Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கானலைத் தேடும் காவிரி
கானலைத் தேடும் காவிரி
கானலைத் தேடும் காவிரி
Ebook93 pages32 minutes

கானலைத் தேடும் காவிரி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த எக்ஸ்பிரஸ்.
 பொழுது நன்றாக விடிந்துவிட்டது.
 பார்வதி சன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 முகம் முழுவதும் வண்ணமயமான கனவுகள்.
 லேசாய் தலை கலைந்திருந்தது.
 அந்தப் பெட்டியில் மகளிர் மட்டும் இருந்தனர். அவர்கள் சன்னலோரம் அமர்ந்திருந்த பார்வதியை விழிகளால் அடிக்கடி தொட்டனர்.
 'தன்னந்தனியாய் ' ஒரு அழகான இளம் பெண் அணிந்திருந்த பாவாடையும், தாவணியும் உலகமறியாத வயது என்பதை ஆணித்தரமாய் உணர்த்தியது.


 தனியாய் இந்த பெண் எங்கே போகிறாள்?
 எல்லாருடைய மனதிலுமே இந்தக் கேள்வி எழுந்தது.
 ஒரு வயதான பெண்மணி துணிந்து கேட்டாள்.
 'பாப்பா...'
 காற்றில் பறந்த முன் உச்சி மயிரை ஒதுக்கியவாறே திரும்பினாள் பார்வதி.
 'என்ன?' என்றாள்.
 'எங்கே போறே?'
 'எங்கப் போனா இவளுக்கென்ன?' என எண்ணியவள் சிரித்தபடி சொன்னாள்

மெட்ராஸுக்கு.'
 'தனியா வா' அடுத்தவள் அதிக அக்கறையில் கேட்டாள்.
 'தனியாகத்தான்.'
 'மெட்ராஸ்ல யார் இருக்கா?'
 முதல் கேள்வியைக் கேட்டவளே மூன்றாவது கேள்வியையும் கேட்டாள்.
 'என் சொந்த ஊர் மெட்ராஸ்தான். என் பாட்டி வீட்டுக்கு வந்தேன். இப்ப ஊருக்கு போறேன்.' கூசாமல் பொய் பேசினாள்.
 'மெட்ராஸ்ல எங்க வீடு?'
 'மாம்பலத்தில் இருக்கோம்.'
 'ம்...' என்றவள் சிறிது நேரம் கழித்துக் கேட்டாள்.
 'படிக்கிறீயா?'
 'படிச்சு முடிச்சுட்டேன். எம்.எஸ்.ஸி.'
 பி.ஏ. இரண்டாமாண்டு பரீட்சைக் கூட எழுதாமல் வந்தவள்.
 நன்றாய்ப் புளுகினாள்.
 ''வேலைக்குப்போறதுதானே.''
 ''போகணும் இனிமேதான்'' என்று பேச்சை முறித்துக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவள் விடுவதாக இல்லை.
 'அப்பா என்ன வேலை செய்யறார்?'
 பார்வதிக்கு எரிச்சலாக இருந்தது.
 'கிழட்டு சனியன்கள். ஏன் இப்படி உயிரை வாங்குகிறது.'அப்பா..இண்டியன் பேங்க்ல மானேஜராயிருக்கார்.'
 அவளின் தந்தை பாண்டித்துரைக்கு விவசாயத்தை விட்டால் ஒன்றும் தெரியாது.
 நாகமணி நினைத்ததைப் போல் அவள் விக்னேஷுடன் ஓடிவரவில்லை. தனியாக வந்திருக்கிறாள்.
 அவள் ஓடிவந்ததன் நோக்கம்?
 அதற்குக் காரணம் சினிமா டைரக்டர் சூரியன் தான். அவள் பயிலும் கல்லூரியின் இந்த ஆண்டு - ஆண்டு விழாவிற்கு வருகை தந்ததன் விளைவு.
 அந்த விழாவில் பார்வதி நடனமாடினாள்.
 நடன உடையில் அலங்காரமாய் அவளைப் பார்த்த ஒவ்வொருவருமே அப்படியே சொக்கிப்போக கேட்கவா வேண்டும்.
 ஒரு சினிமா டைரக்டரின் மனநிலைமை?
 அவள் பத்து நிமிடங்கள் ஆடி முடிப்பதற்குள் இவர் தன் மன காமிராவில் ஒரு படமே எடுத்து முடித்துவிட்டார்.
 அவள் ஆடிய நடனத்தைப் பற்றி பிரமாதமாக பாராட்டி பேசியது தேவைக்கு அதிகமாகவே இருந்தது.
 விழா முடிந்தபோது அவளை தனியே அழைத்தார். 'உன் நடனம் ரொம்ப சூப்பர்.'
 அவரின் கண்களில் தெரிந்தது ஒரு ஈர்ப்பு சக்தி

