Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Love You Rashmi!
Love You Rashmi!
Love You Rashmi!
Ebook169 pages43 minutes

Love You Rashmi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவசர உலகில் வாசிக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற நபர்களை, வாசிக்க தூண்டும் விதத்தில் எழுதப்படுவதே இவ்வகையான கதைகளாகும். இதற்கென்றே ஒரு பெருங்கூட்டம் உண்டு. பேருந்துக்காக ரயிலுக்காக, மருத்துவமனையில் டாக்டருக்காக, வங்கியில் ஒரு பரிவர்த்தனைக்காக என பல்வேறு இடங்களில் காத்திருக்கும் அன்பர்கள் பலர், கிடைக்கும் சின்ன இடைவெளியில் படித்து விடக்கூடிய இந்த கதைகள்தான் வாசிப்பை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்த சின்ன தீயில் அகப்பட்டு பின் பெருந்தீயாய் வாசிப்பில் சிகரம் தொடும் வாசகர்களும் பலருண்டு. இவைகளை வெறும் பொழுது இலக்கியங்களாக மட்டுமே வகைப்படுத்திட முடியாது. இக்கதைகளில் நவரசங்களும் உண்டு. வாழ்வின் யதார்த்தத்தை உணர்த்துகிற, நீதியை போதிக்கற, நல்வழியை காட்டுகிற இவைகள்தான் பேரிலக்கியத்துக்குள் நுழையும் வாயில்கள். வாசிக்க தயங்கி வாசலிலேயே நிற்கும் ஒரு கூட்டத்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் முயற்சிதான் இக்கதைகள். வாருங்கள்...வரவேற்கிறோம்!

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580165010571
Love You Rashmi!

Read more from Thirumayam Pe. Pandian

Related to Love You Rashmi!

Related ebooks

Reviews for Love You Rashmi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Love You Rashmi! - Thirumayam Pe. Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    லவ் யூ ராஷ்மி!

    (ஒரு பக்கக் கதைகள்)

    Love You Rashmi!

    Author:

    திருமயம் பெ. பாண்டியன்

    Thirumayam Pe. Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thirumayam-pe-pandian

    பொருளடக்கம்

    1) தவிப்பு

    2) ராசிபலன்

    3) ஆசைகள்

    4) ரசனை

    5) குரு

    6) ஜோடி

    7) வாபஸ்

    8) கிறுக்கல்கள்

    9) கிசுகிசு

    10) விடுதலை

    11) உஷார்

    12) கறார் பேச்சு

    13) பலன்

    14) அனுபவம்

    15) காரணம்

    16) காப்பி

    17) புரிதல்

    18) அணுகுமுறை

    19) கருணை

    20) டெக்னிக்

    21) முதலீடு

    22) தெளிவு

    23) பரிசோதனை

    24) வரன்

    25) திருட்டு

    26) அவசரம்

    27) வாஸ்து

    28) ரொம்ப நல்லவன்!

    29) இப்பவுமா?

    31) முடிவு

    32) வேலை

    33) வல்லவன்

    34) உதவி

    35) கிசுகிசு

    36) அதுக்கும் மேல...

    37) சாகசப் பெண்

    38) பாராட்டு

    39) விதி

    40) அதிர்ஷ்டம்

    41) கோபு

    42) அதிர்ச்சி

    43) நன்கொடை

    44) அருள்வாக்கு

    45) மாப்பிள்ளை

    46) திருமணம்

    47) தனியொருத்தி

    48) பழிவாங்கல்!

    49) சொல்லத்தான் தயங்கினேன்...

    50) விரக்தி

    51) ராஜா!

    52) காதலே... என் காதலே!

    53) ஆராய்ச்சி!

    54) மனசு

    55) லிஃப்ட்

    56) தூது

    57) பொருத்தம்

    58) ஆவி பங்களா!

    59) பயம்

    60) சுமை

    61) சந்திராஷ்டமம்

    62) வாழ்க்கை

    63) தயாரிப்பு

    64) டெஸ்ட்

    65) லவ் யூ ராஷ்மி!

    66) ஏன்?

    67) ரசனை

    68) சுத்தம்

    69) நடிப்பு

    70) பிரார்த்தனை

    71) வழக்கு

    72) பேய் ஏரியா

    73) நடிகர்

    74) என்கவுண்டர்

    75) 2050

    76) சமாதானம்

    77) பாதுகாப்பு

    78) கொள்ளை

    79) ஓ! இதுதான் காரணமா?

    80) ரேட்டிங்

    81) பார்வைகள் பலவிதம்!

    82) திட்டம்

    83) வளர்ப்பு

    84) பாசம்!

    85) கேள்வி

    87) துப்பறிவாளன்

    88) லத்தி

    89) ஏன் இந்த தயக்கம்?

    91) நியாயம்!

    92) நிவாரணம்

    93) உறவுகள்

    95) கடைசி

    95) இதுதான்டா வாழ்க்கை

    96) பாட்டு

    97) அடடே!

    98) சம்பளம்

    99) பொம்மை

    100) ஸ்வீட்டி!

    1) தவிப்பு

    சாதனாவுக்கு இருப்பு கொள்ளவில்லை.வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இனியும் காதலை மறைக்கக்கூடாது என முடிவெடுத்தவள் கேசவனுக்கு போன் செய்தாள்.

    உன் கூட தனியா பேசணும். உடனே வர முடியுமா...? கூப்பிட்டாள்.

    எங்கே வரணும்? கேட்டான்.

    மகாபலிபுரம் பீச்...

    வந்துடறேன்... என்றான்.

    அவன் வரும்வரை அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.

    ஜோடி ஜோடியாக காதலர்கள் பீச்சில் நடைபோட்டுக் கொண்டிருந்த வேளையில் கேசவும் வந்தான்.

