Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதலடி நீ எனக்கு..!
காதலடி நீ எனக்கு..!
காதலடி நீ எனக்கு..!
Ebook233 pages1 hour

காதலடி நீ எனக்கு..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"என்னங்க... இன்னிக்கு சாயங்காலம் சீக்கிரமா வந்திடுங்க... ராணி வீட்டில் விருந்து இருக்கு..."
 காலையில் எழுந்து கொண்டதில் இருந்து சொல்லிக் கொண்டிருந்த மயூரி, காரில் ஏறுமுன் நூறு தடவையாவது நினைவூட்டியிருப்பாள். ஆனால் கணக்குத் தணிக்கையாளர் வந்துவிட்டதால், மதியம் சாப்பிடக்கூட முடியாமல் தலைக்கு மேல் வேலை.
 ஒரு வழியாக வேலை முடிந்ததும் நிமிர்ந்து கைசொடுக்குப் போட்டு சோம்பல் முறித்த போது மணி ஒன்பது. அலுப்பாக இருந்தது. அதுவரை உடன் இருந்த மேலாளரையும், கணக்கரையும் அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டு, அவன் வீட்டிற்குள் நுழையும் போது மணி பத்து.
 அவன் வரும் வரை வழக்கமாகக் கூடத்தில் படித்துக் கொண்டோ, வீடியோவில் படம் பார்த்துக்கொண்டே இருக்கும் மயூரியைக் காணவில்லை. அவன் தன் அறைக்குள் சென்று உடைமாற்றிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்.
 வானத்து நிலவு தடுமாறித் தரையில் விழுந்து குப்புறக் கவிழ்ந்து கிடப்பது போல மயூரி படுத்துக் கிடந்தாள். கழற்றி எறிந்திருந்த பட்டுச் சேலை ஒரு மூலையில் வாலாய் நீண்டு காற்றில் படபடத்தது. வைர நகைகள் இருட்டில் ஒப்பனை மேசை மீது வெளிச்சக் குவியலாய் முணு முணுத்துக் கொண்டிருந்தன. விளக்கைத் தட்டினான். அவள் ஆங்காரமாகத் திரும்பினாள்.
 "எத்தனைதரம் காலையில் விருந்துக்கு போகணும்னு நினைவூட்டினேன். சீக்கிரமே வரமுடியலேன்னா ஒரு போனாவது பண்ணியிருக்கக் கூடாது. ஏழு மணியிலேயிருந்து கிளம்பிக் காத்திருந்து... என் நினைப்பு இருந்தால் தானே... இது வீடா... இல்லை நரகம்! என்னை உயிரோடு சாகடிக்கற நரகம்! இப்படியே பண்ணிக்கிட்டிருங்க... மனவேதனை தாங்காமல் ஒரு நாளைக்கு ஒரேடியா ஒழிஞ்சிடறேன். அன்னிக்காவது சீக்கிரம் வருவீங்களா. இல்லை வேலை இருக்குன்னு மறந்திடுவீங்களா..." விம்மலும், விக்கலுமாகக்கத்துபவளை சமாதானம் செய்ய முடியாது என்று புரிந்தவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். பிறகு
 "சீக்கிரம் வராதது தப்புதான். அதுக்காக ஏன் இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசறே... நம்ம கம்பெனின்னு நானே வேலைய ஒதுக்கிட்டு வந்தால் மத்தவங்க என்ன பண்ணுவாங்க.. உம்... நீ ஏன் எதையும் சரியாவே புரிஞ்சுக்கவே மாட்டேங்கறே... காலையில் இருந்து எத்தனை கஷ்டப்பட்டிட்டு வந்திருக்கேன்னு உனக்குத் தெரியுமா... சே..."
 அந்தக் குற்றச்சாட்டு அவளுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. "ஏதாவது சாக்கு, உங்களுக்கு. எப்பப் பார்த்தாலும் எதையோ பறிகொடுத்தா மாதிரி இருக்கீங்க... என்னை பிடிக்கலியா? இல்லே, நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா? சொன்னால் நான் திருத்திக்க மாட்டேனா...? இப்படி இந்த அர்த்தமில்லாத வாழ்வுக்குக் காரணம் புரியாமல் நான் தவிக்கிறது உங்களுக்குத் தெரியலியா? இல்லே, நடிக்கறீங்களா? ஆனால், ஒண்ணு புரிஞ்சுக்குங்க. என்னை நீங்கள் வெறுத்திட்டால் நான் ஒரு கணம் கூட உயிரோட இருக்க மாட்டேன்..." கத்தியதில் அவளுக்கு மூச்சிரைத்தது.
 வீட்டு உள் இணைப்பு தொலைபேசி சிணுங்கியது. தவிசுப்பிள்ளை இருவரையும் சாப்பிட வரச் சொல்லிக் கூப்பிட்டார்.
 "இதோ பாரு. மயூரி, நீயாவே ஏன் இப்படி எதையாவது கற்பனை பண்ணி புலம்பிக்கிட்டிருக்கே? இங்கே உனக்கு என்ன குறை இருக்கு? ராணி மாதிரி நிம்மதியா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா ஏதாவது பேசிக்கிட்டிருக்காதே. நீ இன்னும் சாப்பிடலியாமே... ஏன்... வெளியே போறவங்க முன்ன பின்ன வரலாம். சாப்பிட்டுட்டு வரவும் கூடும். நீ இப்படி சாப்பிடாமல் இருக்கறது எனக்குப் பிடிக்காதுன்னு சொல்லியிருக்கேன். இல்லே... இருக்கற நெருக்கடி போதாதுன்னு நீ வேற எனக்கு... சரி... சரி... சாப்பிடவா..."
 சாப்பாடு உயிர் வாழத்தானே தவிர சுவைக்கு இல்லை என்ற நிலைக்கு அவன் வந்து எத்தனையோ ஆண்டு ஆகிவிட்டது. மயூரி சாப்பிட வேண்டும் என்று அவளோடு உட்கார்ந்தான். அவள் சாப்பிட அவகாசம் கொடுத்து கொறித்துக் கொண்டிருந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798215054666
காதலடி நீ எனக்கு..!

