Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasukkul Varalaamaa
Manasukkul Varalaamaa
Manasukkul Varalaamaa
Ebook108 pages56 minutes

Manasukkul Varalaamaa

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 9, 2019
ISBN9781043466510
Manasukkul Varalaamaa

Read more from R.Sumathi

Related authors

Related to Manasukkul Varalaamaa

Related ebooks

Related categories

Reviews for Manasukkul Varalaamaa

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasukkul Varalaamaa - R.Sumathi

    16

    1

    தந்தை அடித்த குழந்தையை ஓடிவந்து அரவணைக்கும் தாயைப் போல் சூரியன் தன் வெப்பக் கதிர்களால் அடித்துப் போட்டுவிட்டுப் போன பூமியை - மாலையில் நிலவு ஓடி வந்து அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தும் நேரம்.

    ஆறு மணியிலிருந்து கடற்கரையில் அமர்ந்திருந்தனர் முரளியும், கமலாவும். உப்புக் காற்றின் உரசல் உள்ளத்திற்கு ஒரு புத்துணர்வை உண்டாக்கியது; உடலையும் மனதையும் லேசாக்கியது. கமலாவிற்கு அது ஒரு கற்பனையை உண்டு பண்ணியது. அவளுடைய நீலவிழிகள் நிலைத்திருந்தன. நீலக் கடலில் கடல்நீரின் அழகைக் கண்டு அவளுடைய கயல்விழிகள் துடிப்பதைப் பார்க்கின்ற போது அவளுடைய விழிமீன்களும் ஓடிச்சென்று அந்த நீரில் விழுந்து அங்குள்ள மீன்களுடன் விளையாடத் துடிப்பதைப் போலிருந்தது. துடிக்கும் இமைகள் செயலிழந்த சில கணங்கள் அப்படியே உற்றுப் பார்ப்பதைப் பார்க்கின்ற போது ‘கடல் மீன்களுடன் காதல் புரிய முடியாமல் நான் இவளுடைய முகத்தில் சிறைவைக்கப்பட்டு விட்டேனே’

    என அவளுடைய கண்மீன்கள் ஏங்குவதைப் போலிருந்தது. அவளுடைய கற்பனை இதுதான்.

    இதோ இந்த முரளியுடன் கைகோர்த்துக் கொண்டு அந்த கடலின் நீர் பரப்பின் மீது நடக்க வேண்டும். பாம்புப் படுக்கையில் பள்ளிக் கொண்டிருக்கும் திருமாலைப் போல் மலர் படுக்கையில் இவன் மார்பில் சாய்ந்து துயில வேண்டும்.

    கற்பனை நெஞ்சில் உதிக்க அவளுடைய இதழ்களில் புன்னகை ஓடியது. மஞ்சளும் இருளும் கலந்த நிலையில் அவளுடைய சிரிப்பு இழையோடும் முகத்தைப் பார்த்த முரளியின் மனதில் மோகம் இழையோடியது. அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டான். படகு அவர்களை மறைத்தது. படகு மறைவிற்கு அந்த பக்கம் கடலலைகளை தோழர்களாக்கி விளையாடும் சத்தம். கடலலையில் இரைச்சல், காதைப் பிளக்கும் மனிதர்களின் சத்தத்தையும் மீறி காதலனின் மௌன மொழியில் மயங்கிக் கிடந்தாள். கமலா மேலே நிலவு வான்கதவை திறந்து கொண்டு தலை நீட்டிப் பார்ப்பதைப் போல் எட்டிப் பார்த்தது.

    முரளி...

    என்ன கமலா...?

    எனக்கு ஒரு கற்பனை

    சொல்லேன்.

    கடல் மேல நடக்கணும்

    அப்புறம்...?

    கடல் மேல மலர்படுக்கை போட்டு இதே மாதிரி படுத்துக்கணும்.

    இதெல்லாம் நடக்குற காரியமா? காதல் வந்துட்டாலே கற்பனை இப்படித்தான் வரும். கடல்ல நடக்குறமாதிரி, ஆகாயத்துல பறக்குற மாதிரி.

    இது ஏன் முடியாத காரியம்னு நினைக்கிறீங்க? உடம்பையும் மனசையும் லேசாக்கி தண்ணி மேலேயே நடக்குற மிதக்குற யோகிகளைப் பற்றி நான் படிச்சிருக்கேன்.

    பேசாம நீ ஒரு யோகியை காதலிச்சிருக்கலாம். இப்படி கடல்ல மிதக்குற நடக்குற ஆசையையெல்லாம் நிறைவேத்துவாரு.

    ச்சை... உனக்கு விவஸ்தையே கிடையாது. அவனை ஒருமையில் திட்டினாள்.

    பின்ன... என்ன? கட்டிளங்காளை ஒருத்தன் மடியில படுத்துக்கிட்டு வேறமாதிரியான ஆசைகளை சொன்னா நிறைவேத்தி வைப்பேன். கடல்ல மிதக்குற ஆசையைப் பத்தி சொன்னா நான் என்ன செய்வேன்? அவளுடைய கூந்தலை வருடினான்.

