Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இணையான இளமானே
இணையான இளமானே
இணையான இளமானே
Ebook110 pages40 minutes

இணையான இளமானே

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"யார்கிட்டே பேசிக் கொண்டிருக்கே?" அருகே வந்து சம்பத் கேட்கவும் சட்டென்று செல்லை அணைத்துவிட்டு எழுந்தாள் மதுராணி.
 "என் ராஜாகிட்டே பேசிக்கிட்டிருந்தேன்!"
 "ராஜா உன் கணவரோட பெயரா?"
 "இல்லை அவர் பேர் சுரேந்தர். அவரை நான் ராஜான்னு செல்லமா கூப்பிடுவேன்" வெட்கமாக அவள் சிரிக்க சம்பத் சில நிமிடங்கள் மவுனமாக நடந்தான்.
 கணவனை செல்லமாக ராஜா என்று அழைக்கிறாள் கொடுத்து வைத்தவன். பொறாமை போலொரு உணர்வு மெல்லிய இழையாக நெஞ்சில் கீறியது.
 "பக்கத்திலேயே ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு. அங்க காபி சாப்பிடலாம் வ" என்றான்.
 "அடப்பாவி! இவ்வளவு நாள் கழிச்சு நாம சந்திச்சிருக்கோம். வெறும் காபி மட்டும் தான் வாங்கித்தருவியா? நீ உன் கருமித்தனத்தை இன்னும் விடலையா?" கலவென சிரித்தாள்.
 அந்த கள்ளமற்ற சிரிப்பு அவனுக்குள் பனித்தூறலாகச்சிந்தியது .
 "என்ன வேணுமோ சாப்பிடேன்! யார் வேண்டாம்னுசொன்னது?"
 அவன் சிரித்தான்.
 இருவரும் பக்கத்திலிருந்த உயர் ராக ஹோட்டலை நோக்கி சென்றனர்.
 "என் ராஜாக்கிட்டே என்ன பேசிக்கிட்டிருந்தேன்னு கேட்கமாட்டியா?"
 "என்ன பேசிக்கிட்டிருந்தே?"உன்னைப்பத்தி திடீர்னு உன்னைப் பாரத்ததை என் ராஜாவோட பகிர்ந்துக்கிட்டேன். என் ராஜா என்ன சொன்னார் தெரியுமா?"
 "என்ன சொன்னார்?"
 "அப்போ கண்டிப்பா இந்த வேலை உனக்குத்தான் அப்படின்னார். சம்பத்.... எனக்காக சிபாரிசு பண்ணுவியா? உன் கூடவேலை பார்க்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு தெரியுமா? மறுபடி உன்னைப் பார்த்ததே எனக்கு காலேஜ்
 நாட்களையெல்லாம் ஞாபகத்திற்கு கொண்டு வந்துட்டு. ச்சே... எப்படியெல்லாம் அரட்டையடிப்போம். மறக்கவே முடியாது இல்லே? ஆமா... நீ இத்தனை நாட்கள் இடைவெளியில என்னையெல்லாம் நினைச்சுப் பாப்பியா?"
 அவள் குழந்தைத்தனமாக அவனைப் பார்த்து கேட்க அவன் அவளை ஆழமாகப் பார்த்தான். மனம் மென்மையாகப்பாடியது. அது அவளுக்குக் கேட்குமா?
 "நான் உன்னை நினைக்காத நாளில்லையே!
 காதலில் உருகாத நாள் இல்லையே....
 உண்ணும்போதும் உறங்கும்போதும்
 எண்ணமெல்லாம் நீதானே!"
 விரக்தியாய் சிரித்தான். 'அடிப்பெண்ணே உன்னை மறக்க முடியாமல் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் தெரியுமா?'
 "நீ என்னை நினைப்பியோ இல்லையோ ஆனா நான் உன்னைப்பத்தி எப்பப்பாரு என் ராஜாகிட்டே சொல்லிகிட்டேயிருப்பேன்."
 இருவரும் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அதிக கூட்டம் இல்லை. தனியாக அமர்ந்தனர். வந்து நின்ற சர்வரிடம் "இவங்களுக்கு என்னவெல்லாம் வேணுமோ அதையெல்லாம் கொண்டு வாங்க" என சிரித்தான்.யேய் சும்மாயிருக்கமாட்டியா? என்னை சரியான சாப்பாட்டு ராமின்னு நினைக்கப் போறார். வெறும் காபி மட்டும் போதும்."
 "அட... வெறும் காபி மட்டும் சொல்லிட்டு வீட்ல போய் என்னைக் கருமின்னு உன் புருஷங்கிட்டே சொல்லி சிரிக்காதே!"
 சம்பத் சொல்ல "ச்சே! ரொம்ப கிண்டல் பண்ணாதே" என்று முறைத்தாள்.
 சர்வர் நகர்ந்ததும் இரு கைகளையும் ஊன்றி மேஜை மீது வைத்து அதில் தன் முகத்தை ஏந்திக் கொண்டவன்,
 "சொல்லு கோயம்புத்தூர்லயிருந்து சென்னைக்கு எப்ப வந்தே?" என்றான்.
 "உனக்குத்தான் தெரியுமே எங்க கல்யாணம் காதல் கல்யாணம்னு. ரெண்டு பக்கத்திலேயும் எதிர்ப்பு. நான் இந்து சுரேந்தர் கிறிஸ்ட்டியன். எதிர்ப்பு இல்லாம இருக்குமா? ரிஜிஸ்டர் மேரேஜ். எப்படியோ கோபம் தணிந்ததும் அவரோட வீட்ல ஏத்துக்கிட்டாங்க. அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை, சென்னையில வேலை கிடைச்சதும் வந்துட்டோம். காம்ப் யூட்டர் என்ஜினீயர். நல்ல கம்பெனி. வாழ்க்கைக்கேற்ற வசதி. உனக்கு நான் எனக்கு நீன்னு வாழ்க்கை ரதம் அலுங்காம குலுங்காம அலங்காரமா ஓடிக்கிட்டிருக்கு."
 அவளுடைய சிரிப்பும், பேச்சும் வாழ்க்கையில் ஏற்பட்ட நிறைவைப் பளிச்செனக் காட்டின.
 வாழ்க்கையை பாரம்மிக்க வண்டியாகத்தான் சொன்னவர்களைப் பார்த்திருக்கிறான். அவன் கூட அப்படித்தான் சில சமயம் எண்ணிக் கொள்வான். ஆனால் வாழக்கையை அலங்காரமான ரதம் என எத்தனை பேர் கூறுகின்றனர்.
 அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224235438
இணையான இளமானே