Read more from Megala Chitravel

Related to காதலடி நீ எனக்கு..!

Related ebooks

Reviews for காதலடி நீ எனக்கு..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதலடி நீ எனக்கு..! - Megala Chitravel

    1

    வான மங்கை நட்சத்திரப் பூக்களை மாலையாக்கி, நிலவுக் காதலனுக்குச் சூட்டத் தயாரான அழகானப் பின் மாலைப் பொழுது. சிலுசிலுக்கும் இளம் காற்றில் பவள மல்லிகைப் பூக்கள் பொல பொலவென உதிர்ந்து கொண்டிருந்தன.

    அவனது நினைவாக இருந்தவளைக் கலைப்பது போல மடியில் விழுந்தது. ஒரு மலர். கையில் எடுத்துப் பார்த்தாள். வெள்ளை முகமும், ஆரஞ்சுக் காலும் என்ன வகையில் இணைப்பு... எந்தவிதத்தில் உறவு... மனதையள்ளும் இந்த வாசம்... மொட்டாயிருக்கையில் எங்கே இருந்தது... எப்படி வண்ணங்களுக்குள் ஊடாடி சட்டெனக் காற்றில் கலந்தது... விடை தெரியவில்லை.

    இது மட்டும் தானா விடை தெரியாத வினா? சொந்த வாழ்வையும் கூட தெரியாத வினாவாக மாற்றவர்கள் எதிரில் காட்டிக் கொண்டாகிவிட்டது.

    விடை தெரிந்து தானே கொடுத்த வினாதான் ஆனால், கொஞ்ச நாளாக ஏனோ மனதுள் தவிப்பு தீயாய் தகிக்கிறது.

    யாரை நினைக்கக்கூடாது என்று அறிவு கட்டளையிட்டு மனதை அடக்குகிறதோ அவனை மட்டுமே உயிர் நாடுகின்றது. அவனை எப்படி நினைக்காமல் இருக்க முடியும்?

