Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முத்தழகி
முத்தழகி
முத்தழகி
Ebook248 pages1 hour

முத்தழகி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தெருக்கோடியில் வரும் முத்தழகியை வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த கமலம்மா பார்த்துவிட்டாள்.
 'நாள் தவறினாலும் இவ இங்க வர்றது தவறுவதே கிடையாது. அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் இவ நடக்கிற நடையை கணக்கு பண்ணினா... இங்கேயிருந்து திருப்பதி மலைக்கு நூறு தரம் பாதயாத்திரையே போயிட்டு வந்திருக்கலாம்...'
 அவள் மேலே எதுவும் நினைக்காமல் முத்தழகி படியேறினாள்.
 "என்ன அத்தை... எதைப் பார்த்துக்கிட்டு இப்படி ஆடாம அசையாம உட்கார்ந்திருக்கீங்க?"
 "அலங்காரம் செய்த ரதம் அசைஞ்சு வர்றா மாதிரி எங்கண்ணன் மக நடந்து வர்ற அழகை ரசிச்சுக்கிட்டிருக்கேன், வேற என்ன?"
 முத்தழகியின் சிவந்த முகம் மேலும் சிவந்தது.
 "இந்தாங்க அத்தை பூ..."
 தன்னிடம் பூப்பந்தை நீட்டும் அவளைப் பார்க்கும்போது கமலம்மாவுக்கு கஷ்டமாக இருந்தது.
 'அத்தை... அத்தைன்னு இப்படி ஆசையா ஓடி வர்ற பெண்ணை வீட்டுக்கு மருமகளா கொண்டு வர்றதுக்கு இன்னும் ஒரு நல்ல நாள் வரலியே...' என்று நினைத்தபடி, எழுந்து உள்ளே போனாள்.
 ''ராத்திரிக்கு என்ன செய்யப் போறீங்க அத்தை? சொன்னீங்கன்னா நான் செய்து வைச்சிட்டுப் போறேன். நீங்க வீணா சிரமப்படாதீங்க..." என்று சொல்லிக்கொண்டே முத்தழகி அவளை பின் தொடர்ந்தாள்.
 "என்ன பெரிய சமையல்? எனக்கும் உங்க மாமாவுக்கும் ஒரு ஈடு இட்லி வைச்சா போதும். தொட்டுக்க மதியம் வைச்ச கறிக்குழம்பு இருக்கு. வேணும்னா நீயும் ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டுப் போயேன் முத்தழகி...''"இல்லை அத்தை, வீட்டுல சாப்பிடலைன்னா அம்மா திட்டுவாங்க. அத்தான்கிட்டே இருந்து போன் வந்துதா அத்தை? எப்ப வருதாம்? இந்த வாரம் நவராத்திரி லீவு வருதே..." முகம் சிவக்க சிவக்க கேட்ட முத்தழகியைப் பார்த்து கமலம்மா சிரித்தாள்.
 "காலையில் பேசினான். இப்ப லீவு இல்லையாம். அதனால இன்னும் மூணு மாசம் கழிச்சு வர்றதா சொன்னான்."
 குமரன் வரவில்லை என்று கேட்டதும் முத்தழகி முகம் சுண்டினாள். அதை அத்தை கவனித்துவிடாமல் சட்டென மாற்றிக் கொண்டாள்.
 "சரி அத்தை... நேரமாகிட்டுது... வீட்டுக்குப் போகணும். அப்பா தேடுவாங்க. அம்மா 'பிலுபிலு'ன்னு சண்டைக்கு வருவாங்க...''
 "அட... அதுக்குள்ள முகம் வாடி குரல் கிறங்கிப் போச்சே... நான் சும்மா சொன்னேன். குமரன் நாளை மறுநாள் வர்றதா சொன்னான்... போதுமா?"
 கமலம்மா சொன்னதைக் கேட்டதும் முத்தழகி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு காற்றாய் நழுவிப் பறந்தோடினாள்.
 'அத்தான்காரன் வரான்னு சொன்னதுமே இவளை கையில் பிடிக்க முடியலியே... இன்னும் தாலி கட்டிட்டான்னா அவ்வளவுதான் போலிருக்கு...' கமலம்மா புன்னகையுடன் தன் வேலையை ஆரம்பித்தாள்.
 உல்லாச நடையும் வாயில் முணுமுணுக்கும் பாடலுமாய் தன்னைக் கண்டும் காணாமல் கடந்து போகும் முத்தழகியைப் பார்த்தாள் சரசு.
 "ஏய் முத்தழகி... என்னடி ஆளு எதிரில் வர்றது கூட தெரியாம ஓடிக்கிட்டிருக்க? என்னடி விஷயம்?"
 "அட... சரசு நீயாடி? நெசமாவே உன்னை கவனிக்கலை. அவசரமா போயிட்டிருக்கேன்... இருட்டாகுது இல்லே?"நீ ஏன் கவனிக்கலைன்னு எனக்குத் தெரியும்டி திருடி. உன் அத்தை வீட்டில் இருந்துதானே வர்றே? உன் அத்தானைப் பத்தி ஏதோ சேதி வந்திருக்கு. அதான் இப்படி கால் தரையில் படாம இந்த ஓட்டம் ஓடறே... அப்படித்தானே?"
 "சீ... போடி... கேலி பண்றே... நாளைக்கு வீட்டுக்கு வரேன்..."
 தன் பதிலைக் கூட எதிர்பாராமல் ஓடும் முத்தழகியை கண்டு சிரித்து விட்டு நடந்தாள் சரசு.
 "இந்த முத்தழகியை புரிஞ்சுக்கவே முடியலியே... இவள் உருகும் அளவுக்கு அந்த குமரன் இவமேல பிரியமா இருக்கானா... இவ காட்டும் அன்பு கல்யாணமா முடியணும்... இல்லேன்னா... இவ தாங்குவாளா? கடவுளே... இவளைக் காப்பாத்துப்பா..." சரசு மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டாள்.
 "அப்பா... அம்மா... இதைக் கேளுங்களேன்... இங்கே உடனே வாங்க..." நடுக் கூடத்தில் நின்று கத்தும் முத்தழகியை பார்த்ததும் வடிவாம்பா கடுப்பானாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223099703
முத்தழகி

