரமாச்சு சார்... எந்திரிங்களேன்! செல்லமாய்க் கெஞ்சினாள்.

    சட்டென்று கண்களைத் திறந்த வினோத், அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

    ம்... என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் துளசி.

    ஏழு வருஷத்துக்கு முந்தி எப்படியிருந்தியோ அப்படியேதான் இப்பவும் இருக்கே! நீ மட்டும் ஏதாவது சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடறியா துளசி?

    ம்... தூக்கணாங்குருவி லேகியம் சாப்பிடறேன்! காலையிலே எழுந்ததும் இதென்ன பேச்சு? எந்திரிங்க நேரமாகுது!

    ஆமா... சும்மா இருந்தவனை மாப்பிள்ளை சார், அந்த சார், இந்த சார்னு கொஞ்சிட்டு... - முனகினான்.

    என்ன... என்ன முனகிறீங்க?

    ஒண்ணுமில்லே தாயே! தூக்கணாங்குருவி லேகியம் சாப்பிடறேன்னு சொன்னியே...? அது எனக்கும் கிடைச்சா நல்லாருக்குமேனு நினைச்சேன்!

    இப்ப ஒண்ணும் எதுவும் குறைஞ்சு போயிடலே! எல்லாம் அம்சமாதான் இருக்கு! நேரமாச்சு எந்திரிம்மா... காபியக் குடிச்சிட்டு மொதல்ல குளிச்சு ரெடி ஆவுங்க... க்விக்

    நீயே சொல்லிட்ட பிறகு எனக்கெதுக்கடி லேகியமெல்லாம்? ஆமா, ஏன் இவ்வளவு அவசரப்படுத்தறே?

    உங்களுக்கு எதுதான் ஞாபகமிருக்கும்? ஆபீஸ், ஃபைல், கொட்டேஷன், க்ரெடிட், டெபிட், மார்க்கெட்டிங்... இதைத் தவிர வேறென்ன தெரியும்? ஐயா... இன்னைக்கு நம்ம ராகுலோட பர்த்டே...! நாம மூணு பேரும் கோவிலுக்குப் போறோம். இப்பவாவது ஞாபகத்துக்கு வருதா?

    அடடா... என்று கையை உதறினான்.

    ஸாரி துளசி... சுத்தமா மறந்துட்டேன். டேய்... கண்ணா... எந்திரி... எந்திரி... ராகுலை உலுக்கினான்.

    நீங்க போய்க் குளிங்க... நான் எழுப்பிக்கறேன்!

    அட... குளிக்காமயா கோவிலுக்கு வந்திடப் போறேன்? ரொம்பத்தான் பிகுபண்ணிக்கறியே! - வினோத் செல்லமாய் கண்களை உருட்டிக் கோபப்பட்டுக்கொண்டு, எழுந்து போனான்.

    அவன் செய்கையைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த துளசி, மகன் அருகே அமர்ந்தாள்.

    ராகுல்... ராகுல் கண்ணா! எந்திரிடா...

    ராகுல் புரண்டு படுத்தான்.

    மறுபடி உலுக்கினாள்.

    சிணுங்கியபடி கண்களைத் திறந்தான்.

    ராகுல்... மெனிமோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே...! என்றாள் கன்னத்தில் முத்தமிட்டு.

    ராகுலின் கண்கள் விரிந்தன.

    மம்மி... இன்னைக்கு எனக்கு பர்த்டேயா?

    ஆமாண்டா கண்ணா

    ஹை... ஜாலி! மம்மி... இன்னைக்கு நான் கேக்கறதெல்லாம் வாங்கித்தருவியா?

    ம்... வாங்கித் தருவேன்!

    என்னைக் கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போவியா?

    ம்... போவோம்!

    மம்மி... பெரிய கேக் வாங்கலாமா?

    சரி... வாங்கலாம்!

    அப்புறம்... மம்மி... என் ஃப்ரண்ட்ஸ் அத்தனை பேரையும் வீட்டுக்கு வரச்சொல்லட்டுமா?

    வே... வேணாம் ராகுல்! அதெல்லாம் எதுக்கு? எந்திரி... பிரஷ் பண்ணிட்டு காம்ப்ளான் குடி!

    ஏம்மா வேணாங்கறே? கணேஷ், பாபுவெல்லாம் அவங்க பர்த்டேயை ஃப்ரண்ட்ஸ் அத்தனை பேரையும் அழைச்சுதான் கொண்டாடினாங்க தெரியுமா? - உதடு பிதுக்கினான் ராகுல்.

    பாட்டி திட்டுவாங்க ராகுல்! அதான்...

    பாட்டி ஏம்மா எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கா? எனக்கு அந்தக் கிழவியப் பார்த்தாலே பிடிக்கலே! என்றான் ராகுல்.

    சேச்சே... பெரியவங்களை அப்படியெல்லாம் பேசக் கூடாது. எந்திரி... நேரமாச்சு பார்!

    ராகுல் படுக்கையை விட்டு எழுந்தான்.

    ***

    கோவிலில் கூட்டம் நெருக்கியடித்தது.

