Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆகாயம் அருகில்தான்...
ஆகாயம் அருகில்தான்...
ஆகாயம் அருகில்தான்...
Ebook83 pages26 minutes

ஆகாயம் அருகில்தான்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பக்கத்து பெஞ்ச் பெண் அபிராமியின் இடுப்பை லேசாகக் கிள்ளினாள்.
 "ஸ்... ஸ்." என்றபடி அவளை முறைத்துவிட்டு போர்டில் கவனமானாள் அபிராமி.
 ப்ளஸ் டூ பிசிக்ஸ் வகுப்பு. SURFACE TENSION பற்றி சாக்பீஸ் கிறுக்கிக் கொண்டிருந்தது. திரவங்களின் இந்த குணாதிசயத்தால் நாடு முழுவதும் விநாயகர் சிலை பால் குடித்ததாய்ப் பரவிய வதந்தியை இணைத்து பருமனான டீச்சர் (விநாயகி?) சுவாரஸ்யமாய் விவரித்துக் கொண்டிருந்தார்.
 அந்தப் பெண் மறுபடி அபிராமியின் இடுப்புப் பிரதேசத்தில் நிமிண்டினாள். போர்டில் கவனத்தை வைத்துக்கொண்டே - பல் வரிசையைக் கடித்து, உதடுகள் அசையாமல், கோபமாய்க் கிசுகிசுத்தாள் அபிராமி.
 "என்னடி, ஏன் என்னோட இடுப்பைக் கிள்ளிட்டே இருக்கே?"
 "அங்கே பாரு."
 "அங்கேன்னா எங்கே?"
 "ஜன்னல்ல."
 "நான் பார்க்கலை. பாடத்தைக் கவனிக்கணும். தொந்தரவு பண்ணாத."
 "நான் சொன்னேன்னா அதில் விஷயம் இருக்கும். ஜன்னலைப் பாரேண்டி."
 "நீ சொல்ற விஷயமெல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒரு சரியான ஜொள்ளுக் கேஸு. ரோட்ல எவனாச்சும் அரவிந்த்சாமியாட்டம் நடந்து போவான். நீ மெனக்கெட்டு ஸைட் அடிப்பே."
 "அபிராமி..."
 "வேண்டாம்னா விடேன். அந்த அழகு மூஞ்சிகளையெல்லாம் நீயே ரசி. நான் ஸ்டேட் ராங்க் வாங்கணும்ங்கற வெறியோட படிச்சிட்டிருக்கேன்."நீ ஒரு சாமியாரிணிங்கற விஷயம்தான் எனக்குத் தெரியுமே. உன்கிட்ட நான் அந்த மாதிரி சமாச்சாரமெல்லாம் காமிப்பேனா?"
 "சரி. சும்மா தொணதொணக்காதே. பிஸிக்ஸ் குண்டு பார்த்துச்சுன்னா நம்ம ரெண்டு பேரையுமே பெஞ்ச்சு மேல ஏறி நிக்கச் சொல்லி அவமானப்படுத்திரும்."
 "நான் தொணதொணக்கலை. ஆனா ஜன்னல்ல அவர் தலை மறையறதுக்குள்ளே ஒரு தடவை அவரைப் பார்த்துடு. அவரைப் பார்த்தின்னா நீ ஆச்சர்யப்படுவே. இவரா? இவர் எங்கே இங்கே வந்தார்ன்னு ஆச்சர்யப்படுவே."
 "ஸ்! உன் ரோதனை தாங்கலை. பிஸிக்ஸ் குண்டு என்னையே சும்மா சும்மாப் பார்க்குது. ஜன்னல் வழியா ரோட்டில் தெரியறது யாரு? நீயே சொல்லு."
 "உன்னோட அப்பா" என்றாள் அவள்.
 அபிராமி முகத்தில் திகைப்பு பாய - சட்டென அவளையறியாமல் திரும்பிப் பார்த்தாள்.
 ஜன்னலுக்கு அப்பால் தோள் துண்டால் முக வியர்வையை ஒற்றினபடி நடந்து வரும் கேசவமூர்த்தி தெரிந்தார். ஸ்கூல் கேட்டுக்குள் நுழைந்து வரும் அவரின் துவண்ட நடையில் அப்பட்டமாய்த் தெரிந்தது வெய்யில் களைப்பு.
 "எனக்கு ரொம்ப பயமா இருக்குடி" என்றாள் அபிராமி, ஈனஸ்வரக் குரலில்.
 "ஏன்?"
 "வயத்தெல்லாம் கலக்குது."
 "ஏண்டி? காரணத்தைச் சொல்லு."
 "உனக்குத்தான் தெரியுமே. அம்மா படுத்த படுக்கையா கிடக்கறது. இன்னிக்குக் காலைல நான் ஸ்கூல்க்கு கிளம்பி வர்றப்பவே அம்மாவுக்கு ரொம்பவே உடம்பு சரியில்லை. நெஞ்சு வலிக்குதுன்னு துடிச்சிட்டிருந்தா."
 அபிராமியின் கண்களில் ஒரு சின்ன கங்கை தேங்கி நின்றது"ரெண்டு நாள் முன்னால கே.ஜி.ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய் டெஸ்ட் பண்ணினீங்களே? என்ன சொன்னார் டாக்டர்?"
 "அம்மாவுக்கு நுரையீரல் வீக்கா இருக்காம். இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கணுமாம். அதிகம் ஸ்ட்ரெயின் பண்ணிக்கக்கூடாது. சொன்னா அம்மா கேட்டாத்தானே. வீட்டு வேலை அத்தனையையும் இழுத்துப் போட்டுகிட்டு முந்தி மாதிரியே செஞ்சா உடம்பு தாங்குமா?"
 "என்னடி கண்ணெல்லாம் கலங்கிப் போய்ட்டே? டீச்சர் நம்மைத் திரும்பித் திரும்பிப் பார்க்கறாங்க."
 "அம்மாவுக்கு என்ன ஆச்சோன்னு மனசெல்லாம் பதறுது."
 "ஒண்ணும் ஆயிருக்காது. நீ கவலைப்படாம தைரியமா இரு."
 அவள் சொன்ன விநாடி டீச்சர் கரும்பலகையில் சாக்பீஸ் நகர்த்துவதை நிறுத்தினாள். முகத்தில் கோபம்.
 "ஏய், அபிராமி. பக்கத்துல நீயும்தான். ரெண்டு பேரும் எந்திரிங்க."
 இருவரும் மவுனமாய் எழுந்து நின்றார்கள்.
 "நானும் அப்பவே பிடிச்சு பார்த்திட்டிருக்கேன். ரெண்டு பேரும் பாடத்தை கவனிக்காம அரட்டை அடிச்சிட்டிருக்கீங்க..." என்று ஆரம்பித்து தொடர்ச்சியாக கோபத்துடன் கத்த ஆரம்பித்தாள்.
 அந்த விநாடி -
 ப்யூன் வகுப்பறைக்குள் பிரவேசிக்க - அவளின் கோப வார்த்தைகள் தடைபட்டன.
 ப்யூன் டீச்சரை நெருங்கி - சன்னமான குரலில் என்னவோ சொல்ல - அவள் முகத்திலிருந்த கோபம் கழன்று கொண்டது.
 சலனமில்லாமல் நிமிர்ந்து அபிராமியைப் பார்த்தாள்.
 "அபிராமி, உன்னோட அப்பா வந்திருக்கார். புக்ஸெல்லாம் எடுத்துட்டு ஹெச்.எம் கிட்ட சொல்லிட்டு நீ போகலாம்."
 அபிராமியின் இருதயம் வேகமாய்ச் சிறகடிக்கத் துவங்கியது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223549338
ஆகாயம் அருகில்தான்...