Read more from Megala Chitravel

Related to முத்தழகி

Related ebooks

Reviews for முத்தழகி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முத்தழகி - Megala Chitravel

    1

    நட்சத்திரத் தோழிகள் சூழ்ந்து நின்று ஆட்டி விடும் காற்றுக் கயிற்றில் தொங்கும் மேக ஊஞ்சலில் ஒய்யாரமாக நிலவுப் பெண் உட்கார்ந்திருக்கும் பின்மாலைப் பொழுது...

    "முத்தழகி... அடியே... முத்தழகி... எங்கேடி இருக்கே? எவ்வளவு நேரமா கத்திக்கிட்டிருக்கிறது? இந்தாங்க... உங்களைத்தான்... அந்தக் கழுத தெருப்பக்கம் நிக்கிறாளான்னு கொஞ்சம் பாருங்களேன்...’’

    சமையலறையிலிருந்து வந்த உத்தரவுக்குப் பணிந்த ஆழ்வார் வாசல் பக்கம் போனார். திண்ணையில் முத்தழகி மும்முரமாக பூக்கட்டிக் கொண்டிருந்தாள்.

    ஏம்மா... முத்தழகி... உங்கம்மா கத்திக்கிட்டிருக்கிறது காதில் விழலியா?

    விழாம என்னப்பா? அம்மாவோட பீரங்கிக் குரல் என் வலது காதில் நுழைந்து இடது காது வழியா வெளியேறி ரத்தமா கொட்டுதே... பார்க்கலியா நீங்க?

    உக்கும்... உன்னோட பதினெட்டு வயசுக்கே இப்படி அலுத்துக்கறியே... நான் இருபத்து மூணு வருஷமா அல்லும் பகலும் அனவரதமும் கேட்டுக்கிட்டே இருக்கேனே... எனக்கு எப்படி இருக்கும்? ஆழ்வார் அலுத்துக் கொண்டார்.

    கட்டி முடித்த பூச்சரத்தை கூடையில் வைத்துவிட்டு இரண்டு கைகளையும் தூக்கிக் கும்பிட்டாள் முத்தழகி.

