Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தவமின்றி கிடைத்த வரமே!
தவமின்றி கிடைத்த வரமே!
தவமின்றி கிடைத்த வரமே!
Ebook114 pages41 minutes

தவமின்றி கிடைத்த வரமே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மேடம்... என்ன சொல்றீங்க. என்... என்... மகள் நந்தினி... காதலனுடன்...?"
 மேற்கொண்டு பேச முடியவில்லை அவரால். தொண்டை அடைத்தது.
 "எஸ், நந்தினி நல்ல பொண்ணுதான். படிப்பு கெட்டிக்காரிதான். ஆனா கொஞ்ச நாளா அவளோட நடவடிக்கை சரியில்லை."
 சதாசிவம் கண் இமைக்காமல் அவரையே பார்த்து கொண்டிருந்தார்.
 "கொஞ்ச நாளா அவளை ஒரு பையனோட வெளியிடங்கள்ல எங்க டீச்சர்ஸ் சில பேர் பார்த்திருக்காங்க அந்தப் பையன் இங்க பக்கத்துல இருக்கிற காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறதா கேள்வி. ஸ்கூல் விட்டதும் நந்தினி அந்தப் பையனோட சுத்தறா... டீச்சர்ஸே அவளை கூப்பிட்டுக் கண்டிச்சிருக்காங்க. 'எங்க சொந்தக்காரர் பையன்'னு சொல்லி மழுப்பியிருக்கா. இன்னைக்கு பொய்க் கையெழுத்தோட ஒரு லீவு லெட்டரைக் கொடுத்துட்டு ஸ்கூலுக்கு வராம போயிருக்கா. அந்தப் பையன் கூடத்தான் எங்காவது போயிருக்கணும். அதான் உங்களை நேரில் வரச் சொன்னேன்."
 திடீரென கண்கள் தெரியாததைப் போல் தலைமை யாசிரியரின் உருவமே பிசுபிசுப்பாகத் தெரிந்தது.
 "என் நந்தினியா இப்படி?" அவரால் நம்ப முடியவில்லை. அது அவருடைய வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.
 "எ... என்னால நம்ப முடியலை மேடம்?"
 "எல்லா அப்பாக்களும் சொல்ற பதில்தான் இது. நம்மைப் பொறுத்தவரை அவங்க சின்னக் குழந்தைங்கதான். ஆனா அவங்க தங்களைப் பெரிய மனுஷங்களா நினைச்சுக்கிறாங்க. இது காதலிக்கிற வயசு இல்லைங்கிறதை அவங்க புரிஞ்சுக்கிறதில்லை. உடல்ரீதியான மாற்றம் தர்ற மனரீதியான மாற்றம்தான் இந்தக் காதல். அதை அவங்களுக்குப் புரிய வச்சுட்டாப் போதும். டி.வி., செல்ஃபோன்னு எல்லா உபகரணங்களுமா சேர்ந்து இந்தவயசுப் பொண்ணுங்க - பசங்க மத்தியில், காதலைத் தவறான கோணத்துல நினைக்க வச்சுடுச்சு. இந்த வயசுல வர்ற காதல் நிச்சயம் ஒரு மனநோய்தான். அதை ஈஸியா சரிசெய்துடலாம்."
 சதாசிவம் உபதேசம் கேட்பதைப் போல் கேட்டுக் கொண்டிருந்தார்.
 "இப்பத்தான் நீங்க சர்வ ஜாக்கிரதையா இருக்கணும். எடுத்தேன் கவிழ்த்தேன்னு இருக்கக் கூடாது. அவ மேல உங்களுக்கு இந்த மனநிலையில் பயங்கர கோபம் வரும். உங்க நிலையில் இருந்தா நானும் அப்படித்தான் இருப்பேன்.
 ஆனா நமக்கு வர்ற கோபத்தை அப்படியே காட்டிடக் கூடாது. வயசுக் கோளாறால் அவங்க பண்ற தப்பைக் கண்டிக்கிறதா நினைச்சு வயசான நாம் தவறு பண்ணிட கூடாது. ரொம்ப ஜாக்கிரதையா அவளைத் திசை திருப்பணும். இது காதல் இல்லைங்கிறதை நீங்க புரிய வைக்கணும். ரொம்பப் பக்குவமா கையாளணும். அவ மேல நீங்க எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்கங்கறதை இந்த சமயத்துலதான் காட்டணும். வெறுப்பையோ கோபத்தையோ அதிகாரத்தையோ பிரயோகிக்கக் கூடாது.
 இந்த மாதிரி விஷயங்கள்ல அம்மாக்கள் ரொம்ப உணர்ச்சிவசப்படுவாங்க. எப்படி நடந்துப்பாங்கன்னு தெரியாது. அதனாலதான் உங்களை வரச் சொன்னேன் முள்ளு மேல விழுந்த சேலையை எடுக்கிற மாதிரி பக்குவமா எடுக்கணும். நந்தினி படிப்புல கெட்டிக்காரி ஆனா இந்த மாசம் வச்ச க்ளாஸ் டெஸ்ட்ல ரொம்ப குறைவான மார்க் எடுத்ததா அவ வகுப்பு டீச்சர் சொன்னாங்க. படிப்புல நாட்டம் குறையுது. காரணம் இதான்.
 டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தவ நந்தினி. ப்ளஸ் டூ-விலேயும் முதல் மாணவியா அவ வருவான்நு எதிர்பார்க்கிறோம். ஆனா எங்க ஆசையில நந்தினி மண்ணை அள்ளிப் போட்டுடுவாளோன்னு பயமா இருக்கு அவளைப் பக்குவப்படுத்தி, படிப்புல கவனத்தைத் திசை! திருப்புங்க. இந்தக் காதல் வெறும் வயசுக் கோளாறுங்கறதைப் புரிய வைங்க..."
 சதாசிவம் சிலை போல் அமர்ந்திருக்க, சகுந்தலா தொடர்ந்து சில நிமிடங்கள் இதே ரீதியில் பேசிவிட்டு, பியூனை அழைத்து ஒரு கப் காஃபியையும் வரவழைத்துக் கொடுத்து அனுப்பி வைத்தார்வெளியே வந்த சதாசிவத்துக்குள் ஒரு புயல் சுழன்று கொண்டிருந்தது. நந்தினி மட்டும் இப்பொழுது எதிரே வந்தால் அடித்து நொறுக்க வேண்டும் போலிருந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224086221
தவமின்றி கிடைத்த வரமே!

