Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பேசும் பொற்சித்திரமே..!
பேசும் பொற்சித்திரமே..!
பேசும் பொற்சித்திரமே..!
Ebook165 pages58 minutes

பேசும் பொற்சித்திரமே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விண்ணரசி வீட்டிற்கு வந்தபோது சுவாதி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தங்கையைக் கண்டதும் கோலத்தை அவசர அவசரமாக போட்டாள். விண்ணரசி வாசலைத் தொட்டதும், - இவள் கோலத்தை முடித்திருந்தாள். தங்கையுடன் சேர்ந்து கொண்டு பேசியவாறே உள்ளே வந்த சுவாதி விண்ணரசியின் மார்போடு சாய்ந்திருந்த புத்தகங்களுடன் ஒரு பாலிதீன் பை இருந்ததைப் பார்த்தாள்.
 "விண்ணரசி... இது என்ன பை?" என்றாள்.
 களைப்புடன் சோபாவில் அமர்ந்தாள் விண்ணரசி. பேருந்து அவளை நசுக்கித் துப்பியிருந்தது. யார் யாருடைய வியர்வை நாற்றமெல்லாமோ இவள் மேல் அடித்தது. குளிக்க வேண்டும் போலிருந்தது. அக்கா பையைப் பற்றி கேட்டதும் அதை எடுத்து அவளுடைய கையில் கொடுத்தாள்.
 "நல்லாயிருக்கா பாரேன்" என்றாள்.
 பையிலிருந்து அந்தப் புடவையை வெளியே எடுத்த சுவாதியின் விழிகள் வியப்பில் விரிந்தது.
 "விண்ணரசி ரொம்ப அழகாயிருக்கு ஏதுடி? வாங்கினியா?" என்றாள்.
 "நான் என்ன சம்பாதிக்கிறேனா வாங்கறதுக்கு?" என்று சிரித்தாள் விண்ணரசி.
 "பின்னே ஏதுடி?" புடவையைப் பிரித்து ரசித்தவாறே கேட்டாள் சுவாதி.
 "ரமாவோட மாமா சிங்கப்பூர்லேர்ந்து வந்திருக்காராம். அவர் கொண்டு வந்த புடவைகள்ல எனக்கொண்ணு கொடுத்தா" என்றாள்.
 "ரொம்ப அழகாயிருக்குடி நான் எடுத்துக்கட்டா?" என்றாள் சுவாதி.
 விண்ணரசி நிமிர்ந்து அக்காவின் முகத்தைப் பார்த்தாள்.அந்த முகத்தில் தெரிந்த கள்ளம் கபடமில்லாத குழந்தைத்தனமான சிரிப்பு ஆசைப்பட்ட பொருளை பார்த்தவுடன் வாங்கத் துடிக்கும் மழலை மனம்.
 ஒரு கணம் அந்த முகம் விண்ணரசியின் மனதில் இனம்புரியாத ஒரு நெகிழ்ச்சியை உண்டுபண்ணியது.
 "எடுத்துக்கக்கா" என்றாள்.
 அதற்குள் உள்ளிருந்து வைதேகி வந்தாள். வைதேகி, சுவாதி, விண்ணரசி இருவரையும் பெற்றவள்.
 "விண்ணரசி வந்துட்டியா? போய் முகம் கழுவிட்டு வா காபி டிபன் சாப்பிடலாம்" என்றாள் வைதேகி.
 விண்ணரசி எழுந்தாள்.
 வைதேகி, சுவாதியின் கையிலிருந்த புடவையைப் பார்த்தாள்.
 "ஏதுடி இது?" என்றாள்.
 "விண்ணரசியோட சிநேகிதி ரமாவோட, மாமா சிங்கப்பூர்லயிருந்து வந்திருக்காராம். அவர் கொண்டு வந்த புடவைகள்ல ரமா இவளுக்கு கொடுத்திருக்கா. அதை நான் வாங்கிட்டேன்" என்றாள் சுவாதி.
 அம்மா மகளைக் கடிந்து கொண்டாள்.
 "ரமா தன்னோட ஃபிரண்டுக்குன்னு கொடுத்திருப்பா. அதையேன் நீ வாங்கிக்கிட்டே?" என்றாள். முகம் கழுவச் சென்ற விண்ணரசி திரும்பினாள். "என்னம்மா நீ? அக்கா ஆசைப்பட்டுக் கேட்டா கொடுத்தேன். இப்ப என்ன? அதுக்கு ஏன் அவளைத் திட்டறே? ஆசையாயிருந்தா ஒரு நாளைக்குக் கட்டிக்கறேன். யார்க்கிட்ட இருந்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான்."
 விண்ணரசி சொல்லவும் அம்மாவின் மனம் நெகிழ்ந்தது.
 "அவளே எனக்கு கொடுத்துட்டா நீயேன் அவ மனசைக் கலைக்கறே?" என்றாள் சுவாதி.
 அம்மா சுவாதியைப் பார்த்தாள்.
 "கலைச்சா கலையற மனசாடி உன் தங்கச்சிக்கு?" என்றாள்புரிஞ்சுக்கிட்டேயில்லை. போய் அவளுக்கு காபி டிபன் எடுத்து வை" என்றவள், "இந்தப் புடவையை பக்கத்து வீட்டு ராதாகிட்ட காட்டிட்டு வர்றேன்" எனக் கூறிவிட்டு சிறுபிள்ளைபோல் குதித்துக் கொண்டு ஓடினாள். சுவாதியின் மனம் துள்ளியது.
 அவள் துள்ளலுடன் ஓடுவதைப் பார்த்த அம்மாவின் முகம் பூவாய் மலர்ந்தது.
 உள்ளே வந்தாள் அம்மா. சமையலறைக்குள் நுழைந்தாள். அவளுடைய கண்களில் அவளையும் மீறி பொலபொலவென கண்ணீர் கசிந்தது.
 விண்ணரசியை நினைத்ததும் அவளுடைய நெஞ்சம் பெருமையால் விம்மியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223661412
பேசும் பொற்சித்திரமே..!