    அப்பா நீங்க இப்படி சொல்றதைக் கேட்டுக் கேட்டு பதினெட்டு வருஷமா வாயில நுரை தள்ளிக்கிட்டிருக்கேனே... அதைப்பத்தியும் கொஞ்சம் கருணையோட நினைச்சுப் பாருங்கப்பா... என்னை விட்டிடுங்கப்பா... நான் அத்தை வீட்டுக்குப் போயிட்டு வரேன்... கண் இமைக்கும் பொழுதில் முத்தழகி கண் மறைந்து விட்டாள்.

    ஏங்க... உங்களை என்ன சொன்னேன்? இப்படி இங்க வந்து ஒதியமரமாட்டம் நின்னுக்கிட்டிருக்கீங்களே... எங்க அந்தக் கழுதையைக் காணோம்? வடிவாம்பா கோபத்தில் கத்தினாள்.

    ஏன் வடிவு, நீதானே அவளுக்கு முத்தழகின்னு அழகா பேரு வைச்சே? அப்புறம் எதுக்கு கழுதைன்னு கூப்பிடறே?

    "ஆமாம் சாமி... நான்தான் அழகா பேரு வைச்சேன். அதுக்கு ஏத்த மாதிரியா அவ நடந்துக்கிறா? ஒரு நாளைக்காவது வயசு பொண்ணா லட்சணமா சொன்ன பேச்சைக் கேட்டு வீட்டு வேலை ஏதாவது செய்யறாளா?

    எப்பப் பார்த்தாலும் அத்தை வீட்டுக்குப் போறேன்... பொத்தை வீட்டுக்குப் போறேன்னு உங்க தங்கச்சி வீட்டுக்குத்தானே ஓடறா? அம்மான்னு என்னை மதிக்கிறாளா? இல்லியே... இம்சை செய்து படுத்தறா இல்லையா...? அதனாலதான் என் வாயில கழுதைன்னே வருது... சரி அவ எங்கே?"

    நீ பேசறது உனக்கே நல்லா இருக்கா வடிவு? என்னமோ அடுத்தவங்க வீட்டுக்குப் போறா மாதிரி குத்தம் சொல்றியே... என் தங்கச்சி வீட்டுக்குத்தானே போறா?

    ஆழ்வார் கேட்டதும் வடிவாம்பா பாய்ந்தாள்.

    "குத்தமா சொல்லலை சாமி... குறையாத்தான் நினைக்கிறேன். உங்க பொண்ணுதான் பொழுதன்னிக்கும் அத்தைன்னுக்கிட்டு ஓடறா. ஆனா உங்க தங்கச்சிக்கு இவ மேல எந்த பாசமும் கிடையாது...’’

    "என்ன வடிவாம்பா இப்படி சொல்றே? என் தங்கச்சி நம்ம முத்தழகி மேல் எவ்வளவு பாசம் வைச்சிருக்கிறாள்னு உனக்கு தெரியாது... எனக்குத்தான் தெரியும்...’’

    ஆழ்வார் முடிக்கு முன்னே வடிவாம்பா முகத்தை திருப்பி பழிப்புக் காட்டினாள். ‘‘ஆமாம்... உங்க த... ங்... கச்சியோட குணத்தைப் பத்தி உங்களுக்குத்தானே தெரியும்?

    நீங்க சொல்றா மாதிரி பாசம் இருக்கிறவளா இருந்தா, பொண்ணு சமைஞ்சு ஐந்து வருஷமாச்சே. பொண்ணு கேட்டு வருவோம்னு நினைக்கிறாளா?

    நான் என்ன இப்பவே பந்தக்காலை நடுங்க... தாலிய கட்டுங்கன்னா சொல்றேன்? பரிசம் போட்டுக்கிட்டா பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் ஒரு பிடிப்பும், பாசமும் வரும்னுதானே கெடந்து கத்தறேன்...

    இதோ பாருங்க... உங்க தங்கச்சி வைச்சிருக்கிறது ஆண் பிள்ளை... ஆனா நம்மது பொண்ணுங்க... ஒரு பேச்சுக்கு சொல்றேன். ஒரு வேளை இந்தக் கல்யாணம் ஏதாவது காரணத்தால் தடைபட்டு போச்சுன்னு வைய்யுங்க. அப்புறம் என்னாகும்?