Read more from Rajeshkumar

Related to ஆகாயம் அருகில்தான்...

Related ebooks

Related categories

Reviews for ஆகாயம் அருகில்தான்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆகாயம் அருகில்தான்... - Rajeshkumar

    1

    தீர்க்காவின் மேஜையில் அந்தக் கடிதங்களை வைத்தான் பவானந்த்.

    மேடம், நீங்க கையெழுத்துப் போட்டிங்கன்னா இந்த லெட்டர்ஸை இன்னிக்கு டெஸ்பாட்ச் பண்ணிரலாம்.

    கண்ணாடியை முகத்துக்குக் கொடுத்து அந்தக் கடிதங்களைப் பார்வையிட்டாள் தீர்க்கா. விஸ்தாரமான விரிகுடா கண்கள்.

    ‘ஸ்ரீ வத்ஸா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ்’ - பெரிய எழுத்துக்கள் கடித உச்சியில் அச்சாகியிருந்தன. கீழே டைப் செய்யப்பட்ட வாசகங்கள் ஓடின.

    அடுத்த மாசம் நடக்கப்போற காலேஜ் ஃபவுண்டர்ஸ் டே’யில் சீஃப் கெஸ்ட்டா கலந்துக்க முடியுமான்னு கேட்டு கல்வி அமைச்சருக்கு லெட்டர் மேடம்...

    கடிதத்தின் அடிவாரத்தில் ‘ப்ரின்சிபால்’ என்று முத்திரை குத்தின இடத்தில் கையெழுத்தைப் பதித்தாள் தீர்க்கா. அடுத்த லெட்டரில் பார்வையை நகர்த்தினாள்.

    இது... ஸீட் ரிசர்வேஷன் சம்பந்தமா யுனிவர்சிட்டி கேட்டிருந்த சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கற லெட்டர்...

    அந்தக் கடிதத்திலும் கிறுக்கலாய் அவள் கையெழுத்து விழுந்தது.

    மூன்றாவது கடிதத்தில் கையெழுத்திடுவதற்காகக் குனிந்த பேனா சற்றே தயங்கி நின்றது.

    பவானந்த்.

    எஸ் மேடம்.

    இந்த லெட்டரை ரீ டிராப்ஃட் பண்ணணும்.