Read more from R.Sumathi

Related to பேசும் பொற்சித்திரமே..!

Related ebooks

Reviews for பேசும் பொற்சித்திரமே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பேசும் பொற்சித்திரமே..! - R.Sumathi

    1

    "விண்ணரசி... ஏ... விண்ணரசி..."

    மார்பில் அடுக்கிய புத்தகங்களுடன் நடந்து கொண்டிருந்த விண்ணரசி திரும்பினாள்.

    திரும்பிய அவள் முகம் யார் தன்னை அழைத்தது என்ற எதிர்பார்ப்பை ஏந்தியிருந்தது. பின்னால் கும்பல் கும்பலாய் வந்து கொண்டிருந்த மாணவிகளை ஊடுருவியது. ரமாவைத் தேடியது. ரமாவைத் தேடிய அந்த விழிகள் மையெழுதி மயக்குவதைப் போலிருந்தது. தூண்டிலில் சிக்கும் மீன்கள் உண்டு. தூண்டிலைப் போடும் மீன்களாக அவளுடைய கண்கள் இருந்தன. ஓரிடத்தில் நிலையில்லாது அங்கும் இங்கும் ஓடும் முயல் குட்டியின் குதிப்பு இருந்தது. அந்த கருவிழிகளில் அழகைக் காட்டி மயக்கும் விழிகளில் அறிவும் பளிச்சிட்டது. கன்னிப்பருவத்தின் கருவிழிகளில் துருதுருப்பு இருந்தாலும் கல்வியின் சாயலை அந்தத் தையலின் தளிர்விழி காட்டாமல் இல்லை. வீரம் பேசும் புருவங்கள் வில்லாய் அதன் ஓரங்கள் சீர்படுத்தப்பட்டு அழகாய் இருந்தன.

    அழகு காதில், பழகிய தோழியின் பழக்கப்பட்ட குரல் கேட்டதும் அந்த மெழுகுச் சிலையின் தலைதிரும்பி விழிகள் சுற்றுப்புறங்களில் சுற்றி சுழன்று, கல்வி கற்றுப்போக வந்திருந்த கூட்டத்தில் தேடி, ரமாவைக் கண்டு பிடித்தது.

