Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கனவிலே வந்து நில்லடி!
கனவிலே வந்து நில்லடி!
கனவிலே வந்து நில்லடி!
Ebook172 pages44 minutes

கனவிலே வந்து நில்லடி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தானம் உற்சாகமாக உள்ளே  நுழைந்தார்.
 "ராணி... ராணிம்மா..." அவருடைய குரலில் சந்தோஷம் அலை பாய்ந்தது.
 ராணியின் அறைக்குள்  நுழைந்தார். அங்கே ராணி இல்லை. ஜான்சியும் இந்திராவும் தான் விரித்து வைத்த புத்தகங்களுக்கு எதிரே அமர்ந்திருந்தனர்.
 "ஏய்... ராணி எங்கே?" கேட்டுக் கொண்டே அவர்களின் எதிரே மேஜை மீது இருந்த எவர்சில்வர் டப்பாவை எடுத்தார். "அக்கா மாடியில இருக்கா."
 "அப்படியா? இதென்ன பாயாசமா?" என திறந்து பார்த்துவிட்டு உற்சாகமாக கூவினார்.
 "பால் பாயாசம்! அம்மா, ராணி நிறைய மார்க் வாங்கியிருக்கான்னு செய்தாளா?" கேட்டவாறே வாயில் ஊற்றி சுவைக்கத் தொடங்கினார். மாலை நேர வயிற்றுப் பசி. கூடவே அதன் ருசியில் அவர் மொத்தத்தையும் காலி செய்துவிட்டார்.
 "அப்பா... எனக்கு கொஞ்சம்...!" இந்திரா சிணுங்கினாள்.
 "டேய்... அம்மாகிட்ட போய்க் கேளுடா!" மகளின் தலையைத் தட்டினார்.
 "அம்மா செய்தாதானே கேட்கறதுக்கு" ஜான்சி முகம் சுளித்தாள்.
 "அம்மா செய்யலையா? ராணி இவ்வளவு மார்க் வாங்கியிருக்கா! அம்மா வீட்ல ஒரு ஸ்வீட் கூட செய்யலையா?"ம்க்கும்! அம்மா செய்த தெல்லாம் ராணியக்காவை போட்டு திட்டினதுதான். பாவம் ராணியக்கா அழுஅழுன்னு அழுதுக்கிட்டு இருக்கு."
 "அம்மா திட்டினாளா? எதுக்கு திட்டினா?"
 "சுபாவை விட ராணியக்கா பத்து மார்க் கம்மியா வாங்கிட்டாளாம். அதுக்காக 'அவ முன்னாடி நீ கேவலப்பட்டுப் போய்ட்டே' அப்படி இப்படின்னு அக்காவை பயங்கரமா திட்டினாங்க. பாவம் ராணியக்கா. ரொம்ப அழுதுட்டு..."
 "ஆரம்பிச்சுட்டாளா உங்கம்மா! என்னைக்குத்தான் திருந்த போறாளோ? மத்தவங்களோட கம்பேர் பண்றதே அவளுக்கு வேலையா போயிடுச்சு. குழந்தையை பாராட்டறதை விட்டுட்டு திட்டி கொட்டியிருக்காளா?"
 சற்றுமுன் இருந்த உற்சாகம் அனைத்தும் அவரிடமிருந்து உதறிக் கொண்டது.
 அவசரமாக மாடிக்கு வந்தார்.
 அங்கே பால்கனி சுவரில் கையை ஊன்றி தலை கவிழ்ந்து சோகமாக அமர்ந்திருந்தாள் ராணி.
 அருகே சென்று அவளுடைய தோளைத் தொட்டார்.
 திரும்பிய அவளுடைய முகம் சிவந்து வீங்கி கண்களிரண்டும் கலங்கி...
 "அப்பா..." சட்டென்று தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
 "என்னடா... என்னடாயிது? பார்டர்ல பாஸ் பண்ணின பசங்கள்லாம் கூட வெளியில ஜாலியா ஸ்வீட்டும் கையுமா சுத்தறாங்க. ஆனா... நீ... இவ்வளவு மார்க் வாங்கிட்டு இப்படி அழுதுக்கிட்டு இருக்கே. அம்மாவைப்பத்தித்தான் உனக்குத் தெரியுமே. அவ சுபாவமே அப்படித்தான். விடு..."
 மகளை தோளோடணைத்து ஆறுதல் படுத்தினார்.
 "ஏன் இப்படி தனியா உட்கார்நதிருக்கே? யார் எதை சொன்னாலும் நம்மோட மனசுக்கு நல்லதா படலைன்னா அதை உதற கத்துக்கணும். அது அம்மாவாயிருந்தாலும் சரி. அப்பாவாயிருந்தாலும் சரி. உன்னோட மார்க் உனக்கு திருப்தியாயிருக்குல்ல..?ம்..." என்றாள்.
 "அப்பறம் எதுக்கு அழுதுக்கிட்டு. உன்னோட மார்க்கை இன்டர்நெட்ல பார்த்துட்டு என் மனசு நிறைஞ்சிருக்கு. தவிர ஒரு மனுஷனோட திறமையை நிர்ணயிக்கறது அவன் வாங்கற மார்க் மட்டும் கிடையாது. வா..." அவளை கீழே அழைத்து வந்தார். "இந்திரா... ஜான்சி ரெண்டுபேரும் அக்காகூட கிளம்புங்க. எல்லாரும் வெளியே போய்ட்டு வருவோம். அக்கா சார்பா உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணுமோ எல்லாம் வாங்கித்தர்றேன். கிளம்புங்க.. கிளம்புங்க."
 "ஹைய்யா..." இந்திராவும் ஜான்சியும் உற்சாகமாக கத்தினர். 
 ஆனால்...
 இந்திரா மட்டும் கத்துவதை சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.
 "அப்பா... அம்மா படிக்கலைன்னா அடிப்பாங்களே..."
 "இன்னைக்கு ஒருநாள் தானே! அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். கிளம்பு..."
 அப்பா கொடுத்த தைரியத்தில் இந்திரா புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தாள்.
 கூடத்திற்கு வந்த சந்தானம் "மேகலை... மணிமேகலை..." 
 குரல் கொடுத்தவாறே மனைவியைத் தேடினார்.
 காணவில்லை.
 சமையலறை, பூஜை அறை எனத் தேடியவர் பின்னால் வந்தார்.
 அங்கே - 
 ஒரு புத்தகத்தை விரித்து வைத்தபடி படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் மணிமேகலை.
 "மணிமேகலை..."
 "ம்..." என்றாள்அவளுக்கு பக்கத்தில் அமர்ந்தவர் "என்ன புதுசா ஏதாவது கோர்ஸ்ல சேர்ந்திருக்கியா? புத்தகமும் கையுமா உட்கார்ந்திருக்கே?" என்றார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223206187
கனவிலே வந்து நில்லடி!