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223976486
கானலைத் தேடும் காவிரி

Read more from R.Sumathi

Related to கானலைத் தேடும் காவிரி

Related ebooks

Related categories

Reviews for கானலைத் தேடும் காவிரி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கானலைத் தேடும் காவிரி - R.Sumathi

    1

    கூட்டுக்குள்ளிருக்கும் குருவிகள் கூர் மூக்கால் தன் குஞ்சுகளை சிலுப்பிவிட்டதும் குஞ்சுகள் விழித்துக் கொண்டு சப்தமிடத் தொடங்கின.

    சிறகால் அணைத்து குஞ்சுகளின் ‘சப்தத்தை அடக்கிவிட்டு தாய்ப் பறவைகள்

    சிறகடித்து கூட்டை விட்டுப் பறந்தன.

    இன்னும் பொழுது விடியவில்லை.

    ஆனால் இந்தப் பறவைகள் இருட்டைக் கிழித்துக் கொண்டு பறந்தன.

    மார்கழி பிறக்க இன்னும் சில நாட்களே இருப்பதால் லேசாய் குளிர்ந்தது.

    மனதுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களைப் போல் மனிதர்கள் போர்வைக்குள் புதைந்து கிடந்தனர்.

    பட்டிக்குள்ளிருக்கும் ஆடுகள் கோரஸாய் கத்தின. கூடவே கோழிகளும் சேர்ந்திசை பாடின.

    இடையிடையே இந்த இசையில் மாடுகளும் குரல் கொடுத்தன.

    இந்த சத்தங்களை மீறி தூங்கிவிட முடியுமா?

    நாகமணி புரண்டு படுத்தாள். தூக்கமும் விழிப்புமாக முனகினாள்.

    ‘பார்வதி.... யேய் பார்வதி எழுந்து சாணி தெளி.’

    பதில் இல்லை.

    அரை விழிப்பில் இருந்தவள் முழு விழிப்பிற்கு வந்தாள்.

    புரண்டு பார்த்தாள். பார்வதி இல்லை. எழுந்தாள்.

    கொல்லைப்பக்கம் போய்விட்டாளா?

    இருட்டில் போக பயப்படுவாளே. இப்பவெல்லாம் ரொம்ப துணிச்சல் வந்துவிட்டதா? என நினைத்தவாறே கொல்லைப் புறக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

    கும்பல் கும்பலாக இருந்த டிசம்பர் செடிகள் இருட்டாகத் தெரிய...

    மலர்ந்தும் மலராத டிசம்பர் பூக்கள் விண்மீன்களைப் போல் பளிச்செனத் தெரிந்தன. மாட்டுத் தொழுவத்திற்கு வந்தபோது பசு ‘அம்மா’ என அன்பாய் அழைத்தது.

    வாஞ்சையுடன் அதன் நெற்றியைத் தடவினாள்.

    கயிற்றை இழுத்துக் கொண்டு வந்து கன்று அவளை உரசி விளையாடியது.

    ‘வர்றேம்மா... வாசல் தெளிச்சிட்டு வர்றேன்’ என்றபடி சாணத்தை எடுத்துக் கொண்டு வந்து ப்ளாஸ்டிக் வாளியில் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்தாள்.

    வாசலுக்கு வந்து தெளிக்கும் போது ஞாபகம் வந்தது.

    ‘பார்வதிக்கு இன்று பரீட்சையல்லவா.’

    மூன்று மணிக்கெல்லாம் எழுப்பி விடாமல் போய் விட்டேனே.’

    என எண்ணியபடி பெருக்கி கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்தாள்.

    கொல்லைக்கு சென்றிருப்பதாக நினைத்த பார்வதி இன்னும் வரவில்லை.

    உள்ளே வந்தவள் ‘பக்’ கென அதிர்ந்தாள். காரணம் அந்த அலமாரி.

    அறைக்குள்ளிருந்த அலமாரி திறந்து கிடந்தது.