    அவனுடைய விரல்களைப் பற்றி தன் விரல்களால் சுரண்டியவாறே கேட்டாள்:

    வேற மாதிரியான ஆசைன்னா...? என்றாள்.

    வேற மாதிரியான ஆசைன்னா, அந்த மாதிரியான ஆசை... என்றான்.

    ச்சீ... நீங்க ரொம்ப மோசம்.

    என்ன மோசம்?

    கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அலையாதீங்க.

    ஆம்பளைங்க கல்யாணத்துக்கு முன்னாடி அலைவாங்க. பொம்பளைங்க, கல்யாணத்துக்குப் பின்னாடி அலைவாங்க.

    ஆமா, இவர்தான் பார்த்தாரு. ஆளைப்பாரு. முரளி...

    என்ன... உடனே அந்த ஆசையை நிறைவேத்த சொல்றியா? எனக்கொன்னும் ஆட்சேபணை இல்லை. நான் ரெடி. ஆனா, நீ பெரிய பணக்காரி. உன்னோட முதலிரவு வெல்வெட் மெத்தையில் அலங்காரமான அறையில் நடக்க வேண்டியது. இங்க வெட்ட வெளியில் வெண் மணற்பரப்புல நடக்கணுமான்னுதான் கவலையா இருக்கு.

    முரளி மூடு வாயை. பேச்சைப் பாரு. அசிங்கமா பேசிக்கிட்டு...

    அசிங்கமா இது? பாவி... மனித வர்க்கத்தின் மகத்தான சந்தோஷமே இதுதான். நீதான் இதைக் கேவலப்படுத்தறே. உன்னை இதுக்குன்னே பழிவாங்கலை... என் பேரு முரளி இல்லை.

    பழிவாங்கப் போறியா? எப்படிடா என் செல்லக் கண்ணா? கொஞ்சினாள்.

    ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு தூக்க மாத்திரையைப் போட்டுக்கிட்டு நீ பால் செம்போட வர்றதுக்கு முன்னயே நீட்டி படுத்து தூங்கிடுவேன். நீ ஏமாந்து போவே...

    ஓகோ? அப்ப நானே... அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளுடைய வாயைப் பொத்தினான்.

    வெட்கம் கெட்டவளே. நீ தமிழ்ப் பொண்ணே இல்லை என அவளுடைய இடுப்பில் அழுத்தமாய் கிள்ளினான்.

    ஆ... கத்தினாள் கமலா.

    இருவரும் பின் சேர்ந்து சிரித்தனர்.

    அவனுடைய மடியிலிருந்து சட்டென எழுந்தாள். அவனுடைய தோளில் கைபோட்டு அவன் முகத்தை தன் பக்கம் இழுத்தவள் கேட்டாள்:

    முரளி... நாம எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே காதலிச்சுக்கிட்டு இருக்கறது...?

    சாகறவரைக்கும்.

    கல்யாணம்?

    கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் காதல் தொடராதா? நீ கேட்குற கேள்வியைப் பார்த்தா, காதலை ஏதோ ஒரு கட்டத்துல நிறுத்தணுமின்னு சொல்றமாதிரி இருக்கு.

    நான் அப்படி சொல்லலையே...

    பின்னே... எவ்வளவு நாள் காதலிச்சுக்கிட்டே இருக்கறதுன்னு கேட்டே? இவ்வளவு நாள்தான் காதலிக்கணுமின்னு ஏதாவது கணக்கு இருக்கா?

    நான் கல்யாணத்தைப் பத்தி பேச வந்தேன்.

    அதுக்கு எப்ப கல்யாணம்ன்னு கேட்டிருக்கணும். கல்யாணம்கறது சமுதாயத்துல நமக்கு ஒரு அங்கீகாரம். அவ்வளவுதான். ஆனா... இந்த காதல் இருக்கே, நம்ம மனசுக்குள்ள நமக்கு நாமே ஏற்படுத்திக்கிட்ட அங்கீகாரம். கல்யாணம் ஆனாலும் சரி, ஆகாட்டாலும் சரி. காதல் நம்மக்கிட்டயிருந்து போயிடாது. அது தொடரும். நீ கிழவியாகற போது கூட இந்தப் பாசத்தோட என்னால இருக்க முடியும். இருக்கணும். அதுதான் காதல் கமலா.

    அவனுடைய வார்த்தைகள் அவளுக்குள் ஒரு போதையை உண்டாக்குவதைப் போலிருந்தது. கண்களை சுகமாக மூடிக் கொண்டாள். மூடிய அந்த விழிகளில் முத்தமிட்டான் முரளி. அந்த நிமிடம் அவளுக்கு சற்றுமுன் கடல்மீது நடக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியதைப் போல் இருந்தது. அவனுடைய மீசையின் ரோமங்கள் மூடிய இமையின் மீது மென்மையாய்க் குத்தின. அவளுடைய தேகத்தையே

    Enjoying the preview?
    Page 1 of 1