Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ethirkattru Paravaigal
Ethirkattru Paravaigal
Ethirkattru Paravaigal
Ebook308 pages1 hour

Ethirkattru Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடந்த காலங்களில் நடந்த ஒவ்வொரு துன்பத்திற்கு பின்னே கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை எதிர்காலம் ஒளித்து வைத்திருந்து சரியான நேரத்தில் காட்டும்.

ஏன்...எப்படி என்று சுய பரிசோதனையில் இறங்காமல் நம்பிக்கையுடன் தீவிரமான தன் முயற்சியால் அதைத் தேடிப் பறக்கும் அந்த எதிர்காற்றுப் பறவைகளுக்கு மட்டுமே அது காணக் கிடைக்கும். அப்படியொரு பறவை, ஒரு இளம்பெண்ணாக இருந்தால், பரபரப்பான நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது அல்லவா. எதிர்காற்றுப் பறவையுடன் பயணத்தை மேற்கொள்ள இந்த புத்தகத்தின்‌ பக்கங்களைப் புரட்டுங்கள்.

இது ஒரு ஃபேமிலி க்ரைம் த்ரில்லர்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580100410815
Ethirkattru Paravaigal

Read more from Rajeshkumar

Related to Ethirkattru Paravaigal

Related ebooks

Related categories

Reviews for Ethirkattru Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ethirkattru Paravaigal - Rajeshkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எதிர்காற்றுப் பறவைகள்

    Ethirkattru Paravaigal

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    1

    ஜுபிடர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி.

    நேரம் காலை 11 மணி.

    கம்ப்யூட்டருக்கு முன்பாய் உட்கார்ந்து இன்வெஸ்டிகேட்டரி ப்ராஜக்ட் ஒன்றை உன்னிப்பாய்ப் பார்த்தபடி, படித்துக் கொண்டிருந்த அந்த அழகான 23 வயது இமயாவை செல்போனின் வைப்ரேஷன் டோன் அதிர்ந்து கவனத்தைக் கலைத்தது.

    செல்போனை எடுத்து டிஸ்பிளேயில் நகரும் பெயரைப் பார்த்தாள். இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸியின் எம்.டி தாராசந்திரிகா மறுமுனையில் அழைத்துக் கொண்டிருந்தாள். செல்போனில் ஒளிர்ந்த பச்சைநிற டிக்மார்க்கைத் தேய்த்துவிட்டு குழைவான ஐஸ்கிரீம் குரலில், குட்மார்னிங்... மேடம்! என்றாள்.

    குட்மார்னிங் இமயா...! இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?

    கரண்ட் இன்வெஸ்டிகேட்டரி ப்ராஜக்ட் ஒண்ணை சார்ட்-அவுட் பண்ணிக்கிட்டு இருக்கேன் மேடம்...

    அதை அப்பறமா பார்த்துக்கலாம். உடனடியா என்னோட ரூமுக்கு வா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்...

    இதோ... ஒரு நிமிஷத்துல வர்றேன் மேடம் சொன்னவள், பார்த்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டர் திரையை ஃப்ரீஸ் செய்துவிட்டு நாற்காலியின்றும் தன்னுடைய 50 கிலோ மெல்லிசான உடம்பை உருவிக் கொண்டு எழுந்தாள். மூளையின் ஒரு மூலைப்பகுதியில் சில நியூரான்கள் ஒளிர்ந்து எதற்காக இந்த அவசர அழைப்பு என்ற கேள்வியை உற்பத்தி செய்தது.

    இமயா யோசித்தபடியே நடந்து அறையில் இருந்து வெளிப்பட்டு ஒற்றையடி பாதைபோல் இருந்த காரிடாரில் நடந்து தாராசந்திரிகாவின் அறையை நெருங்கி, கனமான அந்த கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனாள்.

    கையில் வைத்திருந்த ஐபேடில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த தாராசந்திரிகாவுக்கு 50 வயது இருக்கலாம். ஆனால் நேர்த்தியாய் டை அடித்த தலையும், அதிக சுருக்கங்கள் இல்லாத முகமும் ஐந்து வயதைக் குறைத்துக் காட்டியது. கண்களுக்கு மெலிதான நீல நிறத்தில் கூலர் ஒன்றைக் கொடுத்து உதடுகளுக்கு பட்டும் படாமல் வெல்வெட் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை தீற்றியிருந்தாள்.