    ‘என் இளமை அவனது அழகின் வார்ப்பிலே யோகம் பெற்றிருக்கிறது. அவனது ஆண்மையின் ஆளுமையிலே உன் உணர்வும், உடலும் உகந்து களிப்புற்றிருக்கின்றன. காதலென்னும் வேதத் தீயில் அவனது திருவின் ஒளியை என் உயிரும், மனமும் ஏந்திக் கொண்டிருக்கின்றன.’

    ‘என் தேவனே இப்போதே பார்க்க வேண்டும் என்று ஆத்திரம் கரைபுரண்டது. இப்போதெல்லாம் இப்படித்தான். அவனை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று மனம் அடம் செய்கிறது.’

    பெருமூச்சு அடிவயிற்றிலிருந்து எழும்பியது. இயலாமை கண்ணில் நீராய் தெரிந்தது.

    தோளில் படிந்தகரம் அப்பாவுடையது. அதற்கு மேல் மனம் தாங்க முடியாமல் குமுறினாள். அப்பா...எனக்கு...எனக்கு...

    அப்பா தடுத்தார். அதுக்கென்ன, நாளைக்குப் போகலாம். அழக்கூடாதும்மா. வா உள்ளே போகலாம்.

    சொன்னபடியே மறு நாள் கிளம்ப ஏற்பாடு செய்தார். தலையணைகளைப் பக்கவாட்டில் கொடுத்து, வசதியாக உட்கார வைத்தார். முன்புறம் அம்மா ஏறிக்கொள்ள காரை அலுங்காமல் ஓட்டினார். கார் சீராகப் போகும் சுகத்தில் மெதுவாகக் கண்களை மூடிக் கொண்டாள். மனதுள் அப்பாவையும் அம்மாவையும் தெய்வங்களாக வணங்கத் தோன்றியது. விவரம் தெரிந்த போது திகைத்து அழக்கூட முடியாமல் குமுறினாள்.

    அப்பா இந்த சிக்கலை ஆக்கப்பூர்வமாக அணுகினார். வளர்ந்து வயதுக்கு வந்து விட்ட பெண்ணை எல்லாவற்றையும் மறைக்காமல் தன்னிடம் சொன்ன பெண்ணை, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்த பெண்ணை, தப்பு செய்யவில்லை என்று தலைநிமிர்ந்து நிற்கும் பெண்ணை, கோவிப்பதால் என்ன பயன் என்று புரிந்து கொண்டவர், அவர்.

    அவரது மடியில் தலை வைத்துக் கொண்டு, அவள் சொன்னாள். என்னைப் பெற்று வளர்த்தீங்க. நான் விரும்பின உயர்கல்வி தந்தீங்க. சாதாரணமான மற்ற அப்பாக்களைப் போல இல்லாமல், எனக்கு உரிமை கொடுத்து வளர்த்தீங்க, நினைச்சதை செயல்படுத்தும் தைரியத்தை எனக்குள் ஊட்டினீங்க. ஆனால் நான் செய்திருக்கிற இந்த செயலால் உங்களுக்கு சிக்கல்களை நான் அறிவேன்.

    என்னை மன்னிச்சிடுங்கப்பா என்று வாய் வார்த்தைகளால் சொன்னால் அது வெறும் நடிப்பா ஆகிடும்ப்பா. அப்படி நேருக்கு நேரா கேட்கிற உரிமையை நான் இழந்திட்டேன்ப்பா. ஆனாலும், என்னை நீங்கள் மன்னிச்சிடுங்கப்பா.

    எனக்கு நீங்கள் கொடுத்த உரிமையை நான் தப்பா பயன்படுத்தலேன்னு மட்டும் தயவு செய்து நீங்கள் புரிஞ்சுக்கணும்பா."

    அம்மாவுக்குள் ஏற்பட்ட கோபமும், ஆத்திரமும் திசை தெரியாத புயலாய் சீறின. அப்பா அவளைத் தடுத்தார். இது என்ன மூணாம்தர அம்மா மாதிரி நடந்துக்கறே. அவளுக்கு தன்னை வெளிப்படுத்திக்க சந்தர்ப்பம் கொடு. இந்த விவகாரத்தில் நம்மைவிட அதிகமா பாதிக்கப்பட போறவள் அவள் தானே. அமைதியா இரு.

