Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valaiyosai
Valaiyosai
Valaiyosai
Ebook122 pages1 hour

Valaiyosai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 9, 2019
ISBN9781043466527
Valaiyosai

Read more from R.Sumathi

Related authors

Related to Valaiyosai

Related ebooks

Related categories

Reviews for Valaiyosai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valaiyosai - R.Sumathi

    15

    1

    கீர்த்தனா காலணிகளை வராண்டாவில் உதறியபோதுதான் கவனித்தாள். நிறைய காலணிகள் ஜோடி ஜோடியாக கிடந்தன. ஒரு ஜோடி ஷூக்கள் பக்கத்தில் அழகான பெண்ணுக்குரிய காலணிகள். அதற்கு பக்கத்தில் இரண்டு ஜோடி ரப்பர் செருப்புகள். யாரோ வந்திருக்கிறார்கள். ஷூக்களுக்குரியவன் இளைஞனாக இருக்கலாம். ஒரு பெண்ணோ அல்லது பெண்மணியோ வந்திருக்கிறாள். கூடவே இரண்டு ஆண்கள் இந்த ரப்பர் செருப்புக்குரியவர்கள். யார்? அப்படியே மெல்ல நிமிர்ந்து சன்னல் வழியே உள்ளே பார்த்தபோது கூடத்தில் அவர்கள் தெரிந்தனர். கீர்த்தனாவின் கணிப்பு மிகச் சரியாக இருந்தது. கம்பீரமான அழகான ஒரு இளைஞன் மெல்ல காபி கோப்பையை முகத்தை தாழ்த்திக் கொண்டு உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவன் நிமிர்ந்தபோது அவனுடைய முகம் பளிச் சென்று தெரிந்தது.

    வடநாட்டுக்காரனைப் போல் நிறம். அளவான அழகான கரிய மீசை கவர்ச்சியான கண்கள். பளிச்சென்ற மடிப்புக் கலையா உடை.

    யார் இவன்?

    பார்வையைப் பக்கத்தில் தாவவிட்டாள்..

    அவனுக்குப் பக்கத்தில் பருத்த தேகத்துடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள்.

    மிகவும் சிரமப்பட்டு கட்டியிருக்கிறாள் என்பதைப் போல் பட்டுச் சேலை அவள் உடம்பைச் சுற்றி வந்திருந்தது. அடிக்கடி அவள் விடும் பெருமூச்சு அவளுடைய சங்கடத்தைப் பறைசாற்றியது.

    அவளுக்கெதிரேயிருந்த சோபாவில் இரண்டு நடுத்தரமான வயதுக்காரர்கள் வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தனர்.

    இவர்களெல்லாம் பெண் பார்க்க வந்திருக்கிறார்களோ? பார்த்தவுடன் தெரிந்தது.

    அம்மா கையில் பட்சணங்கள் நிரம்பிய தட்டுடன் வந்து அதை உறுதி செய்தாள்.

    கீர்த்தனா வர்ற நேரம்தான். இப்ப வந்திடுவா நீங்க சாப்பிடுங்க என உபசரித்தாள் மகேஸ்வரி. ர்த்தனா மாப்பிள்ளையை ஒரு கணம் பார்த்துவிட்டு. ‘இவன்தான் மாப்பிள்யைா?’ என நினைத்தாள்.

    சீனுவை விட இவன் ஒன்றும் பிரமாதமாக இல்லை. என்னயிருந்தாலும் என் சீனுவிற்கு ஈடாகாது.

    மெலிதான கர்வத்தை மனதில் நிரப்பினாள்.

    சீனுவை நினைத்த மாத்திரத்திலேயே அவனுடைய முகம் கண்ணெதிரே தோன்றுவதைப் போன்றிருந்தது.

    "சீனு... நீதான் எத்தனை அழகு. உன்னோட அழகான கேசம், விசாலமான நெற்றி. கூரான மூக்கு. என் மனசைக் கிறங்கடிக்கும் மீசை. உன்னை என்றைக்கு அப்படியே கையில் ஏந்தி ஆசை தீர உன் மீசை குத்த முத்தம் தரப்போகிறேன். மனசுக்குள்ளே உன்னை இத்தனை உரிமையா வாடா போடான்னு பேசற நான் என்னைக்கு உன் எதிரே உன் முகம் பார்த்துப் பேசுவேன்? மனதிற்குள் நினைத்ததும் சூழ்நிலை மறந்து போக கனவில் மிதிப்பவளைப் போல் உள்ளே நடந்தாள். அனைவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர்.

    அவளோ அவர்கள் இருப்பதை உணராதவளைப் போல் உள்ளே சென்று கொண்டிருந்தாள்.

    இதுதான் கீர்த்தனாவா? யாரோ எங்கேயோ கேட்பதைப் போலிருந்தது.

    ஆமா! அம்மாவின் குரல் தொடர்ந்து அவளுக்கு பின்னே கிசுகிசுப்பாகக் கேட்டது.

    என்னடி... நீ பாட்டுக்கு வர்றே? அவங்கள்லாம் உட்கார்ந்திருக்கறது தெரியலையா உனக்கு?

    தன் அறைக்குள் நுழைந்து கைப்பையை மேசை மீது போட்ட போதுதான் சுயநினைவிற்கு வந்தாள் கீர்த்தனா.

    அம்மா தன் அருகே திட்டிக் கொண்டிருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தவளாய். என்னம்மா? என்றாள்.

