Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சின்னஞ்சிறு கிளியே!
சின்னஞ்சிறு கிளியே!
சின்னஞ்சிறு கிளியே!
Ebook98 pages36 minutes

சின்னஞ்சிறு கிளியே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"நந்தினி! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? கேட்டால் அப்படியே நீ வியப்பில் விழிகளை விரிய வைச்சிடுவே..."
 பேராசிரியரின் பாடத்தைக் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நந்தினி குனிந்து என்ன என்று சைகையில் கேட்டாள்.
 "இந்த மனோ நேத்து இராத்திரி ஒரு மணிக்கு என்ன செய்திருக்கான் தெரியுமா? கடற்கரையில் மெகாபோன் ஒண்ணைக் கையில் வைச்சுக்கிட்டு "காதல் வந்திடுச்சு..." அப்படின்னு பாடிக்கிட்டு ஓடியிருக்கான்.
 அதோட இல்லாமல் அவனை விசாரிக்க வந்த காவல் துறை அதிகாரியைப் பிடிச்சுக்கிட்டு நடனம் வேற ஆடியிருக்கான். அவரு உடனே, 'இன்னும் மீதி இருக்கிற இராத்திரி நேரத்தை காவல் நிலையத்தில் எங்ககூட கழி'ன்னு அழைச்சுக்கிட்டுப் போயிட்டாராம். இதைப் போய் காலையில் என்ன பெருமையா சொல்றான் தெரியுமா?
 "ஆனாலும் ஆளு ரொம்ப அழுத்தம். இப்படி உருகி வழியறியே... அப்பேர்ப்பட்ட காதலியா... அவள் பெயரென்'னன்னு கேட்டோம். சொல்லவே இல்லையே..."
 நந்தினிக்கு ஆயாசமாக வந்தது. மனோவை நினைத்து சிரிப்பதா, அழுவதா என்று புரியவில்லை. ஏன் அவன் அப்படிச் சொன்னாலும் அதற்கொரு பதிலும், விளக்கமும் வைத்திருக்கிறானே... அவனை என்ன செய்வது?
 அதற்கு மேல் பாடத்தில் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள். வகுப்பறை வராந்தாவில் அவள் தலை தெரிந்ததுமே யாருடனோ அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஓட்டுநர் குமார் ஓடிவந்தான். மண்ணில் இறங்கி அவள் நடந்து விடாமல் முன்னெச்சரிக்கையாகக் காரைப் படியருகே கொண்டு வந்து நிறுத்தினான்.
 நந்தினிக்கு எரிச்சலாக வந்தது. சேணம் கட்டின குதிரை மாதிரி நேராக வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். வீட்டிலும் நேராக அறைக்குப் போய்விட வேண்டியதுதான். யாருடன் பேசுவது?
 வீட்டில் உறவென்று யாருமே இல்லாமல் இருப்பது எத்தனை துன்பமயமான விஷயம்? வெளியில் போனவர்கள் பத்திரமாக வந்து சேரவேண்டுமே என்ற பதைப்புடன் ஓர் அம்மா காத்திருப்பது போன்ற சுகம் வேறு உண்டா? அதுவும் அவளோடு லட்டு லட்டாய்த் தம்பிகளும், தங்கைகளும் காத்திருந்தால் அவ்வளவுதான்... அதுவல்லவா மண்ணில் சொர்க்கம்...!
 வேலை செய்பவர்களின் பணிவும், உபசரிப்பும் அலுத்துவிட்டது., அவர்களின் அன்பு உண்மையாக இருக்கலாம். இருந்தாலும் எல்லாமே யந்திரத்தனமாகத்தான் இருக்கும். வீட்டிற்குத்தானே என்பது போல அவளை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்த குமார் காரைக் கிளப்பினான்.
 வகுப்பறையிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மனோ சட்டென வெளியே வந்தான். வேகமாக பைக்கைக் கிளப்பினான்.
 இரண்டு தெருக்கள் சென்ற பின் காரை முந்திக்கொண்டு முன்னே சென்றான். திரும்பவும், மெதுவாகக் காருக்கு வழிவிட்டான். கார் வேகம் பிடித்தபோது மீண்டும் முந்திச் சென்றான். நாலைந்து முறை இப்படி மனோ செய்தது குமாருக்குக் கோபத்தைக் கிளப்பிவிட்டது.
 காரை அவன் அருகில் கொண்டு சென்றான். "என்னப்பா கண்ணாமூச்சி ஆடிக்கிட்டிருக்கே... பாதை என்ன உங்கப்பன் வீட்டுதா? உடம்பு எப்படி இருக்கு? கார் யாருதுன்னு தெரியுமா? ஜாக்கிரதையா இருந்துக்க."
 மனோ அவனுக்கு வவ்வவ்வே' என்று பழிப்புக் காட்டி விட்டு எதிர்ப்பட்ட குறுகலான சந்தில் வேகமாகத் திரும்பிவிட்டான். அசடு வழியும் குமாரின் முகத்தைப் பார்க்க நந்தினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்வீட்டிற்குள் நுழையும்போதே நந்தினிக்கு வியப்பாக இருந்தது. அதிசயத்திலும் அதிசயமாக அப்பா வீட்டில் இருந்தார். அவளைப் பார்த்ததும் தலையசைத்து அருகில் வரச் சொன்னார்.
 "இவள் என் ஒரே பொண்ணு. நந்தினின்னு பெயர். இங்கேதான் கல்லூரியில் எம்.ஏ. படிக்கிறாள்."
 நந்தினிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. வணக்கம் சொல்ல வேண்டுமா... அல்லது புன்னகை புரிய வேண்டுமா என்று குழம்பியடி சுற்றிலும் பார்த்தாள்.
 முன்பின் தெரியாதவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் பணம் பண்ணும் வித்தையும், பக்கத்தில் உட்கார்ந்திருப்பவனை எப்படிக் கவிழ்க்கலாம் என்கிற கள்ளத்தனமும் மறைந்திருந்தன