    அவள் மீண்டும் பேசினாள். அருமையான அப்பாவையும் அம்மாவையும் பெற்றிருக்கும் பெருமிதத்தில் அவளுக்குக் குரல் தழுதழுத்தது. அப்பா இந்த மாதிரி ஏன் நடந்தது. எப்படி நடந்ததுன்னு சொல்லி விளக்க என்னால் முடியலைப்பா. ஆனால் அவர் நல்ல குணங்களோடு கல்வித் தகுதியும் கொண்டவர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். என் மேல் உயிரையே வைச்சிருக்கார். தன் பொறுப்பை மறுத்திட்டு தப்பிச்சு ஓடக்கூடியவர் இல்லை. இதையெல்லாம் நான் சொல்லியாப்பா நீங்கள் தெரிஞ்சுக்கணும். இத்தனையும் மீறி அவரைவிட்டு விலகணும்னு நான் செய்த முடிவு உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும். எனக்கு வேற வழி தெரியலைப்பா. எனக்கு வேற வழி தெரியலைப்பா...

    இதுவரை கண்ணில் ஒளிந்து நின்ற கண்ணீர், சரசரவென அருவியாய் இறங்கிற்று. அப்பா அவளை தலையில் தடவி அமைதிப்படுத்தினார்.

    அவன் மீதுள்ள காதலால் அவள் செய்த தியாகத்தை அவர் பெருமையாக ஏற்றுக் கொண்டார்.

    அவளது வருங்கால வாழ்வைப் பற்றி எதுவும் இப்பொழுது அவசரப்பட அவர் விரும்பவில்லை. முதலில் நிகழ்காலம் என்ன தரும் பார்க்கலாம் என்று அமைதியானார்.

    அவன் தேடி வந்துவிடாதிருக்க, அவர் வெளிநாட்டுக்குப் போய்விட்டதாக மற்றவர் மூலம் அவரே செய்தியைப் பரப்பினார். அவளுக்கு இடமாற்றம் அவசியம் தேவை என்பது புரிந்தது. இல்லை என்றால் அவனது நினைவுகளுக்குள் புதைந்து அவள் தன்னை இழந்து போவாள் என்று ஒரு பயம் மனதில் ஏற்பட்டது. கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். கண்ணாய் வைத்துப் போற்றினார். நாட்கள் தம் கடமையை ஒழுங்காகச் செய்தன.

    மதிய உணவுக்காகக் கார் நிறுத்தப்பட்ட போதுதான் கண்விழித்தாள். அந்த மூன்றடுக்குக் கட்டிடத்தின் எதிர்ப்புறத்தில் அவனால் பார்க்க முடியாத தூரத்தில் காரை நிறுத்தினார். அப்பா, சன்னல் விழயாக இமை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மூன்று மணியளவில் நாலைந்து பேருடன் அவன் இறங்கி வருவது தெரிந்தது.

    அதே நிமிர்ந்த நடை. புன்சிரிப்பு தவழும் முகம். ஓடிச்சென்று அவனருகில் நின்று அந்த முகத்தைக் கையில் ஏந்தி கன்னங்களில் மாறி மாறி முத்தமிடவேண்டும் போல மனதில் ஆவேசம் தவித்தது.

    அவனது உடல் இளைப்பு சட்டெனத் தெரிந்தது. கிட்டத்தட்ட கொடிய இரக்கம் இல்லாத எட்டு மாதங்கள். அப்பப்பா... வினாடிகளாய் வளர்ந்து மனதைப் புழுவாய் குடைந்து இம்சித்த எட்டு மாதங்கள்... தன்னையும் மீறி விம்மல் வெடித்துச் சிதறியது. அதைத் திரும்பவும் தொண்டைக்குள் தள்ளும் முயற்சியில் தோற்று அவள் வாயைப் பொத்திக் கொண்டாள். ஆனாலும், அவனைப் பார்த்துவிட்ட நிம்மதி சட்டென மனதிலிருந்து கண்கள் வழியாக நீர் வடிவில் சலசலத்தது.