    தோழியைக் கண்டுபிடித்த அடுத்த நொடியிலேயே பவள இதழ் பிளந்து பற்களைக் காட்டி சிரித்தாள் விண்ணரசி, பவள இதழ்களுக்கிடையில் பதிந்திருந்த முத்து கோர்த்த வரிசை சரியாகவேயிருக்க எப்படி ஒரு முத்து எகிறிப் போய் ஏறிக்கொண்டது, அந்த மூக்கில் என யோசனையில் மூழ்க வைத்தது முத்து மூக்குத்தி.

    ரமா சற்று குண்டாக இருந்தாள். ஒரு கொத்து மலர்களிலிருந்து ஒரு மலர் மட்டும் உதிர்ந்து நடந்து வருவதைப் போல் மரத்தடியில் நின்றிருந்த மாணவிகளின் கும்பலிலிருந்து ரமா பிரிந்து தனியே வந்தாள்.

    ஏய்... விண்ணரசி காலேஜ் விட்டதும் போதும்னு ஏண்டி இப்படி ஓடறே? என்றாள்.

    சிரித்தாள் விண்ணரசி.

    காலேஜ் விட்டதும் வீட்டுக்குப் போகாம என்ன செய்யச் சொல்றே? காலேஜ் முழுக்க கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய சொல்றீயா? என்று குறும்பாய் சொன்னாள்.

    இதைக் கேட்டதும் ரமாவின் முகத்தில் பொய்யானதொரு கோபம் பளிச்சென தெரிந்தது.

    விண்ணரசி வரவர நீ மாறிக்கிட்டே வர்றே?

    எங்கேடி மாறினேன். இதோ சிவப்பான என் தோல் கருப்பாயிடுச்சா? - இல்லை... உயரமான நான் குள்ளமாயிட்டேனா? உன்னைப் போல் அளவுக்கதிகமா உடம்பு வீங்கி கிடக்கேனா? இந்தக் காலேஜ்ல வந்து சேரும்போது எப்படியிருந்தேனோ அப்படியேதான் இருக்கேன். அதே குணம். அதே நிறம். அதே மணம்.

    ரமாவின் முகம் இன்னும் தீப்பற்றிக் கொண்டது.

    என்கிட்ட உதைபடப் போறே? இந்த காலேஜ்ல சேரும்போது நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் இருந்ததே, அதை மறந்துட்டே நீ. அடிக்கடி மறந்துடறே. அதிலும் எம்.ஏ. தமிழ் படிக்க ஆரம்பிச்சதும் ரொம்ப மாறிட்டே. இப்பவெல்லாம் என்னைப் பார்க்கறதையே தவிர்த்திடறே. நிகழ்காலத்துல இருக்கியா? இல்லே சங்க காலத்துல மிதக்குறியா? என்றாள்.

    ரமாவின் சொற்களைக் கேட்டு கலகலவென சிரித்தாள் விண்ணரசி.

    விண்ணரசியும் ரமாவும் ப்ளஸ் டூ வரை ஒன்றாகவே படித்தவர்கள். விண்ணரசிக்கு இலக்கியத்தில் அதிக ஈடுபாடு, கம்பனையும், இளங்கோவையும் கரைத்துக் குடிக்க ஆர்வம் கொண்டவள். ஜெயகாந்தனையும், பிரபஞ்சனையும் தேடிப் பிடித்து ரசித்துப் படிப்பவள். கண்ணதாசனிலிருந்து பழனி பாரதி வரை பாடல்களில் மனதைப் பறிகொடுப்பவள். அனுதினமும் பாரதியைப் படிக்காவிட்டால் தலை வெடித்து விடும்.

    அதனால் அவள் தமிழ் படிக்க விரும்பினாள். ஆனால் ரமா அதை விரும்பவில்லை. அதெல்லாம் முடியாது. நீ தமிழ் படிக்கக் கூடாது எனத் தடுத்தாள்.

    தமிழை வெறுக்கறியே துரோகி. நீ ஒரு தமிழச்சியா? விண்ணரசி தோழியைத் திட்டினாள்.