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223653981
சின்னஞ்சிறு கிளியே!

Read more from Megala Chitravel

Related to சின்னஞ்சிறு கிளியே!

Related ebooks

Reviews for சின்னஞ்சிறு கிளியே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சின்னஞ்சிறு கிளியே! - Megala Chitravel

    1

    வானக் கடலில் வெண் மேகப் பறவைகள் காற்றுக் கரங்களை அசைத்துப் பறந்து கொண்டிருந்தன. அவற்றைப் பிடிக்க நட்சத்திரத் தோழிகளுடன் நிலவு இளவரசி ஓடிக் கொண்டிருந்த முன் மாலைப் பொழுது. எதிரில் பிரித்து வைத்திருந்த புத்தகத்தின் தாள்கள் படபடத்தன. நந்தினியின் மனமும் அதைப்போலவே நிலை கொள்ளாமல் தவித்தது. தெருப்பக்கத்தில் ஏதாவது பைக் சத்தம் கேட்டாலே வெடவெடத்தது. பால்கனி பக்கம் ஓடிக்கொண்டே இருந்ததில் கால்கள் கடுமையாக வலித்தன.

    சாப்பாடே பிடிக்கவில்லை. இரவு உடையுடன் படுக்கையில் விழுந்தபோது தப்பி விட்டது போல நிம்மதிப் பெருமூச்சு வந்தது. கண்களை மூடிக் கொண்டாள்.

    ஹலோ... மேடம் பக்கத்தில் குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. சட்டெனப் பாய்ந்து எழுந்து விளக்கைப் போட்டாள். படுக்கைக்கு அருகில் மனோ நின்று கொண்டிருந்தான். பயத்தில் குரலே எழும்பவில்லை.

    என்ன... பேச்சு வரலையா? இதைத்தான் காதல்ங்கறது... பேச்சு வரவேண்டிய நேரத்தில் பேச வராது. பேச்சு வரக்கூடாத இடத்தில் புலம்பித் தள்ளிடும்.

    மனோ... இங்கே... எப்படி... வந்தே?

    உங்க வீடு என்ன ராஜா தேசிங்கு கோட்டையா? அல்லது... உன் அறை என்ன பாரிஸ் ஈபிள் கோபுர உச்சியில் இருக்கா? உன்கிட்டே சவால் விட்ட மாதிரியே உன் வீட்டுக்கு வந்துட்டேன். பார்த்தியா? மனோவா கொக்கா?

    சொன்னால் உனக்குப் புரியறதே இல்லை. சிந்திக்கவும் உனக்குத் தெரியாது. இப்படி இராத்திரி நேரத்தில் சுவர் ஏறிக் குதிச்சு என் அறைக்குள் வர்றது தவறுன்னு உனக்குத் தோணலையா? உடனே போயிடு.

    அட... உனக்கு இவ்வளவு பேச வருமா? வாயே திறக்கலையேன்னு நான் கிடந்து தவமிருக்கேன். கோபத்தில் பொரிஞ்சு தள்ளறியே... இப்ப நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?

    மனோ! நந்தினியின் குரல் படபடத்தது.

    உனக்கு என்ன வேணும்? நான் இந்த இடத்தை விட்டுப் போகணும். அதுதானே? சரி... நான் போகிறேன். அதுக்கு முன்னாடி நான் உன்னிடம் சொல்லியிருந்தது போல சத்தியம் பண்ணு.

    நந்தினியின் தலையில் அடித்துக் கொண்டாள்.

    மனோ! நீ என்ன இப்படி என்னை இம்சிக்கிறே? நீ பேசறதெல்லாம் நடக்கக்கூடியதா? எங்கப்பா பார்த்தால் உன்னை யாருமே காப்பாற்ற முடியாது. மனோ... தயவு செய்து தப்பிப் போய்விடு. ஐய்யய்யோ... யாரோ வர்ற மாதிரி சத்தம் கேட்குதே.