    அர்ச்சகரிடம் அர்ச்சனைத் தட்டை நீட்டிய துளசி, ராகுல், உத்திரட்டாதி நட்சத்திரம், சிவகோத்ரம்... என்றாள்.

    துளசியின் பக்கத்தில் வினோத்தும், ராகுலும் நின்றிருந்தனர்.

    ராகுல் சும்மாயில்லாமல் நழுவி நழுவி ஓடினான். துளசி மெல்லக் கண்டித்தாள்.

    ராகுல்... சும்மாயிரு... இங்கே வந்து நில்லு... கண்ணை மூடி சாமி கும்பிடு

    கண்ணை மூடிட்டா சாமிய எப்படிப் பார்க்கறதாம்?

    சொல்லு... பயல் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு! என்ற வினோத் குறும்பாய்ப் பார்த்தபடி மனைவியின் தோளை இடித்தான்.

    ப்ச்... இது கோவில்! ஞாபகமிருக்கட்டும். கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உங்க பையனாச்சே... உங்களை மாதிரித்தானே அசடாட்டம் கேள்வி கேப்பான்!

    எப்படியோ.... சந்தடி சாக்குல என்னை அசடுன்னு சொல்லிட்டே. நல்லவேளை... எங்கம்மா எதிரே சொல்லாமப் போனியே...!

    உங்கம்மாவுக்கும் தெரியும்... நீங்க எப்படிப்பட்டவர்னு!

    நான் அதைச் சொல்லலே...

    பின்னே?

    உங்க பையனாச்சே... உங்களை மாதிரித்தானே கேள்வி கேப்பான்னு சொன்னியே... அதை!"

    துளசிக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. புரிந்த6போது... திடுக்கிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ... கண் மூடி கை கூப்பி நின்றிருந்தான்.

    இயல்புக்குத் திரும்பிய துளசி... கனத்த மனதுடன் கண் மூடி சேவித்தாள்.

    அர்ச்சகர் தீபாராதனைத் தட்டுடன் வந்தார். தொட்டு, கண்களில் ஒற்றிக்கொண்ட துளசி, அவர் தந்த அர்ச்சனைக் கூடையைப் பெற்றுக் கொண்டு திரும்பியவள் கண்களில் அதிர்ச்சி!

    ஏங்க... ராகுல் எங்கே?

    அப்போதுதான் வினோத்தும் கவனித்தான்.

    எங்கே... இங்கேதானே நின்னுட்டிருந்தான்? - பரபரப்பாய்த் தேடினான்.

    துளசியையும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

    ராகுல்... ராகுல் என்றழைத்தபடி கோவில் முழுக்கத் தேடினர்.

    இல்லை.

    துளசியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    எங்கேயும் காணோமே...? எங்கே போயிருப்பான்? எனக்குப் பயமாயிருக்குங்க... ஐயோ... ராகுல்... ராகுல்... – நடுங்கும் குரலோடு மறுபடி தேடினாள்.

    ப்ச்... என்ன துளசி சின்னக் குழந்தையாட்டம்? அஞ்சு நிமிஷத்துல ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. இங்கேதான் எங்கேயாவது இருப்பான். ஒண்ணு பண்ணுவோம். நீ இங்கேயே தேடு. நான் கோவிலுக்கு வெளியே போய்ப் பார்க்கறேன்... என்றவன் வெளியே வந்தான்.

    மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டானேயொழிய அவனும் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டுதான் இருந்தான்.

    இங்கும் அங்குமாய்த் தேடியவன் கண்களுக்கு ராகுல் பட்டான்.

    நிம்மதியாய் மூச்சு விட்டான்.

    டேய்... ராகுல்... இங்கே என்னடா பண்ணிட்டிருக்கே? என்றபடி அருகில் வந்தான்.

    ஒரு குட்டி நாயைத் தூக்கி வைத்துக்கொண்டு அதன் தலையைத் தடவி விட்டுக் கொண்டிருந்தான்.

    பாவம் டாடி! இந்தக் குட்டி நாய் மேலே யாரோ வண்டியால இடிச்சுட்டு போயிருக்காங்க. கால்ல அடிபட்டு ரத்தம் வந்திருக்கு

    சீச்சீ... அதைக் கீழே போடு - அருவருப்பாய் முகம் சுளித்தான் வினோத்.

    கீழே விழுந்த நாய்க்குட்டியைப் பரிதாபமாய்ப் பார்த்த ராகுல், மறுபடி அதைத் தூக்கிக் கொண்டான். அவன் மீதிருந்த ரத்தம், ராகுலின் சட்டையில் பட்டுவிட்டது.

    பாவம் டாடி... இதை நாம் வீட்டுக்குக் கொண்டுபோய் வளர்க்கலாம்!

    ராஸ்கல்... ட்ரஸ்ஸெல்லாம் நாசமாக்கிட்டியே விடுடா அதை! சொன்னாக் கேக்கறியா? இந்த அதிகப் பிரசங்கித்தனத்தை எப்ப விட்டுத் தொலைக்கப் போறியோ தெரியலியே...! - ஆத்திரமாய் அவனை இழுத்து நாயைப் பிடுங்கி எறிந்தான்.