    வீடு திரும்பும் போது அப்பா அவளை உறுத்திவிடாமல் சொன்னார். உன் வருத்தமும், துயரமும் எனக்கும் புரியுதும்மா. ஆனால் எதுக்காக நீ அவரைப் பிரிஞ்சி வந்தியோ அது நிறைவேறணும். நீ தைரியமானவள். எதையும் ஏத்துக்கற மனப்பக்குவம் கொண்டவள். இந்தப் பிரிவையும் நீ ஏத்துக்கத்தான் வேணும். ஒரு வேளை அவர் பார்வையில் பட நேர்ந்திட்டால் என்னாகும்...

    அவள் அமைதியாக இருந்தாள். அப்பா சொன்ன உண்மைகள் மனதில் பதிந்தன. காதல் என்பது பரபரப்போ, ஆர்ப்பாட்டமோ இல்லை. காதல் என்பது அமைதி. தன்னால் தனக்குள் மட்டுமே உணரப்படும் உயிர்மூச்சு. அதை மற்றவர்களுக்குத் தெரியும்படி இனம் காட்டி வர்ணம் பூச முடியுமா... என் காதல் என்னுடையது. அதை என்னுள் புதைத்து விடுதலே எனக்கும், அவருக்கும் நல்லது. இனிமேல் மனதை இப்படித் தளர விடக்கூடாது.

    வீட்டிற்குள் நுழையும் போதே வலி முதலடி எடுத்து உடலுக்குள் நுழைந்துவிட்டது தெரிந்தது. எதிர்பார்த்த வலிதான் என்றாலும், சட்டென பயம் பிறந்தது. எனக்காக தாங்கிக் கொண்ட எத்தனையோ வலிகளைவிட அவன் நினைவாக ஏற்றுக்கொள்ளும் இந்த புது வலியில் ஒரு சுகம் இருக்கிறது. அதை உடனே நீக்கிக் கொள்ள மனதுக்கு விருப்பம் இல்லை. வலி தன் விருப்பம் போல தலையோடு காலாய் இலக்கின்றித் தாக்கியது. அப்படியே அசையாமல் படுத்து, அதை அனுபவிக்கக் கிளம்பினாள்.

    இனியும் சோதனை செய்வது ஆபத்து என்று புரிந்தபோது, நள்ளிரவு அம்மாவை எழுப்பினாள். அம்மா பதறிப் போனாள். அப்பா துடித்துவிட்டார். பக்கத்து நகரத்தின் மருத்துவமனைக்குக் காரைப் பறக்க விட்டார்.

    காரில் போகும்போது வலி மேலும் மேலும் அதிகமாகி, உயிரைச் சுண்டின போது கண்ணை மூடிக் கொண்டாள். காதருகில் அவன் குரல் அன்பைக் குழைத்துப் பேசியது.

    ரொம்ப வலிக்கிறதாம்மா... என் கண்ணே... நான் பக்கத்திலேயே இருக்கேனே... பயப்படாதே தலை முடியை விரல்களால் கோதிவிட்டு உச்சந்தலையில் மென்மையாக முத்தமிடுவது போலத் தோன்றியது. அந்த நினைவை அப்படியே நெஞ்சில் நிறைத்துக் கொண்டாள்.

    மருத்துவமனையில் படுக்க வைக்கப்பட்ட போதுகூட சிறு முணுகலையும் காட்டவில்லை. உதட்டை உள்புறமாய் கடித்தபடி அத்தனை வலியையும் விழுங்கினாள் பெரிய பெரிய மூச்சுகளாய் வெளியிட்டாள். மூச்சிரைக்க உடல் துடித்துத் துடித்து வலியில் அடங்கினாள். வேதனையைப் பொறுக்க முடியாமல் அவள் அல்லாடுவதைக் கண்டு அம்மாவும், மருத்துவரும் வாய்விட்டுக் கத்தி வலியைத் தவிர்க்கச் சொல்லிக் கெஞ்சினார்கள். புன்சிரிப்பும், கண்ணில் பொங்கும் வெள்ளமுமாய் ‘முடியாது’ என தலையசைத்து மறுத்துவிட்டாள்.