Read more from R.Sumathi

Related to இணையான இளமானே

Related ebooks

Related categories

Reviews for இணையான இளமானே

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இணையான இளமானே - R.Sumathi

    1

    சம்பத் திகைப்பாக அவளைப் பார்த்தான். அவனுடைய கண்களையே அவனால் நாம முடியவில்லை.

    எதிரே நிற்பவள் மதுராணியா?

    மார்போடு தன் சான்றிதழ்களை அணைத்தபடி நின்றிருந்த அவளுக்கும், அவனைக் கண்டு அதே திகைப்பு என்பது அவளுடைய முகத்தில் தெரிந்தது. இருவருமே ஒருவரை ஒருவர் அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது இருவரின் பிரமிப்பிலும் தெரிந்தது.

    மது... மதுராணி அவனுடைய இதழ்கள் ஓசையின்றி உச்சரித்தன. அவள் வியப்பாக புருவம் உயர்த்தினாள்.

    விழிகளை அறையை சுற்றி ஒருமுறை சுழற்றிவிட்டு அவன் மேல் நிறுத்தினாள். அவனுடைய உடை உட்கார்ந்திருந்த கம்பீரம் அவளை இன்னும் புருவம் உயர்த்த வைத்தது.

    "சம்பத்... சம்பத் நீ... இந்தக் கம்பெனிக்கு எம்.டி.யா? அவள் படபடப்புடன் கேட்டாள்.

    அவன் அவளை உட்காரும்படி இருக்கையைக் காட்டினான். அவள் அமர்ந்ததும் அவளை ஒரு கணம் உற்றும் பார்த்தான்.

