Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaagitha Pookkal
Kaagitha Pookkal
Kaagitha Pookkal
Ebook119 pages53 minutes

Kaagitha Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466695
Kaagitha Pookkal

Read more from Devibala

Related to Kaagitha Pookkal

Related ebooks

Related categories

Reviews for Kaagitha Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaagitha Pookkal - Devibala

    1

    அம்மா மீனாட்சி ஆஸ்பத்திரிலிருந்து அன்றைக்குத்தான் வீடு திரும்பியிருந்தாள்.

    போன வாரத்தில் எக்கச்சக்கமாக ரத்த அழுத்தம் ஏறி, உண்டு இல்லையென்று ஆகிவிட்டது.

    மயமக்கமடைந்து கீழே விழ, அந்த நேரத்தில் வீட்டில் யாருமில்லை பக்கத்து வீட்டம்மா எதார்த்தமாக இந்தப்பக்கம் வர, இதைப்பார்த்து பதறியடித்து வீட்டுக்கு ஓடி, தன் கணவரிடம் சொல்ல, அவர் வந்தார்.

    அவங்க பையனுக்கு போன் போடுங்க.

    இப்ப அதுக்கெல்லாம் நேரமில்லை. நான் ஆட்டோ கொண்டு வர்றேன். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடலாம்.

    உடனே ஆட்டோவில் அருகிலுள்ள ஒரு நல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனார்கள்.

    போகும் வழியில் மீனாட்சியின் மூத்த மகன் பார்த்திபனுக்கு போன் செய்துவிட, ஆஸ்பத்திரிக்கு போன பத்தாவது நிமிடம் பார்த்தி வந்து விட்டான்.

    பிபி அதிகமாக ஏறியிருக்கு. உடனே அட்மிட் பண்ணுங்க. இப்படி ஏறக்கூடாது நல்லதில்லை.

    அட்மிஷன் நடந்தது.

    உடனே அதைக் குறைக்கும் நடவடிக்கை தொடங்கியது.

    தல் ஒரு நாள் மயக்கமிருந்தது!

    பார்த்திபனுக்கே பயமாக இருந்தது.

    மறுநாள் மாலைதான் பிபீ குறைந்து ஒரு சரி நிலைக்கு வந்து கண் விழித்தாள்.

    ஓவரா பதட்டப்படுவீங்களா?

    அம்மா வாழறதே அதுலதான்.

    தப்பும்மா! இதய நோய், கிட்னி பிரச்சனை, பக்கவாதம் இப்படி எதுலயாவது கொண்டு போய்விட்டா, நிரந்தர நோயாளி ஆயிடுவீங்க. உங்களுக்கும் கஷ்டம், மத்தவங்களுக்கும் பாரம் அது சரியானதில்லையே.

    புரியுது டாக்டர். ஆனா டென்ஷன் படாம இருக்க முடியலையே.

    எல்லாம் நடக்கிறதுதான் நடக்கும்.

    நல்லா சொல்லுங்க டாக்டர்! பார்த்தி சொல்ல,

    குடும்ப சூழ்நிலை அப்படி டாக்டர்.

    தப்பும்மா சூழ்நிலை எதுவா இருந்தாலும் அதைக்கடந்து மீண்டும் வர்றது தான் சாமார்த்தியம். நீங்க இவங்க மகனா.

    ஆமாம் டாக்டர்.

    நீங்க இனி இந்த மாதிரி வராம பாத்துக்கங்க. உங்க மனைவி ஊர்ல இல்லையா.

    எனக்கு கல்யாணம் ஆகலை டாக்டர் பார்த்திபன் சொல்ல,

    டாக்டரின் பார்வையில் கேள்வி இருந்தது.

    உயரம் குறைவு! தடித்த உடம்பு பெரிய தொப்பை என பார்த்தியை பார்த்தாலே முப்பது கடந்த மனிதன் என்பதை குழந்தைகூடச் சொல்லி விடும்.

    கல்யாணம் ஆகலையா? ஏன். இதுதான் இந்த அம்மாவின் கவலையா? சரி! வீட்ல யாரு பெண் உறவு.

    தற்சமயம் அப்படி யாரும் இல்ல டாக்டர்! அம்மாதான் எல்லாத்தையும் பார்த்துக்கறாங்க.

    நீங்க ஒரே மகனா.

    இல்லை டாக்டர்! மூணு பேர். நான் மூத்தவன்! என்னோட அடுத்த தம்பிக்கு கல்யாணமாகி உள்ளூர்ல தனியா இருக்கான். அவனுக்கு ஒரு குழந்தை மூணாவது தம்பி மெடிக்கல் ரெப்! இருபது நாலும் டூர்ல இருப்பான். சகோதரிகள் இல்லை.

    சரி! அவங்களுக்கு ஓய்வு தரணும்! நீங்க எங்கே வேலை?

    நான் ஒரு கவர்மென்ட் ஆபிஸ்ல செக்ஷன் ஆபீசரா இருக்கேன் டாக்டர்.

    அம்மா ஜாக்கரதை! நாலு நாள் இங்கே இருக்கட்டும்.!

    டாக்டர் போய்விட்டார்.

    பார்த்தி! அத்தைக்கு தகவல் சொல்லுடா.

