Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alaigal Amaithi Theda…!
Alaigal Amaithi Theda…!
Alaigal Amaithi Theda…!
Ebook96 pages34 minutes

Alaigal Amaithi Theda…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலே பிடிக்காத அம்மாவுக்கு அதிர்ச்சி தரும் நிர்மல்,தர்ஷிணியால் வரும் குழப்பங்கள். பின் தர்ஷிணி பிரிய வழி தவறிய நிர்மல் நோயால் பாதிக்கப்பட, அவனின் அம்மாவும் ஒதுக்கிறாள்.தற்செயலாக சித்தரின் உதவியால் மறுவாழ்வு பெற்ற நிர்மல் தர்ஷிணியை சந்திப்பார? வாசிக்கலாம்... அலைகள் அமைதி தேட

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606480
Alaigal Amaithi Theda…!

Read more from R. Manimala

Related to Alaigal Amaithi Theda…!

Related ebooks

Reviews for Alaigal Amaithi Theda…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alaigal Amaithi Theda…! - R. Manimala

    https://www.pustaka.co.in

    அலைகள் அமைதி தேட...!

    Alaigal Amaithi Theda…!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அற்புதமான கனவு!

    அழகான குட்டி விமானம்! பஞ்சுப் பொதிகளை கிழித்துக் கொண்டு சென்ற விமானத்தினுள் இருவர் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தனர், நிர்மலும், தர்ஷினியும்.

    நிர்மல் தான் பைலட்! அவன் முகத்தில் குறும்புத்தனமான சிரிப்பு படர்ந்திருந்தது. தர்ஷிணி அவன் பக்கத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டு கோழிக் குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவள் உதடு அவன் தோளில் உரச, வேண்டாம், வேண்டாம் நிர்மல்... எனக்கு பயமாயிருக்கு... லேண்ட் பண்ணிடு என்று முணுமுணுத்துக் கொண்டிருக்க... அவளை மேலும் பயமுறுத்த எண்ணி... இன்னும் வேகப்படுத்தி உயரப் போனான்.

    ப்ளீஸ்... நிர்மல்... வேண்டாம்!

    நோ... நோ... டார்லிங்! நான் இந்த ப்ளேனை எவ்வளவுக் கெவ்வளவு உயரத்துக்கு கொண்டு போகிறேனோ... உன் மேல அவ்வளவு காதல் வச்சிருக்கேன்னு அர்த்தம். இன்னும் பாதி தூரம்கூட போகலே. அதுக்குள்ளே லேண்ட் பண்றதா? நெவர்!

    நீ என்னை இந்த யூனிவர்ஸ் அளவு நேசிக்கிறே! அதை நான் நம்பறேன். வேண்டாம் நிர்மல்... எனக்கு தலை சுத்தற மாதிரியிருக்கு!

    ஐயோ... நான் உன்கிட்டே கிஸ்ஸை தாண்டிப் போனதில்லையே... அதுக்குள்ளே தலை சுத்துதுங்கறியே சண்டாளி! பொய்யாய் அலறினான் நிர்மல்.

    டோன்ட் ப்ளே... மை டியர் டர்ட்டி பாய்! லேன்ட் பண்ணப் போறீயா... இல்லே நான் குதித்து விடவா?

    அப்படி எதுவும் பண்ணித் தொலைச்சிடாதே தர்ஷ்! ஓ. கே. லேண்ட் பண்றேன்... அதுக்கு முன்னால சூப்பரா ஒருஃப்ரன்ஞ் கிஸ்கொடு! தன் முகத்தை அவள் பக்கம் திருப்பினான்.

    ரொம்ப சரிதான்! அப்புறம் நீ லேண்ட் பண்ணவும் வேண்டாம். நான் வெளியே குதிக்கவும் வேண்டாம். ரெண்டு பேரும் அந்தரத்திலேயே சமாதி ஆக வேண்டியதுதான்!

    உனக்கேன்... அந்த கவலை? உன் கடமையை செய் கண்ணே! என்றவன்... அதற்கு மேல் பொறுமையின்றி அவளை அருகே இழுத்து உதடை கவ்வினான்.

    அந்த நேரம் பார்த்து தொலைபேசி கிணுகிணுத்தது. ஒழுங்கா ஒரு கிஸ் அடிக்கவிட மாட்டேங்கிறாங்களே! என்று நொந்து கொண்டவன்... தர்ஷிணியை விலக்கினான்.

    அவன் கைப்பட்ட தர்ஷிணியின் உடம்பு கொழ கொழ வென நசுங்கியது.

    என்ன தர்ஷிணி... உன் உடம்புக்குள்ளே எலும்பே இல்லையா? என்றவனை போன் பெல் மேலும் பேசவிடாமல் அலறியது.

    உணர்வுகள் மொத்தமும் பூமிக்கு வந்தது. கண்களைத் திறந்தபோதுதான் சுற்றுப்புறச் சூழலை உணர்ந்தான்.

    ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறிய அறை! அதன் வெளிச்சம் பட்டு ஜிகுஜிகுவென சுற்றிக் கொண்டிருந்த ஃபேன், ஹேங்கரில் நீளநீளமாய் தூக்கு மாட்டித் தொங்கிக் கொண்டிருந்த பேண்ட், ஷர்ட், கட்டில், கலைந் திருந்த போர்வை, நசுங்கியிருந்த தலையணை, அதன் நடுவில் திருவிழாவில் தொலைந்த குழந்தையாய், பாண்டியராஜன் அக்மார்க் திருதிருப்போடு நிர்மல் அமர்ந்திருக்க, கட்டிலை ஒட்டிய டேபிள் மீதிருந்த போன்தான் அலறிக் கொண்டிருந்தது.

    'ப்ளேன் எங்கே? தர்ஷிணி எங்கே?'

    ச்சே... அத்தனையும் கனவா? கிஸ் கூடவா?

    போன் விடாமல் அலறி...

    'யார்... இந்த நேரத்தில்?' வியப்பாய் ரிசீவரை எடுத்து ஹலோ... என்றான்.

    எதிர்முனை மௌனம் சாதித்தது.

    ஹலோ... ஹூஸ் ஸ்பீக்கிங்?

    ஹாப்பி பர்த்டே டூ யூ... ஹாப்பி பர்த்டே டு நிர்மல்...

    இனிமையான குரல் பாட... நிர்மல் குமாரின் உடலெங்கும் புது ரத்தம் பாய்ந்தது.

    தர்ஷிணி... என்றான் சந்தோஷமும், ஆச்சர்யமும் பொங்க,

    எஸ்...!

    நான் எதிர்பார்க்கலே தர்ஷிணி! உன்கிட்டேயிருந்து இந்த நேரத்திலே இப்படியொரு ஸ்பெஷல் வாழ்த்தை... சத்தியமா எதிர்பார்க்கலே!

    உனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்ற முதல் ஆளா, நானாக இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்!

    இது எனக்குத் தொந்தரவா? ஸ்வீட் ஷாக் அல்லவா? மனசுக்கு நெருக்கமானவங்க மிட் நைட்ல தன்னந்தனியா... ஒருத்தரோட முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு பேசறதைவிட, முகம் பார்க்காம போன்ல பேசிக்கிறது தவிப்பா, இன்ப அவஸ்தையா இல்லே? அன்பு அதிகரிக்கலே? விடிய... விடிய இப்படியே பேசிட்டிருக்கணும் போலிருக்கு தர்ஷிணி!

    "ரொம்பத்தான் ஆசை! நானே அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1