    சாதனாவின் அருகே அமர்ந்தான்.

    என்ன சாதனா... ஏன் முகம் டல்லா இருக்கு...? கேட்டான்.

    வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கடா. எனக்கு எதுவுமே பிடிக்கல. எங்கேயாவது ஓடிடலாமான்னு தோணுது...அழுதாள்.

    அசடு! அப்படி எல்லாம் பண்ணிடாதே...

    வேற வழி தெரியல கேசவ்.காதலைச் சொல்ல மனசுல தைரியம் வரலை...

    நான் பேசிப் பார்க்கட்டுமா...? கேட்டான்.

    ப்ளீஸ்...நீ பேசினா வீட்ல கேட்க வாய்ப்பிருக்கு. அதான் உன்னைக் கூப்பிட்டேன். நான் சீனிவாசனை காதலிக்கிறதுதான் உனக்கு தெரியுமே... அதை வீட்ல சொல்லி எப்படியாவது சம்மதம் வாங்கிக்கொடுண்ணா... கெஞ்சினாள் சாதனா, தன் பெரியப்பா மகன் கேசவனிடம்!

    2) ராசிபலன்

    அத்தை தினமும் டி.வில ராசிபலன் கேட்கறாங்க. தினசரிகள்ல வர்ற பலன்கள் எல்லாம் படிக்கறாங்க. இப்ப அதுவும் போதாதுன்னு கிளி ஜோசியனை வேற கூப்பிட்டு பலன் கேட்கணுமா? என என் மனைவி கேள்வி எழுப்பினாள்.

    நான் அவளிடம், அந்த ஜோசியக்காரனை வரச் சொன்னதே நான்தான்... என்றேன். ஆச்சரியமாக என்னை பார்த்தவள், ஏன்? எனக் கேட்டாள்.

    இப்பெல்லாம் அம்மாவுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகுது. ஹாஸ்பிட்டல் கூட்டிப் போறோம்.டாக்டரும் பரிசோதிச்சுட்டு ஒண்ணுமில்லைன்னு சொல்லி, நாலு மாத்திரைய எழுதிக் கொடுத்து அனுப்பிடறார். ஆனாலும் அம்மாவுக்கு திருப்தி இல்லை. உடம்புல பிரச்னை இல்லைன்னு சொன்னாலும் கேட்கறதில்லை. யோசிச்சேன். அம்மா மனசுலதான்னு பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஜோசியரை வரச்சொன்னேன். அவரும், நேரம் நல்லா இருக்கு.கிரகமெல்லாம் சாதகமா இருக்கு. சின்னச் சின்ன உடல் உபாதைகளை கண்டு பயப்படத் தேவையில்லை. கடவுள் உங்க பக்கம் இருக்கார்னு சொன்னதும், அம்மா முகத்துல ஒரு சந்தோஷம் தெரிஞ்சது. இந்த நம்பிக்கை போதும். அவங்களுக்கு நோயே வராது..." சொன்னேன்.

    மனைவி புரிந்து கொண்டாள்.

    3) ஆசைகள்

    நம்ம புதிய படத்துல வில்லன் கேரக்டர்ல டைரக்டர் பாலச்சந்திரன் நடிச்சா நல்லா இருக்கும். அவர் நடிக்க சம்மதமான்னு கேளுங்க... என்றார் தன் அசோசியேட் டைரக்டர்களிடம் புதுமுக டைரக்டர் கனவோன்.

    சார்! அவர் திரைத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர். அவரெல்லாம் நம்மை மாதிரி புதுமுக டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டார்... உதவியாளன் சொல்ல,

    எதற்கும் கேட்டுத்தான் பாருங்களேன்... சமீபகாலமா படங்கள் எதுவும் இல்லாம தானே இருக்கார்... என்றார் டைரக்டர்.

    சரிங்க சார். ஆனா அவர் ஃபீல்ட் அவுட். அதேசமயம் ரொம்ப வீம்பான ஆளு. அவரை படத்துல சேர்த்து நடிக்க வைக்கறதுல பிரச்சனை இருக்கு. சீன் அப்படி இருக்கலாம். இப்படி இருக்கலாம்னு சொல்றாருன்னு வைங்க. வீணா கருத்து மோதல் உண்டாகும். நல்லா யோசிங்க... என்றான் மற்றொரு அஸோசியேட்.

    நீ சொல்றது சரிதான். அவருக்கு திரைத்துறையில் 25 வருட அனுபவம் இருக்கே... அவர் கூட வொர்க் பண்ணினா நிறைய கத்துக்கலாமேன்னு நினைச்சேன்...

    வேண்டாம் சார்! நீங்க யார்கிட்டயும் அசிஸ்டெண்டா இல்லாம டைரக்டரானதால உங்களை அவர் மதிக்கமாட்டார்...

    அஸோசியேட் சொல்ல, சரியென்றார் கனவோன்.

    அதேநேரம் டைரக்டர் பாலச்சந்திரன் வீட்டில்...

    இப்ப புதுசா வந்திருக்கற கனவோன் படமெல்லாம் பிரமாதமா இருக்கு. அவன் படத்துல ஒரு சின்ன ரோல்லயாவது நடிக்கணும்னு ஆசை வந்திருக்கு... என்றவரை,

    "எதுக்கு இந்த விபரீத ஆசை...? எனக் கேட்டாள் அவர் மனைவி.

    "புதுசா வர்ற பசங்க நம்மைவிட ரொம்ப அப்டேட்டா இருக்காங்க. நமக்கு தெரியாத பல டெக்னிக்கல் விஷயமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காங்க. அவங்ககூட வொர்க்

    Enjoying the preview?
    Page 1 of 1