    ராகுல் அழ ஆரம்பித்தான். அந்த நாய் பின்னே ஓட ஆரம்பித்தான்.

    எனக்கு வேணும்... நாய் வேணும்!

    அவன் கையை இழுத்துப் பிடித்து நிறுத்திய வினோத்,

    சனியனே... என்ன பிடிவாதம் உனக்கு? என்றவன் பளாரென அவன் கன்னத்தில் அறைந்தான்.

    வலியில் துடித்துப் போனான் ராகுல்.

    அதே நேரம் அருகே ஓடி வந்த துளசி, ராகுலை இழுத்து அணைத்துக்கொண்டு கணவனை முறைத்துப் பார்த்தாள்.

    பிறந்த நாளும் அதுவுமா, இப்படிக் குழந்தையைப் போட்டு அடிக்கிறீங்களே... நீங்க என்ன கல்லா? செண்பகம்மாவோட பிள்ளைதானே? நீங்க மட்டும் எப்படியிருப்பீங்க...?அம்மாவைப் போலத்தானே?!" - கோபத்தில் வார்த்தைகளைச் சிதற விட்டாள் துளசி.

    வினோத் மனைவியை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தான்.

    அதில் சொல்ல முடியாத வேதனை அப்பிக் கிடந்தது.

    ***

    மதுரை!

    புறநகரில் ஜனசந்தடி அதிகமில்லாத ஒரு இடத்தில் இருந்தது. அந்தச் சின்ன மாடி வீடு! வீட்டைச் சுற்றி கொஞ்சம் பூச்செடிகளும், காய்கறிச் செடிகளும் பயிரிடப்பட்டிருந்தன.

    சிவா... டைனிங் டேபிள் முன் அமர்ந்து தாளம் போட்டுக்கொண்டிருந்தான்.

    சாந்தி... பசிக்குது... உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான்.

    வந்துட்டேன்

    அரை மணி நேரமா இதையேதான் சொல்லிட்டிருக்கே. வந்தபாடாத் தெரியலியே! தவழ்ந்து வந்திருந்தாக் கூட இந்நேரம் வந்துசேர்ந்திருக்கணுமே! என்றான் கிண்டலாய்.

    அவ்வளவு தாங்க... முடிஞ்சு போச்சு!

    அப்படி என்னதான் கடவுள்கிட்டே கேட்டுக்கிட்டிருக்கே? ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொண்ணாக் கேளு! ஒரேயடியா கேட்டா திணறிடப் போறார்!

    சாமி விஷயத்திலே என்ன வேண்டிக்கப் போறேன். எல்லாம் உங்களுக்காகத்தான் வேண்டிக்கிட்டேன்... என்றபடி பூஜையறையிலிருந்து வெளிப்பட்டாள் சாந்தி.

    ஒடிசலான சிவந்த தேகம்! அமைதியும், அழகும், கருணையும் குடிகொண்ட முகம்.

    கற்பூரத் தட்டை அவன் முன் நீட்டினாள்

    அதிலிருந்த விபூதியை ஒரு துணுக்கு ஒற்றி எடுத்து, நெற்றியில் இட்டுக் கொண்டான்,

    என்ன வேண்டிக்கிட்டே?

    என் புருஷன்... இன்னைக்குப் பண்ற ஆபரேஷன்லேயும் எப்பவும் போல வெற்றி பெறணும்னு!

    ஏதேது... நீ சொல்றதைப் பார்த்தா இதுக்கு முன்னாடி பண்ணின அத்தனை ஆபரேஷனையும் என் கையப் புடிச்சு உன் கடவுள்தான் பண்ணினார்னு சொல்லுவே போலிருக்கே!

    அதிலென்னங்க சந்தேகம்? மனுஷங்க துவக்கறதை, முடிச்சி வைக்கறவன் அவன்தானே? மரணத்துக்குப் பின் மனுஷன் போய்ச் சேர்ற இடம் கடவுள் தவிர வேற யாருக்குத் தெரியும்? சந்திரனையும், செவ்வாயையும் கண்டுபிடிச்ச விஞ்ஞானம், அதை மட்டும் ஏன் கண்டு பிடிக்க முடியலே? அது கடவுளோட பாசறைங்க! என் புருஷன் ஆபரேஷன் செய்யற பேஷண்ட்டோட உயிரை 'கடவுளே... அழைச்சுக்காதே'ன்னு அந்த பகவான்கிட்டே வேண்டிப்பேன். அவர் மனசு வைச்சதாலதான் இன்னைக்கு நீங்க கைராசி டாக்டர்னு பேர் வாங்கியிருக்கீங்கன்றதை மறந்துடாதீங்க!

    சிவா மனைவியை ஆச்சரியமாகப் பார்த்தான்.

    என்ன அப்படிப் பார்க்கறீங்க?

    வயசுக்கேத்த மாதிரி பேச ஆரம்பிச்சிட்டே

    வயசுக்கேற்ற மாதிரின்னா...?

    கிழவி மாதிரி...!

    என்னது? என்றபடி செல்லமாய் அவன் தோளில் தட்டினாள்.

