Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Uyir Neethane Un Uyir Naanthane
En Uyir Neethane Un Uyir Naanthane
En Uyir Neethane Un Uyir Naanthane
Ebook153 pages1 hour

En Uyir Neethane Un Uyir Naanthane

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702369
En Uyir Neethane Un Uyir Naanthane

Read more from Lakshmi Rajarathnam

Related to En Uyir Neethane Un Uyir Naanthane

Related ebooks

Reviews for En Uyir Neethane Un Uyir Naanthane

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Uyir Neethane Un Uyir Naanthane - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    என் உயிர் நீதானே உன் உயிர் நான்தானே!

    En Uyir Neethane Un Uyir Naanthane!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    உன் கை மணத்துக்குக் கேட்கணுமா? எவ்வளவு பணம் கொடுத்தாங்க.

    இதை கேட்க மறக்க மாட்டாளே என்று மனசுக்குள் முனகியபடியே முவாயிரம் ரூபாய் என்றாள்.

    நாலு பேர் போயிருக்கீங்க. மூவாயிரம் தானா ? மைசூர்பாகு, லட்டெல்லாம் பெரிசு. பெரிசா இருக்கு. இதுல உனக்கு என்ன தேறும்? என்று சுசீலை உதட்டைச் சுழித்தாள்.

    என் ஒருத்திக்குத்தான் அண்ணி மூவாயிரம் ரூபாய்.

    அவள் அண்ணியிடம் உண்மையைச் சொல்லுவதில்லை. அண்ணன் சிவா தோண்டித் துருவி கேட்க மாட்டான். அண்ணனிடம் ஒரு தொகையைக் கொடுத்து விடுவாள். அதை அவன் தங்கை பூரணியின் கணக்கில் வரவு வைத்து விடுவான்.

    அண்ணா, இதை வீட்டுச் செலவுக்கு வச்சுக்கோயேன் என்று பலமுறை வற்புறுத்தியும் சொல்லி இருக்கிறாள்.

    என் அருமைத் தங்கைக்கு சாப்பாடு போட்டு துணி வாங்கித் தரும் சக்தி எனக்கு இருக்கும்மா என்று சொல்லி விடுவான்.

    அவன் பேச்சிலும் குரலிலும் தொனிக்கும் அன்பையும், பாசத்தையும் கண்ட அவளால் உருகி கண்ணீர் மல்கத்தான் முடிந்தது. ஆனால் சுசீலை அப்படி இல்லை.

    அதுல ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்க. நகைச் சீட்டு கட்றேனே?

    அவன் விழிகளை விரித்து மனைவியைப் பார்ப்பான். சுசீலை, எங்கம்மா பூரணிக்குனு ஐம்பது பவுன் நகைகள், மூணு லட்சம் பணம்னு வச்சுட்டுத்தான் இறந்தாங்க. பூரணிக்கு நகை வாங்கணும்னு எந்த அவசியமும் இல்ல.

    சரி, உங்க பொண்ணு புவனாவுக்காவது சேர்த்து வைக்கலாமே? விடமாட்டாள் சுசீலை.

    நானும் சம்பாதிக்கிறேன். நீயும் சம்பாதிக்கிறே. அதுலேர்ந்து எடுத்துக்கட்டேன்.

    சுசீலை அழுத்தக்காரி. அகம்பாவக்காரி. தங்கைக்கு பணம் வாங்காமல் உட்கார வைத்து சாப்பாடு போடுகிறானே! கட்டினவள் எனக்கும் போட்டா என்ன? என்கிற வீம்பு பிடித்தவள். அதனால் தன் சம்பளத்தை அப்படியே வங்கியில் போட்டு விடுவாள்.

    அதையும் சிவா கேட்க மாட்டான்.

    தோ பாருங்க... காலம் விரைவா ஓடிப் போயிரும். பாப்பாவுக்கு படிப்புக்கு. கல்யாணத்துக்குனு பனம் வேணாமா? நமக்குனு இருக்கறது இந்த ஒரு வீடுதான் இன்னும் புள்ளைங்க பிறக்காதுனு என்ன நிச்சயம்? புத்தியா பிழையுங்க

    புத்தியா பிழையுங்கனு சொல்வது அவன் தன் தங்கை பூரணிக்கு அளந்து செய்யுங்க என்ற அர்த்தம். அவனுக்கு தனியார் நிறுவனத்தில் ஓரளவு வருமானம் வரவே செய்தது. பற்றாக்குறைக்கு பூரணி தன் கைச்செலவுக்கு என்று வைத்திருக்கும் பணத்தை செலவு செய்வாள்.

