Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karpizhantha Carbon Copygal
Karpizhantha Carbon Copygal
Karpizhantha Carbon Copygal
Ebook92 pages54 minutes

Karpizhantha Carbon Copygal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நட்சத்திரா, பெயர்க்கேற்ப நட்சத்திரமாய் ஜொலிப்பவள். அவளின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், ஏமாற்றங்களாய் மாறுகின்றன. நட்சத்திரமாய் ஜொலித்தவள் எரிநட்சத்திரமாய் மாறுகிறாள்...எதனால்?

வாசிப்போம்... இந்த கார்பன் காப்பிகளை ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில்…

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580100406745
Karpizhantha Carbon Copygal

Read more from Rajesh Kumar

Related to Karpizhantha Carbon Copygal

Related ebooks

Related categories

Reviews for Karpizhantha Carbon Copygal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karpizhantha Carbon Copygal - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    கற்பிழந்த கார்பன் காப்பிகள்

    Karpizhantha Carbon Copygal

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நட்சத்திரா நர்ஸ் யூனிபார்மிலிருந்து சாதாரண வாயல் சேலைக்கு மாறிக் கொண்டிருந்த நிமிஷம் நைட் ட்யூட்டிக்கு வந்த நர்ஸ் காமினி அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

    நட்சத்திரா...

    ம்…

    சேலைக்கு கொசுவம் வைத்துக் கொண்டிருந்த நட்சத்திரா திரும்பினாள். என்னடி...?

    உன்னை டாக்டர் தாமோதர் கூப்பிடறார்...

    டியூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போற நேரத்துல எதுக்காகக் கூப்பிடறார்...?

    யாருக்குத் தெரியும்...

    டாக்டர் எந்த மூட்ல இருக்கார்?

    அதுவும் தெரியலையே... லைம் பாக்ஸ்ல எக்ஸ்ரே படங்களைப் போட்டுப் போட்டு பார்த்துக்கிட்டே... ‘நட்சத்திராவை ஒரு நிமிஷம் வரச் சொல்லு’ன்னு சொன்னார்... சொல்லிட்டேன்... போறதும் போகாததும் உன்னோட இஷ்டம்...

    போகாமே இருக்க முடியுமா...? மாசமானா முன்னூறு ரூபாயை சம்பளமா தர்றவராச்சே...? சொல்லிக் கொண்டே சேலைக் கொசுவத்தை இடுப்பில் செருகினாள் நட்சத்திரா. காமினி அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

    என்னடி பார்க்கிறே…?

    கல்யாணமாகி ஒரு குழந்தையைப் பெத்த பின்னாடியும் உடம்பை அட்டகாசமா வெச்சிருக்கே...

    கண்ணு போடாதே...

    போடாமே இருக்க முடியலையே... என் கூடப் பொறந்த ஒருத்தி மாலான்னு பேரு... கல்யாணம் பண்ணித் தரும்போது பெங்களூர் தக்காளி மாதிரி தளதளன்னு... இருந்தா... அடுத்த வருஷமே ஒரு குழந்தையைப் பெத்து தூக்கிட்டு வர்றா... கண் கொண்டு பார்க்க முடியலை...

    ஏன்?

    பெங்களூர் தக்காளி மாதிரி போனவ கொத்தவால் சாவடியிலே கூறு போட்டு விக்கிற தக்காளி மாதிரி வர்றா...

    சில பெண்களுக்கு உடம்பு வாகே அப்படித்தான்!

    நீ எப்படி இவ்வளவு கச்சிதமா காலேஜுக்குப் போற பொண்ணாட்டம் உடம்பை வெச்சிருக்கே...

    அது ரகசியம்... நாளைக்கு வந்து சொல்றேன்... நான் போய் டாக்டரைப் பார்த்துட்டு கிளம்பறேன்... பத்து நிமிஷம் லேட்டாப் போனாலும் மாமியார்க் காரி முழ நீளத்துக்கு மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்குவா... சொல்லிக் கொண்டே சுவரின் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த வானிடி பேக்கை எடுத்து தோளில் சரித்துக் கொண்டு அறையினின்றும் வெளியே வந்து டாக்டர் தாமோதரின் அறையை நோக்கி நடந்தாள்.

    இருபத்து மூன்று வயதான நட்சத்திராவுக்கு செழுமையான உடம்பு. மனசுக்குள் ஆயிரம் கவலை அலைகள் மோதினாலும் அதன் அடையாளத்தைக் காட்டாத கண்கள். அந்த சிவப்பான நீள்வட்ட முகத்தில் மூக்கும் உதடுகளும் ரொம்பவும் திருத்தம்.

    டாக்டரின் அறைக்கு முன்பாக நின்று கதவை மெல்லமாய் சப்தித்தாள் நட்சத்திரா.

    உள்ளேயிருந்து குரல் வந்தது.

    எஸ்... கம்மின்...

    உள்ளே போனாள்.

    டாக்டர் கேட்டார்... உனக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு...

    மூணு வருஷம்...

    ஒரு வயசுல குழந்தை இருக்கு...?

    ம்…

    என்ன குழந்தை...

    பெண்...

    அப்போ நிறைய சம்பாதிக்கணும்... என்று சொல்லிச் சிரித்த டாக்டர் எக்ஸ்ரேக்களை ஒரு பழுப்பு நிற கவரில் போட்டுக் கொண்டே அவளிடம் திரும்பினார். இதோ பாரம்மா நட்சத்திரா, நான் பொதுவாகவே இங்கே வேலை பார்க்கிற யாருடைய ஃபேமிலியைப் பத்தியும் டீடெய்லா தெரிஞ்சுக்க மாட்டேன். நீ இங்கே நர்ஸ் வேலைக்கு சேர்ந்து மூணு மாசந்தான் ஆகுது. அதுக்குள்ளே நான் உனக்கு சம்பளத்தை ஏத்தினா... மத்த ஸ்டாஃப்ஸ் ஆட்சேபிப்பாங்க... அதனால் யார்க்கும் தெரியாம ஒரு இருநூறு ரூபாயை நீ அதிகமா வாங்கிக்க...

    நோ... நோ... அப்படியெல்லாம் வேண்டாம். டாக்டர்... எனக்கு நீங்க தர்ற முந்நூறு ரூபாயே போதும்...

    ஏம்மா வேண்டாங்கிற...?

    ஸாரி டாக்டர்... பின்பக்கமா கைநீட்டி வாங்கற பணம் எனக்கு வேண்டாம்...

    நீ எம்மேல சந்தேகப்படறே...

    டாக்டர்...

    "நாம அழகா இருக்கோம். இந்த கிழட்டு டாக்டர் பணத்தை அதிகப்படியா கொடுத்து நம்ம உடம்பைத் தொடப் பார்க்கிறான்னு

    Enjoying the preview?
    Page 1 of 1