    கதவில் சாவி தொங்கிக் கொண்டிருந்தது.

    அவள் தலைமாட்டில் இருந்த சாவி எப்படி இங்கே வந்தது?

    வாளியை நழுவ விட்டுவிட்டு ஓடிவந்து அலமாரியைப் பார்த்தவள் அப்படியே அதிர்ந்தாள்.

    மேல் தட்டில் இருந்த பார்வதியின் உடைகள் பலவற்றைக் காணவில்லை.

    பகீரென்றது அடிவயிறு.

    மயக்கம் வருவதைப் போலிருந்தது.

    அவசர அவசரமாக லாக்கரைத் திறந்தாள். முன் தினம் நெல் விற்ற பணம் ஐயாயிரம் ரூபாயைக் காணவில்லை.

    பார்வதியின் ஆடைகள் இல்லை. பணம் இல்லை.

    பார்வதி எங்கே?

    நினைவு குழம்பியது.

    ‘பார்வதி.... பார்வதி’ என பெற்ற மனம் அடித்துக் கொள்ள-

    அப்பொழுது தான் சட்டென ஞாபகம் வந்தது.

    வாசல் பெருக்கும்போது யதேச்சையாய் எதிர்வீட்டைப் பார்த்தது.

    எதிர்வீட்டில் தொங்கிய பூட்டு.

    அவசர அவசரமாக வெளியே வந்தாள்.

    எதிர் வீட்டைப் பார்த்தாள்.

    பூட்டு தொங்கியது.

    ‘அடப்பாவி விக்னேஷ் ... என் பொண்ணைக் கூட்டிக் கிட்டு ஓடிட்டியா?’

    பயம் படபடப்பாய் உடலை சுற்றிக் கொண்டது.

    ‘ஐய்யோ...! வெளுத்ததெல்லாம் பால்ன்னு நம்பினேனே பாவி...

    அத்தை அத்தைன்னு உரிமை கொண்டாடிக்கிட்டு வீட்டுக்கு வந்தது இதுக்குத் தானா?

    என் பொண்ணுக்கிட்ட வெள்ளை மனசோட பழகுறேன்னு நினைச்சேனே....

    இப்படிப் பண்ணிட்டியேடா,

    ஐய்யோ.. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ஊரே நாறிடுமே.

    நான் என்ன பண்ணுவேன்? மோசம் போயிட்டேன்.

    உள்ளே தூங்கிக்கிட்டிருக்கிற மனுஷனுக்கு என்ன பதில் சொல்லுவேன்?

    பொண்ணு வளர்த்த லட்சணத்தைப் பாருன்னு என் முகத்துல காறி துப்புவாரே.’

    மனம் பதைப் பதைக்க அப்படியே சரிந்து தெரு ஓரத்து சுவரில் சாய்ந்தாள்.

    ‘அடப்பாவி...! என் பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடறதுக்குன்னே சென்னையிலிருந்து வந்தியா.’

    அழுகை முட்டி மோதிக் கொண்டு வந்தது.

    பார்வதி –

    நாகமணி, பாண்டித்துரையின் ஒரே மகள்.

    பக்கத்து டவுனில் உள்ள கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிப்பவள். பூந்தாழை கிராமத்தின் கிளியோபாட்ரா இவள்தான்.

    நெடு நெடுவென வளர்ந்த தேகம். போதுமான அளவு சதைபூசிக் கொண்டு வண்ண ஓவியமாய் வளைய வருவாள்.

    கைக்குள் அடங்காத கேசம். முக வடிவு பார்க்கப் பார்க்க மயக்கும் அழகுப் பெட்டகம். பார்த்தவுடனேயே எந்த ஆடவனையும் கிறங்கடிக்கும் தோற்றம்.

    முதலில் அவளை கல்லூரிக்கு அனுப்பவே நாகமணிக்கு பயம்தான். ஆனால் பாண்டித்துரைதான் பெண்ணை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டு வலுக்கட்டாயமாக கல்லூரியில் சேர்த்தார்.

    ஒரே மகள் என்பதனால் கேட்டதெல்லாம் வாங்கித் தந்து வளர்த்த விதத்தினால் இப்படியானதா?

    படிக்க வேண்டிய வயதில்....?

    விக்னேஷ் எதிர்வீட்டுக்காரன். ஐந்து வருடத்திற்கு முன்பே சென்னையில்

    Enjoying the preview?
    Page 1 of 1