    தமிழ் படிக்காதவளெல்லாம் தமிழச்சி இல்லையா? நீ தமிழ் படிக்கப் போய்ட்டா நான் என்ன பண்றது?

    ஏன் நீயும் தமிழ் படியேன்.

    சுட்டுப் போட்டாலும் எனக்கு மண்டையில் ஏறாது. மனப்பாடச் செய்யுளை நாலுவரி படிச்சு பரிட்சையில் எழுதக் காட்டியும் ஆயிரம் தப்பு வருது. நான் எங்கே படிக்கிறது? நான் மாத்ஸ்தான் எடுக்கப் போறேன்.

    சரி. அதுக்கு என்னை ஏன் தமிழ் படிக்க வேண்டாங்கறே?

    நீ தமிழ் படிச்சா ரெண்டு பேரும் வேறவேற வகுப்புக்கு பிரிஞ்சு போய்டுவோம். நீயும் மாத்ஸ் எடுத்துப் படிச்சின்னா நாம ரெண்டு பேரும் ஒரே வகுப்புல இருக்கலாம். பழையபடி ஜாலியா இருக்கலாம்.

    ஆமா உருப்படாம போகலாம். ப்ளஸ் டூவில் நாம ரெண்டு பேரும் வேற வேற வகுப்புல இருந்திருந்தா இன்னும் நிறைய மார்க் எடுத்திருக்கலாம். ஒண்ணா சேர்ந்ததனால ரெண்டு பேரும் உருப்படாமப் போனோம். இனிமேலாவது புத்திசாலித்தனமா பிரிஞ்சு அவரவருக்கு பிடிச்ச பாடத்தை படிச்சு முன்னுக்கு வருவோம்.

    அடிப்பாவி. அப்ப என்னோட சேர்ந்ததாலதான் ப்ளஸ் டூவில மார்க் குறைஞ்சு போய்ட்டுன்னு சொல்றீயா? நரமாவின் முகம் கோபத்தில் மாற, விண்ணரசி சமாளித்தாள்.

    ச்சே... ச்சே... சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். உன்னோட சேர்ந்து மட்டும் நான் படிக்காம இருந்திருந்தா நிச்சயம் நான் ப்ளஸ் டூவில் ஃபெயிலாத்தான் ஆகியிருப்பேன்.

    ஏய்...

    உண்மையைத்தாண்டி சொல்றேன். தமிழ்ல நான் என்னதான் நிறைய மார்க் எடுத்தாலும் மாத்ஸ்ல கம்மியாத்தானே எடுப்பேன். நீதானே - எனக்கு சொல்லித்தருவே. அதை என்னால் மறக்க முடியுமா? என்றாள் விண்ணரசி.

    போதும் போதும் ஐஸ் வச்சது. என்னோட சேர்ந்து மாத்ஸ் படிப்பியா மாட்டியா?

    சாரிம்மா. என் லட்சியத்தையே கெடுக்கறியே. ஒரு தமிழாசிரியையா ஆகணும். அதுதான் என் ஆசை.

    அப்படின்னா நம்ம நட்பு போய்டும்.

    நம்ம நட்புக்கும் நம்ம படிப்புக்கும் என்னடி சம்பந்தம்? என்றாள் விண்ணரசி.

    ஆமா! நீ வேற வகுப்பில் இருப்பே. நான் வேற வகுப்பில இருப்பேன். எப்படி சந்திக்கிறதாம்?

    வேற வேற வகுப்பில் இருந்தாலும் ஒரே காலேஜ்தானே. பைத்தியம். காலேஜ் முடிஞ்சதும் நான் இந்த மரத்தடியில நிக்கிறேன். நீ வந்திடு. ரெண்டு பேரும் தினமும் அரைமணி நேரம் பேசிட்டுத்தான் வீட்டுக்குப் போகணும். நீ சிக்கிரம் வந்துட்டா நீ இங்கே காத்திரு என்றாள் விண்ணரசி.

    ம்... சரி என்று அரைமனதுடன் ஒத்துக்கொண்டாள் ரமா.