Read more from R.Sumathi

Related to கனவிலே வந்து நில்லடி!

Related ebooks

Related categories

Reviews for கனவிலே வந்து நில்லடி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கனவிலே வந்து நில்லடி! - R.Sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    "உன்னையெல்லாம் பெத்ததுக்கு ஒரு கருங்கல்லை பெத்து போட்டிருக்கலாம். படிச்சு படிச்சு சொன்னேன். புத்தியில ஏறினாத் தானே. வெட்கமாயில்லை? என் முன்னாடி நிக்காதே. என்னை அவமானப்படுத்திட்டேயில்லை? என்னை தலைகுனிய வச்சுட்டேயில்லை? அந்த கோகிலா என்னைப் பார்த்து சிரிக்கும்படி செய்திட்டேயில்லை? இனிமே உன் விஷயத்துல தலையிட்டேனா பாரு. எக்கேடாவது கெட்டுப்போ."

    கூடத்தில் மணிமேகலை கத்துவது அந்த வீட்டையே கிடுகிடுக்க வைத்தது.

    அவளுக்கு எதிரே ராணி தலைகுனிந்தபடி நின்றிருந்தாள்.

    கண்கள் சிவந்து ததும்பிக் கொண்டிருந்தது.

    ஜன்னல் வழியாக மேஜைக்கு இருபுறமும் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஜான்சியும், இந்திராவும் விழிகளில் மிரட்சி தெரிய பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அம்மாவின் முகத்தை பார்க்கவே பயமாயிருந்தது.