    பார்த்துக் கொண்டிருந்த ஐபேடை தள்ளிவைத்துவிட்டு தனக்கு முன்பாய் இருந்த வெறுமையான நாற்காலியைக் காட்டினாள்.

    உட்காரு...

    இமயா உட்கார்ந்ததும் மேஜையின் ஓரத்தில் இருந்த ஒரு கவரை எடுத்து நீட்டினாள்.

    தன்னிரு புருவங்களையும் சற்றே மேலுயர்த்தி வியப்பு தடவிய குரலில் கேட்டாள்.

    என்ன மேடம்…. இது?

    கொஞ்ச நேரத்துக்கு முந்தி நம்ம ஏஜென்ஸிக்கு வந்த ஒரு பாசக்காரக் கடிதம். படிச்சுப் பாரு... விஷயம் என்னன்னு தெரியும்...

    இமயா கடிதக் கவருக்குள் இரண்டு விரல்களை நுழைத்து உள்ளே நீளவாக்கில் மடித்து வைத்திருந்த அந்தத் தாளைப் பிரித்து மனதுக்குள் படிக்க ஆரம்பித்தாள்.

    ‘ஜுபிடர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி என்ற பெயரில் துப்புத் துலக்குவதாகச் சொல்லிக் கொண்டு மற்றவர்களின் பிரச்சனைகளில் தேவையில்லாமல் தலையிட்டு அரையும்குறையுமாய் உண்மைகளைக் கண்டுபிடித்து ஒரு சிலருக்கு போட்டுக் கொடுத்து, பணம் சம்பாதிக்கும் உங்களைப் போன்றவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்லவேண்டுமென்றால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். திருந்துங்கள். வேறு தொழிலுக்கு மாறுங்கள். உங்களுக்கு ஒரு மாதம் அவகாசம். இல்லையேல் விளைவுகள் விபரீதமாய் இருக்கும். மேலும்...’

    இமயா கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே தாராசந்திரிகாவின் செல்போன் நடுக்கமான டோனை வெளியிட்டது. எடுத்து இடது காதின் மடலுக்குக் கொடுத்தாள்.

    ஹலோ...

    மறுமுனையில் ஒரு ஆண்குரல்.

    மேடம்... இன்னைக்கு காலையில எட்டுமணி சுமாருக்கு நான் உங்கக்கிட்ட கன்சல்டேஷனுக்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தேன். நீங்களும் 11 மணிக்கு உங்க ஆபீஸூக்கு என்னை வரச் சொல்லியிருந்தீங்க...

    உங்க பேரு...?

    சரவண்...

    எஸ்... எஸ்... இப்ப ஞாபகத்துக்கு வருது. நான்தான் உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட்டை கன்ஃபர்ம் பண்ணிட்டேனே! நீங்க வரலாம்.

    வந்துட்டேன் மேடம்... இப்ப உங்க ஆபீஸ் ரிசப்ஷன்லதான் உட்கார்ந்திருக்கேன்...

    அப்படியா... தட்ஸ் குட். மேலே ரெண்டாவது மாடி. முதல் ரூம் வந்துடுங்க... பை த பை உங்ககூட வேற யாராவது வந்திருக்காங்களா?

    இல்ல மேடம்... நான் மட்டும்தான்...

    சரி... வாங்க... பேசிவிட்டு செல்போனை அணைத்த தாராசந்திரிகா எதிரே உட்கார்ந்திருந்த இமயாவை ஏறிட்டாள்.

    என்ன லெட்டரை படிச்சியா?

    படிச்சேன் மேடம்...

    வாட்ஸ் யுவர் ஒப்பினியன்?

    இமயா சிரித்துவிட்டுச் சொன்னாள்...

    "மாசத்துல ஒரு அமாவாசையும் ஒரு பெளர்ணமியும் வர்ற மாதிரி இப்படிப்பட்ட மிரட்டலான மொட்டைக் கடிதங்கள் நமக்கு வர்றதை நம்மால தடுக்க முடியாது மேடம்... எல்லார்கிட்டயும் நல்ல சர்ட்டிபிகேட் வாங்குறதுக்காக நீங்க இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கலை. எல்லாரையும் திருப்திப்படுத்த இந்த உலகத்துல யாராலேயும் முடியாது. ‘கோபப்பட வேண்டிய இடத்திலும் புன்னகையோடு கடந்து செல்வதற்கு பெயர்தான் பக்குவம்’ன்னு நீங்களே எனக்கு சொல்லியிருக்கீங்க

    மேடம்."