    அடிப்பாவி... புருஷனையே கைநீட்டி அடிக்கிறியே...!

    உங்களைப் பேசவிட்டது என் தப்புதான் சுவாமி! முதல்ல சாப்பிடுங்க...!

    தட்டில் இட்லி, வடை வைத்து சாம்பார் ஊற்றினாள்.

    இனிமே எப்படி பேச முடியும்? அதான் கல்லு மாதிரி இட்லிய வச்சுட்டியே - அவளை மேலும் சீண்டினான்.

    சாந்தி முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள். சசிக்கலே சாந்தி! நீ சிரிச்சாதான் அழகு

    இன்னும் முறைத்தாள்.

    ப்ச்... விளையாட்டுக்குச் சொன்னாக் கேக்கணும்.

    எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு

    புருஷன் பொண்டாட்டிக்குள்ளே ஏதுடி எல்லை?

    ஆமா... கொஞ்சறதுல ஒண்ணும் குறைச்சலில்லே!

    சரி... சமாதானமா போயிடுவோம்.... ஆ... காட்டு... இட்லியை விண்டு அவள் வாயருகே கொண்டுபோனான் சிவா.

    எனக்கொண்ணும் வேண்டாம்!

    அப்ப... இந்தக் கொடுமைய நான் மட்டுமே அனுபவிக்கணுமா?

    என்னது? என்று ஆவேசமாய் எழுந்த சாந்தி, அவன் குறும்புத்தனத்திற்குத் தன்னை மீறிச் சிரித்து, மறுபடி அவன் தோளில் பட்டென்று அடித்தாள்.

    ***

    ஹாஸ்பிடல் செல்லும் அவசரத்தில் இருந்தான்

    சிவா! அது எங்கே, இது எங்கே என்று தேடிக் கொண்டிருந்தவன், சாந்தி... என் கண்ணாடி எங்கே? என்றான்.

    அங்கேதாங்க இருக்கு! என்றாள் கிச்சனிலிருந்து."

    அதான் எங்கே?

    கண்ணாடி போடலேன்னா கண்ணே தெரியாதே உங்களுக்கு! எங்கே போய்டப் போகுது? டேபிள் மேலதானே இருக்கு? நம்ம வீட்ல என்ன நாலஞ்சு குழந்தை குட்டிகளா இருக்கு. வச்ச இடத்திலேர்ந்து காணாமப் போறதுக்கு? - சாந்தி கண்ணாடியை தந்தாள்.

    சிவா அமைதியாகிப் போனான்.

    புரிந்து கொண்ட சாந்தி வருத்தப்பட்டாள்.

    ஸாரிங்க... கஷ்டப்படுத்திட்டேனா? இன்னைக்கில்லேன்னாலும் என்னைக்காவது ஒரு நாள்... நம்ம வீட்லேயும் காச்... மூச்னு குழந்தைங்க சத்தத்திலே நாம திணறத்தான் போறோம்...!

    அந்த நம்பிக்கை எனக்குமிருக்கு. அதுக்காக பலதையும் நினைச்சு, நீ உன் மனசைக் கஷ்டப்படுத்திக்காதேன்னுதான் சொல்றேன்!

    அந்தப் பேச்சை மாற்ற விரும்பினாள்.

    எனக்கு இந்த ஊரே பிடிக்கலைங்க!

    அதைத்தான் தினமும் சொல்றியே

    சென்னை மேல அப்படியென்ன மோகம்?

    பரபரன்னு ஜனங்க மிஷின் மாதிரி நடக்கற வேகம். ஓயாத வண்டிச் சத்தம். அலை பொங்கற கடல்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அங்கேயுள்ள குயின் மேரீஸ்லதானே ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன்? என்னால மறக்க முடியாத ஊர்!

    நான் மறக்க நினைக்கிற ஊர்! என்றான் பார்வை விட்டத்தை வெறிக்க

    என்னது? என்றாள் சாந்தி...

    ஒண்ணுமில்லே... கூவத்து வாசனையைச் சுவாசிக்காம உன்னால இருக்க முடியலேன்னு சொன்னேன்? என்றான் பேச்சை மாற்றி!

    ப்ளீஸ்... நாம சென்னைக்குப் போக ட்ரை பண்ணுங்களேன்! எனக்கென்னவோ அங்கே போனாதான் நாம எதிர்பார்த்த நல்லது நடக்கும்னு மனசு சொல்லுது!

    "எதிர்பார்க்காத ஏதோ ஒரு கெட்டது நடக்கப் போகுதுன்னு என் மனசு சொல்லுதே... கொண்டான்.

    ***

    டைனிங் டேபிளைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க, துளசி பரிமாறிக் கொண்டிருந்தாள்.

    இன்னும் கொஞ்சம் ரசம் விடு! சாதத்தை இன்னும் கொஞ்சம் குழைய வச்சிருக்கணும். ரசத்துக்கு விறைச்சுக்குது. நெஞ்சிலே கப்புன்னு அடைச்சுக்குது! என்றாள் செண்பகம்.

    நமட்டாகச் சிரித்துக் கொண்டார் ராமநாதன்.