    அவங்க ஊர்ல இல்லைம்மா! குடும்பத்தோட டெல்லிக்கு போயிருக்காங்க.

    அர்ஜுனுக்கு போன் பண்ணினியா.

    அவன் பாதி டூர்ல இருப்பான்! அவரசமா வந்து என்ன செய்ய போறான். நான் உன்னோட இருந்தா போதாதா?

    சரிப்பா.

    அடுத்த நாளும் பாத்தி இருந்தான்.

    மேலும் இரண்டு நாட்கள் நர்சே பார்த்துக்கொண்டான். பார்த்தி யாருக்கும் இதைச் சொல்லவில்லை.

    இதோ முப்பதாயிரத்தை முழுங்கிவிட்டு வீடு திரும்பிவிட்டார்கள்.

    அம்மாவை படுக்கவைத்துவிட்டு மதிய உணவைத் தயாரிக்க பார்த்தி சமையல் கட்டுக்குள் நுழைந்தான்.

    நீ படு! உடம்பை பார்த்துக்கோம்மா. நான் பார்த்துக்கறேன்!

    பாவம்டா நீ! ஒரு ஆம்பிளையா இருந்து.

    ஆமாமா நீ தேவையில்லாம டென்ஷன் பட்டா, கஷ்டம் எனக்குத்தான் அதைப் புரிஞ்சிக்கோ.

    சாதம் வைத்து, மிளகு ரசம் தயாரித்தான். ஒரு துவையல் செய்தான்.

    பார்த்தி சுவையாக வேகமாக சமைப்பதில் வல்லவன். சமையலை ரசித்து செய்வான்.

    எதுக்குடா உனக்கு இந்த வேலை.

    ஆம்பள சமைக்கூடாதான்னு கேட்பான்.

    ஆம்பளைங்க சமைக்கமாட்டாங்கன்னு சொல்லுவாங்க! ஆனா பெரிய கல்யாண வீடுகள்ள ஆயிரக்கணக்கான பேருக்கு சமைக்கறது பெரும்பாலும் ஆண்கள்தான். அம்மா சமைக்கறதுல ஆர்வம் வந்துட்டா, ருசி தன்னால வந்துரும்.

    காலையில் அம்மா மீனாட்சி சமைத்துவிடுவாள். அவளுக்கு முடியாத நாளில் பார்த்தி எழுந்து செய்து விடுவான். இந்த உணவை பெரும்பாலும் தயாரிப்பது அவன்தான் விதம்விதமாக சமைப்பான்.

    நண்பர்களை அழைத்துச் சாப்பிட வைப்பான்.

    பார்த்தி! உனக்கு வர்ற மனைவி ரொம்ப கொடுத்து வச்சவடா.

    யாராவது சொல்லிவிட்டால் போதும்.

    அம்மா ஆரம்பிச்சிட்டியா? அதுக்குத்தான் நேரம் காலம் கூடவே இல்லையே?

    அம்மா போதும்! தொடங்கிடாதே! அவங்க இல்லைடா சொல்றாங்க! அதைப் பெரிசா எடுத்துக்க வேண்டாம் புரியுதா?

    அம்மா அன்றைக்கு சரியாக சாப்பிடமாட்டாள்.

    மூட்அவுட் ஆகி விடுவாள்.

    பார்த்திக்கு தர்ம சங்கடமமாகிவிடும்.

    இதுதான் அந்த வீட்டின் அன்றாட அவஸ்த்தை.

    மீனாட்சியின் கணவர் இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

    பார்த்தி மூத்தவன்! இப்போது வயது முப்பத்தி ஐந்து பட்டதாரி படிப்பை முடிந்ததும் மத்திய அரசாங்க உத்யோகம் கிடைத்து விட்ட து.

    அப்பா பள்ளிக்கூட வாத்தியராக இருந்தார். அவர் இறக்கும்போது பார்த்தி வேலைக்கு வந்துவிட்டதால் சுலபமாக குடும்ப பொறுப்பை ஏற்றிக்கொண்டுவிட்டான்.

    அடுத்தவன் சுந்தர் இவனைவிட ஏழு வயது இளையவன். இப்போது இருபத்தி எட்டு.

    மூன்றாவது அர்ஜுன் இருபத்தி ஐந்து. தம்பி ஒரு நிலைக்கு கொண்டு வந்த பிறகுதான் தனக்கு கல்யாணம் என்று பார்த்தி உறுதியாக சொல்லவிட்டான்.

    அர்ஜுன் பட்டம் வாங்கி வேலையில் சேரும்போதே பார்த்திக்கு முப்பதாகி விட்டது.

    அதற்குள் சுந்தர் முந்திக்கொண்டு விட்டான்.

    சுந்தர் பி.டெக் முடித்து ஒரு கம்பெனியில் வேலை கூடவே வேலை பார்க்கும் வனிதாவை காதலிக்கத் தொடங்கிவிட்டான்.

    அந்தப் பெண் வேறு ஜாதி! விவரம் தெரிந்ததும் மீனாட்சி எதிர்க்கத் தொடங்க, காதல் தீவிரமாக இருந்தது.

    பார்த்தி விசாரித்தான். படித்த

    Enjoying the preview?
    Page 1 of 1