    "உனக்கு ராணின்னு ஏன் பெயர் வச்சேன் தெரியுமா? நீ ராணிமாதிரி இருக்கணும். மத்தவங்களுக்கு தலைவியா இருக்கணும். எல்லாத்திலேயும் சிறந்தவளாயிருக்கணும்னு கனவு கண்டேன். அந்த கனவை ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஞாபகப்படுத்திக்கிட்டேயிருந்தேன். ஆனா... ஆனா நீ இப்படி மார்க் வாங்கியிருக்கே...

    அந்த கோகிலா யாரு? என்னை மாதிரி படிச்சவளா? என்ன தெரியும் அவளுக்கு? தன் பொண்ணு என்ன படிக்கிறாள்னு கூட அவளுக்குத் தெரியாது. ஆனா... நான் ஒவ்வொரு எழுத்தையும் உனக்கு கத்து கொடுத்தவள். ராவும் பகலும் கண்ணுல தூக்கம் இழந்து உன் பக்கத்துல இருந்து ஒவ்வொண்ணையும் சொல்லிக் கொடுத்தவள். பொம்பளைப் பிள்ளைதானேன்னு என்னைக்காவது உங்களை அலட்சியப்படுத்தியிருக்கேனா? ஒரு வார்த்தை இளக்காரமா பேசியிருக்கேனா? ஆண் பிள்ளைகளுக்கு மேல வரணும்னு தானே லட்சியத்தோட வளர்த்தேன். பொம்பளை பிள்ளைக்கிட்டே தோத்துட்டு வந்து நிக்கறியே. பத்து மார்க். பத்தே மார்க். எப்படி உன்ன விட அவ கூட வாங்கினா? அதை உன்னால வாங்க முடியாதா? அவ மட்டும் ஸ்பெஷலா என்ன படிச்சுட்டா? எங்கே கோட்டைவிட்டே?"

    விழிகளை உருட்டி மிரட்டினாள் மணிமேகலை.

    ராணியின் கன்னங்களில் கண்ணீர் உருண்டது. விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள்.

    அந்த கோகிலா என்னை இனிமே எவ்வளவு அலட்சியமா பேசுவா தெரியுமா? திங்கறதிலேர்ந்து சினிமா நடிகை மாதிரி மினுக்கிக்கற வரைக்கும் என்ன குறை வச்சேன்? இதுதான் பெத்தவளுக்கு பதிலுக்கு காட்டின பெருமையா? போடி.. போ... என் முன்னால நிக்காதே. மூத்தவ நீ முதன்மையா இருந்தாத்தான் அடுத்ததுங்களும் அதேமாதிரி வரும். நீயே இப்படி இருந்தா அதுங்க இன்னும் லட்சணத்துல இருக்கும். எல்லாம் சோம்பேறித்தனம். திமிரு... போடி... போய் உங்கப்பாவை மாப்பிள்ளை பார்க்க சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்த் தொலை.

    மணிமேகலை வெந்நீரை வார்த்தைகளில் கலந்து ராணியின் நெஞ்ச பாத்திரத்தில் ஊற்றிவிட்டு சென்றாள்.

    அம்மா உபயோகித்த அந்த கடைசி வார்த்தைகள்தான் ராணியை அதிகமாக பாதித்தன.

    ஓவென அழுதாள். குலுங்கி குலுங்கி அழுதாள்.

    பக்கத்து அறைக்குள் ஓடினாள்.

    படுக்கையில் குப்புற விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

    ஜான்சிக்கும் இந்திராவுக்கும் ராணியை பார்க்க பாவமாக இருந்தது. அவர்களுடைய கள்ளமற்ற விழிகள் கலங்கின. ஜன்னல் வழியாக இருவரும் அம்மா இருக்கிறாளா என பயப்பார்வை பார்த்தனர். மணிமேகலை சமையலறையில் பாத்திரங்களை ‘டங் டங்’ என்ற ஓசையுடன் கையாண்டு கொண்டிருந்தாள்.

    அந்த ஓசை அவளுடைய ஆத்திரத்தை உணர்த்தியது.

    இருவரும் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து அக்காவிடம் ஓடினர்.

    ஜான்சி ஒன்பதாம் வகுப்பும், இந்திரா ஐந்தாம் வகுப்பும் படிக்கின்றனர். அக்கா... இருவரும் சேர்ந்து அழைத்தனர். இருவரின் குரலும் உடைந்திருந்தது.

    அக்கா... அழாதக்கா. அழாத ப்ளீஸ்... இருவரும் சொல்லிக் கொண்டே அழுதனர்.