    அண்ணன் சிவா வந்து விடுவான் என்று அவள் சொன்ன தைரியம் சுசீலைக்கு இதமாகவே இருந்தது.

    என்ன பூரணி , இன்னும் என்னென்னவோ கொண்டு வந்திருக்கே? சாப்பிட வா.

    அங்கேயே சாப்பிட்டு விட்டேன் அண்ணி , மலையாளத்துக்காரா இல்லையா? எல்லாத்திலேயும் தேங்காய் எண்ணெய் மணம். கத்தரிக்காயையும், வாழைக்காயையும் வேக வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு பிரட்டி இருந்தா. என்ன டேஸ்ட் தெரியுமா?

    நம்ம வீட்லேயும் அதைப் பண்ணேன்.

    அவாளுக்கு பெரிய பெரிய பார்ம் எல்லாம் இருக்கு அண்ணி. பைநிறைய வாழைக்காய், கத்தரிக்காய்னு கொடுத்திருக்கா, மத்தன், இளவன்னு பூசணிக்காய், பரங்கிக்காய் கொடுத்தா. எப்படி தூக்கிண்டு வருவேன். சொல்லு.

    ஐயையோ வேண்டாம்னு அங்கேயே வச்சுட்டு வந்துட்டியா?

    தானே கைகாசு போட்டு காய்கறிகளை வாங்குவது போல அலறினாள் சுசீலை.

    அண்ணியின் பேராசை நாத்தியான பூரணிக்கு தெரியாதா? இல்லை புரியத்தான் புரியாதா?

    இல்ல அண்ணி, அண்ணா வந்ததும் வந்து பைக்கு வச்சு எடுத்துண்டு போறேன்னு சொல்லிட்டேன்.

    நல்ல காலம்! ஏதோ கொள்ளை போவது தடுக்கப்பட்டது போல நெஞ்சைத் தடவிக் கொண்டாள் சுசீலை.

    வீட்டிற்கு வரும் தின்பண்டமாகட்டும், காய்கறிகளாகட்டும் ஒரு பங்கு அவள் தன் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவாள். பூரணியால் தடுக்க முடியாத செயல்.

    இங்கே கிடந்து வீணாத்தானே போகுது. நாமளும் கொடுத்தா, எங்க வீட்ல உங்கண்ணனுக்கு ஒரு மதிப்புத்தானே! என்று சாதுர்யமாக பேசும் சுசீலைக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்?

    சீர்பட்சணம் செய்வதில் கெட்டிக்காரி பூரணி. அம்மா அன்னபூரணியின் கைப்பக்குவம் அப்படியே பெண் பூரணியிடம் அமைந்திருந்தது. பட்சணம் செய்தால் நிறையவே அவளுக்கும் பணத்துடன் புடவை வைத்துத் தருவார்கள். முறுக்கு கற்றுவது சாதாரண விஷயம் இல்லையே? அதிலும் சீர் முறுக்கு சுற்ற தனித் திறமை வேண்டும்.

    கல்யாணம் நிச்சயமானால் பூரணிக்கு முதலில் சொல்லி வைத்து விடு என்பார்கள். அதைத் தவிர சீமந்தம், ஆண்டு நிறைவு என்று நிறைய பட்சணம் செய்ய அவளுக்கு வரவேற்பு உண்டு.

    எல்லாவற்றையும் விட கோலம் போடுவதிலும் அவளுக்கு தனித் திறமை உண்டு. வைபவங்கள் நடக்கும் இடங்களில், கல்யாண மண்டபங்களில் பெரிய பெரிய மனைக் கோலங்கள், ரங்கோலி, வண்ணப்பொடி கோலங்கள் போடுவாள். இதற்கென தனியான ஊதியங்கள் உண்டு.