    மற்றவர்களுடையது போலவா எங்கள் காதல் அது சிரஞ்சீவியல்லவா... நாங்கள் இருவரும் மனம் ஒப்பி ஒருவரில் மற்றவர் இயைந்து உயிரோடு உயிராய் இணைந்து பெற்ற பெரும் தெய்வீக நிலையின் பயனல்லவா இது. வாய்விட்டுக் கத்தி இந்த உள்ளத்தைக் கொச்சைப்படுத்த மாட்டேன். என்னவரை அவமானப்படுத்த மாட்டேன். இதைப் பொறுமையாகத் தாங்கி அவரைப் பெருமைப்படுத்துவதுதான் எங்கள் காதலுக்கு நான் தரும் மரியாதை.

    இரண்டு மணி நேரப்போராட்டம். நிலவு அருகில் மின்னும் நட்சத்திரத்துணுக்குப் போல தன்னருகில் மிளிரும் உயிர்ப் பூவை உற்றுப் பார்த்தாள். யாரை உயிரின் உணர்வாய் தீட்டியிருக்கிறாளோ அவனே பக்கத்தில் படுத்திருப்பது போல இருந்தது. அதே சுருள்முடி. கருமையான இமை முடி. நீளம் கம்மியான விரல்கள். கோடு போட்டது போல புருவம், மின்னும் தேன் நிற விழிகள்.

    பிறந்ததும் சின்ன தும்மல் போட்டதோடு அழுது புரளாமல் கையை நீட்டி, விழிகளை முணுக் முணுக்கெனத் திறந்து பார்க்கையில் நெஞ்சில் பெருமிதம் விம்மியது. இப்போது பவள மல்லிகைப் பூவின் இரகசியம் புரிந்தது. வெப்பமான ஆரஞ்சு நிற ஆண்மையும், தண்மையான வெண்ணிற பெண்மையும் ஒன்றான சுகத்தில்தான் புது உயிரான வாசம் பிறந்திருக்கிறது.

    அம்மா ஆகறது இத்தனை சுகமானதாக, கர்வமானதாக இருக்குமா? மகளாக, காதலியாக, மனைவியாக இருந்து பெறாத பெருமையை இந்த அம்மா என்னும் உறவு தந்திருக்கிறதே... மெய்க் காதலின் உண்மை வடிவ வெளிப்பாடு இந்த புத்தம் புது உயிர். ஒன்றும் ஒன்றும் சேர்ந்து மீண்டும் ஒன்றாகவே விடை கிடைத்த விந்தை காதலில் அன்றி வேறு எதில் தோன்றும்! இந்தத் தாய்மையை எனக்குத் தந்த என்னுயிர் காதலனே. உனக்கு என் வணக்கங்கள். உன் கருணைக்கு என் நன்றிகள்.

    வெளியே ஓடிவந்து, என் மகனை எல்லாரும் பார்க்க வாருங்கள் என்று கத்த வேண்டும் போல குதூகலம் கொப்பளித்தது. சன்னல்புறமாக விழிகளைத் தள்ளினாள். விடியலின் முதல் கதிரின் ஒளி கண்ணைத் தழுவியது. அவன் புன்சிரிப்பைப் போல அது மனதை மயக்கியது.

    ‘உங்கள் ஆசைப்படியே பையனே பிறந்திருக்கான். இந்த தெய்வீகப் புதையலைப் பார்க்க நீங்கள் பக்கத்திலே இல்லையே. இந்த உயிர்ப் பூ உருவாக்கக் காரணமான நீங்கள் எங்கோ தூரத்தில் இருக்கீங்களே... ஒரு கணம் வந்து எங்களைப் பார்க்க மாட்டீர்களா...’ மனம் புலம்பியது.