Read more from R.Sumathi

Related to தவமின்றி கிடைத்த வரமே!

Related ebooks

Related categories

Reviews for தவமின்றி கிடைத்த வரமே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தவமின்றி கிடைத்த வரமே! - R.Sumathi

    1

    "நந்தினி... ஸ்கூல் கிளம்பிட்டாளா?" என்று கேட்டபடியே தன் அறையிலிருந்து சட்டைக்குப் பட்டன் போட்டவாறே வந்தார் சதாசிவம்.

    சாப்பாட்டு மேஜை மீது காலை சிற்றுண்டியை எடுத்து வைத்துக் கொண்டிருந்த செல்வி, கணவரை நிமிர்ந்து பார்த்தாள்.

    ம்... கிளம்பிக்கிட்டே இருக்கா. எட்டு மணிக்கு உள்ளே போனா... இன்னும் டிரஸ் பண்றா.

    "பண்ணிக்கட்டுமே! ட்ரஸ் பண்ணிக்கிற வயசுதானே?

    டிரஸ் பண்ணிக்கிற வயசுதான். போட்டுக்கப் போறது ஸ்கூல் யூனிஃபார்ம். அதைப் போட்டுக்க இவ்வளவு நேரமா? இப்பவெல்லாம் உங்க பொண்ணு கண்ணாடி முன்னாடிதான் ரொம்ப நேரம் நிக்கறா.

    என்ன பண்றது? உன்னை மாதிரி பிறந்திருந்தா கண்ணாடி பார்க்கவே பயந்திருப்பா. என்னை மாதிரி பிறந்துட்டாளே... அழகா! அவ அழகை அவளே ரசிக்கலைன்னா எப்படி? சிரித்தார் சதாசிவம்,

    போதும். ரொம்ப அலட்டிக்காதீங்க. ஏதோ என்னை விட கலர் கொஞ்சம் கூடுதலாயிருக்கீங்க. அந்தக் கலரை வேணா என் பொண்ணு கொண்டிருக்கலாம். ஆனா மூக்கும் முழியும் என்னை மாதிரி. உங்களை மாதிரி முட்டைக் கண்ணும், முட்டைக்கோஸ் மூஞ்சியுமா பொறந்திருந்தா பார்க்க சகிக்காது!