    உங்க தங்கச்சியும் அவ புருஷனும் பையனை கூப்பிட்டுக்கிட்டு, ‘நமக்கென்னான்னு கெளம்பிடுவாங்க. நம்ம பொண்ணு கதி என்ன? ஒருத்தனுக்குன்னு நிச்சயம் செய்த பொண்ணை எவன் கட்டுவான்?"

    எப்போதும் மனைவி சொல்லும் வார்த்தைக்கு பதிலுக்கு பதில் பேசும் ஆழ்வார் வாயடைத்துப் போனார்.

    ‘அட... இதில் இத்தனை இருக்கிறதுன்னு தெரியாமலேயே இருந்திருக்கேனே... என்ன இருந்தாலும் ஒரு தாயோட முன் யோசனையும், பின்னால வர்றதைப் பத்தின கணிப்பும் தனிதான்...

    வடிவாம்பா சொல்வது போல ஒரு நல்ல நாளைப் பார்த்து கமலம் வீட்டுக்குப் போயிட்டு வர வேண்டியதுதான்...’

    நீ சொல்றதும் சரிதான் வடிவு, இந்த வாரத்திலேயே நாம ரெண்டு பேரும் இது விஷயமாய் கமலம் வீட்டுக்குப் போயிட்டு வரலாம்...

    "ஏங்க ஏதாவது புரிஞ்சிதான் பேசறீங்களா? இல்லியா? உங்கக்கூட நானும் வந்தா, உங்க தங்கச்சி ஏதாவது ஏடாகூடமா பேசிட்டா, என்னால சும்மா இருக்க முடியாது. நானும் பதிலுக்கு ஏதாவது பேசிடுவேன்.

    உங்க தங்கச்சி வீட்டுக்காரர் இருக்காரே அந்த கொடாக்கண்டன் ஐ... ய்... ய... னா.. ரு... அதையே சாக்கா வைச்சுக்கிட்டு பேசக் கிளம்பிடுவாரு. அப்புறம் நம்ம முத்தழகியோட கல்யாணம் இழுபறியாகிவிடும். அதனால்தான் உங்களை மட்டும் போயிட்டு வரச் சொல்றேன்."

    அவள் சொல்வதிலுள்ள நியாயம் புரிந்த ஆழ்வார் தலையாட்டினார்.

    உங்க தங்கச்சிக்கிட்டே ரெண்டுல ஒண்ணு தெளிவா கேட்டுட்டு வந்திடுங்க. அவ மகன் குமரன் இல்லேன்னா, எங்கண்ணன் மகன் ராஜன் இருக்கான். ‘கட்டுடா தாலி’யன்னா... ‘கொண்டா...’ ‘கொண்டா...’ன்னு முன்னாடி வருவான்.

    "நீ சொல்றதும் சரிதான்... என் தங்கச்சி மகனுக்கு கட்டித் தரப் போறோம்னு சொன்னதாலதான் உங்கண்ணன் தொல்லை தராம பெருந்தன்மையா இருக்காரு. இனிமே காலம் தாழ்த்த முடியாது. நான் தீர்மானமா கேட்டுட்டு வந்திடறேன்’’ ஆழ்வாரின் பேச்சிலிருந்த உறுதியைக் கண்டு வடிவாம்பா நிம்மதியானாள்.

    2

    தெருக்கோடியில் வரும் முத்தழகியை வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த கமலம்மா பார்த்துவிட்டாள்.

    ‘நாள் தவறினாலும் இவ இங்க வர்றது தவறுவதே கிடையாது. அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் இவ நடக்கிற நடையை கணக்கு பண்ணினா... இங்கேயிருந்து திருப்பதி மலைக்கு நூறு தரம் பாதயாத்திரையே போயிட்டு வந்திருக்கலாம்...’

    அவள் மேலே எதுவும் நினைக்காமல் முத்தழகி படியேறினாள்.

    என்ன அத்தை... எதைப் பார்த்துக்கிட்டு இப்படி ஆடாம அசையாம உட்கார்ந்திருக்கீங்க?

    அலங்காரம் செய்த ரதம் அசைஞ்சு வர்றா மாதிரி எங்கண்ணன் மக நடந்து வர்ற அழகை ரசிச்சுக்கிட்டிருக்கேன், வேற என்ன?