    என்னடி என்னம்மாங்கறே? இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்கேன். உன் காதுல விழலையா?

    என்ன பேசினே?

    உன்னைப் பெண் பார்க்க வந்திருக்காங்கடி.

    பார்த்தாலே தெரியுது.

    பார்த்துட்டுத்தான் பார்க்காத மாதிரி வர்றியா?

    ஏன் என்ன பண்ணச் சொல்றே?

    ஒரு மரியாதைக்கு வாங்கன்னு சொல்லி வச்சாயென்ன?

    நான் அவங்களை வரச் சொல்லலையே?

    என்ன பைத்தியமாட்டம் பேசறே? முதல்ல போய் முகத்தை கழுவிக்கிட்டு அழகான புடவை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டு வா.

    எனக்கு பிடிக்கலை

    சோர்வாக இருக்கையில் சாய்ந்தாள்.

    என்ன பிடிக்கலை?

    மாப்பிள்ளையைப் பிடிக்கலை.

    பிடிக்குது பிடிக்கலைங்கறதெல்லாம் அப்புறம். முதல்ல உன்னை பார்க்கறதுக்குன்னு வந்திருக்கறவங்கக்கிட்ட மரியாதையா போய் நின்னு நாலு வார்த்தை பேசு. படிச்ச பொண்ணு, வேலை பார்க்கற பொண்ணு ரொம்ப நாகரீகமா நடந்துப்பான்னு நினைச்சுக்கிட்டிக்கறவங்ககிட்ட அசிங்கமா நடந்துக்காதே.

    ப்ச் அம்மா என்னை விடு. நான் கொலு பொம்மை மாதிரி. அவங்க எதிரே வந்து நிக்கத் தயாராயில்லை. எனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலை. அப்புறம் எதுக்கு வீணா அவங்க எதிரே போய் நின்னுக்கிட்டு.

    முகத்தில் கோபம் மின்னத் தொடங்கிவிட்டது.

    அம்மா மகேஸ்வரி மகளைப் பரிதாபமாகப் பார்த்தாள். கெஞ்சுவதைப் போல் கேட்டாள்.

    கீர்த்தனா நீ பிடிவாதக்காரிங்கறது எனக்குத் தெரியும், பிடிவாதம் எல்லா விஷயத்துக்கும் சரியா வருமா? இது உன் வாழ்க்கைப் பிரச்சனை. பார்த்ததுமே பிடிக்கலைங்கற முடிவுக்கு வந்துட முடியுமா? அவரைப்பத்தி உனக்கு...

    தொடர்ந்து பேச வேண்டாம் என்பதைப் போல் இடது கையை உயர்த்தி அமர்த்தினாள்.

    அவரை நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை. அப்புறம் எதுக்கு அவரைப்பத்தி தெரிஞ்க்கணும். பஸ்ல வந்தது தலையை வலிக்குது. சூடா ஒரு கப் காபி கொடேன்.

    அவள் கேட்ட அதே நேரம் அறையினுள் நுழைந்தாள் நித்யா.

    கீர்த்தனாவின் தங்கை கல்லூரியில் முதல் வருடம் படிப்பவள். கருநீல சுடிதாரில் அழகாகயிருந்தாள்.

    அங்கு நடக்கும் உரையாடலை அறியாதவளாய் கையிலிருந்த மல்லிகைச் சரத்தை நீட்டினாள்.

    அக்கா இந்தா வச்சுக்க. உனக்காக நெருக்கமா தொடுத்தேன். பாசத்தைப் பூ தொடுத்துகாட்டிய தங்கையை ஏற இறங்கப் பார்த்த கீர்த்தனா தோள்களை குலுக்கியவாறே சொன்னாள்.

    அம்மா இப்படி பண்ணினா என்ன? பேசாம நித்யாவை அலங்காரம் பண்ணி அவங்க முன்னாடி கொண்டு போய் நிறுத்து. பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடு.

    சொல்லிட்டேயில்லே. அப்படியே செய்திடறேன். அப்பா இல்லாத புள்ளைங்களாச்சேன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு. எனக்கு வேணும். எரிச்சலாக ஏசிவிட்டு வெளியே வந்தாள்.

    கூடத்தில் அமர்ந்திருந்தவர்களின் முன்னே வந்து நின்றாள்.

    வந்து... பொண்ணு என்ன பேசுவதென்றே தெரியாமல் இழுத்தாள்.

    பொண்ணு இப்பத்தான் ஆபீஸ்லேர்ந்து வந்திருக்கா. அதானே சொல்லவர்றீங்க. அவ அலங்காரம் செய்துக்கிட்டு வரவேண்டாம். பொண்ணு எங்களைக் கடந்துபோன போதே நாங்க பார்த்துட்டோம். எங்களுக்குப் பொண்ணைப் புடிச்சிருக்கு. நீங்க சரின்னா மேற்கொண்டு பேசலாம்.

    மாப்பிள்ளையின் தாய் அப்படிச் சொன்னதும் மகேஸ்வரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு கணம் யோசித்துவிட்டுச் சொன்னாள்.

    "வந்து... இந்த வீட்ல ஆண் துணைன்னு இருந்தது என் கணவர் மட்டும்தான். அவர் இறந்ததுக்கப்பறம் இந்த வீட்லே எந்த நல்லது கெட்டதுன்னாலும் எங்கண்ணனைக் கேட்டுத்தான் செய்வோம்.

    Enjoying the preview?
    Page 1 of 1