    ஏதாவது தப்பிருக்கா மேடம்?

    சின்ன கரெக்ஷன். ‘வி ரிக்வெஸ்ட் யு’ன்னு இருக்கற இடத்தில் ‘வி சஜஸ்ட் யு’ன்னு மாத்திடு. இங்கே நாம ரிக்வெஸ்ட் பண்ண வேண்டிய அவசியமில்லை.

    யுவார் கரெக்ட் மேடம். நீங்க சொன்ன மாதிரி மாத்திடறேன்.

    கடிதங்களைப் பொறுக்கிக்கொண்டு அவன் வெளியேறிய நிமிஷம் - பியூன் வியர்த்த முகத்தோடு உள்ளே வந்தான். அவன் குரலில் நிறையப் பதட்டம்.

    அம்மா...

    லேசாய் மூச்சு வாங்கினான்.

    ஏன் பகதூர்? ஏன் இப்படி பதட்டமா வந்து நிக்கறே?

    ஒரு ஜீப்பு நிறைய வெள்ளை டிரஸ் போட்ட ஆபீஸருங்க வந்திருக்காங்கம்மா. இன்கம்டாக்ஸ் ஆபீஸருங்களாம். நம்ம காலேஜ் ஆபீசை ரெய்டு பண்றாங்க.

    ஒரு விநாடி நெற்றியைச் சுருக்கினாள் தீர்க்கா.

    மறு விநாடி புன்னகைத்தாள்.

    இது ஒண்ணும் பதட்டப்பட வேண்டிய விஷயமில்லையே...

    நிதானமாய் அவள் சொல்ல - பகதூர் திகைப்பாய் நிமிர்ந்தான்.

    ஆபீஸ் மேனேஜர் ரொம்ப பயந்து போய்ட்டார்ம்மா. உடனே போய் மேடம்கிட்ட சொல்லுன்னு அவர் சொன்ன வேகத்தைப் பார்த்து நானே பதறிப் போய்ட்டேன்.

    போலீஸ், இன்கம்டாக்ஸ், விஜிலன்ஸ் இந்த மாதிரி ஆட்களைப் பார்த்தா படிச்சவங்களே அநாவசியமா பயப்படறாங்க. தப்பு செஞ்சவங்கதான் இவங்களைப் பார்த்து பயப்படணும் பகதூர்.

    இன்டர்காம் பொத்தான்களை ஆட்காட்டி விரலால் அழுத்தினாள்.

    ஹலோ.

    குட்மார்னிங் மேடம். நான் ஆபீஸ் மேனேஜர் அவர் குரலில் மெலிதான கலவரம்.

    என்ன ப்ராப்ளம்?

    இன்கம்டாக்ஸ் பீப்பிள்ஸ் ரெய்டு வந்திருக்காங்க மேடம். யாரோ புகார் தந்திருக்காங்க.

    ரெக்கார்ட்செல்லாம் கரெக்டா இருக்கா?

    பர்ஃபெக்டா இருக்கு மேடம். போன வாரம்தான் நீங்க லெட்ஜர்ஸ், அக்கவுண்ட் புக்ஸ் எல்லாத்தையும் செக் பண்ணி சைன் பண்ணினீங்க.

    தென் நோ ப்ராப்ளம். நான் இப்ப அங்கே வரேன்.

    மேடம், உங்களோட அறைக்கும் ஐ.டி.ஆபீஸர்ஸ் ரெண்டு பேர் வந்துகிட்டிருக்காங்க.

    கதவு சட்டெனத் திறந்தது.

    உலர்ந்த மேகத்தின் நிறத்தில் சர்ட், பேன்ட் அணிந்த இன்கம்டாக்ஸ் அதிகாரிகள். சுறுசுறுப்பான நடை. கறுப்பு நிறத்தில் கழுத்து டை.

    தீர்க்கா ரிசீவரை வைத்துவிட்டு நிமிர்ந்தாள். அடையாள கார்டைக் காட்டினார் அந்த வழுக்கைத் தலை அதிகாரி.

    இந்த காலேஜில் முறைகேடா பணவசூல் நடப்பதாக எங்களுக்கு புகார் வந்திருக்கு. அதன் அடிப்படையில் என்னோட தலைமையில் இந்த ரெய்டு.

    யாரோ உங்களுக்கு தப்பான தகவல் தந்திருக்காங்க. நீங்க தாராளமா சோதனையிடலாம்.

    உயரதிகாரி சைகை செய்ய –

    கூட வந்தவர் கப்போர்டிலிருந்த தடிமனான லெட்ஜர்களை உருவி புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்.

    உயரதிகாரி தீர்க்காவைப் பார்த்துக் கேட்டார்.

    இந்த காலேஜில் ஸீட் கிடைக்க நிறைய போட்டி நிலவுதே...?

    "எஸ். நல்ல கோச்சிங். பரிசோதனைக்கூட வசதிகள், சிறப்பான ரிசல்ட்டோட மாணவர்கள் வெளியே வர்றாங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1