    அப்பா... என தன் அறையிலிருந்து வெளிப்பட்டாள் நந்தினி. செல்வி சொன்னது உண்மைதான். நந்தினி அப்பாவின் நிறத்தைக் கொண்டிருந்தாலும் அம்மாவின் வடிவழகை வாங்கியிருந்தாள். கும்மென்று மலர்ந்த ரோஜாவாக முகம். அதில் ஜம்மென்று அமர்ந்த வண்டுகளாய் விழிகள். ஜாம் நிற இதழ்கள். உருவம் மொத்தமும் பருவ மழையில் நனைந்திருந்தது.

    சீருடையிலேயே பளிச்சிடும் அழகு... வேறு உடை அணிந்திருந்தால் எவ்வளவு கூடுதலாக இருக்கும் என நினைக்க வைத்தது.

    வாம்மா... ஸ்கூல் கிளம்பிட்டியா?

    கிளம்பிட்டேம்ப்பா. அம்மா... டிஃபன் எடுத்து வை.

    கை கழுவிக் கொண்டு அமர்ந்தாள் நந்தினி. சதாசிவமும் அமர்ந்தார்.

    செல்வி சூடாக இட்லியும் சாம்பாரும் பரிமாறினாள்.

    நந்தினி... கிளாஸ்ல டெஸ்ட்டெல்லாம் வச்சுக்கிட்டிருக்காங்களா?

    இல்லப்பா! இனிமேதான் வைப்பாங்க...

    டியூஷன் கிளாஸ்ல போதுமான அளவுக்குப் புரியுற மாதிரி கோச்சிங் தர்றாங்களா?

    ம்... தர்றாங்கப்பா...

    ஏதாவது கஷ்டமாயிருந்தா... புரியலைன்னா சொல்லும்மா.

    ஏம்ப்பா... புரியலைன்னா நீங்க சொல்லித் தரப் போறீங்களா?

    சதாசிவம் சிரித்தார்.

    என்னம்மா கிண்டல் பண்றே? புரியலைன்னா இன்னும் நல்லா சொல்லிக் கொடுக்க வேற டியூஷன் ஏதாவது ஏற்பாடு பண்ணுவேன். இந்த வருஷம் நீ ப்ளஸ் டூ. உன்னோட எதிர்காலமே இந்தப் பரீட்சையில தான் அடங்கியிருக்கு. நீ நிறைய மார்க் வாங்கினாத்தான்...

    நிறைய மார்க் வாங்கினாத்தான் டாக்டர் ஷீட் சிடைக்கும். நீ பெரிய டாக்டர் ஆகணும். அதான் என் கனவு, லட்சியம், குறிக்கோள், நோக்கம். இதானே... ஏம்ப்பா தினமும் இதையே சொல்லிச் சொல்லி என்னைப் போரடிக்கிறீங்க...?

    என்னடா இப்படிக் கோவிச்சுக்கற?

    பின்ன என்னப்பா? தினமும் சொன்னதையே சொல்லிக்கிட்ருந்தா போரடிக்காதா?

    அதுக்கில்லைடா. நீ நல்லாப் படிக்கணுமேங்கிற கவலை. நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. எங்க எதிர்காலம் நீதான். உன்னை ஒரு பெரிய டாக்டராக்கிப் பார்க்கணும்டா அதுக்காகத்தான் நான் இவ்வளவு கஷ்டப்படறேன்.

    அப்பா... ஏன் பயப்படறீங்க? டென்த் படிக்கும்போது இப்படித்தான் புலம்பினீங்க. நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரலையா?

    அதே மாதிரி இந்த வருஷமும் நீ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தா எனக்கு அது போதும்டா.

    கண்டிப்பா வருவேன். போதுமா?

    தாங்க்ஸ்டா.... கண்ணா! அப்பா மகளைத் தள் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

    சரி... சரி... கொஞ்சினது போதும். சீக்கிரம் கிளம்புங்க என அவசரப்படுத்தினாள் செல்வி.

    கை கழுவிக் கொண்டு எழுந்தாள் நந்தினி. புத்தகப் பையை எடுத்துக்கொண்டாள்.