    துளசி... பேசாம இவளுக்கு சாதத்தை மிக்ஸியிலே போட்டு ஜுஸாக்கிக் கொடுத்துடு!

    "எனக்கென்ன... உங்களுக்கும் வயசாகுதே...? இப்படியெல்லாம் சாப்பிடக் கூடாதே... ஏடாகூடமா ஆகிடக் கூடாதேன்னு சொன்னா... என் பல்லையே... பிடிச்சு பதம் பார்க்கிறீங்களா?

    ஏம்மா... எதுக்கு இப்ப இந்தப் பேச்செல்லாம்? ராகுல்... சாப்பிடுடா... போட்டது அப்படியே இருக்கு!

    எனக்குப் பிடிக்கலே டாடி... வேணாம்!

    தட்டுல போட்ட பிறகு என்னடா பிடிக்கலே? ஒழுங்கா சாப்பிடு அதட்டினாள் செண்பகம்.

    நீ உன் வேலையப் பார்த்துக்கிட்டுப் போ...!

    பாரேன்... கழுதை... இந்த வயசிலேயே என்ன பேச்சுப் பேசுது?

    ராகுல்... எந்திரி... போய் கையக் கழுவு! - துளசி அவனைக் கண்டித்தாள். ராகுல் எழுந்தான்.

    இப்பவே மட்டுமரியாதை இல்லாமல் பேசறான். இருக்க இருக்க... என்னென்ன பேசப் போறானோ? என்றாள் செண்பகம்.

    ஏய் சும்மாயிரு. இதைப் போய் பெரிசாக்கிட்டு... என்றார் ராமநாதன்.

    அஞ்சு வயதுக் குழந்தை பேசறதையெல்லாம் ஏம்மா சீரியஸா எடுத்துக்கறே?

    அதுவா குழந்தை? என்றபடி எழுந்தவள்... எழுந்த வேகத்தில் தொப்பென அமர்ந்து விட்டாள்.

    காரணம் செண்பகத்தின் புடவை நுனியையும், ராமநாதனின் மேல் துண்டையும் சேர்த்து சேரில் கட்டி வைத்திருந்தான் ராகுல்.

    செண்பகம் அமர்ந்த வேகத்தில் கணவன் மேல் மோதிக் கொண்டாள்.

    வெட்கத்தில் முகம் சிவந்தது செண்பகத்திற்கு.

    இதோ பார்றா வினோத்! வெத்திலையக் குதப்பித் துப்பின எச்சிலாட்டம் உங்கம்மா முகம் சிவக்கறதை? என்று கிண்டலடித்தார்.

    எல்லோரும் சிரித்த சிரிப்பில் கூடமே அதிர்ந்தது.

    முகம் சுருங்கிப் போனது செண்பகத்திற்கு.

    மனுஷன் சொல்ற உதாரணத்தைப் பார்! எல்லோருக்கும் என்னைக் கண்டா கிண்டலா போயிடுச்சா? துளசி... உம் பிள்ளைக்குக் கொஞ்சம் சொல்லி வை! இதெல்லாம் எனக்குப் பிடிக்கலே?

    விளையாட்டா எடுத்துக்காம, ஏம்மா எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கறே? - வருத்தமாய்க் கேட்டான் வினோத்.

    எனக்குப் பிடிக்கலே... எதுவும் பிடிக்கலே... யாரையும் பிடிக்கலே!

    அதான் ஏன்? என்றான் வினோத்.

    சின்ன வீடா இருந்தாலும்... அது சொந்த வீடாக இருக்கணும். அதுதான் மரியாதை, கவுரவம்... சொந்தமில்லாத பொருளையெல்லாம் உரிமை கொண்டாட எனக்குப் பிடிக்காது! என்றாள் காட்டமாய்.

    துளசியால் அந்த வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விம்மலோடு வெடித்து வந்த அழுகையோடு ஓடிப் போய் தன்னறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.

    2

    துளசி அரக்கப் பரக்க வேலை செய்துகொண்டிருந்தாள். சமைத்த இனிப்பு வகைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

    கிச்சனிற்குள் நுழைந்தான் வினோத்.

    ம்ஹா... வாசனை வீட்டையே தூக்குது! என்று ஒரு மைசூர்பாக்கை எடுக்கப் போனான்.

    பட்டென்று கையில் ஒரு போடு போட்டாள் துளசி.

    தொடாதீங்க!

    சாப்பிடறதுக்குத்தானே செய்தே?

    சாப்பிடறதுக்குத்தான். ஆனா இப்ப இல்லை. பூஜை முடிஞ்ச பிறகு

    கணவன்தான் கண்கண்ட தெய்வம்னு உனக்கு யாரும் சொல்லித்தரலையா? நான் சாப்பிடலாம்!

    ப்ளீஸ் எந்திரிங்க! எதையும் எச்சில் பண்ணாதீங்க! கெஞ்சினாள துளசி.

    அப்ப ஒண்ணு குடு!

    என்னது?

    ஒரு காபி போட்டுக் குடுன்னேன்! என்றான் சிரித்தபடி.