    ‘அப்படியே இருக்கிறாள்! அதெப்படி? கொஞ்சமும் குறையாத அழகு. கூடியிருந்ததைப் போல் இருந்ததே தவிர குறையவில்லை. பருத்திசேலை. ஆனால் அதை அவள் ஒருத்திக்குத்தான் நேர்த்தியாக உடுத்தத் தெரியும் என்பதைப்போல் கம்பீரம் காட்டியது.

    ‘அவனை வாட்டி வதைத்த விழிகள்! ஏட்டிக்கு போட்டி பேசும் இதழ்கள்’ முகத்தைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பெருமூச்சு.

    அவன் முற்றிலும். மறந்து நின்ற வேலையில் சொர்க்கத்தை திறந்து கொண்டு வந்த தேவதையாக இந்த அலுவலகத்தின் கதவைத் திறந்து கொண்டு வந்து நிற்கிறாள்.

    மது... எப்படியிருக்கே?

    ம்... நல்லாயிருக்கேன். இந்த வேலை கிடைச்சா இன்னும் நல்லாயிருப்பேன் அவள் மென்மையாக சிரித்தாள் தொடர்ந்தாள்.

    சம்பத் உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீட்ல நீ இருப்பேன்னு. அப்படியே திகைச்சுப் போயிட்டேன் தெரியுமா? நீ இவ்வளவு பெரிய கம்பெனிக்கே முதலாளியாயிருப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. எப்படி... எப்படி இந்தளவுக்கு உயர்ந்தே? அவள் பிரமிப்பாக அவனைப் பார்த்தாள்

    சம்பத் கையிலிருந்த பேனாவை விரல்களுக்கிடையே உருட்டியபடி சிரித்தான்.

    நான் சொன்னேனா? இந்தக் கம்பெனிக்கு நான் தான் முதலாளின்னு சட்டென்று மதுராணியின் பிரமிப்பு மாறியது. மறுகணம் அலட்சியமான பாவனை ஓடியது.

    அப்போ நீ முதலாளி இல்லையா?

    இல்லை, இங்கே நான் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். எம்.டி.க்கு அடுத்தபடி நான் தான். எனக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேவை. அதுக்குத்தான் இந்த இண்டர்வியூ. எங்க எம்.டி. சிங்கப்பூர் போயிருக்கார். அதனால நான் இண்டர்வியூ பண்றேன்.

    சம்பத்... ப்ளீஸ்... என்னை பஸ் ஸ்டாப் வரைக்கும் டிராப்பண்ணேன். கல்லூரி நாட்களில் அடிக்கடி ஓடிவந்து கொஞ்சும் அதே பாவனை.

    அதெப்படி... உன்னை இண்டர்வியூ பண்ணாமலே சொல்லமுடியும்? முதல்ல உன்னோட சர்டிபிகேட்ஸையெல்லாம் கொடு. அவன் கை நீட்டினான்.

    இப்படி ஒரு நிலையை நினைச்சு எனக்கு உண்மையிலேயே வெட்கமாயிருக்கு.

    எதுக்கு வெட்கமாயிருக்கு?

    "காலேஜ்ல நீ என்னைப் பார்த்து காப்பியடிச்சு எழுதுவே.

    எப்பவும் நான் தான் ஃபர்ஸ்ட் ரேங்க். நீயோ அரியர்ஸ் வைக்காத வருஷமே கிடையாது. நீ இன்னைக்கு என்னை இண்டர்வியூ பண்ணுறே...? கொடுமையில்லே இது." சட்டென்று சம்பத் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டான்.

    இதப்பாருங்க மதுராணி... இங்க நான் அதிகாரி. நீங்க கேன்டிடேட். அவ்வளவுதான்.

    மதுராணியிடம் எவ்வித இறுக்கமும் இல்லை. மாறாக அவனுடைய கடுமை அவளுக்குள் சிரிப்பைப் போங்கவைத்தது. வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டாள்.