    அப்பா... பை... அம்மா... பை...!

    இருவருக்கும் கையசைத்து விட்டு படியிறங்கி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தாள்.

    என்னங்க...!

    சொல்லு செல்வி! தானும் கையைக் கழுவிக் கொண்டு எழுந்தார் சதாசிவம்.

    பேசாம... இந்தப் பொண்ணை நீங்களே ஸ்கூலுக்குக் கொண்டு விட்டுட்டு ராத்திரி ஏழு மணிக்கு டியூசன்லயிருந்து அழைச்சுட்டு வாங்களேன்.

    ஏன்... அவ சைக்கிள் நல்லாத்தானே இருக்கு.

    சைக்கிள் நல்லாத்தான் இருக்கு. ஊர் உலகம்தான் நல்லா இல்லை. கெட்டுப் போய்க் கிடக்கு. ஒரு சில நாள் இவ வர்றதுக்கு எட்டு எட்டரை ஆயிடுது! கேட்டா டியூசன்ல டெஸ்ட் வச்சாங்க, ஒப்பிக்கச் சொன்னாங்க, அது இதுங்கறா... எனக்குப் பயமாயிருக்கு. நேரம் கழிச்சு வர்றதால... ஒண்ணு கெடக்க ஒண்ணுன்னா... என்ன பண்றது?

    என்ன... எவனாவது என் பொண்ணுகிட்ட வம்பு பண்ணுவான்னு பயமாயிருக்கா?

    பின்னே... பயமாயிருக்காதா? காலம் அப்படியிருக்கு. அழகான பொண்ணுங்களை ராகிங் பண்றதும், லவ் லெட்டர் கொடுக்கிறதும், ஆசிட் ஊத்தறதும்... பேப்பர்ல படிக்கும்போதே வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்ட மாதிரியிருக்கு. அதனாலதான் சொல்றேன்... நீங்களே கொஞ்சம் சிரமம் பார்க்காம அவளைக் கொண்டு விட்டுட்டு அழைச்சிட்டு வந்தா நிம்மதியாயிருக்கும்!

    இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார் சதாசிவம்.

    போடி பைத்தியம். இதென்ன நீ படிச்ச காலம்னு நினைச்சியா? நீ புத்தகத்தை எடுத்துக்கிட்டு, உன் அப்பா பின்னாடியே ஆட்டுக்குட்டி மாதிரி போன காலத்தையே நினைச்சுக்கிட்டிருக்கியா? என் பொண்ணு கராத்தே கத்துக்ட்டவடி. கறுப்பு பெல்ட் வாங்கினவ. என் பொண்ணை வீரமா வளர்த்து வச்சிருக்கேன். ஒரு பய அவகிட்ட வாலாட்ட முடியுமா? அடிச்சுத் தூள் கிளப்பிட மாட்டா? அனாவசிய பயப்படாம போய் வேலையைப் பாரு!

    சொல்லி விட்டுத் தானும் அலுவலகம் கிளம்பினார்

    என்னவோ போங்க. எது சொன்னாலும் யாரும் இந்த வீட்டுல கேக்கறதில்லை.

    எரிச்சலுடன் சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்ட உள்ளே சென்றாள் செல்வி.

    அலுவலகத்தில் முக்கியமான வேலையில் இருந்தார் சதாசிவம்.

    அந்தச் சமயத்தில்தான் தொலைபேசி ஒலித்தது மனைவியாக இருக்கும் என்று நினைத்தார். புதிய எண்ணாக இருந்தது.

    ‘யாராக இருக்கும்?’ என்ற எண்ணத்தினூடே "ஹலோ என்றார்.

    நீங்க மிஸ்டர் சதாசிவம்தானே?

    வணக்கம் மேடம். சொல்லுங்க...

    ஸ்கூல் வரைக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போக முடியுமா?

    என்ன விஷயம் மேடம்?

    உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.

    நந்தினிக்கு ஏதாவது பிரச்சனையா?

    நேர்ல வாங்க பேசலாம். நீங்க மட்டும் வாங்க. உங்க மிஸஸ் வேண்டாம்! என்று கூறி, தொடர்பைத் துண்டித்து விட்டார் அந்தப் பெண்மணி.

    சதாசிவத்துக்குக் குழப்பமாக இருந்தது. இதுவரை இப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1