    மனோ கித்தாய்ப்பாகச் சிரித்தான்.

    அ... இதுதானே வேணாங்கிறது... இதோ பாரு நந்தினி! உன் வாய் எத்தனைதான் என்னைக் காதலிக்கலைன்னு சொன்னாலும் நான் நம்பமாட்டேன். என் உயிரைப் பற்றி இத்தனை அக்கறை வைச்சிருக்கறதைப் பார்த்தாலே புரியுதே... நீ என்னை உயிருக்கு உயிராக நேசிப்பது... ஆகா... நான் எத்தனை பேறு பெற்றிருக்கிறேன்! நந்தினி என்னைக் காதலிக்கிறாள்னு கத்திக்கிட்டு ஓடணும் போல இருக்கு. ஆனால் மனித நடமாட்டமே இல்லாத இந்தப் பாலைவனத் தெருவில் ஓடமாட்டேன். கடற்கரைக்குப் போய்க் கத்திக்கிட்டு ஓடப்போறேன், வரட்டுமா?

    மனோ... ஏய்... நான் சொல்றது எதுவும் காதில் ஏறாதா உனக்கு? இப்படியெல்லாம் செய்யாதே... நில்லு.

    மென்மையான அவள் குரல் காதை எட்டுமுன் அவன் குழாய் வழியாகச் சரசரவெனக் கீழே இறங்கி பைக்கில் பறந்து விட்டான்.

    நந்தினி தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே மனோ அவளைக் காதலிக்கிறான். சுற்றிச் சுற்றி வருகிறான். மாவட்டத்திலேயே மிகப் பெரிய பணக்காரர் சேனாபதியின் ஒரே மகள் என்பதையெல்லாம் அவன் அறியாதவனல்லன். இருந்தாலும் நாளுக்கு நாள் அவன் காதல் அதிகம்தான் ஆயிற்றே தவிர குறையவில்லை.

    நந்தினிக்கு எதற்கும் பயம். அப்பாவிற்கு அதிக பயம் என்றால் மனோவின் கண்மூடித்தனமான காதலைக் கண்டு அதைவிட பயம்.

    எந்த வகையிலும் சேரமுடியாத இந்தக் காதல் எப்படியும் நிறைவேறாது என்பது மட்டும் நிச்சயம். மனோவுக்கு அதை எப்படி விளக்குவது என்பது புரியாமல் இரவும், பகலும் அவள் அலைமோதித் தவித்துக் கொண்டிருந்தாள்.

    இதோ... இன்று இரவு சிவராத்திரிதான். இனிமேல் எங்கே தூக்கம் வரப் போகிறது? மனோ பாட்டுக்கு எங்காவது கத்திக்கொண்டு ஓடப் போகிறான். நாளைக் காலையில் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகப் போகிறது. கல்லூரி மாணவர்கள் உல்லாசப் பயணம் சென்றபோது எடுத்த புகைப்படத்தில் அவள் தலையை வட்டம் போட்டுக் காட்டப் போகிறார்கள்.

    இந்த அம்புக் குறியிட்ட பெண்தான் மனோவின் காதலி என்று அடைமொழி குறிக்கப் போகிறார்கள். தீர்ந்தது எல்லாமே தீர்ந்தது... இப்போது என்ன செய்வேன்?" நந்தினிக்கு தலையைச் சுற்றியது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் போலிருக்கிறது.

    அறைக்கதவை மெதுவாகத் திறந்து மாடி வராந்தாவை எட்டிப் பார்த்தாள். யாரையும் காணவில்லை. கீழே இறங்கினாள். நடுக்கூடத்தில் வேலைக்காரி வள்ளி, சமையல்காரர் சாம்பு, தோட்டக்காரர் கந்தன் மூவரும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அங்கேயே நின்று கொண்டாள்.

    ஐயா கிளப்பிலிருந்து வர்றதுக்கு நடுச்சாமம் ஆகிவிடும். சின்னம்மாவும் தூங்கிட்டாங்க. வீடியோவில் படம் பார்க்கட்டுமா மாமா? மெதுவாகக் கேட்டான் கந்தன்.

    வயசுப் பொண்ணு வீட்டில் இருக்கிற நினைப்பு ஐயாவுக்கு என்னிக்குத்தான் வருமோ? அம்மா தவறிப் போனதிலிருந்து வீடு வீடாகவே இல்லை. ஐயாவுக்கு வேற சினேகிதமெல்லாம் கூட இருக்குன்னு அரசல் புரசலா பேசிக்கறாங்க வள்ளி உண்மையான வருத்தத்துடன் சொன்னாள்.

    சாம்பு மிகவும் பெரியவர். நந்தினியைத் தோளில் தூக்கி வளர்த்தவர். குடும்பத்தில் ஒருவராய் இணைந்தவர். "உஸ்... மெதுவாப் பேசு... குழந்தை காதில்

    Enjoying the preview?
    Page 1 of 1