    எஸ்... இருந்தாலும் இன்னைக்கு வந்த இந்த மொட்டைக் கடிதத்தைப் படிக்கும்போது உடம்பு பூராவும் ரத்தம் சுர்ர்ன்னு பாயுறமாதிரி இருக்கு... கோபம் வருது.

    வித் யுவர் பர்மிஷன்... இந்த லெட்டரை கிழிச்சு வழக்கம்போல வேஸ்ட் பின்ல போட்டுடறேன் மேடம்...

    டூ இட்.

    இமயா கையில் வைத்திருந்த கடிதத்தை இரண்டாய் நான்காய் எட்டாய் கிழித்து தனக்கு கீழே இருந்த வேஸ்ட் பின்னில் போட்டுக் கொண்டிருக்கும்போதே கதவு மெலிதாய் தட்டப்படும் சத்தம் கேட்டது.

    தாராசந்திரிகா குரல் கொடுத்தாள்.

    எஸ்... கம் இன்!.

    கதவைத் தள்ளிக்கொண்டு அந்த இளைஞன் உள்ளே வந்தான். 25ல் இருந்து 30க்குள் ஏதோ ஒரு வயது. ஒரு சினிமா ஹீரோவை லேசாய் நினைவுப்படுத்தும் முகம். தொப்பை போடாத 6 அடி உயர உடம்பை செதுக்கிய சிற்பம் போல் நேர்த்தியாய் பராமரித்திருந்தான். அடர்த்தியான நீல நிற ஸ்டோன்வாஷ் பேன்ட்டும் செர்ரி நிற சட்டையும்

    அவனுடைய இயற்கையான சிவப்பு நிறத்தை கூடுதலாக்கியிருந்தது.

    தயக்கத்தோடு தாராசந்திரிகாவுக்கு முன்பாய் வந்து நின்றான்.

    ரெண்டாவது குட் மார்னிங் மேடம்... ஐயாம் சரவண்...

    உட்காருங்க...

    தேங்க்யூ மேடம்... சொன்ன சரவண், இமயாவுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

    இமயா மெல்ல எழுந்தபடி, ஓகே மேடம்... நான் புறப்படுறேன்... சொல்ல, தாராசந்திரிகா அவளை கையமர்த்தினாள்.

    நீயும் உட்கார் இமயா... இவர் பேரு சரவண். இந்த நிமிஷம் இவர் நம்ம க்ளையன்ட். நம்மகிட்ட ஒரு பிரச்னையைச் சொல்லி தீர்வைக் கேட்க வந்திருக்கார்... சொன்னவள் சரவணை ஏறிட்டாள்.

    சரவண்... ஷி இஸ் இமயா... ஜர்னலிசம்... தென் கவுன்சிலிங் சைக்காலஜியில மாஸ்டர்ஸ் டிகிரி... கோல்ட் மெடலிஸ்ட். நான் நடத்திக்கிட்டு வர்ற இந்த ஜுபிடர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸியோட முதுகுத் தண்டுன்னே சொல்லலாம். எங்கக்கிட்டே யார் எந்த ஒரு சிக்கலான பிரச்னையைக் கொண்டு வந்தாலும் சரி, அந்தச் சிக்கலை ஒரு வாரம், பத்து நாட்களுக்குள்ளாகவே தீர்த்து வைக்கக்கூடிய சாமர்த்தியம் இமயாவுக்கு இருக்கு.

    ஓ தட்ஸ் கிரேட் என்று சொல்லி தன்னிரு புருவங்களையும் உயர்த்திய சரவண் இமயாவிடம் திரும்பினான்.

    ப்ளீஸ்ட் டூ மீட் யூ...

    மீ டூ... மையமாய் தலையை ஆட்டியபடி புன்னகைத்தாள் இமயா.

    உங்க பேரே வித்தியாசமாவும் அழகாவும் இருக்கு...

    தேங்க்ஸ்...

    தாராசந்திரிகா நேரிடையாய் விஷயத்துக்கு வந்தாள்.

    ம்... சொல்லுங்க சரவண்... உங்களுக்கு என்ன பிரச்னை... நாங்க உங்களுக்கு எந்த வகையில் உதவணும்ன்னு நினைக்கிறீங்க...?

    சரவண் சில வினாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.

    மேடம்... இது என்னோட விசிட்டிங் கார்டு. டேக் எ லுக் ஆன் திஸ். அப்பத்தான் நான் யார்ன்னு உங்களுக்குத் தெரியும்.