    கனவில் மட்டுமே அந்த அன்புப் பரிமாறல் நடக்கும் என்ற உண்மை மனதைப் புண்ணாக்கியது. ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டாள். செந்தாழம்பூவாக இருந்த மகனின் முகத்தில் அவன் முத்தம் பதித்து சிலிர்ப்பது போல கனவு விரிந்தது.

    அம்மாவின் காலடியோசை கேட்டது. அப்பாவின் குரல் குதூகலித்தது. இருவருமாகக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கொஞ்சுவது தெரிந்தது.

    மனதுள் ஏற்பட்ட வேதனை கண்ணில் வடிந்தது. நீராய் இறங்கியது. போகும் திசை தெரியாமல் நிதானித்து மளமளவென வழிந்து இருபுறமும் தலையணையை நனைத்தது.

    2

    "என்னங்க... இன்னிக்கு சாயங்காலம் சீக்கிரமா வந்திடுங்க... ராணி வீட்டில் விருந்து இருக்கு..."

    காலையில் எழுந்து கொண்டதில் இருந்து சொல்லிக் கொண்டிருந்த மயூரி, காரில் ஏறுமுன் நூறு தடவையாவது நினைவூட்டியிருப்பாள். ஆனால் கணக்குத் தணிக்கையாளர் வந்துவிட்டதால், மதியம் சாப்பிடக்கூட முடியாமல் தலைக்கு மேல் வேலை.

    ஒரு வழியாக வேலை முடிந்ததும் நிமிர்ந்து கைசொடுக்குப் போட்டு சோம்பல் முறித்த போது மணி ஒன்பது. அலுப்பாக இருந்தது. அதுவரை உடன் இருந்த மேலாளரையும், கணக்கரையும் அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டு, அவன் வீட்டிற்குள் நுழையும் போது மணி பத்து.

    அவன் வரும் வரை வழக்கமாகக் கூடத்தில் படித்துக் கொண்டோ, வீடியோவில் படம் பார்த்துக்கொண்டே இருக்கும் மயூரியைக் காணவில்லை. அவன் தன் அறைக்குள் சென்று உடைமாற்றிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்.

    வானத்து நிலவு தடுமாறித் தரையில் விழுந்து குப்புறக் கவிழ்ந்து கிடப்பது போல மயூரி படுத்துக் கிடந்தாள். கழற்றி எறிந்திருந்த பட்டுச் சேலை ஒரு மூலையில் வாலாய் நீண்டு காற்றில் படபடத்தது. வைர நகைகள் இருட்டில் ஒப்பனை மேசை மீது வெளிச்சக் குவியலாய் முணு முணுத்துக் கொண்டிருந்தன. விளக்கைத் தட்டினான். அவள் ஆங்காரமாகத் திரும்பினாள்.

    எத்தனைதரம் காலையில் விருந்துக்கு போகணும்னு நினைவூட்டினேன். சீக்கிரமே வரமுடியலேன்னா ஒரு போனாவது பண்ணியிருக்கக் கூடாது. ஏழு மணியிலேயிருந்து கிளம்பிக் காத்திருந்து... என் நினைப்பு இருந்தால் தானே... இது வீடா... இல்லை நரகம்! என்னை உயிரோடு சாகடிக்கற நரகம்! இப்படியே பண்ணிக்கிட்டிருங்க... மனவேதனை தாங்காமல் ஒரு நாளைக்கு ஒரேடியா ஒழிஞ்சிடறேன். அன்னிக்காவது சீக்கிரம் வருவீங்களா. இல்லை வேலை இருக்குன்னு மறந்திடுவீங்களா... விம்மலும், விக்கலுமாகக் கத்துபவளை சமாதானம் செய்ய முடியாது என்று புரிந்தவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். பிறகு

    "சீக்கிரம் வராதது தப்புதான். அதுக்காக ஏன் இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசறே... நம்ம கம்பெனின்னு நானே வேலைய ஒதுக்கிட்டு வந்தால் மத்தவங்க என்ன பண்ணுவாங்க.. உம்... நீ

    Enjoying the preview?
    Page 1 of 1