    முத்தழகியின் சிவந்த முகம் மேலும் சிவந்தது.

    இந்தாங்க அத்தை பூ...

    தன்னிடம் பூப்பந்தை நீட்டும் அவளைப் பார்க்கும்போது கமலம்மாவுக்கு கஷ்டமாக இருந்தது.

    ‘அத்தை... அத்தைன்னு இப்படி ஆசையா ஓடி வர்ற பெண்ணை வீட்டுக்கு மருமகளா கொண்டு வர்றதுக்கு இன்னும் ஒரு நல்ல நாள் வரலியே...’ என்று நினைத்தபடி, எழுந்து உள்ளே போனாள்.

    ‘‘ராத்திரிக்கு என்ன செய்யப் போறீங்க அத்தை? சொன்னீங்கன்னா நான் செய்து வைச்சிட்டுப் போறேன். நீங்க வீணா சிரமப்படாதீங்க..." என்று சொல்லிக்கொண்டே முத்தழகி அவளை பின் தொடர்ந்தாள்.

    "என்ன பெரிய சமையல்? எனக்கும் உங்க மாமாவுக்கும் ஒரு ஈடு இட்லி வைச்சா போதும். தொட்டுக்க மதியம் வைச்ச கறிக்குழம்பு இருக்கு. வேணும்னா நீயும் ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டுப் போயேன் முத்தழகி...’’

    இல்லை அத்தை, வீட்டுல சாப்பிடலைன்னா அம்மா திட்டுவாங்க. அத்தான்கிட்டே இருந்து போன் வந்துதா அத்தை? எப்ப வருதாம்? இந்த வாரம் நவராத்திரி லீவு வருதே... முகம் சிவக்க சிவக்க கேட்ட முத்தழகியைப் பார்த்து கமலம்மா சிரித்தாள்.

    காலையில் பேசினான். இப்ப லீவு இல்லையாம். அதனால இன்னும் மூணு மாசம் கழிச்சு வர்றதா சொன்னான்.

    குமரன் வரவில்லை என்று கேட்டதும் முத்தழகி முகம் சுண்டினாள். அதை அத்தை கவனித்துவிடாமல் சட்டென மாற்றிக் கொண்டாள்.

    "சரி அத்தை... நேரமாகிட்டுது... வீட்டுக்குப் போகணும். அப்பா தேடுவாங்க. அம்மா ‘பிலுபிலு’ன்னு சண்டைக்கு வருவாங்க...’’

    அட... அதுக்குள்ள முகம் வாடி குரல் கிறங்கிப் போச்சே... நான் சும்மா சொன்னேன். குமரன் நாளை மறுநாள் வர்றதா சொன்னான்... போதுமா?

    கமலம்மா சொன்னதைக் கேட்டதும் முத்தழகி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு காற்றாய் நழுவிப் பறந்தோடினாள்.

    ‘அத்தான்காரன் வரான்னு சொன்னதுமே இவளை கையில் பிடிக்க முடியலியே... இன்னும் தாலி கட்டிட்டான்னா அவ்வளவுதான் போலிருக்கு...’ கமலம்மா புன்னகையுடன் தன் வேலையை ஆரம்பித்தாள்.

    உல்லாச நடையும் வாயில் முணுமுணுக்கும் பாடலுமாய் தன்னைக் கண்டும் காணாமல் கடந்து போகும் முத்தழகியைப் பார்த்தாள் சரசு.

    ஏய் முத்தழகி... என்னடி ஆளு எதிரில் வர்றது கூட தெரியாம ஓடிக்கிட்டிருக்க? என்னடி விஷயம்?

    அட... சரசு நீயாடி? நெசமாவே உன்னை கவனிக்கலை. அவசரமா போயிட்டிருக்கேன்... இருட்டாகுது இல்லே?

    நீ ஏன் கவனிக்கலைன்னு எனக்குத் தெரியும்டி திருடி. உன் அத்தை வீட்டில் இருந்துதானே வர்றே? உன் அத்தானைப் பத்தி ஏதோ சேதி வந்திருக்கு. அதான் இப்படி கால் தரையில் படாம இந்த ஓட்டம் ஓடறே... அப்படித்தானே?