    தாராசந்திரிகா தன்னுடைய அகலமான முகம் நிறைய திகைப்பை நிரப்பிக் கொண்டு அந்த விசிட்டிங் கார்டைப் பார்த்தாள். அந்த கார்டே ஏதோ ஒரு பளபளப்பான உலோகத்தால் செய்யப்பட்டதுபோல் மினுமினுத்து மெலிதாய் கனத்தது. அதில் பதிவாகியிருந்த எழுத்துக்கள் புடைத்தபடி தெரிந்தன.

    ஜி. சரவண், பி.ஹெச்டி இன் மானேஜ்மென்ட்

    எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர்

    யூஜி க்ளோபல் ப்ராடக்ட்ஸ்

    தாராசந்திரிகா பிரமிப்போடு எதிரில் உட்கார்ந்திருந்த சரவணைப் பார்த்தாள்.

    யூஜி க்ளோபல் ப்ராடக்ட்ஸ் தமிழ்நாட்டோட பத்து முன்னணி நிறுவனங்களில் அஞ்சாவது இடத்துல இருக்கிற ஒரு நிறுவனம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். அந்த கம்பெனியோட எக்ஸிக்யூட்டிவ் டைரக்டரா நீங்க?

    சரவண் சிரித்தான்.

    இங்கே சூடம் கிடைக்குமா?

    எதுக்கு?

    என்னோட உள்ளங்கையில வச்சு சூடத்தைக் கொளுத்தி சத்தியம் பண்ணத்தான்.

    ஸாரி.

    இதோ பாருங்க மேடம்... இதுல உங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். ஈசிஆர் ரோட்டுல இருக்கிற என்னோட ஹெட் ஆபீஸூக்கு நீங்க எப்ப வேணும்ன்னாலும் வந்து செக் பண்ணிக்கலாம். இல்லை வர்றது கஷ்டம்ன்னா... எங்க கம்பெனி வெப்சைட்லயும் செக் பண்ணலாம்... ஐ ஹேவ் நோ இஷ்யுஸ் என்று சிரித்துக் கொண்டே சொன்னவன் தொடர்ந்து பேசினான்.

    என்னோட அப்பா பேரு ஞானசேகர், அம்மா பேரு உமாபானு. அம்மா இப்போ உயிரோட இல்லை. அம்மா பேர்ல இருக்கிற முதல் ஆங்கில எழுத்தையும் அப்பா பேர்ல இருக்கிற முதல் எழுத்தையும் சேர்த்துதான் யூஜி க்ளோபல் ப்ராடக்ட்ஸ்ன்னு கம்பெனிக்கு பேர் வச்சோம். கடந்த 10 வருஷ கால உழைப்புல எங்க கம்பெனியோட தயாரிப்புகள் இல்லாத ஊர்களே இந்தியாவில இல்லை...

    சரவண் பேசப் பேச இமயா குறுக்கிட்டாள்.

    இட்ஸ் ஓகே... இப்போ உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்க எங்களைத் தேடி வந்ததுக்கு என்ன காரணம்?

    அ...அ...அது வந்து...

    சொல்லுங்க...

    அடுத்த ஒரு மாச காலத்துக்கு என்னோட அப்பா ஞானசேகரை 24 மணி நேரமும் கண்காணிச்சு அவர் எங்கே போறார்... யாரைப் பார்க்கிறார்ங்கிற விபரங்கள் எனக்கு சுடச்சுட வேணும். உங்களாலே இந்த அசைன்மென்ட்டை எனக்குப் பண்ணிக் கொடுக்க முடியுமா?

    தாராசந்திரிகா லேசான அதிர்ச்சியோடு தன்னுடைய கண்களில் இருந்த கூலரை கழற்றியபடி கேட்டாள்.

    உங்கப்பாவை எதுக்காக கண்காணிக்கணும்?

    அவரால என்னோட காதலுக்கு ஆபத்து ஏற்படலாம்.

    காதலுக்கு ஆபத்தா?

    ஆமா... அம்மா, அப்பா, உறவுகள் யாரும் இல்லாத ஒரு பொண்ணை நான் லவ் பண்றேன். அவர் அதை எப்படியோ கண்டுபிடிச்சுட்டார். அவரால அந்தப் பொண்ணுக்கு எந்த நிமிஷத்திலும் ஆபத்து ஏற்படலாம்.அதனால அவரை கண்காணிக்கிற பொறுப்பை உங்க இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி எடுத்துக்கணும். உங்களால அது முடியுமா...?