    நீங்க ரூமுக்குப் போங்க. போட்டு எடுத்துட்டு வர்றேன்!

    அதே நேரம்...

    மம்மி... என்றழைத்தபடி ஓடி வந்தான் ராகுல்.

    இவ்வளவு நேரம் எங்கே இருந்தே? கையெல்லாம் அழுக்கு. என்ன பண்ணிட்டிருந்தே?

    தோட்டத்துல பட்டாம்பூச்சி பிடிச்சிட்டிருந்தேன்!

    பார்... டிரஸ்ஸெல்லாம் எவ்வளவு அழுக்காக்கிட்டு வந்திருக்கே? முதல்ல கையெல்லாம் சுத்தமா கழுவிட்டு வா!

    மம்மி... எனக்கு மைசூர்பாக்கு வேணும்!

    தர்றேன். முதல்ல கையக் கழுவு!

    ராகுல் ஓடினான்.

    இது ரொம்ப அநியாயம் துளசி. நான் கேட்டப்ப பூஜை புனஸ்காரம்னு சொன்னே... ராகுல் கேட்டதும் தர்றேன்றியே... போட்டியா?

    குழந்தையும் தெய்வமும் ஒண்ணு... தெரியுமில்லை...

    ஓஹோ! என்றான் தலையை ஆட்டி.

    ***

    படுக்கையறையில் தலையணையின் மீது சாய்ந்தபடி சந்தோஷமாக துளசி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க உள்ளே வந்த வினோத்.

    என்ன துளசி... ஜாலி மூடிலே இருக்கே! என்ன விஷயம்? எனக் கேட்டான்.

    என்னமோ தெரியலைங்க, இன்னைக்கு உங்க அம்மா, என்னையோ என் பிள்ளை ராகுலையோ ஒரு தடவை கூடத் திட்டலை... என சந்தோஷமாய்க் கூறினாள்.

    வினோத் சிரித்தபடியே, அதுவா... வருஷத்துல ஒரு தடவை எங்க அம்மா மௌன விரதம் இருப்பாங்க... என்றான்.

    அது என்ன வருஷத்துக்கு ஒரு தடவை? - ஆச்சர்யமாய்க் கேட்டாள் துளசி.

    அப்படி ஒரு கணக்கு எங்க பரம்பரையிலே... - வினோத் சொல்ல, சிரித்தாள் துளசி.

    அது மட்டுமில்லே மீதி 364 நாளும் ஓயாமப் பேசணுமே... அதுக்காக ஒரு நாள் ரெஸ்ட் என்றான்.

    துளசி, தன் மாமியார் வாயாடுவதை நினைத்துப் பார்த்தாள்.

    சரி விடு, சந்தோஷமா ஏதாவது பேசுவோம் என்று வினோத் சொல்ல, உடனே ஆமாம் ராகுல் எங்கே? எனக் கேட்டாள்.

    இப்ப எதுக்கு அவனைப் பத்தி... அவன் வர மாட்டான்... என அலட்சியமாக வினோத் சொல்ல, அதிர்ந்து போனாள் துளசி.

    அட என்ன நீ பயந்துட்டியா? நைட் அவன் வர்றதுக்கு பத்து மணியாகும்! - வினோத்தின் பதில்.

    ஏன் என்பது போல் அவனது முகத்தை ஏறிட்டுப் பார்க்க,

    எங்க அப்பாவோட சேர்ந்து சர்க்கஸ் பார்க்கப் போயிருக்கான் என்ற வினோத்தின் பதிலில் நிம்மதி அடைந்தாள்.

    உடனே எப்படிங்க மனசுவந்து அனுப்பி வைச்சீங்க! – அவள் கேள்வியில் கிண்டல் இருந்தது.

    மனசு வந்துச்சுன்னா, நீ என்ன நினைச்சுப் பேசிக்கிட்டு இருக்கே! எனக்கு ராகுல் மேல பாசம் இல்லேங்கிறியா? துளசி, அவனோட குறும்புத்தனம் எல்லை மீறிப் போகும்போதுதான் நான் என்னையும் மீறி நடந்துக்க வேண்டி இருக்கு! - வினோத் சலித்துக் கொண்டான்.

    என்னங்க நீங்க, உங்களுக்கு அவன் மேலே பாசம் இல்லேன்னு நான் சொன்னேனா? சின்னப் பையன், கொஞ்சம் பக்குவமா நடந்துக்கச் சொல்றேன் துளசி சொல்ல, சமாதானமானான் வினோத். துளசி நான் அப்படித்தான் அனுசரிச்சுப் போறேன். ஆனா அம்மா அட்ஜஸ்ட் பண்ணிப் போகலைன்னு நீ வருத்தப்படாதே. - ஆறுதலாய் அவள் தலையை தடவிக் கொடுத்தான்.

    பாருங்க... சுத்திச் சுத்தி நம்ம பேச்சு உங்க அம்மாகிட்டேயே வந்து சேருது. உங்க அம்மாவும் என்னையே சுத்திச் சுத்தி வர்றாங்க... என்றாள்.