    உடம்பை ஓடாய் தேய்த்து உழைக்கும் கஷ்டங்கள் சுசீலைக்கு புரியாத உணராத ஒன்று. பூரணிக்கென்று அம்மா வைத்து விட்டுப் போன நகைகளில் தனக்கும் உரிமை உண்டு என்று நினைக்கும் சுசீலை கணவனிடம் எப்ப்டி எல்லாமோ நைச்சியம் பண்ணியும் அவன் இடம் தரவில்லை. அவனிடம் இதனால் மனத்தாங்கல் உண்டு.

    மனைவியிடம் மயக்கம் உள்ளவன்தான் சிவா. அவனுக்கு பதினைந்து வயதாகும் பொழுது அப்பா இறந்து விட்டார். வைதீகத்தில் எடுபிடியான அவரால் என்னத்தை சேர்த்து வைக்க முடியும்? ஐந்து வயது குழந்தை பூரணி. அவர்களை இரு கைகளில் பற்றிக் கொண்டு ஆளாக்கியவள் அன்னம்மாதான.

    சுசீலை வேறு ஜாதி என்று அன்னம்மா சிவாவைத் தடுத்தாள். அவள் இறந்த பிறகு அந்த வீட்டுக்கு வந்தவள்தான் சுசீலை. நாத்தி என்ற ஒருத்தியான பூரணியை விரட்டி விட்டால், தானே சர்வாதிகாரி என்ற திட்டத்துடன் இருந்தாள்.

    இன்னும் உங்கண்ணா வரல்லே என்று பெருமூச்செடுத்தவள் கண்ணில் இன்னொரு பையும் பட்டது.

    அது என்னது பூரணி?

    காட்ட மறந்துட்டேன். கல்யாணம் குருவாயூர்ல நடக்கிறதா? என்னால போக முடியாது. அதனால புடவையை வச்சுக் கொடுத்துட்டாங்க என்றவள், புடவையை விரித்துப் போட வாயைப் பிளந்தாள் சுசீலை.

    பச்சையில் வெள்ளோட்டம் இழையோட கரும்பச்சை நிறத்தில் சரிகை பார்டர் மின்ன, வைத்த கண் எடுக்காமல் பார்த்தவள், எனக்கு கொடுத்துடு பூரணி. புடவை நல்லா இருக்கு என்று பெருமூச்சு விட்டவாறு ஆசையுடன் சொன்னவள்,

    இதுக்கு ரவிக்கை சாயங்காலம் போய் வாங்கி வரலாம் என்றாள்.

    வீட்டில் இப்படி நடந்து கொண்டிருக்க, சிவா கையில் வைத்திருந்த பேப்பர் விலாச வீட்டில் நின்று சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

    2

    எண்ணைப் பார்த்து அதுதான் வீடு என்று சிவா உறுதிப்படுத்திக் கொண்டான். வீட்டின் வலது பக்கம் அழகுக்காக குரோட்டன்ஸ், கனகாம்பரம், ரோஜா என்று அழகாக இருந்தது. இடதுபுறமும் சிறு செடிகளைத் தாண்டி வீட்டைச் சுற்றி மரங்கள் இருப்பது தெரிந்தது. மா, தென்னை, கொய்யா, சப்போட்டாவாக இருக்கும் என்று ஊகித்த பொழுது திருப்தியாக இருந்தது.

    தனது ஒரே அருமைத் தங்கை வசதியான இடத்தில் வாழ்க்கைப்பட்டுப் போவதை விட அன்பு அண்ணனுக்கு வேறு என்ன வேண்டும்?

    சுசீலையிடம் மயக்கம் கொண்ட காலம் அது. அம்மா ஐம்பது பவுன் நகைகளும், வட்டியுடன் சேர்ந்து ஐந்து லட்சமும் வைத்திருப்பதை சொல்லிவிட்டான். அவனுக்கு இல்லை தங்கைக்கு என்றதும் அவளுக்கு மனசு காற்று போன பலூனாகியது. எப்படியாவது சில நகைகளை கைப்பற்ற ஆசைப்பட்டாள்.

    நகைகளைக் காண்பிக்கவே இல்லையே! எப்ப லாக்கர்க்குப் போகலாம்? என்று தொணப்பினாள்.

    அடிக்கடி இப்படி கேட்கவே அவன் உஷாரானான். "இப்ப

    Enjoying the preview?
    Page 1 of 1