    சீ... போடி... கேலி பண்றே... நாளைக்கு வீட்டுக்கு வரேன்...

    தன் பதிலைக் கூட எதிர்பாராமல் ஓடும் முத்தழகியை கண்டு சிரித்து விட்டு நடந்தாள் சரசு.

    இந்த முத்தழகியை புரிஞ்சுக்கவே முடியலியே... இவள் உருகும் அளவுக்கு அந்த குமரன் இவமேல பிரியமா இருக்கானா... இவ காட்டும் அன்பு கல்யாணமா முடியணும்... இல்லேன்னா... இவ தாங்குவாளா? கடவுளே... இவளைக் காப்பாத்துப்பா... சரசு மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டாள்.

    அப்பா... அம்மா... இதைக் கேளுங்களேன்... இங்கே உடனே வாங்க... நடுக் கூடத்தில் நின்று கத்தும் முத்தழகியை பார்த்ததும் வடிவாம்பா கடுப்பானாள்.

    வௌக்கு வைச்ச நேரத்தில் வயசு பொண்ணு வீடான வீட்டில் வௌக்கு ஏத்தாம ஊர் சுத்தப் போயிட்டே...

    நான் ஒண்ணும் ஊர் சுத்தப் போகலை... எங்க அத்தை வீட்டுக்குத்தான் போனேன். இல்லேப்பா...

    அங்க போனதைத்தான் அப்படி சொன்னேன். அத்தை... பொத்தைன்னு நேரம் காலம் பார்க்காம ஓடறியே... என்னடி பிரயோசனம்? உன் கல்யாணத்தைப் பத்தி அவ இன்னும் எதுவும் பேசலைங்கிறதை நினைப்பு வச்சுக்க...

    அடடா... ஏம்மா எப்பப் பார்த்தாலும் கல்யாணம் கல்யாணம்னு புலம்பறீங்க... அத்தானுக்கு இன்னும் படிப்பு முடியலைன்னு உங்களுக்கு தெரியுமில்லே? அதுதான் அத்தை பொறுமையா இருக்காங்க... முத்தழகி வக்காலத்து வாங்கினாள்.

    நல்லா இருந்தா போ... அவமவன் பெரிய படிப்பு படிச்சு கிழிச்சான். இருக்கிற சொத்தே பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து தின்னாலும் மாளாது. இவரு வேற படிச்சு சம்பாதிச்சு லாரியில வாரிக்கிட்டு வந்து இந்த கிராமத்தில கொட்டப் போறாரு. நீ போய் கூடையில கொஞ்சம் அள்ளிக்கிட்டு வா... ஏண்டி பொழப்பத்துத் திரியறே...

    அப்பா... பாருங்கப்பா... இந்த அம்மாவை... முத்தழகி கத்தினாள்.

    அடடா... அம்மாவுக்கும் பொண்ணுக்கும் எப்பப் பார்த்தாலும் சண்டைதானா? வடிவு கொஞ்சம் சும்மா இருக்கியா? நீ என்னவோ சொல்ல வந்தியே என்னடா முத்தழகி? ஆழ்வார் குறுக்கிட்டு அமைதிப்படுத்தினார்.

    வந்துப்பா... வந்துப்பா... அத்தான் நாளை மறுநாள் ஊருக்கு வருதுன்னு அத்தை சொல்லச் சொன்னாங்க... அதுக்குதான் கூப்பிட்டேன்.

    வடிவாம்பா தலையில் அடித்துக் கொண்டாள்.

    "சரிதான்... நீ நல்ல நாளிலேயே நாயகம்... உன் அத்தானைக் கண்டா சும்மா இருப்பியா? கள்ளு குடிச்ச குரங்கு மாதிரியில்ல ஆடுவே... எல்லாம் என் தலையெழுத்து...

    எனக்குன்னு வந்ததும் சரியில்லை. நான் பெத்ததும் சரியில்லை... நான் வாங்கி வந்த வரம் அப்படி...’’

    அவளுக்குப் பதில் சொல்ல வாயெடுத்த முத்தழகி பார்வையால் தடுத்தார் ஆழ்வார்.