    அதுக்கென்ன பண்றது? குடும்பப் பெண்கள் காலையிலே எழுந்து எதைச் சுத்தி வருவாங்க? - கேள்வியைக் கேட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

    எதைச் சுத்தி வருவாங்க? துளசி புருவத்தைச் சுளிக்க,

    துளசி மாடத்தைச் சுத்தி வருவாங்க? சுத்தினா நன்மையா? தீமையா? - கேள்வி கேட்டான் வினோத்.

    நன்மைதான்! - சிரித்தபடியே துளசி சொல்ல,

    அதனாலதான் எங்க அம்மா, இந்தத் துளசியைச் சுத்திச் சுத்தி வர்றாங்க! எனக்கூறி அவளை இழுத்து தன் பக்கமாக அணைத்துக் கொள்ள அம்மாவை விட்டுக்குடுக்க மாட்டிங்களே... என அவனிடம் பொய்க் கோபம் கொண்டு அவன் மார்பில் சாய,

    உன்னை மட்டும் விட்டுக் குடுத்துடுவேனா? என அவளைக் கட்டி அணைக்க, துளசி வெட்கத்தால் முகம் சிவந்தாள்.

    ***

    அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான் வினோத்.

    வந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. காலிங்பெல் அலறியது.

    வினோத் எழப் போனான். துளசி தடுத்தாள்.

    இருங்க நான் பார்க்கறேன்!

    கதவைத் திறந்தாள்.

    வினோத் வயதையொத்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.

    நீங்க... யாரு?

    என்ன சிஸ்டர்... என்னைத் தெரியலியா?

    ஸாரி... தெரியலே! உங்க கல்யாணத்தப்ப ஓடியாடி பந்தி பரிமாறினேனே...? அதைக்கூட மறந்துட்டீங்களா?

    குரல் கேட்டு வெளியே வந்த வினோத் முகம் மலர்ந்தான்.

    டேய் விச்சு... வா... வா! துபாய்லேர்ந்து எப்படா வந்தே?

    ப்பா... உனக்காவது ஞாபகமிருக்கே! சிஸ்டருக்கு இன்னும் என்னை யார்னு தெரியலே!

    யானை மாதிரி பெருத்துப் போய் வந்தா... எப்படி ஞாபகம் வரும்? துளசி... இவனைத் தெரியலே? விச்சு... விஸ்வநாதன்! பக்கத்துத் தெருவிலே...!

    ஓ... இப்ப நினைவுக்கு வருதுங்க! நம்ம கல்யாணம் ஆன நாலஞ்சு மாசத்துல... துபாய்ல வேலை கிடைச்சிருக்குன்னு போனவர்தானே? ஸாரி... சட்டுனு நினைவுக்கு வரலே... தப்பா நினைச்சக்காதீங்க!

    தப்பா நினைக்க என்ன இருக்கு? அங்கே குடிக்கிற தண்ணிக்குப் பஞ்சம்னு சொல்வாங்க. அந்தத் தண்ணிக்கு பதிலா வேற தண்ணி அடிச்சி பெருத்துப் போய் வந்தது அவன் தப்பு! என்றான் கிண்டலாய் வினோத்.

    ப்ச்... சிஸ்டர் முன்னாடி என்னடா இதையெல்லாம் பேசிக்கிட்டு... என்று முணுமுணுத்தவன், பாருங்க... ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்கேன், வெறும் காபி, பிஸ்கட்டுனு முடிச்சி அனுப்பிடாதீங்க... நைட்டு சாப்பாடும் இங்கேதான்!

    சாப்பிடாமப் போனா மட்டும் விட்டுடவா போறோம்? ஆமா, துபாய் லைஃப் எப்படியிருந்தது? எப்பதான் கல்யாணம் பண்ணிக்கப் போறே? மறுபடி துபாய் போற ஐடியா இருக்கா? என்றான் வினோத்.

    கொஞ்சம் மூச்சு விட்டுக்க! இப்படி அடுக்கிக்கிட்டே போனா எப்படி? ஒவ்வொண்ணாக் கேளு! தேவைக்கு அதிகமாகவே சம்பாதிச்சிட்டேன். இனி மறுபடி துபாய் போற ஐடியா இல்லே. சம்பாதிச்ச பணத்தை இங்கேயே எந்த பிஸினஸ்லேயாவது இன்வெஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன். என்ன சொல்றே? என்றான் துளசி கொண்டுவந்து வைத்த பிஸ்கெட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கடித்தபடி.

    வெரிகுட் ஐடியா!

    ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சா என்ன?

    வேணாம்பா! உனக்கு இங்கேயுள்ள நிலவரம் தெரியாது. அந்த பிஸினஸைத் தவிர வேறு எதையாவது தொடங்கு

    ஏண்டா?

    நீ நல்லவன்! கடைசி வரை நல்லவனாவே இருக்கணும்னு ஆசைப்படறேன். சரி... இதை விடு! இப்பதான் வந்திருக்கே. கொஞ்ச நாள்... ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு பிஸினஸைப் பத்தி யோசி! ஆமா... கல்யாணத்தைப் பத்தி ஒண்ணும் சொல்லலியே... எப்படா கல்யாணம்?