    ராணி அவர்களுடைய கைகளைத் தள்ளிவிட்டாள்.

    முகத்தை தலையணையில் மீண்டும் புதைத்துக் கொண்டு அழுதாள்.

    இந்திராவும் ஜான்சியும் தங்கள் முயற்சியில் தோற்றவர்களாக மேஜைக்கு திரும்பினர்.

    ச்சை! இந்த அம்மா ரொம்ப மோசம். அக்கா நல்ல மார்க்தானே வாங்கியிருக்கு. அந்த சுபாவைவிட பத்துமார்க் குறைஞ்சுட்டுன்னு இப்படி திட்டறாங்க. இதுக்கே இப்படி திட்டறாங்க. சிலபேரை மாதிரி ஃபெயிலாகியிருந்தா... கொலையே பண்ணி குழிதோண்டி புதைச்சிடுவாங்க.

    ஜான்சி முணுமுணுத்தாள்.

    சின்னக்கா... ராணியக்கா நல்லா படிச்சு மார்க் வாங்கும்போதே அம்மா இப்படி திட்டறாங்களே... எனக்கோ கணக்கு ரொம்ப வீக்காயிருக்கு. அதை நினைச்சாத்தான் பயமாயிருக்கு. இந்த கணக்கை பாரேன். வரவே மாட்டேங்குது. எனக்கு சொல்லித்தரியா? இந்திரா ராணிக்கு கிடைத்த டோஸில் தனக்கு வராத கணக்கைப் பற்றி மிகவும் கவலை கொள்ள ஆரம்பித்தாள்.

    ப்ச்! அப்பறம் சொல்லித்தர்றேன். மனசே சரியில்லை! ராணி அழுவதால் வேதனையடைந்த ஜான்சி வருத்தத்துடன் இருந்தாள். அம்மா கூடத்திற்கு வரும் காலடி ஓசை கேட்டது. இருவரும் சட்டென்று படிப்பதைப் போல் பாவனை செய்தனர்.

    வீடு நிசப்தமாயிருந்தது. ராணி விசும்பும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

    ஜான்சிக்கு அம்மாவை நினைத்தால் எரிச்சல் வந்தது.

    இன்று ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துவிட்டது. ராணி ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள்.

    நல்ல மதிப்பெண்தான். சந்தோஷத்தை தரக்கூடிய மதிப்பெண்தான்.

    ஆனால் மணிமேகலைக்கு சந்தோஷம் இல்லை.

    காரணம் -

    அவளுடைய ஓரகத்தியான கோகிலாவின் மகள் சுபா இவளைவிட பத்தே பத்து மார்க்தான் அதிகம் வாங்கியிருக்கிறாள். அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை மணிமேகலையால். இன்றைக்கு என்றில்லை. ஆரம்பத்திலிருந்தே மணிமேகலை இப்படித்தான். எல்லாவற்றிலும் தன் மகள் ராணிதான் முதலில் வரவேண்டும் என நினைப்பாள்.

    படிப்பாகட்டும், விளையாட்டாகட்டும். எதிலும் தன் பிள்ளைகள் தான் முதன்மையில் இருக்க வேண்டும் என்ற வெறி உண்டு. கோகிலா இவளுடைய கணவனின் அண்ணனுக்கு மனைவியாக வந்தவள். படிப்பறிவு குறைந்தவள். நான்காவதோ ஐந்தாவதோதான் படித்தவள்.

    ஆனால் மணிமேகலை டீச்சர் ட்ரெயினிங் முடித்துவிட்டு செகண்ட் கிரேடு டீச்சராக பணியாற்றுபவள். படிக்காத கோகிலா வீட்டிற்கு மூத்தமருமகளாகயிருந்தாலும் மணிமேகலை கோகிலாவை மட்டமாகவே நினைப்பாள். படித்து வேலை பார்க்கும் தன்னை உசத்தியாக நினைத்துக் கொள்வாள்.

    படிப்பு விஷயத்தில் ஒரு முறை கணவன் ஏதோ மட்டம் தட்டிவிட்டான் என்பதற்காக அஞ்சல் வழியில் பி.ஏ படித்து பிறகு எம்.ஏ.வும் படித்து பட்டம் வாங்கிவிட்டாள்.

    இப்போது வேலை பார்த்த பள்ளியிலேயே தலைமையாசிரியர்

    Enjoying the preview?
    Page 1 of 1