    இதுதான் இவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டாள் விண்ணரசி, என்றுதான் ரமா தற்போது சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

    தினமும் நான் மரத்தடியில வந்து காத்திருந்ததுதான் மிச்சம். உன்னைக் காணோம். இந்த ஒரு வாரமா எனக்கு வந்த எரிச்சலுக்கு அளவே இல்லை. உன்னைப் பார்த்ததும் அடிக்கணும் போல ஆயிட்டு.

    சாரிடா. நான் லைப்ரரி போய்ட்டேன்.

    ஒரு வாரமா போய் அப்படி என்னத்தப் படிச்சு கிழிச்சே?

    சிலப்பதிகாரத்தை நாடகமா எழுதின புத்தகம் ஏதாவது கிடைக்குமான்னு தேடினேன். கிடைச்சது படிச்சிக்கிட்டிருக்கேன்.

    எதுக்கு?

    நம்ம காலேஜ்ல அடுத்த மாசம் முத்தமிழ் விழா கொண்டாடப்போறோம் இல்லையா? அதுக்கு சிலப்பதிகாரத்தை நாடகமா போடணுமாம். காலேஜ் லீடர் சசி என்னை சிலப்பதிகாரத்தை நாடகமா எழுதித் தரச் சொன்னா.

    அடி சக்கை. நாடகமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டியா? அப்ப... ஷேக்ஸ்பியர் மாதிரி ஆயிடுவேன்னு சொல்லு.

    என்ன கிண்டலா?

    கிண்டல் பண்ணலைடி. உண்மையாத்தான் பாராட்டுறேன். நாடகம் எழுதணுமின்னா நீயே சொந்தமா எழுத வேண்டியதுதானே. எதுக்கு மத்த புக்ஸை தேடிப்போறே? காப்பியடிக்கவா? என்றாள் ரமா.

    ச்சை! எப்படி எழுதியிருக்காங்கன்னு படிச்சுப் பார்க்கத்தான் போனேன். அப்புறம் என்னோட பாணியில எழுதிடுவேன்.

    என்னமோ போ. நாடகம் போடறேன்னு ஸ்டேஜ்ல கல்லடி வாங்கிடாதே.

    கல்லடி வாங்கப் போறது நான் இல்லை நீதான்

    ரமா அதிர்ந்தாள்.

    என்னது நானா?

    ஆமா. எழுதித்தர்றது மட்டும்தான் என் வேலை. நாடகத்தை நடத்தப் போறவ சசிதான். கண்ணகியா யாரை நடிக்க வைக்கலாம்னு என்கிட்ட ஐடியா கேட்டா. நான் உன்னைச் சொன்னேன்.

    அடிப்பாவி என்னையா? கொழுப்பா உனக்கு? யாரைக் கேட்டுக்கிட்டு சொன்னே.

    யாரைக் கேட்கணும்? நல்ல சான்ஸ்டி இது. நீ நடிச்சின்னா சினிமாவுல உனக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏன்னா... டைரக்டர் மணிரத்னத்தைத்தான் சிறப்பு விருந்தினரா கூப்பிடப் போறாங்க.

    உதைபடப் போறே. என்னால நடிக்க முடியாது சசிக்கிட்ட சொல்லிடு.

    அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சொல்லிட்டேன். கண்ணகி வேஷத்துக்கு முடிதானே முக்கியம். உன்னோட இந்த நீள முடியை வச்சுத்தான் சொன்னேன்.

    இனிமே ஏதாவது பேசினே எனக்குக் கெட்ட கோபம் வரும்.

    பயந்திட்டியா? உன்னைப் போய் சொல்வேனா? நீ ஸ்டேஜ்ல ஏறி நின்னா என்ன ஆகும்? ஸ்டேஜே உடைஞ்சிடும். நடிக்கறதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும். அதெல்லாம் உன்கிட்ட ஏது? என்றாள்.

    போதும் ரொம்பப் பேசாதே. மனசுக்குள்ள பெரிய ஐஸ்வர்யாராய்ன்னு நினைப்பா? என்றாள்.

    சரி சண்டை போதும் வா அந்த பெஞ்ச்ல உட்கார்ந்து பேசலாம் என ரமாவை தள்ளிக்கொண்டு வந்தாள் விண்ணரசி.

    Enjoying the preview?
    Page 1 of 1