    வீட்லே பார்த்திட்டிருக்காங்க! அநேகமா அடுத்த மாசம் நடக்கலாம்!

    கங்க்ராஜுலேஷன்ஸ்! என்று விச்சுவின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.

    தன்னறையிலிருந்து ஹாலுக்கு வந்தாள் செண்பகம்.

    என்னம்மா தெரியலியா? விச்சுமா? பக்கத்துத் தெரு நடராஜனோட பிள்ளை...

    அடடா... அந்தப் பிள்ளையாண்டானா? எப்படிப்பா இருக்கே? எப்ப வந்தே ஊர்லேர்ந்து?

    நேத்துதான் வந்தேன்! என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே... ச்சிலீர்... என்ற சத்தம் பயங்கரமாய்க் கேட்டது.

    உள்ளிருந்து ஓடி வந்த ராகுல் அழும் நிலையில் இருந்தான்.

    என்னடா... என்னத்தைடா போட்டு உடைச்சிட்டு வந்திருக்கே?

    டாடி... மீன் தொட்டி... கை தவறி விழுந்து உடைஞ்சிருச்சி டாடி! என்றான் தயக்கமாய்.

    ஒரு நாளைப் போல இல்லாம தினசரி எதையாவது போட்டு உடைச்சிக்கிட்டே இருக்க வேண்டியது. இது நாலாவது மீன் தொட்டி. போடா... என் முன்னால நிக்காதே! - கோபமாய்க் கத்தினான் வினோத்.

    கேக்கறதையெல்லாம் இல்லைன்னு சொல்லாம வாங்கித் தர ஆளிருக்கும்போது... உடைக்காம என்ன பண்ணும்... கழுதை... கழுதை! - ஆத்திரமாய்ப் பேசினாள் செண்பகம்.

    ஏண்டா கண்ணா உடைச்சே? பார்த்து விளையாடக் கூடாதா? என்ற துளசி... ராகுலின் தலையைக் கோதி அணைத்துக் கொண்டாள்.

    ஏண்டா உடைச்சேன்னு முதுகுல இரண்டு வைக்காம இப்படிக் கொஞ்சினா... திருந்துமா? சீரழிஞ்சு போகாதா? – வெறுப்பாய்க் கேட்டாள் அத்தை.

    வினோத்... யார்டா இந்தப் பொடியன்?

    எங்க பையன்தான். பேரு... ராகுல்!

    அடடே... நீ சொல்லவேயில்லையே... இங்கே வாடா!

    வந்தான்.

    உன் பேரு என்ன?

    இப்பதானே என் டாடி சொன்னாரு... அதுக்குள்ளே மறந்துட்டீங்களா?

    அடேயப்பா... என்னடா வினோத். உன் பையன் இந்தப் போடு போடறான்? இவனை உன்பையன்னு சொன்னா நம்ப முடியலே...!

    வினோத் - துளசியின் முகங்களில் அதிர்ச்சி.

    என்னடா சொல்றே?

    ரொம்பப் புத்திசாலின்னு சொன்னேன்

    "இப்ப சொன்னியே தம்பி... இது நூத்துல ஒரு வார்த்தை! என் பிள்ளை முட்டாள் மட்டுமில்லே... ஏமாளியும் கூட எனக்கு உள்ளே கொஞ்சம் வேலையிருக்கு. இருந்து சாப்பிட்டுத்தான் போகணும்...

    என்ன?" என்றாள் அத்தை

    சரிம்மா என்றான் விச்சு.

    ராகுல... என்ன படிக்கிறே?

    பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்!

    எந்த ஸ்கூல்ல?

    ராயல் ஆக்ஸ்போர்டுல!

    நீ அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?

    அம்மா பிள்ளை! என்றான் ராகுல்.

    என்ன வினோத்... ராகுல் அம்மா பிள்ளையாமே!

    அது என்னவோ வாஸ்தவந்தான்! சொன்ன வினோத்தின் குரலில் சுரத்தில்லை.

    துளசியை அந்த வார்த்தை சுருக்கெனத் தைத்தது.

    ரொம்ப துருதுருன்னு இருக்கான். உனக்கு ஆப்போசிட் இவன். நீ ரொம்ப ஸாஃப்ட் நேச்சர்! தவிர, ராகுல் உன்னை மாதிரியுமில்லே... சிஸ்டர் மாதிரியுமில்லே...

    டேய்... டேய்... போதும்டா உன் ஆராய்ச்சி? துளசி... சாப்பாடு எடுத்து வை! என்று எழுந்தான் வினோத்.

    ஆனால், துளசியால் அசைய முடியவில்லை. ஏதோ ஒரு வேதனை... அவள் நெஞ்சை இறுக்கிப் பிடித்திருந்தது.

    ***

    ஷ்ஷ்... அப்பாடா...! என்று பெருமூச்சு விட்டபடி சோபாவில் வந்தமர்ந்தான் சிவா! பாக்கெட்டிலிருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து டீப்பாய் மீது போட்டான்.

    என்னாச்சு ரொம்ப டயர்டா இருக்கீங்க?

    "லேசா தலை

    Enjoying the preview?
    Page 1 of 1