Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannale Oru Kaadhal Kavithai!
Kannale Oru Kaadhal Kavithai!
Kannale Oru Kaadhal Kavithai!
Ebook147 pages58 minutes

Kannale Oru Kaadhal Kavithai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580115705066
Kannale Oru Kaadhal Kavithai!

Read more from Lakshmi Rajarathnam

Related to Kannale Oru Kaadhal Kavithai!

Related ebooks

Reviews for Kannale Oru Kaadhal Kavithai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannale Oru Kaadhal Kavithai! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    கண்ணாலே ஒரு காதல் கவிதை!

    Kannale Oru Kaadhal Kavithai!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    கடைசிப் பரீட்சை முடிந்து விட்டது. 'அப்பாடா' என்ற பெருமூச்சு விட்டபடி பரீட்சை எழுதிய மாணவர்கள் வெளியே வந்தார்கள். கல்லூரி மாணவர்கள். எழுதிய விடைகள் சரிதானா என்று சந்தேகப்பட்ட மாணவர்கள் மற்றவர்களிடம் சரிபார்த்துக் கொண்டார்கள். கடைசி வருட மாணவர்கள் பிரிந்து போகும் துயரத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ என்ற பிரிவுத் துயரம் முகத்தில் மண்டிக் கிடந்தது.

    அத்துடன் வாழ்க்கை இனி எந்த திசையில் போகுமோ, எப்படி எதிர் நீச்சல் போட வேண்டுமோ என்ற பயம் சிந்தனையில் ஒளிந்து கொண்டு கண்ணா மூச்சி காட்டியது. பிடித்தமான வேலை, எதிர்பார்க்கும் சம்பளம், வெளியூரா, உள்ளுரா? வெளியூர் என்றால் பெற்றவர்களை விட்டு விட்டுப் போக வேண்டும். திடீர் என்று பெரியவனாகி கவலைச் சுமை தலையில் ஏறி விட்டாற்போல சுமக்க பயப்படும் புது உணர்ச்சி.

    இந்த சளசளப்பிலிருந்து விடுபட்டவனாக கண்ணன் மெள்ள நடந்து வந்தான். சிறுவயதில் ஏற்பட்ட பிரச்னையினால் கால் சற்று பாதத்தில் வளைவை ஏற்படுத்தி இருந்து, வெளியில் தெரியாத ஊனம். நடக்கும் பொழுது சற்று வித்தியாசப் படும் நடை அவன் அதை எல்லாம் பொருட்படுத்தமாட்டான்.

    சில சக மாணவர்கள் கேள்வித் தாளைக் காட்டி சரிபார்த்துக் கொண்டார்கள். பொறுமையாக அதிக நேரம் நிற்க முடியாவிட்டாலும் நின்று பதில் சொன்னான். இது அவனுடைய சுபாவம். அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம். அம்மாவின் முல்லைப் பூ பற்கள் சிரிப்பும், சிரிப்புடன் சளசளக்கும் கண்ணாடி வளையல்களின் சப்தமும், வலது கை வளையல்களைத் தள்ளி விட்டுக் கொள்ளும் நேர்த்தியும், விசாலமான பளிங்கு நெற்றி, வட்டமாகத் திகழும் உதய சூரிய குங்குமப் பொட்டும், நினைவிலிருந்து அகலாத மன ஓவியம்.

    அம்மாவின் நினைப்பே தியானம். உதடுகள் பிரியாமல் கண்ணா, கண்ணப்பா என்ற விளிப்பு.

    அது மதுர கானம்.

    அம்மாவின் நினைவு வலையாகப் பின்னும்.

    அவனுடன் படிக்கும் சக மாணவன் ஓடி வந்தான்.

    கண்ணா, உன்னை சாரநாத் ஸார் கூப்பிறார்.

    கையிலிருந்து பேப்பரைக் கொடுத்து விட்டு வேகமாக நடந்தான். நடை தடுக்கியது. விழப்போகிறவனை உடன் வந்த மாணவன் பிடித்துக் கொண்டான்.

    என்ன அவசரம் கண்ணா? மெதுவா வரக் கூடாது?

    அவன் மென்மையாகச் சிரித்தான்.

    எப்படி கண்ணா பண்ணி இருக்கே?

    ஸ்டேட் ராங் எதிர்பார்க்கிறேன் ஸார்.

    சாரநாத் அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார். அதில் தெரிந்த வாஞ்சை அவன் உள்ளத்தில் இறங்கியது. இவர்களுக்கெல்லாம் எந்த ஜென்மத்தில் நான் கைம்மாறு செய்யப் போகிறேன்? கண் கலங்கியது.

    எதுக்கு இப்ப கண் கலங்கேற?

    இத்தனை வருஷமா அப்பாம்மா இல்லாத என்னை பலபேர்களிடம் உதவி செய்ய வைத்துப் படிக்க வைத்து சாப்பிடவும் ஏற்பாடு செய்து... சொல்லும் பொழுதே அழுது விட்டான் கண்ணன்.

    உஷ். கண்ணா, அழக்கூடாது. நீ பி.காம் மாணவன். எல்லாப் பாடங்களிலும் முதல் மார்க் வாங்கிடுவே. தமிழ் மன்றத்துல பேசி பரிசுகள் வாங்கி இருக்கே. அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாரதி சொன்னது வேதவாக்கு இல்லையா? எழுத்துக்களாக ஏட்டில் இருக்கக் கூடாது. மனித மனத்தில் இறங்கி உட்கார்ந்து செயலாற்ற வைக்க வேண்டும்!

    கண்களைத் துடைத்துக் கொண்டான்.

    நீ நல்லாப் படிக்கிற பையன். உன் திறமைகள் வீண் போகலாமா?