    ‘‘இந்தப் பேச்செல்லாம் இருக்கட்டும். எனக்குப் பசிக்குது... சாப்பாடு எடுத்து வைக்கிறியா... இல்லை..."

    "நீங்க மட்டும் சாப்பிட வாங்க... உங்க அருமைப் பொண்ணு அவளோட ஆசை அத்தை வீட்டுல சாப்பிட்டுதானே வந்திருப்பா...’’ வடிவாம்பா வெடித்தாள்.

    முத்தழகி சட்டென கவனமானாள். இன்று அம்மாவை கோபமூட்டினால் அப்புறம் அத்தான் வரும்போது கஷ்டமாகிவிடும். அம்மாவை இப்போதே சமாதானம் செய்துவிட வேண்டும். குரலை இனிமையாக மாற்றிக் கொண்டாள்.

    இல்லைம்மா... அத்தை சாப்பிடத்தான் சொன்னாங்க. நான் உடனே எனக்கு வேணாம்... எங்கம்மா காத்திருப்பாங்க... எனக்காக சாப்பிடாம வாசல்லயே நிப்பாங்கன்னு சொல்லிட்டு ஓடிவந்துட்டேன்மா... ரொம்ப பசிக்குதும்மா...

    வடிவாம்பா துடித்துப் போனாள், ‘‘நான் ஒரு கூறு கெட்டவ. புள்ள பசியா இருக்கும்போது சண்டை போட்டுவிட்டேனே... சாப்பிட வாடி என் தங்கமே... அந்தக் கமலம் நல்லா இருப்பாளா? புள்ளைய இப்படி பசியா அனுப்பிட்டாளே...?"

    தந்தையும் மகளும் கண் சிமிட்டி சிரித்தபடி சமையலறைக்குள் நுழைந்தார்கள்.

    "அத்தைக்கு பலகாரமே செய்யத் தெரியலைப்பா. நம்ம அம்மா செய்யறா மாதிரி செய்ய முயற்சி செய்து சாமான் வீணானதுதான் மிச்சம். பால் அல்வான்னு செஞ்சிருந்தாங்கப்பா... பால் கஞ்சி மாதிரி கொழ கொழன்னு இருந்துது.

    தேங்காய்ப்பால் முறுக்குன்னு ஒரு மூங்கில் கட்டையைத் தட்டில வைச்சாங்க... பாருங்க... விட்டா போதும்னு ஓடியே வந்துட்டேன்ம்மா...

    அம்மா கையிலே ஏதோ அற்புதம் இருக்குப்பா... அதான் பலகாரமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு..."

    வடிவாம்பாவுக்கு சிரிப்பு வந்தது.

    "எதுக்குடி இப்படி பாளம் பாளமாக ஐஸ் கட்டியைத் தூக்கி என் தலையில் வைக்கிறே? இப்ப என்ன?

    உன் அத்தானுக்கு பால் அல்வாவும், தேங்காய்ப் பால் முறுக்கும் செய்து தரணும்? அவ்வளவுதானே... செய்து தரேன்... போதுமா?’’

    அம்மான்னா அம்மாதான்... கூடவே அதிரசமும் ஓமப்பொடியும் செய்திடுங்கம்மா... என் தங்கமாச்சே... என்று பாதி சாப்பாட்டிலேயே எழுந்தாள்.

    இருடி... முழுசா சாப்பிட்டுட்டுப் போடி... வடிவு கத்தக் கத்த முத்தழகி தன்னறைக்குள் நுழைந்து படுக்கையில் சரிந்தாள்.

    ‘அத்தான்... மூணு நாளைக்கு தங்கறதுக்குன்னு வருது. அப்ப போட்டுக்கறதுக்கு நல்லா துணி இருக்கா? அதே பழைய உடுப்புங்கதான். சே... என்ன செய்யறது? அம்மாக்கிட்டே புதுசு கேட்டா... அவ்வளவுதான். முதுகில டின்னு கட்டிடுவாங்க. அதுவும் ரெடிமேடுன்னு கேட்டா... அவ்வளவுதான்...

    அப்பாவை நைஸ் பண்ணி கடைக்குக் கூப்பிட்டுக்கிட்டு போயிட வேண்டியதுதான். மூணு

    Enjoying the preview?
    Page 1 of 1