    2

    பதட்டமும் படபடப்புமாய் பேசிய சரவணை வியப்பு விலகாத விழிகளோடு பார்த்தாள் தாராசந்திரிகா.

    இதோ பாருங்க சரவண்...! நீங்க சொல்ல வந்த விஷயத்தை நிறுத்தி நிதானமா சொன்னத்தான் எங்களுக்குப் புரியும். புரிஞ்சாத்தான் நாங்க உங்களுக்கு உதவி செய்ய முடியும். நான் இப்ப கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க...

    சரவண் கையிலிருந்த கர்ச்சீப்பால் முக வியர்வையை ஒற்றியபடி, கேளுங்க மேடம் என்றான்.

    நீங்க காதலிக்கிற பொண்ணு... உறவுகள் யாரும் இல்லாத ஒரு பொண்ணுன்னு சொன்னீங்க... இல்லையா? யூ மீன் ஸீ இஸ் ஏன் ஆர்பன்?

    எஸ் மேடம்...

    பேர் என்ன?

    ஸாரி மேடம்... அவளப் பத்தின விபரங்களை நான் யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்க விரும்பல...

    காரணம்?

    எங்க காதல் கல்யாணத்துல போய் முடியற வரைக்கும் இந்த விஷயத்துல நாங்க ரெண்டு பேருமே மௌனமாய் இருக்க விரும்புறோம்.

    அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மவுனமாய் சரவணுக்கு அருகில் உட்கார்ந்திருந்த இமயா, அவனை ஒரு புன்னகையோடு ஏறிட்டாள்.

    லுக் மிஸ்டர் சரவண்... டாக்டர்கிட்டேயும் சரி, வக்கீல்கிட்டேயும் சரி, எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதே மாதிரிதான் டிடெக்டிவ் ஏஜென்ஸிகிட்டேயும் மறைக்கக்கூடாது. நீங்க வெளிப்படையாய் எல்லா விஷயத்தையும் எங்ககிட்டே சொன்னத்தான் உங்களுக்கு நாங்க உதவ முடியும். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.

    ஒன்ஸ் அகெய்ன் ஸாரி... நான் உங்ககிட்ட கேட்கிற உதவியை மட்டும் நீங்க எனக்கு பண்ணினா போதும். நீங்க எவ்வளவு சார்ஜ் பண்ணாலும் நான் கொடுத்துடுறேன். நான் காதலிக்கிற அந்தப் பொண்ணைப் பத்தின விபரங்களை மட்டும் கேட்காதீங்க... ப்ளீஸ்.

    தாராசந்திரிகா பெருமூச்சொன்றை வெளியேற்றியபடி தலையாட்டினாள்.

    இட்ஸ் ஓகே... அந்தப் பொண்ணு யார்ன்னு உங்க அப்பாவுக்குத் தெரியுமா?

    நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்னு மட்டும் தெரியும். ஆனா அந்தப் பொண்ணு யார்ன்னு தெரியாது.

    பின்னே எப்படி உங்க அப்பாவால அவளுக்கு ஆபத்து வரும்ன்னு சொல்றீங்க?

    என்னோட காதல் விவகாரத்தை அப்பா எப்படியோ ஸ்மெல் பண்ணிட்டார். ஆனா அதை வெளிப்படையா என்கிட்ட காட்டாமே, நான் விரும்புற பொண்ணை ரகசியமான முறையில கண்டுபிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார். அந்த முயற்சியில அவர் ஜெயிக்கக்கூடாது. என் ஒருத்தனால மட்டும் அவரோட நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது. இட் இஸ் ஹைலி இம்பாஸ்ஸிபள். அதனாலதான் உங்களோட உதவியை எதிர்பார்த்து வந்திருக்கேன். இந்த விஷயத்துல உங்களால எனக்கு உதவ முடியலைன்னா இப்பவே சொல்லிடுங்க. நான் வேற ஏதாவது ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியைப் பார்த்துக்கிறேன்.

    தாராசந்திரிகா கையமர்த்தினாள்.

    இதோ பாருங்க சரவண்... எங்களுக்குன்னு சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கு. ஒரு க்ளையண்ட் தன்னோட பிரச்னையை தீர்க்கிறதுக்காக இங்கே வர்றார்ன்னா, அவர் எங்கக்கிட்டே எதையும் மறைக்காம எல்லா உண்மைகளையும் சொன்னாத்தான் நாங்க அந்தப் பிரச்னையை சிறப்பா ஹேண்டில் பண்ண முடியும். அவருக்கு சிறப்பான ஒரு ரிசல்ட்டையும் கொடுக்க முடியும். அதுக்கு சில விபரங்களையாவது நீங்க தரணும்.