    ரொம்ப தாங்க்ஸ் ஸார். என்னை நல்ல உயரத்துக்குக் கொண்டு வந்துட்டீங்க ஸார்?

    சாரநாதன் கலகலவென்று சிரித்தார். அவர் நின்றிருந்த மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கியிருந்த பறவைகளும் ஒலியை எழுப்பின.

    அதுக்குள்ள தாங்க்ஸ் சொல்லாதே. ஏத்திவிட்ட ஏணியில் பாதிக்கு மேல தான் ஏறி இருக்கே. இன்னும் ஏற வேண்டிய கால் பகுதி இருக்கு. அப்புறம் தாங்க்ஸ் சொல்லு.

    கண்ணன் தலை குனிந்து சிரித்துக் கொண்டான்.

    நான் மட்டும் உனக்கு உதவி செய்யல்ல. என் பேச்சைக் கேட்டு நிறையப் பேர்கள் உதவி பண்ணி இருக்கிறார்கள். மேல படிக்கணும்னா நீ சுயமா உன் கால்கள்ல நிக்கணும். சுயமா உன் பணத்துல சாப்பிடணும்.

    பயத்துடன் மலங்க மலங்க விழித்தான் கண்ணன். நான்... நான்... எப்படி... தடுமாறினான்.

    இந்தத் தடுமாற்றம் வரக்கூடாது. வழியை நான் காட்றேனே?

    என் கெய்டு, பிலாஸபர், காட்பாதர் எல்லாம் நீங்கதான். தமிழ்ல சொல்ற மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் நீங்கதான். நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன் ஸார். என்ன பண்ணணும்?

    முதல்ல உணர்ச்சி வசப்படாதே. மேலே கரஸ்ல வேணா படி, படிப்புக்கு முடிவே இல்ல கண்ணா. உலக வாழ்க்கையே நமக்குக் கத்துக் கொடுக்கற பள்ளிக் கூடம். சில சமயம் அங்கே சூறாவளி வீசும். சில சமயம் அது காட்டாறாக மாறும். நாம நீந்தித்தான் கரை ஏறணும். அந்தத் திறமையை உங்கிட்ட வளர்த்துக்கோ கண்ணா.

    உங்க பேச்சு எனக்கு வழிகாட்டியா இருக்கு. நான் இனிமே என்ன செய்யணும். சுயமா என் கால்ல நிக்கணும்னு சொல்றீங்க. எனக்கு பயமா இருக்குது.

    நீ ஆண்பிள்ளை. இனிமே தனியா முடிவுகளை எடுக்கணும். நீ இந்த லீவ்ல ட்யூஷன் எடுக்கறே. நான் ஒரு அட்ரஸ் தரேன். அது தில்லை நகர்ல இருக்கு. சில பேர்கள் மாச டியூஷன் பீஸா பணம் தருவாங்க. சில பேர் ஒரு கோர்ஸா எடுத்து முன்னாடியே மொத்தமா பணத்தைக் கொடுப்பாங்க. மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் உன் டியூஷன் சென்டரை நடத்து என்றான் சாரநாதன்.

    இப்பொழுதும் அவன் படித்துக் கொண்டே சில டென்த், ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்தான். அவன் அம்மாவை இழந்து தனியாக நின்ற நாட்களிலிருந்து நண்பர்கள் வீட்டில் தான் மதியச் சாப்பாடு. இரக்கத்தினால் கிடைக்கும் சோறு. இன்னும் கொஞ்சம் பொரியல் என்றோ, சாம்பார், சோறு வேண்டும் என்றோ கேட்க மாட்டான். போட்டதைச் சாப்பிடுவான்.

    அவன் குணத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் வயிறு நிரம்ப சோறு போடுவார்கள். அதற்காக அவன் ஓய்வு நேரங்களில் வீட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்வான். குழந்தைகளை இழுத்து வைத்து படிப்பு சொல்லிக் கொடுப்பான்.

    இங்கே கரண்ட் ஷாக் அடிக்குது.

    சொன்னால் போதும் எலக்ட்ரிஷியனுடன் வந்து நிற்பான்.

    நீ எதுக்குப்பா?

    நான் இந்த வீட்டுப் பிள்ளை இல்லையா?

    இப்படி நிறைய வீடுகளுக்குச் செல்லப் பிள்ளை.

    இன்று அவனுடைய ஆசிரியர் அவனை வளர்த்து விட்டதுடன் அவனுக்கென்று ஓர் அடையாளத்தையும் கொடுத்து விட்டார். திடீர் என்று அவன் ஓர் உயரத்தில் ஏறி நிற்பதைப் போல கௌரவம் ஒட்டிக் கொண்டது.

    அருகில் நின்ற விவேக் மெள்ள விலாப் பக்கம் இடித்தான். இன்று அவன் வீட்டில் சாப்பாடு.

    ஸார், நான் கண்ணனை அழைச்சிட்டுப் போகட்டுமா? என்ற விவேக் கேட்டான்.

    ஓ... நேரமாயிடுச்சு... சாப்பிடப் போகணும் இல்ல? என்று கேட்டவர் கண்ணா, நீ நடேசன் ஸாரைப் போய் பார்த்தியா?

    நாளைக்குப் போகலாம்னு இருக்கேன்.

    குட்... வீட்ல போய் பார். ஆபீஸ்ல அவரால ஃப்ரீயா பேச முடியாது என்றவர் தன் ஷர்ட் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டினார்.

    எதுக்கு என்ற கேள்வி தொக்கி நிற்க அவரைப் பார்த்தான்.

    "பரீட்சை எழுதி இருக்கே. நீ கல்லூரியில் படிக்க அவர்தான் பெரிய காரணம். பெரிய பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1