    அவளுடைய சான்றிதழ்களைப் புரட்டிக் கொண்டே வந்தவன், ம்... கல்யாணத்துக்குப் பிறகு நிறைய கோர்ஸ் பண்ணியிருக்கே போலிருக்கு... என்றான்.

    அவள் படித்திருந்த கம்பியூட்டர் சம்பந்தமான சான்றிதழ்களை ஆச்சரியமாகப் பார்த்தான்.

    ம்... எல்லாம் என் கணவரோட வற்புறுத்தலால் படிச்சது.

    அவள் சலிப்போடு சொன்னாலும் தன் கணவனுடைய சாதனையை வெளிக்காட்டும் விதமாக இருந்தது.

    ஏதோ ஒன்று மனதில் அறைந்ததைப் போலிருந்தது சம்பத்திற்கு. இனம் புரியாத அமைதி அவனை அழுத்தியது.

    அவளுடைய தகுதிகளை கம்பியூட்டரில் பதிவு செய்து கொண்டவன் ஓ.கே...! நீ வெளியில வெயிட் பண்ணு என்றான்.

    அப்போ... வேலை எனக்குத்தானே... அவள் ஆர்வமாக கேட்க அவன் முறைத்தான்.

    இண்டர்வியூ பண்ணி ரிசல்ட்டை ஒப்படைக்க வேண்டியது மட்டும் தான் என் வேலை. செலக்ட் பண்றது எம்.டி. தான்.

    என்னமோ எம்.டி.க்கு ரைட் ஹேண்ட் மாதிரி பேசினே? எனக்காக கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணக்கூடாதா?

    நீ முதல்ல வெளியில வெயிட் பண்ணு.

    அப்போ எனக்குத்தான் வேலை அவள் சந்தோஷமாக தொளைக் குலுக்கினாள்.

    நான் உன்னை வெயிட் பண்ணச் சொல்றது நாம பர்சனலா பேச! வேலைக்கும், இதுக்கும் சம்பந்தமில்லை.

    ஆனாலும் உங்க எம்.டி. என்னத்தான் செலக்ட்பண்ணுவார்.

    அவ்வளவு நம்பிக்கையா?

    உனக்கே அவர் வேலை கொடுத்து ரைட் ஹேண்டா வச்சிருக்கும் போது எனக்கு வேலை கொடுத்து லெப்ட்ஹேண்டா கூட வச்சுக்கமாட்டாரா? பொறாமைப் புடிச்சு நீ இடையில புகுந்து கலைக்கமாயிருந்தா சரி முறைத்துவிட்டு அவள் வெள்யேறிப் போனாள்.

    சம்பத் ஒரு நிமிடம் கண்களை இறுக மூடிக் கொண்டான். எல்லாம் கனவைப் போல் இருந்தது. கற்பனை போலிருந்தது.

    ‘மதுராணி வந்தது கனவில்லை. கற்பனையில்லை, நிஜம். பார்த்தது நிஜம், பேசியது நிஜம்!"

    யாரைப் பார்க்ககூடாதென நினைத்தானோ அவளைப் பார்த்து விட்டான். பார்த்த பிறகு பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

    அடுத்தடுத்து வந்தவர்களெல்லாம் அவளாகவே தெரிந்தனர். எடுத்தெடுத்து எறிய முயன்ற எண்ணங்கள் தொடர்ந்து தொடுத்து தொடுத்து அவனைப் படுத்தியது. காட்சி பிழை ஏற்பட்டது. இழை இழையாய் எண்ணங்கள்! அவளையே கழைக்கூத்தாடியின் குரங்காய் சுற்றியது.

    பெயருக்கு மற்றவர்களைப் பரிசோதித்து அனுப்பினான். நேர்முகத்தேர்வு செய்ய வேண்டியது மடடும் தான் தன் வேலை. தேர்வு செய்வது முதலாளியின் வேலை என அவன் அவளிடம் சொன்னது பொய். எல்லா அதிகாரமும் அவன் கையில்தான். என்ன செய்வது? எல்லாரையும் விட அவள்

    தான் தகுதியில் முதலிடத்தைப் பெற்றிருந்தாள் என்பது தான் உண்மை. தவிர வேலை பார்த்த முன் அனுபவம் அவளிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1