    அ... அ... அது வந்து மேடம்...

    சரவண் மேற்கொண்டு பேசும் முன்பு தாராசந்திரிகாவின் செல்போன் காதை உறுத்தாத டெஸிபலில் ரிங்டோனை வெளியிட்டது. சரவணுக்கு ஒரு ஸாரி சொல்லிவிட்டு செல்போனை எடுத்துப் பார்த்தாள்.

    போனின் டிஸ்ப்ளேயில் அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் கௌரிசங்கரின் பெயர் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தது. பதட்டத்தோடு செல்போனை இடது காதுக்கு ஒற்றினாள்.

    குட்மார்னிங் ஏசிபி சார்.

    குட்மார்னிங் மேடம். இப்ப நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா?

    பிஸியாய் இருந்தாலும் ஃப்ரீ பண்ணிக்கிறேன். எனிதிங்க் இம்பார்ட்டன்ட் சார்?

    எஸ்... இன்னிக்கு மத்தியானம் மூணு மணிக்கு சைதாப்பேட்டை கோர்ட்ல மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னாடி ஒரு கேஸ்ல நீங்களும் நானும் சாட்சியம் கொடுக்க வேண்டியிருக்கு. டூ யூ ரிமெம்பர்?

    அதை எப்படி சார் மறக்க முடியும்? பஸ் ஸ்டாப்ல நடந்த அந்த லேடீஸ் ஹராஸ்மென்ட் கேஸ்தானே? நான் மத்தியானம் ஒரு மணிக்கு லஞ்ச்சை முடிச்சுட்டு நேரா கோர்ட்டுக்கு வந்துடுறேன்.

    இல்ல மேடம்... நீங்க கொஞ்சம் முன்னாடியே கோர்ட்டுக்கு வர வேண்டியிருக்கும். கேஸ் ஃபைலோட ஆர்டர் மாறிட்டதால அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே கோர்ட் கேம்பஸ்க்குள்ளே நாம இருக்கணும்.

    வாட்...? அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளயா? அப்படின்னா... நான் இப்பவே புறப்படணுமே.

    எஸ் மேடம்... அதுக்குத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம புறப்பட்டு வந்துட்டா பரவாயில்ல. நான் கொடுக்கப் போற சாட்சியத்தை விட நீங்க கொடுக்கப் போற சாட்சியம்தான் முக்கியம்...

    ஒண்ணும் பிரச்னையில்லை சார்... இதோ புறப்பட்டேன்...

    சொன்ன தாராச்சந்திரிகா செல்போனை அணைத்து விட்டு சரவணை ஏறிட்டாள்.

    ஒரு கேஸ்ல சாட்சி சொல்றதுக்காக நான் உடனே கிளம்பணும். ஸாரி, இப்போதைக்கு உங்க பிரச்னையை என்னோட அசிஸ்டெண்ட் இமயாகிட்ட சொல்லுங்க. இமயா இஸ் வெரி இன்டலிஜென்ட் அண்ட் க்ளவெர் கேர்ள்.

    சரவண் தலையசைத்தான்.

    நோ இஷ்யூஸ் மேடம்... நான் என்னோட பிரச்னையைப் பத்தி உங்க அசிஸ்டெண்ட் இமயாகிட்ட பேசிடறேன்.

    இதைப் பத்தி ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் நாம பேசுவோம். எனிவே பிளீஸ்ட் டூ மீட் யூ சரவண்

    மீ டூ மேடம்

    தாராசந்திரிகா நாற்காலியின் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த வார் வைத்த கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பி போய்விட, சரவண் சில விநாடிகள் மவுனமாய் இருந்து விட்டு இமயாவிடம் கேட்டான்.

    இப்ப பேசலாமா?

    இங்கே வேண்டாம். என்னோட ரூமுக்குப் போயிடலாமே... சொன்ன இமயா நாற்காலியினின்றும் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட சரவண் அவனைப் பின்தொடர்ந்தாள்.

    இமயா தன்னுடைய அறைக்குள் நுழைந்து ஹைபேக் இருக்கையில் சாய்ந்தபடி எதிரே இருந்த பாலிவினைல் நாற்காலியை சரவணுக்குக் காட்டினாள்.

    "பி...

    Enjoying the preview?
    Page 1 of 1